search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wheat rava recipes"

    வடமாநிலங்களில் டோக்ளா மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்,
    புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.

    ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும்.

    இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து மேலே பரவலாக போடவும்.

    அடுத்து அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.

    பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.

    கோதுமை ரவை டோக்ளா தயார்.

    இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    கோதுமைக் குருணை - 2 கப்
    நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    பட்டை - ஒன்று
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    பிரிஞ்சி இலை - ஒன்று
    சின்னவெங்காயம் - அரை கைப்பிடி
    பெரியவெங்காயம் - ஒன்று
    இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
    பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 4 (கீறியது)
    தக்காளி - 2
    புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 4 கப்
    முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

    சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

    இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

    கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை செய்யலாம். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 200 கிராம்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    புதினா - கால் கட்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை :  

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, நறுக்கிய காய்கறிகள், புதினா, நெய், ப.மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் இந்த கொழுக்கட்டைகளை வேத்து நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை ரவை - பயத்தம்பருப்பு கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    உப்பு - தேவைக்கேற்ப.
    நெய் - சிறிதளவு,
    உருளைக்கிழங்கு - 2
    கோதுமை ரவை - 1 கப்,
    பயத்தம்பருப்பு - 50 கிராம்
    வறுத்த வேர்க்கடலை - 10 கிராம்.



    செய்முறை

    வேர்க்கடலையை கொரகொப்பாக உடைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு கோதுமை ரவை, பயத்தம்பருப்பை தனித்தனியாக வறுக்கவும்.

    பயத்தம்பருப்பை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமாக நறுக்கி, தனியாக வைக்கவும்.

    குக்கரில் 3 கப் நீர் விட்டு வறுத்த ரவை, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு, இறக்கவும்…

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வேர்க்கடலை தூவி, சூடாக பரிமாறவும்.

    சத்து நிறைந்த கோதுமை ரவை - பயத்தம்பருப்பு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்து நிறைந்த கோதுமை ரவையை வைத்து ஏராளமான சத்தான உணவுகளை தயாரிக்கலாம். அன்று கோதுமை ரவையை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப்பொருட்கள் :

    கோதுமை ரவா - 1 கப்
    துவரம்பருப்பு - 1/2 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

    விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை வேளையில் வேகமாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதேனும் சமைக்க வேண்டுமென்றால், அதற்கு போதுமை ரவை உப்புமா மிகவும் சிறந்ததாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    வரமிளகாய் - 2
    இஞ்சி - சிறிது
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி தட்டி வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.

    பிறகு அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்.

    பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×