என் மலர்

  நீங்கள் தேடியது "men Health"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்மைக்குறைபாடு மற்ற நோய் ஏற்பட்டிருப்பதற்கான வெளிப்பாடாகும்.
  • உச்சக்கட்டத்திற்கு ஆரோக்கியமான நரம்பு மண்டலமும், ஆண்மை ஏழுச்சியும் அவசியம்.

  உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு உருவமைப்பு, உருசிதைவு, டி.என்.ஏ சிதைவு, உயிரோட்டம் அனைத்தும் ஆண்கள் குழந்தையின்மையை அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்துப்பையில் கொழுப்பு அதிகமாகி அதனால் உஷ்ணநிலை அதிகரித்து விந்தணு உற்பத்தி திறன், உயிரோட்டம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. மேலும் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதனாலும் விந்தணு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது.

  ஆண்மைதான் மிடுக்கானத்தோற்றத்தையும், ஆளுமையையும் ஏற்படுத்துகிறது. ஒருவர் ஆண்மையுடன் இருக்கிறார் என்றாலே அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறலாம். ஆண்மைக்குறைபாடு மற்ற நோய் ஏற்பட்டிருப்பதற்கான வெளிப்பாடாகும். தினமும் முத்தமிட்டால் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று ரத்த ஓட்டம் அதிகரித்து ஆயுட்காலம் நீட்டிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உச்சக்கட்டம் என்னும் சிகரத்தை எட்டிய தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டதே இல்லை. உச்சக்கட்டத்திற்கு ஆரோக்கியமான நரம்பு மண்டலமும், ஆண்மை ஏழுச்சியும் அவசியம்.

  ஆண்மைக்குறைபாடு ஏற்பட்டுவிட்டால் தம்பதியர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்க்க தம்பதியர் அறிவியல் சார்ந்த சிறந்த பாலியல் மருத்துவ சிகிச்சை நிபுணரை அணுகி ஆண்மை குறை என்னும் குறைபாட்டை எளிதில் நீக்கிடலாம்.

  உலகத்திலேயே முதன்முதலாக ஆண்களின் நல்வாழ்வுக்கென்றே தொடங்கப்பட்டது வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை. இங்கு

  * ஆண்மைக்குறைவு

  * வளைந்த ஆணுறுப்பை சரி செய்தல்

  * செக்சில் ஆர்வமின்மை

  * விந்து முந்துதலை தடுத்தல்

  * விந்தணுக்கள் குறைவு

  * சிறிய ஆணுறுப்பை பெரிதாக்குதல்

  * புரோஸ்டேட் வீக்கம்

  * புரோஸ்டேட் புற்றுநோய்

  * நீரிழிவு

  * திருமணத்திற்கு முன் பரிசோதனை

  * தம்பதியருக்கான செக்ஸ் ஆலோசனை

  ஆகிய வை உள்பட ஆண்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மையத்தின் கீழ் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் இயக்குனர் பேராசிரியர் டி.காமராஜ் இந்தியாவிலேயே பாலியல் மருத்துவ படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். ஆண்மை குறைவை நீக்கிட அதிநவீன சிகிச்சை முறைகளை காமராஜ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி உலக அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்களுக்குத் தெரியாத ஏராளமான உண்மைகள் உள்ளன.
  • வயது அதிகமான ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு உடல்நல குறைபாடுகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

  45 வயதைத் தாண்டிய தம்பதிகளுக்கு, குழந்தைப் பெறும் வாய்ப்பு கடுமையாக குறைகிறது. ஆண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் இனப்பெருக்க திறன் குறைய ஆரம்பிக்கும்.

  ஆண் 40 வயதை எட்டினால், அவரது விந்தணுவின் தரம் குறைய நலிவுறும். இதனால் தான் 40 வயதை எட்டிய பின், ஆண்களால் தன் துணைக்கு வேகமாக குழந்தையைத் தர முடிவதில்லை.

  வயது அதிகமான ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு உடல்நல குறைபாடுகள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று ஆண்களுக்குத் தெரியாத ஏராளமான உண்மைகள் உள்ளன.

  ஆண்கள் ஒவ்வொரு வயதைக் கடக்கும் போது, அவர்களின் விந்து எண்ணிக்கை மற்றும் இயக்கம் குறைய ஆரம்பிக்கும். இதனால் அவர்களது இனப்பெருக்கமும் பாதிக்கப்படும்.

  வயது அதிகமான ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டிஸத்திற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் இளமை வயதில் பெற்றெடுத்த குழந்தைகளை விட, முதுமையில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு 5-6 மடங்கு அதிகமாக ஆட்டிஸத்திற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  40 வயதிற்கு மேலான ஆண்களால் கருத்தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இளம் வயதைக் கொண்ட ஆணும் உறவில் ஈடுபடும் பெண்கள் கருத்தரிக்க 2 மாதம் போதும். ஆனால் 40 வயதிற்கு மேலான ஆணால் கருத்தரிக்க 2 வருடம் கூட ஆகலாமாம்.

  முக்கியமாக தம்பதிகளில் பெண் இளமையாகவும், ஆண் 45 வயதினராக இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

  மேலும் ஆண்களின் முறையற்ற வாழ்க்கை முறை, உணவு முறைகளால் 30 வயது தொடங்கத்திலேயே ஆண்களின் விந்தணுவின் வீரியம் குறைய ஆரம்பிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
  • அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

  பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

  ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

  குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

  அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.
  • பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது

  அளவான குடும்பம் என்பது ஆரோக்கியமான வாழ்வை தருவது போல, மகத்துவமான சமூகம் உருவாக மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியமாகும்‌. தற்போது 794 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு அதிகரித்து வரும் மக்கள் தொகையினால், மக்கள் அடர்த்தி அதிகரிப்பதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை தடுக்கும் வகையில் உலகில் குடும்ப கட்டுப்பாடு (கருத்தடை) என்ற வழக்கம் தொடங்கியது. பெண்களுக்கு டியூபக்டொமி எனப்படும் சிகிச்சை மூலம் பெண்களின் கருப்பையில் உள்ள பெல்லோபியன் என்ற விந்தணு குழாயில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதன் மூலம் விந்தணுக்கள் அவர்களின் கருப்பையினுள் செல்வது தடுக்கப்படுகிறது. இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.

  இதேபோல், ஆண்களுக்கும் வாசக்டாமி எனப்படும் சிகிச்சை முறை உள்ளது. ஆனால் இதை மேற்கொள்பவர்களுக்கு பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படும் என்ற வதந்தி பரவியது. இதனால், இந்த சிகிச்சையை எடுத்துகொள்ள அனைவரும் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கவும், அனைவரிடத்திலும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதியை சர்வதேச ஆண்கள் கருத்தடை தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

  இன்றைய சூழலில் ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதினால் ஆண்மை குறைவு, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்ற கருத்து நிலவுகிறது.‌ ஆனால் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை 20 நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய மிகச்சிறிய அறுவை சிகிச்சையே. இதனால் உடலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிகிச்சைக்கு பின்னரும் அவர்கள் தாம்பத்திய வாழ்வில் முன்பு போலவே ஈடுபடலாம்.

  ஒருவேளை நாம் திரும்ப குழந்தைபேறு வேண்டும் என்று விரும்பினால் தலைகீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் குழந்தைபேறு பெறும் வசதியும் இதில் உள்ளது. ஆனால் பெண்களில் இது சாத்தியமற்றது.‌ எனவே பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது‌ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  சிகிச்சை மேற்கொண்டவர்கள் 3 மாதத்திற்குள் தாம்பத்திய‌ வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஏற்கனவே விந்துக்குழாயில் இருக்கும் விந்தணுக்களின்‌ மூலம் குழந்தைப்பேறு உருவாகக்கூடும். எனவே இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவர்களிடம் சோதனை மேற்கொண்ட பின்னரே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.

  சர்வதேச ஆண்கள் கருத்தடை தினத்தில் இந்த சிகிச்சை குறித்து அறித்து கொண்டு, பாதுகாப்பான முறையில் கருத்தடை மேற்கொள்ளலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம்.
  • மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.

  மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் ஆண்களும் பாதிப்புக்கு ஆளாகலாம். சமீபத்தில் புதுடெல்லியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  அதில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆண்களில் ஒரு சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மும்பையை சேர்ந்த பிரபல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் ஹரூர் தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

  ஆண், பெண் இரு பாலருமே சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்றும் அவர் கூறுகிறார். ''மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், புற்றுநோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீப காலமாக ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது'' என்றும் குறிப்பிடுகிறார்.

  45 வயதுடைய ஆண் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்கிறார். ''அந்த நபருக்கு மார்பகம் பெரிதாகிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் வலி இல்லாமல் இருந்ததால் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டார். நாளடைவில் மார்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்ததால் தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு வந்தார். அவரது மார்பு பகுதியில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தோம். அது வெடிக்கும் தருவாயில் இருந்தது.

  உடனே கட்டியின் அளவைக் குறைக்க கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது மார்பக திசு மற்றும் பாதிக்கப்பட்ட தசை பகுதி அகற்றப்பட்டது. ஆண்களுக்கு, மேமோகிராபி சிகிச்சை மேற்கொள்வது சவாலானது. எனவே, சோனோகிராபி மற்றும் பயாப்ஸி முறையில் சிகிச்சை அளித்து புற்றுநோயை கண்டறிந்தோம். துரதிருஷ்டவசமாக தாமதமாக மருத்துவ சிகிச்சையை நாடியதால் புற்றுநோய் பரவ தொடங்கி இருந்தது.

  ஆண்களுக்கு மார்பக திசுக்கள் குறைவாக இருப்பது புற்றுநோய் விரைவாக பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது. எனினும் அவரது தசைகளை மட்டுமே பாதித்தது. கல்லீரல், நுரையீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் புற்றுநோயின் தீவிர நிலையில் இருந்து அவரை காப்பாற்றிவிட்டோம்.

  ஆண்கள் இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு வெட்கப்படவோ, தயங்கவோ கூடாது. குறிப்பாக மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம். குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் மற்றவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். எனவே மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அசட்டையாக இருக்காமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது.
  • கடுமையான உடற்பயிற்சிகளால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து.

  உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்துவதற்கு முயற்சி செய்தாலே போதும். உடல் எடையை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

  ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது. அதிலும் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையில் இயந்திர கதியில் சுழன்று கொண்டிருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அது இயல்பாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.

  1. உணவுத்திட்டம்: உடல் எடையை குறைப்பதற்கு பல உணவு முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவை உடல் எடையை குறைப்பதற்கு வழிவகுத்தாலும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் பெறுவதற்கு வழிவகை செய்யாது. மேலும் குறுகிய காலத்திற்குள் உடல் எடையை குறைய வைத்து விடும். ஆனால் அது தற்காலிகமானதுதான். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான, நிலையான எடை இழப்புக்கு வழி வகுக்காது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடும் உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்ற உணவு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

  2. பசியை கட்டுப்படுத்துங்கள் : நீண்ட நேரம் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் பசி அதிகம் எடுக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட தோன்றும். அந்த சமயத்தில் குறைவாக சாப்பிடுவதும் முடியாது. அதற்கு இடம் கொடுக்காமல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். ஒரு வேளை உணவு உட்கொண்டால், மறு வேளை ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வகைகளை உட்கொள்ளலாம். இது பசியை கட்டுப்படுத்த உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும் சாப்பிடலாம். மாலை 3 மணிக்கு சிற்றுண்டியும், இரவு 7 மணிக்குள் இரவு உணவையும் உட்கொள்ளலாம்.

  3. சரிவிகித உணவை உண்ணுங்கள் : உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொண்டாலும் அதில் 40 சதவீதம் புரதம், 35 சதவீதம் கார்போஹைட்ரேட், 25 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இது உடல் எடை குறைப்புக்கு உதவும். பசியை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.

  4. தண்ணீர் அதிகம் பருகுங்கள் : எல்லா உயிர்களுக்கும் நீர் தான் உயிர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான நன்மைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பருகும் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்பாடுகளின் வேகத்தையும் அதிகப்படுத்த முடியும். மந்த உணர்வை போக்கவும் முடியும். சீரான இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் பருகி வந்தால் நீரிழப்பு ஏற்படாது. உடலில் நீரின் அளவு குறைந்தால் தலைவலி, சோர்வு, சோம்பல், குழப்பம் மற்றும் மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனை தடுக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.

  5. உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள் : உட்கொள்ளும் உணவின் மூலம் பெறப்படும் அதிக கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து. உண்மை என்னவென்றால், தினசரி 30 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையோ மேற்கொள்வது கூட எடை இழப்பு பயணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. தோட்டக்கலை மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, நாயுடன் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நண்பர்களுடன் நடைப்பயிற்சி, ஜாக்கிங் செய்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவையும் கூட உடல் எடை குறைப்பு செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை.
  • வயதாகும் போது மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

  40 வயதை கடந்த ஆண்களில் பெரும்பாலானோர் இளமையை தக்க வைப்பதற்காக அதிக முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியம் இல்லாமல் இருந்தால் சரும அழகையும் இழக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். சரும அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம். அதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தேர்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம்.

  * 40 வயதை கடந்தவர்கள் உடல் நலத்தை சீராக பேணுவதற்கு போதுமான அளவு நார்ச்சத்து அவசியமானது. அது குடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. செரிமான சக்தியை அதிகரிக்க செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. முழு தானிய வகைகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அவைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  * நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் நல்லது. ஆரோக்கியத்தை பேணுவதற்கு நட்ஸ் வகைகள் அவசியம். அதில் நார்ச்சத்து, புரதம், செரியூட்டப்படாத கொழுப்பு, ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. நட்ஸ் வகைகளை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.

  * எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமானது. பாலில் கால்சியம் நிறைந்திருக்கிறது. இதயத்தின் நலனையும் காக்கும். தினமும் ஒரு கப் பால் பருகலாம். அது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நலனை மேம்படுத்தும்.

  * `கிரீன் டீ'யும் 40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்ற பானம்தான். அதில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள் உள்ளடங்கி இருக்கிறது. நல்ல கொழுப்பின் அளவை சீராக பராமரிக்க உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்தி நச்சுகளை வெளியேற்றும். தொடர்ந்து கிரீன் டீ பருகிவருவதன் மூலம் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.

  * வயதாகும் போது மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சின்ன சின்ன வியாதிகளுக்கெல்லாம் மாத்திரைகளை நாடுவது நல்லதல்ல. மூலிகை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்களுக்கு அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது.
  நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு கொள்கிறது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இயங்கத் தேவையான ஹார்மோன்களை ஒவ்வொரு நொடியும் உற்பத்தி செய்யக்கூடிய பல நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன.  தைராய்டு, அட்ரினல் மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளில் உற்பத்தியாகி ரத்த ஓட்டம் அல்லது மற்ற உடல் திரவத்தின் வழியாக ஊடுருவி, உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு சென்று அவற்றின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தி உடையவை இந்த ஹார்மோன்கள். அதாவது உடல் எப்போது? என்ன செய்ய வேண்டும்? என்ற சமிக்ஞைகளைத் தரும் சிக்னல்களாக வேலை செய்கின்றன.

  ஆண்களுக்கு வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.

  இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.

  பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சனைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது.

  ஆண்களின் 60, 70 வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்
  ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்.

  பொதுவாக ஆண்கள் கட்டுகோப்பான உடலையே மிகவும் ஆசைப்படுவர். சிக்ஸ் பேக் வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதனை வைத்த பின், மெயின்டெயின் செய்வது அதை விட கடினம்.

  சிக்ஸ் பேக்கின் மோகம் குறையாமல் ஆண்களிடம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை பலர் அறியவில்லை.

  சிக்ஸ் பேக் மெயின்டெயின் செய்வதற்கு உடற்பயிற்சி மட்டுமல்லாமல் ஸ்டிராய்டு உட்கொள்கின்றனர். ஸ்டிராய்டு எடுத்து கொள்வதால் ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு போன்றவற்றை ஏற்படும்.
   
  உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  சிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலின் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து புரதசத்தை அதிகரிக்க வைக்கின்றனர். இப்படி புரதசத்தை அதிகரித்தால் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.

  அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பம் அதிகமாகும். வலிமையான தசைநார்கள் தான் அவசியம். அது இருந்தால் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.

  சிக்ஸ் பேக் வைப்பதற்கு மேற்கொள்ளும் உடற்பயிற்சி கடுமையான உடல் வலி, பிரச்சனைகளைதான் கொடுக்கும். அழகுக்கு ஆசைப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள்!
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்களில் சிலர் சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை பயன்படுத்துகின்றனர். ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  தற்போது ஆண்களிடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகரித்துவிட்டது. மேலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  சிக்ஸ் பேக் என்றால் என்ன? பொதுவாக உடலில் சேரும் கொழுப்புக்கள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால் சில கொழுப்புக்கள் கரையாமல் ஆங்காங்கு தங்கிவிடும். அப்படி தங்கும் கொழுப்புக்களைக் கரைத்து வயிற்றுப் பகுதியில் தசைகளாக உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, சிலர் ஸ்டீராய்டு மருந்தை எடுத்து கொள்கிறார்கள்.

  ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால், உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்.

  ஸ்டீராய்டு எடுப்பதால், ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  சிக்ஸ் பேக் வைப்பவர்கள், உடலில் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து, புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி புரதச்சத்தை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்புள்ளது. மேலும் சிக்ஸ் பேக் வைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பமும் அதிகமாகும் என்கிறார்கள்.

  சிக்ஸ் பேக் வைப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சியை செய்யும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மிகவும் வலிமையான தசைநார்கள் தான் அவசியம். ஏனெனில் தசைநார்கள் தான் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மேற்கொள்ளும் உடற்பயிற்சியினால், கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடும்.

  சிக்ஸ் பேக் அழகு என்றாலும், அழகுக்கு ஆசைப்பட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உடல் கட்டமைப்புடன் இருக்க தினமும் உடற்பயிற்சியுடன், போதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo