என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இப்போதே நன்றாக ஆலோசித்து சரியான இணையை தேர்ந்தெடுத்தால் அவர்களது எதிர்கால மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.
    திருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவீதம் பேர் கணவர் மீது குறை சொல்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘கணவரோடு மனப்பூர்வமாக சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை’ என்று புலம்புகிறார்கள். 10 முதல் 15 சதவீதம் பேர், விட்டால் இப்போதே ஓடிவிடுவோம் என்பதுபோல் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறார்கள். 20 சதவீதம் பேர் ‘எல்லாம் முடிந்துவிட்டது.. மீதி காலத்தையும் இவரோடு இப்படியே ஓட்டிவிடுவதை தவிர வேறுவழியில்லை’ என்று விரக்தியோடு சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

    இதுபோன்ற விரக்தி எதிர்கால தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க, ‘திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் எப்படிப்பட்ட இணையை தேர்ந்தெடுக்கவேண்டும்? தனது இணையை பற்றி தெரிந்துகொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இறுதி முடிவை எப்படி எடுக்கவேண்டும்?’ என்பதை பற்றி எல்லாம் இங்கு காண்போம்!

    திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இப்போதே நன்றாக ஆலோசித்து சரியான இணையை தேர்ந்தெடுத்தால் அவர்களது எதிர்கால மணவாழ்க்கை சிறப்பாக அமையும். விவாகரத்துக்களும் குறையும். அதை கருத்தில்கொண்டு திருமண விஷயத்தில் பொதுவாக நடக்கும் தவறுகளையும், அதை சரியாக்கும் முறைகளையும் பார்ப்போம்!

    தவறான சிந்தனை:

    ‘தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் இணையை தன்னால் முழுமனதோடு தற்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், திரு மணத்திற்கு பிறகு அவரை திருத்திவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்ற திருமண சிந்தனை தவறானது.

    சரியான வழிமுறை:

    இணையின் பேச்சு, செயல், நடத்தை போன்ற குணாதிசய குறைபாடுகள் இருந்தால், திருமணத்திற்கு பின்பு அவரை இயல்பான நடத்தைக்கு கொண்டு வருவது சிரமம். அதனால் அப்படிப்பட்டவரை திருமணம் செய்துகொள்ள முன்வராதீர்கள். திருமண பந்தம் ஆயுள் முழுக்க நீடிக்கவேண்டியது. அதனால் அதில் அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். பெற்றோர்களில் சிலர், மகளை ஒரு சுமைபோல் கருதிக்கொண்டு ‘அவளுக்கு திருமணமானால்தான் நிம்மதி பெருமூச்சுவிடுவேன்’ என்பதுபோல் தீவிரம் காட்டுகிறார்கள். அத்தைகய தீவிரம் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை உணருங்கள். அதிவேக(பயண)ம் ஆபத்து என்பது சாலை விதிக்கு மட்டுமல்ல மணவாழ்க்கை விதிக்கும் பொருத்தமானது. உங்களுக்கு பிடிக்காதவரை பெற்றோர் தேர்ந்தெடுத்தால் தைரியமாக ‘நோ’ சொல்லுங்கள்.

    உங்கள் விருப்பப்படி இணை தேடும் முயற்சி நடந்துகொண்டிருப்பதை ஒவ்வொரு கட்டத்திலும் கண் காணியுங்கள். தேர்ந்தெடுக்கப்படுகிறவர் உங்களுக்கு பிடித்தமானவராக தெரிகிறார் என்றால், திருமண முடிவினை எடுப்பதற்கு முன்னால் அவரோடு பேசிப்பாருங்கள். காதல் திருமணத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் ஜாதி, மதம், பொருளாதார சூழல் போன்ற பல விஷயங்கள் இன்று அல்லது நாளை பிரச்சினைக்குரிய விஷயங்களாக மாறும். உங்கள் இருவரிடமும் வற்றாத அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் இருந்தால்தான் அதில் இருந்து உங்களால் மீளமுடியும். எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் கடைசி வரை ஒருங்கிணைந்து சமாளிப்போம் என்ற நெஞ்சுரம் இருந்தால் மட்டும் காதலை, கல்யாணமாக்குங்கள். ‘தெரியாமல் காதலில் சிக்கிக்கொண்டோமே!’ என்ற எண்ணம் இருந்தால், ஒருபோதும் திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள்.



    தவறான சிந்தனை:

    ‘எனக்கு தலைக்குமேல் வேலை இருந்துகொண்டிருந்தது. நான் மனதளவிலும், உடலளவிலும் திருமணத்திற்கு தயாராகவில்லை. ஆனாலும் என் பெற்றோர் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களது விருப்பத்திற்கு அவர்களே தேர்ந்தெடுத்து தந்த துணை இது. அதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம்’ என்று, ஆணோ, பெண்ணோ சொல்லும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகுவது தவறானதாகும்.

    சரியான வழிமுறை:

    இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் எத்தனையோ வேலைகள் இருக்கலாம். அதுபோல் திருமணத்தையும் ஒரு வேலையாக எடுத்துக்கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடாதீர்கள். திருமணத்திற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். அதற்காக மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகுங்கள். திருமணத்தை பற்றிய தவறான கருத்துக்களோ, தாம்பத்ய தொடர்பு பற்றி தவறான எண்ணங்களோ, பெண் என்றாலே மோசமானவள் (அல்லது ஆண் என்றாலே மோசமானவர்) என்ற முரண்பாடான எண்ணத்தில் ஊறிப்போயிருந்தாலோ அவசரப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள். தெளிவடைந்து, உங்கள் எண்ணங்களை சரிசெய்த பின்னர் திருமணம் செய்துகொண்டால்போதும். அதுபோல் உடல் கோளாறுகள் ஏதேனும் இருப்பதாக அறிந்தால், அதற்குரிய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, திருப்தியடைந்த பின்பு திருமணம் செய்து கொள்ள முன்வாருங்கள்.

    திருமணத்தில் ஒரு ஆணும்- பெண்ணும் மட்டும் இணைவதில்லை. இருவேறு சூழ்நிலைகளில் இருந்து இரண்டு குடும்பங்கள் அந்த உறவின் மூலம் இணைகின்றன. கணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள பெண் தயாராகவேண்டும். அதுபோல் மனைவியை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொள்ள கணவரும் தயாராகவேண்டும். ஆண் தனது அம்மாவுக்கும், சகோதரிக்கும் எவ்வளவு உரிமைகளை கொடுப்பாரோ அதுபோன்ற உரிமைகளை மனைவிக்கு வழங்க முன்வரவேண்டும். திருமண வாழ்க்கை தோல்வியடைந்தால் அந்த பழியை பெற்றோர் தலையில் சுமத்தலாம் என்ற எண்ணத்தில், பொறுப்பில்லாமல் திருமண முடிவு எதையும் எடுத்துவிடாதீர்கள்.

    தவறான சிந்தனை:

    பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை பார்க்கும் இடத்திலோ, வெளியிலோ பல்வேறுவிதமான நட்புகள் இருக்கும். அவைகளை அப்படியே திருமணத்திற்கு பின்பும் தொடரலாம் என்று நினைப்பது தவறு.

    சரியான வழிமுறை:

    நீங்கள் திருமணம் செய்துகொள்ள தயாராகும்போதே, ‘எதிர் காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்’ என்று நினைக்கும் உறவுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தொழில்ரீதியான தொடர்பினை மட்டும் வைத் திருங்கள். அதற்கு அப்பால் எந்த உறவையும் கொண்டு செல்ல முயற்சிக்காதீர்கள். கணவரிடம் இருந்து மனைவிக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ, மனைவியிடம் இருந்து கணவருக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ அதை அலுவலகத்தில் உள்ள மூன்றாம் நபரிடம் இருந்து பெறும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. அந்த அன்பை வீட்டிலே பெறும் வழியை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். உடன் பணிபுரிபவர்களிடமிருந்து உதவிகள் பெறலாம். ஆனால் அது எல்லையற்றதாக இருந்தால், பிற்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை இப்போதே புரிந்துகொண்டு எல்லையை வகுத்திடுங்கள். அலுவலக பிரச்சினைகளை அங்கேயே பேசி முடித் திடுங்கள். வீடு வரை கொண்டு செல்லவேண்டாம். வீட்டில் இருந்துகொண்டு அலுவலக நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக பேசும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் திரு மணத்திற்கு தயாராகும்போதே அதற்கும் முற்றுப்புள்ளிவைத்திடுங்கள். திருமணமான சில மாதங்களிலே பல தம்பதிகள் விவாகரத்தை நோக்கிச்செல்ல இந்தவித அரட்டை காரணமாக இருந்துகொண்டிருக்கிறது.

    ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு வாழும் வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு பின்பு வாழவேண்டிய வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு முன்பு பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் எவ்வளவு நேரமானாலும் மூழ்கி கிடக்கலாம். திருமணத்திற்கு பின்பும் அதே நிலை தொடர்ந்தால், அது மணவாழ்க்கையை மங்கவைத்துவிடும். அதனால் இப்போதே அதை குறைத்துக்கொள்ள முன்வாருங்கள். உங்கள் இணையை மனதாலும், உடலாலும், உணர்வுகளாலும், அறிவாலும் மகிழ்ச்சிப்படுத்தவேண்டிய கடமை திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அவை இருதரப்பில் இருந்தும் குறைவின்றி கிடைத்தால் மட்டுமே மணவாழ்க்கையை காப்பாற்றி, மகிழ்ச்சியாக வாழமுடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வையுங்கள்.

    - விஜயலட்சுமி பந்தையன். 
    தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.

    இதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ‘‘சுகாதாரமான நிலையில் இருக்கக்கூடிய இறைச்சிகளை அப்படியே தீயில் சுட்டு சாப்பிடுவதால் மோசமான உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், அதில் சுவை, நிறம் போன்ற காரணங்களுக்காக சேர்க்கப்படும் பொருட்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அதிகளவிலான மசாலாப் பொருட்களையும் சேர்த்து நீண்ட நேரம் ஊற வைத்து, பின்னர் தீயில் சுட்டு தயார் செய்கிறபோதுதான் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது.
     
    அதேபோல அதிகளவு தீயில் சுட்டு கருகிய நிலையிலோ அல்லது சரியான அளவில் வேகாமலோ இருக்கிற இறைச்சிகளை சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகக் கூடிய வாய்ப்பு அதிகம். மீன் மற்றும் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகள் அனைத்திலும் தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை இறைச்சிகளின் மீது மசாலாவை தடவி 6 மணி நேரமோ அல்லது இன்னும் கூடுதல் நேரமோ ஊற வைக்கப்படுகிறது.

    பார்க்க வண்ணமயமாகவும், சாப்பிடும்போது அதிக ருசியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வகை இறைச்சிகளுடன் உடல்நலனுக்கு தீங்கு உண்டாக்கும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.



    இவ்வாறு இந்த இறைச்சிகளை தீயில் அதிக வெப்பநிலையில், தேவையான அளவு நேரம் சுட்டு இவ்வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

    மேலும் தந்தூரி உணவுகளில் சரியான முறையில் பதப்படுத்தப்படாத, சுகாதாரமற்ற நிலையிலுள்ள இறைச்சிகள் அல்லது மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்தும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களே உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

    சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இதுபோன்ற உணவுகளை அடிக்கடி, அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்சர், வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் மட்டுமல்லாமல் இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப் புற்றுநோய்  போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    தந்தூரி உணவு நம் நாட்டு சூழலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும், நமது உடலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும் அவற்றை சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்தால் அவை நம் உடலுக்கு ஏற்ற உணவாக மாறிவிடும். ஆனால், அதற்கு நாம் ஜீரண சக்தி, உணவின் அளவு, கால சூழ்நிலை என்கிற மூன்று விதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.



    தந்தூரி வகை இறைச்சி உணவுகளை உட்கொள்ளும்போது நன்றாக பசித்திருக்க வேண்டும். அதை சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இருக்க வேண்டும். புளித்த ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் இவ்வகை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

    இவ்வகை உணவுகளை எடுத்துக்  கொள்ளும்போது சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நமது ஜீரண உறுப்புகளின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும் என்பதால், எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகளை இந்நேரங்களில் எடுத்துக் கொள்வதே உடல் நலனுக்கு நல்லது. எனவே நல்ல ஜீரண சக்தி இருப்பவர்களாக இருந்தாலும் இரவு நேரங்களில் இதுபோன்ற தந்தூரி இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மூன்று விதிகளை கருத்தில் கொண்டு தந்தூரி வகை இறைச்சிகளை சாப்பிட்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது.

    தந்தூரி முறையில் சமைக்கப்பட்ட இறைச்சியானது மிருதுவாக மாறி எளிதில் ஜீரணிக்கக்கூடியதுதான். இருந்தபோதும் அதை மேற்கண்ட மூன்று விதிமுறைகளையும் பின்பற்றி சாப்பிடுவதே சரியானதாக இருக்கும்.

    இந்த வகை இறைச்சியை சாப்பிட்ட பின்பு அஜீரண பிரச்சனை ஏற்படுபவர்கள், ஆயுர்வேத மருந்தகத்தில் கிடைக்கும் அஷ்ட சூர்ணம் என்ற மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை சீரகத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனை சரியாகும். 
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த செட்டிநாடு மிளகாய் சட்னி சூப்பரான இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    வரமிளகாய் - 5
    பூண்டு - 3
    புளி - 1 இன்ச்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு :

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!

    புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் முகத்தில் உள்ள முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    முகத்தில் முகப்பரு வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான முகப்பருவை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின் முடிவெடுங்கள்.

    முகப்பருவில் உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த முகப்பரு மிகவும் தீவிரமாகக் கூடும்.

    முகப்பருவை கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த முகப்பருவை சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.

    அசுத்தமான கையால் முகப்பருவை தொடும் போது, முகப்பருவில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் முகப்பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

    முகப்பருவை கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த முகப்பரு மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

    முகத்தில் முகப்பருவை வந்தால், கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க பழகுங்கள். முகப்பருவை தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாக போய்விடும்.
    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.



    கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

    கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

    சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும்  இதம் தரும்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேரட் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், சோயா சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 100 கிராம்,
    துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள் தலா - 1 டீஸ்பூன்,
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்,
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.



    செய்முறை :

    சோயாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும்.

    கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சத்தான கேரட் - சோயா சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.
    காலணிகள் மனித வாழ்வோடு ஒன்றியுள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர்.

    வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது. வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல்  அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.
     
    கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும். பாதத்திற்கு அடியில்  விரல்கள் முதல் குதி கால் வரை அமைந்து இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம், முதலிய எல்லா உருப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை வேகப் படுத்தும்.
     
    பாதத்துக்கு அடியில் கற்கள் போன்றவைற்றை மிதிக்கும்போது அக்குப்பங்சர் என்னும் சீன சிகிச்சையினால் கிடைக்கும் பலன் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராவதுடன், நரம்பு மண்டலங்களில் உள்ள சோர்வுச் செல்கள் அழிக்கப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.
     
    ஒருநாளைக்கு சிறிது நேரமாவது செருப்பு அணியாமல் வெறும் காலில் சிறிது தூரம் கல், மண், புல் போன்வற்றை மிதித்தபடி நடந்து சென்றால் இலவசமாக  இயற்கையே நமக்கு அக்குபஞ்சர் சிகிச்சையை இலவசமாக கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிக அவசியம்.
    குழந்தைகளுக்கு நினைத்திறன் பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இந்த பயிற்சியை பற்றி பார்க்கலாம்.
    பள்ளிகள் தொடங்கி பாடங்கள் வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. பாடங்களை திட்டமிட்டபடி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பார்கள். ஆனால் அதே வேகத்தில் பாடங்களை எழுதுவதும், படிப்பதும் சில மாணவர்களுக்கு கடினமாக இருக்கலாம். நீங்களும் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வழியிருக்கிறது. நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். அதற்கான சில எளிய வழிகளை அறிவோமா...

    முதலில் உங்கள் நினைவுத்திறனை சோதிக்கும் சிறு பயிற்சி...

    தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நீண்ட செய்தியை எடுத்துக் கொண்டு அறிவைக் குறிக்கும் ‘அ’, ‘றி’, ‘வு’ என்ற எழுத்துக்கள் வருவதை வட்டமிட்டுக் குறியுங்கள். இப்போது மீண்டும் நீங்களாகவே அந்தச் செய்தியைப் படித்து எந்தெந்த இடங்களில் அந்த எழுத்துகளை வட்டமிடாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். மற்றொருவர் துணையுடனும் நீங்கள் சரியாக அனைத்தையும் வட்டமிட்டிருக்கிறீர்களா? என்று பரிசோதிக்கலாம். ஒரே முறையில் நீங்கள் அனைத்து அ, றி, வு என்ற எழுத்துகளை மறக்காமல் வட்டமிட்டிருந்தால் நீங்கள் நினைவுத்திறனில் கெட்டியாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

    நீங்கள் ஒரு சில எழுத்துகளை வட்டமிட மறந்திருக்கிறீர்களா, பரவாயில்லை ரகம். நிறைய எழுத்துகளை வட்டமிட தவறியிருந்தால் உங்கள் நினைவுத் திறனை கண்டிப்பாக கீழ்வரும் பயிற்சிகளை கடைப்பிடித்து மேம்படுத்த வேண்டும்.

    இதோ நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்...

    ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு கொண்டுவந்துவிடும். சரி... வாகனத்துக்கு பெட்ரோல் போல, மூளைக்கு பெட்ரோல் எது தெரியுமா? ஆக்சிஜனும், குளுக்கோசும்தான். மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கும்போது, குளுக்கோஸை சக்தியாக மாற்றி நன்கு இயங்குகிறது.

    சரி மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மூச்சுப் பயிற்சிதான் எளிய வழி. யோகா முறையில் இதை பிராணயாம பயிற்சி என்பார்கள். இந்த பயிற்சியை செய்வதும் எளிதுதான், முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்போது மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிடுங்கள். பத்து அல்லது இருபது முறை இப்படி செய்துவிட்டு, பிறகு ஒற்றை நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மற்றொரு நாசியின் வழியே காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடவும். இதுபோல சில முறைகள் செய்தபிறகு, அந்த துவாரத்தை மூடிக்கொண்டு பின்னர் மற்றொரு துவாரம் வழியே மூச்சுப் பயிற்சி செய்யவும்.

    மாணவர்கள் தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் இந்தப் பயிற்சியை செய்தால் மூளைக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படும். உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்குவதை காண்பீர்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர மாற்றங்களை நீங்களே உணர முடியும்.

    பிராணயாமம் போலவே மற்றொரு விளையாட்டு பயிற்சியும் நினைவுத் திறனை வளர்க்கும். இந்தப் பயிற்சியை நீங்கள் பூச்சொல்லி விளையாடுதல் அல்லது வேறு பெயரில் நீங்கள் அறிந்திருக்கலாம். அதையே எண்களோடு சேர்த்து பயிற்சி செய்து நினைவுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி இது.



    ஒன்று முதல் 100 வரை உங்களுக்கு எண்ணத் தெரியும்அல்லவா? அது பயிற்சியல்ல. அதை 100 முதல் 99, 98, 97 என்று ஒன்றுவரை குறைத்துக் கொண்டே பயிற்சி எடுங்கள். பின்னர் இரண்டு இரண்டாக குறைத்து 100, 98, 96, 94 என்று 2 வரை பயிற்சி செய்யுங்கள். அடுத்து மூன்று மூன்றாகவும், பின்னர் நான்கு, நான்காகவும், இறுதியில் 9 வரை கழித்துக் கொண்டே எண்ணி பயிற்சி பெற்றால் நினைவுத்திறன் படுவேகமாக செயல்படுவதை உணரலாம். எப்போது கேள்வி கேட்டாலும் உங்களால் எந்த எண்ணிலிருந்தும் கழித்துக் கொண்டே எண்கள் விடுபடாமல் சொல்ல முடிந்தால் நீங்கள் நினைவுத்திறனில் படுசுட்டியாக மாறிவிட்டீர்கள் என்று பொருள்.

    7 வயது வரை உள்ள குழந்தைகள் 50 வரையும், 14 வயது வரை உள்ள குழந்தைகள் 100 வரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரிசைப்படி எண்களை குறைத்துச் சொல்லி நினைவுத்திறன் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இனி படித்த பாடங்கள் மறக்கவே மறக்காது அல்லவா?!

    தினசரி பழக்கங்கள்

    ஞாபக சக்திக்காக தினசரி செய்ய வேண்டிய சில பழக்கங்கள்...

    வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்கு போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன் சிறப்பாக செயல்பட துணை செய்யும்.

    அதேபோல சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாக செயல்பட துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உங்கள் விருப்ப உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    உடல் எடையை கட்டுக்குள் வைப்பதாக கருதி, உணவை குறைத்தால் அது மூளை இயக்கத்தை தடை செய்து ஞாபகசக்தி குறைவை ஏற்படுத்தலாம்.

    ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என்றிருக்காமல் அவசியமான வேலைகளை நினைவுபடுத்தி மனதில் பதிய வைப்பது சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

    விளையாட்டுகள் மூளைக்கு சிறந்த பயிற்சியைத் தந்து நினைவுத்திறனை அதிகரிக்கும். 
    ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
    இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவுகொண்ட சிறிய அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏ.சி. போட்டு தூங்குகிறார்கள். ஏ.சி. இல்லாதவர்கள் கூட கொசுக் கடிக்கு பயந்து கதவு ஜன்னல் எல்லாவற்றையும் சிக்கென்று அடைத்து தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.

    பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து போகிறது. அப்படி குறையும்போது நுரையீரலால் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும், இது தொடர்ந்தால் மனிதன் மூர்ச்சையாகி விடுவான். உடலில் உள்ள உயிர் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். அதனால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்யத் தொடங்கும்.

    அது நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்யும். தண்ணீரில் இரு மடங்கு ஆக்ஜிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் உள்ளன. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் ‘இரண்டாவது நுரையீரல்‘ என்று அழைக்கிறார்கள்.

    சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும். அந்த கழிவுநீரை வெளியேற்ற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

    இந்த தள்ளாட்டத்தால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவமாக படிகிறது. சிறுநீரகத்திலும் இந்த படிமம் படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.

    ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத்தீட்டு‘ என்று அழைத்தார்கள். அதனால் காற்று தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம். சிறுநீரகத்தை காப்போம். 
    ஆப்பம், இடியாப்பம், தோசை, இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் சொதி. இன்று அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 6
    2-ம் தேங்காய் பால் - 200 மில்லி,
    முதல் தேங்காய் பால் - 100 மில்லி
    மஞ்சள் தூள் - 5 கிராம்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் ப.மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, 2-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணிநேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

    2 மணிநேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து குளிர்ச்சி போனவுடன் கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    இப்போது முதல் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.

    லேசாக கொதி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் திரிந்து விடும்.

    சூப்பரான மட்டன் சொதி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.
    பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

    காலத்திற்கு ஏற்ற விஷயங்கள் என்பவை எவை?

    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

    இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

    பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண் களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.



    செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

    பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.

    காதலில் சிக்கும் பெரும்பாலான பெண்கள் பயந்துவிடுகிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கமுடியும். ஒன்று, காதலர் ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து அவளை மிரட்டலாம். அவள் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பது போலெல்லாம் பேசி அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தலாம். இரண்டு, அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எதையாவது உருவாக்கிவைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட மிரட்டலுக்கு உள்ளாகி ஏற்கனவே மிரண்டு போயிருக்கும் பெண்ணை பெற்றோரும் தங்கள் பங்குக்கு மிரட்டினால் அவள் மனதளவில் நொறுங்கிப்போய்விடுவாள்.

    அதனால் பெற்றோர் அவள் நம்பிக்கையை பெற்று, பக்குவமாக பேசி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவள் உண்மையை சொன்ன பிறகு, ‘நடந்தது நடந்துவிட்டது. நீ எதற்கும் கவலைப் படாதே. எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையூட்டவேண்டும். நம்பிக்கைதான் இந்த பிரச்சினையை தீர்க்கும். மாறாக மகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும்.



    இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும். உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

    உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

    படித்துக்கொண்டிருக்கும் மகள் காதல் வசப்பட்டால், அவள் அவனை ‘உலகிலே மகா யோக்கியன்’ என்பாள். அதை அப்படியே தாய் நம்பிவிடக்கூடாது. ஒருவேளை அந்த பையன் வசதிபடைத்தவனாக இருப்பான். அதனால் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி, அந்த காதலை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. ‘இப்போது நீ படிக்கவேண்டும். அதுமட்டுமே உன்வேலை. காதலை எல்லாம் உடனே ஒதுக்கிவிடு’ என்று கூறி, படிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் நினைவுபடுத்துங்கள். எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கிவிடுவாள்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
    பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.
    மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

    அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

    தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.



    பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

    கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்... 
    ×