என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம்.
இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம். அக்காலத்தில் நமக்கு புளியங்கொட்டை, சோழி மற்றும் முத்துகள் கொண்டு வயதுக்கு வந்த பெண்கள் பல்லாங்குழி ஆடுவது மிகச்சாதாரணமாக பார்க்க முடியும். பல்லாங்குழிக்கு பின்னால் விரலுக்கு பயிற்சி கணக்கு பயிற்சி, பெண்கள் வீட்டு வேலைகளை தெளிவாக சிறப்பாக செய்யவும் மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் குணம் போன்ற பல அரிய பழக்கங்கள் விடுமுறை நாட்களிலே கற்றுக்கொள்ள முடியும்.
இப்பொழுது பல்லாங்குழி பலகையே எந்த ஒரு வீட்டிலும் பார்க்க முடியவில்லை. கால் உடைந்த குதிரையாக சீரியலும், டிக்-டாக்கும் கைப்பேசிக்குள்ளே அடைப்படுவது குழந்தை, பெண்களுக்கு நல்லதா?. பருப்பு கடைஞ்சி விளையாடி அனைவருக்கும் பிரித்துக்கொடுக்கும் குழந்தை நாட்போக்கில் சமுதாய அக்கறையோடு வளர்ந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யும். காளையை அடக்கவும் செய்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்.
பாரம்பரிய விளையாட்டு தாய்-தந்தை, பெரியோர்கள் உறவுகள், நட்புகள் என அனைவரின் குணங்களையும் செதுக்குவதாக அமைந்துள்ளது. இதே போல் கோலி, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், தாயம், பாண்டியாட்டம், கண்ணாமூச்சி, பச்சைக் குதிரை, திருடன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்காய், கில்லி போன்ற விளையாட்டுகள் பயனுள்ள பொழுதுபோக்கு மட்டும் அல்ல மனிதாபிமானம், விடாமுயற்சி, சிந்திக்கும் திறன், தன்னம்பிக்கை என சுய ஒழுக்கங்கள் வளர காரணமாக இருப்பது என்பது மறைக்கமுடியாத உண்மை. மனக்கூர்மை, படைப்பாற்றல் நினைவாற்றல் மேம்பாடு, சுயசிந்தனை, உடல் மனப்பயிற்சி போன்ற குணங்களை கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டு.
கூடி விளையாடிய ஆட்டங்கள் இன்று மறைந்து விட்டன. அக்கம்பக்கம் பழகவே தயங்கும் இன்றைய இளம் தலைமுறையிடம் குழு விளையாட்டில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக வழக்கொழிந்து போகும் பாரம்பரிய விளையாட்டை தேடிப்பிடித்து பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.
பாரம்பரிய விளையாட்டில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதை அறியாத இளைஞர்கள் கைப்பேசியில் விளையாடி தங்களுக்கான அடையாளங்களை தொலைத்துவிடுகின்றனர். எனவே நம் பாரம்பரிய விளையாட்டை பேணி காக்க வேண்டும்.
முனைவர் கரு.செந்தில்குமார், நூலகர், கோவை.

எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும். இந்த நோயின் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும் பார்க்கலாம்.
எலும்புகள் திடீரென மென்மையான மாதிரி உணர்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளில் வலி மற்றும் அசௌகரியமான உணர்வு போன்றவையே எலும்பு வலியாக கருதப்படுகிறது. எலும்பு வலி என்பது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உடல் இயக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எலும்பு வலி இருக்கும். எலும்புகளின் அமைப்பு மற்றும் சாதாரண இயக்கங்களை பாதிக்கிற நோய்களின் விளைவால் எலும்பு வலி ஏற்படக்கூடும்.
எலும்பு வலி ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் :
* கீழே விழுவது, வாகன விபத்துகளின் போது பலமாக அடிபட்டு கொள்வது போன்றவற்றால் எலும்பு வலி வரலாம். அப்படி விழுவதன் விளைவால் எலும்புகள் உடைந்து, ஃபிராக்சர் ஏற்படலாம். எலும்புகளுக்கு ஏற்படும் எந்தவகையான பாதிப்பும் இதற்கு காரணமாகலாம்.
அறிகுறிகள் : வீக்கம், அசௌகரியமான உணர்வு, எலும்புகளின் அமைப்பில் வித்தியாசம் தெரிவது, எலும்புகள் அசையும்போது வித்தியாசமான சத்தம் வருவது.
* எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் வைட்டமின் டி. இவை இரண்டும் குறையும்போது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற நோய் ஏற்படுவது சகஜம். இந்த நோய் தீவிர நிலையை எட்டும்போது எலும்புகளில் வலி ஏற்படும்.

அறிகுறிகள் : தசை மற்றும் திசுக்களில் வலி, தூக்கமின்மை, தசைபிடிப்பு, அதிக களைப்பு, பலவீனமாக உணர்தல்.
* உடலின் ஏதோ ஒரு பகுதியில் புற்றுநோய் உண்டாகி, அது சீக்கிரமே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவும். மார்பகம், சிறுநீரகம், நுரையீரல், தைராய்டு புற்றுநோய்கள் தீவிரமடையும்போது எலும்புகளுக்கும் பரவும். அதன் காரணமாக எலும்புகளில் கடுமையான வலி ஏற்படும்.
அறிகுறிகள் : தலை வலி, நெஞ்சு வலி, ஃபிராக்சர், மயக்கம், மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், மூச்சுவிடுவதில் சிரமம்.
* எலும்புகளிலேயே உருவாகும் புற்றுநோய் இது. இது மிக அரிதான புற்றுநோய் என்றாலும் ஏற்பட்டுவிட்டால் எலும்புகளின் அடிப்படை அமைப்பையே சிதைத்துவிடும். எலும்புகளில் வலி அதிகரிக்கும்.
அறிகுறிகள் : எலும்புகள் உடைதல், மரத்து போதல், தோலின் அடியில் வீக்கம்.
* சில நோய்கள், உதாரணத்துக்கு ‘சிக்கெல் செல் அனீமியா’ போன்றவை எலும்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்பவை. போதுமான ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் எலும்பு திசுக்கள் அழிந்துவிடும். இதனால் எலும்புகள் பலவீனமாகி, அவற்றில் வலியும் ஏற்படும்.
அறிகுறிகள் : மூட்டு வலி, மூட்டுகளை அசைக்க முடியாத நிலை, பலவீனம்.
* எலும்பு மஜ்ஜைகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு லுகேமியா(Leukemia) என்று பெயர். எலும்பு செல்களின் உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜை எலும்புகளில் காணப்படும். அவற்றில் உண்டாகும் புற்றுநோய் கடுமையான எலும்பு வலியை கொடுக்கும். கால்களில் இந்த வலி அதிகமாக இருக்கும்.
அறிகுறிகள் : தோல் வெளிறிப் போதல், களைப்பு, உடல் எடை குறைவது, மூச்சு விடுவதில் சிரமம்.
ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஜவ்வரிசி, காய்கறிகள் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
கேரட், கோஸ் - தலா ஒரு கைப்பிடி
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊறவையுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து,வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
கேரட், கோஸ் - தலா ஒரு கைப்பிடி
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊறவையுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து,வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான ஜவ்வரிசி போண்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
கோடை கால வெயிலுக்கு சின்னம்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உருவாகும். இதில் இருந்து தப்பிக்க தினசரி, 2½ முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான ஆடைகளை உடுத்தக் கூடாது.
தோல் வறட்சியானால், சிறுநீர் சரியாக கழிக்க முடியாது. வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வரும். இதனால் உடலில் தடிப்பு போன்று இருக்கும். அதை தவிர்க்க, தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளிக்க வேண்டும்.
வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், குளிர்ந்த தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம் ஆகும். உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்.
இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. அதிகளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை இருக்காது.
வெயில் காலத்தில் இளநீர், மோர், பதநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் உடலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைக்கிறது.
அத்துடன் தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ சாப்பிடலாம்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்’ அணிந்து கொள்ளலாம். இதுபோன்று செயல்பட்டால் கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.
* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.
* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.
* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.
* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.
* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.
* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.
எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்
* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.
* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.
* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.
* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். விரல் நகங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் முகத்திற்கு காட்டும் அக்கறையை விரல் நகங்களுக்கும் காட்ட வேண்டும். பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் கை, கால்களின் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்...
* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.
* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.
* உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.
* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.
* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.
* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.

சோளத்தில் (கார்ன்) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையில் சத்தான சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோளக்குருணை - 1 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
தேங்காய்த்துருவல் - 3/4 கப்,
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்,

செய்முறை :
மக்காச்சோளத்தை காயவைத்துச் சற்று கொரகொப்பாக நொய் போல் உடைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரிசி மாவையும், சோளக்குருணையையும் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த அரிசி மாவையும், சோளக்குருணையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலந்து நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் போட்டு பின்னர் கலந்து வைத்த மாவை போட வேண்டும். இந்த முறையில் அனைத்து மாவையும் போட்டு அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்,
சோளக்குருணை - 1 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
தேங்காய்த்துருவல் - 3/4 கப்,
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - சிறிது.

செய்முறை :
மக்காச்சோளத்தை காயவைத்துச் சற்று கொரகொப்பாக நொய் போல் உடைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரிசி மாவையும், சோளக்குருணையையும் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த அரிசி மாவையும், சோளக்குருணையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலந்து நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் போட்டு பின்னர் கலந்து வைத்த மாவை போட வேண்டும். இந்த முறையில் அனைத்து மாவையும் போட்டு அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்,
சூப்பரான சத்தான சோள ரவை புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்தையும் நல்ல உடல்வாகையும் உறுதியான இதயத்தையும் பெற, அனைத்து உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட, உடற்பயிற்சியில் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, வீட்டு, அலுவலக வேலைத்திறன், வயிறு, உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவு என அனைத்தையும் மனதில் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள்
சீரான நல்ல ரத்த ஓட்டம் உடலுக்கும் இதயத்துக்கும் கிடைக்க வேண்டியது மிக அவசியம். அதிக அளவு ஆக்ஸிஜன் பெற நம் நுரையீரல்கள் விரிவடைந்து, உறுதிப்பட வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சிகளை இதயம்-நுரையீரல்கள் உறுதி செய்யுமாறு செய்ய வேண்டும் (Cardiorespiratory Endurance).
நம் உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் உறுதிபடச் செய்ய, அந்தந்த தசைப்பகுதிகளுக்கு அளவான பளுக்களை தேர்வு செய்து அந்த தசைகளின் தன்மைக்கேற்ப, ஒருநாள் உடலின் மேல் உறுப்பு தசைகளுக்கும், அடுத்த நாள் கீழ் உறுப்பு தசைகளுக்கும் மாறி மாறி பளு தூக்கும் பயிற்சி அவசியம் (Muscular Strength).
மெது நடைப்பயிற்சி, வேக நடைப்பயிற்சி, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என அடுத்தடுத்து முன்னேற்றம் காண வேண்டும். இதனால் உடலின் முழுத் தசை மண்டலங்களும் உறுதிப்படுவதோடு, நிறைய ஆக்ஸிஜன் பெற்று, நல்ல ரத்த ஓட்டம் அடைந்து, நீங்கள் களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம் (Muscular Endurance).
அளவான உடற்பயிற்சி, சீரான நடை / ஓட்டம், தேவையான பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், நீந்துதல், பரத நாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, மேலை நாட்டு ஆட்டக்கலைகள் என இவை அனைத்துமே உடலை நன்றாக வளைந்து கொடுக்கும் (High Level Range of Motion) திறமையை அதிகரிக்கும்.
தேவையில்லாத கொழுப்புதான் நம் உடலைக் கெடுக்கும் முதல் எதிரி. ஒவ்வொரு நாளும் நம் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பு சக்தியை எரித்துவிட வேண்டும் (Burn unwanted Excess Calories). இதற்காக நீங்கள் தினமும் செய்துவரும் உடற்பயிற்சியின் பல தரங்கள், வகைகளை வேகமாக (Intensity) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலே கூறிய அனைத்துப் பயிற்சிகளையும் 20 முதல் 60 வினாடிகள்... முடிந்தால் சற்று கூடுதலாக - சிறிது சிறிதாக வயதுக்கு ஏற்றவாறு கூட்டுவது (Volume) கொழுப்புச் சக்திகளை எரிக்க மிகவும் ஏற்றது. ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இதில் முதலிடம் பெறுகின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்பு, தசைகள், உறுதியான எலும்புகள், அதன் சக்தியான இணைப்புகள் பெற்று அழகான, பேரின்ப உடல் வாகை நாம் பெறுகிறோம் (Body Composition).
நல்ல பயிற்சியாளர்களிடம் அறிவுரை கேட்டு செய்வது மிகவும் அவசியம். ஒரே நாளில் யாருமே அதிக உடற்பயிற்சி செய்வதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது. அதிகமாக உடலை வருத்துவதால் மூட்டுவலி, மயக்கம், வலிமைக் குறைவு, தசை வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் இணையும் அனைத்துப் பகுதிகளிலும் வேதனை என பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
உடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள்
சீரான நல்ல ரத்த ஓட்டம் உடலுக்கும் இதயத்துக்கும் கிடைக்க வேண்டியது மிக அவசியம். அதிக அளவு ஆக்ஸிஜன் பெற நம் நுரையீரல்கள் விரிவடைந்து, உறுதிப்பட வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சிகளை இதயம்-நுரையீரல்கள் உறுதி செய்யுமாறு செய்ய வேண்டும் (Cardiorespiratory Endurance).
நம் உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் உறுதிபடச் செய்ய, அந்தந்த தசைப்பகுதிகளுக்கு அளவான பளுக்களை தேர்வு செய்து அந்த தசைகளின் தன்மைக்கேற்ப, ஒருநாள் உடலின் மேல் உறுப்பு தசைகளுக்கும், அடுத்த நாள் கீழ் உறுப்பு தசைகளுக்கும் மாறி மாறி பளு தூக்கும் பயிற்சி அவசியம் (Muscular Strength).
மெது நடைப்பயிற்சி, வேக நடைப்பயிற்சி, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என அடுத்தடுத்து முன்னேற்றம் காண வேண்டும். இதனால் உடலின் முழுத் தசை மண்டலங்களும் உறுதிப்படுவதோடு, நிறைய ஆக்ஸிஜன் பெற்று, நல்ல ரத்த ஓட்டம் அடைந்து, நீங்கள் களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம் (Muscular Endurance).
அளவான உடற்பயிற்சி, சீரான நடை / ஓட்டம், தேவையான பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், நீந்துதல், பரத நாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, மேலை நாட்டு ஆட்டக்கலைகள் என இவை அனைத்துமே உடலை நன்றாக வளைந்து கொடுக்கும் (High Level Range of Motion) திறமையை அதிகரிக்கும்.
தேவையில்லாத கொழுப்புதான் நம் உடலைக் கெடுக்கும் முதல் எதிரி. ஒவ்வொரு நாளும் நம் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பு சக்தியை எரித்துவிட வேண்டும் (Burn unwanted Excess Calories). இதற்காக நீங்கள் தினமும் செய்துவரும் உடற்பயிற்சியின் பல தரங்கள், வகைகளை வேகமாக (Intensity) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலே கூறிய அனைத்துப் பயிற்சிகளையும் 20 முதல் 60 வினாடிகள்... முடிந்தால் சற்று கூடுதலாக - சிறிது சிறிதாக வயதுக்கு ஏற்றவாறு கூட்டுவது (Volume) கொழுப்புச் சக்திகளை எரிக்க மிகவும் ஏற்றது. ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இதில் முதலிடம் பெறுகின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்பு, தசைகள், உறுதியான எலும்புகள், அதன் சக்தியான இணைப்புகள் பெற்று அழகான, பேரின்ப உடல் வாகை நாம் பெறுகிறோம் (Body Composition).
கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காபி அருந்துவது சாதாரணமான ஒன்று. வீடு தேடிவரும் விருந்தினரை சிறப்பிக்கும் விதமாக காபி வழங்கப்படும். மனிதனின் வாழ்க்கையோடு காபி, கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.
காபியை அருந்துவதால் ஏற்படும் பலன்களை பற்றியும், அதன் மூலம் ஏற்படும் சில ஆரோக்கிய சீர்கேடுகளை பற்றியும் பலவிதமான ஆய்வுத்தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் காபி அருந்துவது குறித்து, சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலைக்கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலக அளவில் கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அதில் அதிகமாக காபி அருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவும் இருக்கக்கூடும் என்ற தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குறைவாக காபி எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபி எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்போது உடல் அதிக பருமனாகும் சாத்தியமும் உள்ளது. அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர்.
எனவே, ஒரு நாளைக்கு அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் காபி பருகக்கூடாது என சுவீடனின் தேசிய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.

வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியது அவசியமானது.
வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தக்க பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டியது அவசியமானது. அத்தகைய பணிகள் அறைகளை பராமரித்தல், தோட்டங்களை பராமரித்தல், பூச்சி தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல் என்று பல விதங்களில் இருக்கின்றன. மேலும், மின்சார கருவிகள் பராமரிப்பு, தண்ணீர் குழாய்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வகைகள் என்று வீட்டு உபயோக பொருட்களுக்கான பராமரிப்புகளையும் அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட பணிகளை கச்சிதமாக செய்து முடிக்க சில இணைய தளங்கள் தகுந்த தகவல்களையும், பல தரப்பட்ட செய்திகளையும் தருகின்றன. அந்த வகையில் வீட்டு பராமரிப்பு பணிகளுக்கு என்று http://www.acmehowto.com என்ற இணைய தளம் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறது. அந்த இணைய தளத்தில் மேம்படுத்துதல் (Improvements) , தக்க இடங்களில் பொருத்துதல் (Fix it) அழகாக மாற்றுதல் (Decorate) , திறனாய்வுகள் (Reviews) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சமையலறையை ‘ரீ-மாடல்’ செய்து மாற்றி அமைத்தல், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட தலைப்புகளும் உள்ளன. சமையலறை மாற்றி அமைத்தல் எனும் தலைப்பில் அதன் பயன்பாட்டில் இருக்கும் கேபினட்டுகள், பயன்படுத்தும் கருவிகள் (Appliences) சமையல் மேடை, பெயிண்டிங், தரைத்தளம், நீர் தொட்டிகள் மற்றும் திறப்பு குழாய்கள், மின்சார விளக்கு அமைப்பு, இதர தொழில்நுட்பங்கள், காற்றோட்ட வசதி போன்ற உள் தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மேற்கண்ட தலைப்புகள் ஒவ்வொன்றிலும் அதற்கான விளக்கங்கள், அவற்றின் தரம் மற்றும் அதற்கு வழிமுறைப்படுத்தும் தகவல்கள், பராமரிப்பு வழிமுறைகள், சிறப்பு அம்சங்கள், பொருட்களுக்கான உற்பத்தி நிறுவன முகவரிகள் போன்ற தகவல்கள் மற்றும் முழுமையான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஹோம் தியேட்டர் எனும் தலைப்பில் அதன் பல்வேறு வகைகள், அவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
‘பிட்டிங்ஸ்’ என்ற முதன்மை தலைப்பில் ஹோம் அப்ளையன்சஸ் ரிப்பேர், பராமரிப்பு, கான்கிரீட் மேற்பூச்சு, கதவு மற்றும் ஜன்னல்கள், உலர் சுவர், மின்சார கருவிகள், வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டல், புல்வெளி மற்றும் தோட்டம், குழாய் அமைப்பு, பூச்சிகளை கட்டுப்படுத்துவது, கூரை அமைப்பு மற்றும் இதர கருவிகள் போன்ற தலைப்புகளும் உள்ளன.
மேற்கண்டவை தவிர பல முக்கியமான அம்சங்களும் கொண்ட இந்த இணையதளம் பலருக்கும் பயனுள்ள வகையிலும், வீடு மற்றும் வீட்டு வசதி பொருட்களை பராமரிப்பதில் மிகவும் உதவ கூடியதாகவும் உள்ளது.

இங்கு கடாய் சிக்கன் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை விடுமுறை நாட்களில் முயற்சித்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
ஊற வைப்பதற்கு...
தயிர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, தீயை அதிகரித்து 10 நிமிடம் பிரட்டி விட்டு வேக வைக்க வேண்டும்.
சிக்கனில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், தீயை குறைத்து, அதில் கரம் மசாலா சேர்த்து கிளறிய பின்னர் வதக்கிய குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், வாணலியை இறக்கி, அதன் மேல் பிரஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், கடாய் சிக்கன் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் மனித உணவுதானா? என்பதில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன, ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சாதாரண பாமரனாகிய நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.

100 மில்லி பாலில் 125 மி.கிராம் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) உள்ளது. இது எலும்பு மற்றும் பல்லுக்கு தேவைப்படுவதாக நம்மில் பலர் நினைக்கிறோம். பாலில் நிறைய கால்சியம் இருந்தாலும் பாலின் அமிலத்தன்மை ரத்ததில் சேரும்போது, ரத்தத்தின் அமில காரத்தன்மையை சரியான அளவில் வைப்பதற்காக, எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை அதிக அளவில் செலவழிக்கிறது, இதனால் எலும்பின் உறுதி குறைகிறதாக கூறப்படுகிறது.
மேலும் பாலில் இரும்பு சத்து இல்லை. பாலில் உள்ள கெசின் என்ற புரதம் நமது உடலில் இரும்புசத்து சேர்வதை தடுக்கிறது. சுவீடன் நாட்டில், 39 வயதிற்கு மேற்பட்ட 61 ஆயிரம் பெண்களும், 45 ஆயிரம் ஆண்களும் பங்கேற்ற ஒரு ஆய்வு, பால் அருந்துபவர்களின் நலன் குறித்த கேள்விகளைக்கொண்டு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பின்வரும் சில மோசமான விளைவுகளை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.
பால் அருந்துவதற்கும், உடல் நலக்குறைவு ஏற்படுவது மற்றும் இறப்பு விகிதம் அதிகப்படுவது இரண்டிற்கும் தொடர்பு இருந்துள்ளது. பால் அருந்துவது எலும்பு முறிவதிலிருந்து பாதுகாப்பதில்லை. அதிகமாக பால் அருந்தும் பெண்களுக்கு, எலும்புமுறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருந்துள்ளது. லேக்டோஸ், காலக்டோஸ் எனும் சர்க்கரை பாலில் அதிக அளவில் இருப்பதால் உடல் நலக்குறைவும் ஏற்பட வாய்புள்ளதாம்.
அடுத்தது! இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 70 சதவிகிதம் பால் தரமானதாக இல்லையாம். இந்தியாவில் பெரும்பாலானோர் பருகும் பாலுடன் சலவைபொருள் (சோப்பு) போன்ற கலப்படம் உள்ளதாக 2011&ம் ஆண்டில் பால் கலப்படம் பற்றிய தேசிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் யூரியா, ஸ்டார்ச், குளுகோஸ், ஃபார்மலின், போன்றவையும் பாலின் அடர்த்தியை அதிகமாக்கவும், நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கவும் கலப்படமாக
பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாம். வெண்னை எடுக்கப்பட்ட பாலின் 548 மாதிரிகளில் 477 மாதிரிகளில் குளுகோஸ் கலப்படம் இருந்ததாம்.
கறந்த பால் அதன் தன்மை மாற்றப்படாமல்தான் நமக்கு கிடைக்கிறதா? பல்வேறு விதமான ரசாயனங்கள் கலப்பிற்கு பிறகுதான் நமக்கு கிடைக்கிறதா..? உண்மையில் நாம் குடிக்கும் பால் இயற்கையானதா? செயற்கையானதா?

நம் உடலில் உள்ள மரபணுக்களோடு சேரும் தன்மை உள்ள பால்களைத்தான் நமது முன்னோர்கள் குடித்துள்ளார்கள். அந்த பால்களை குடித்தவர்களும் அந்த மாடுகளைப் போல் கடுமையாக உழைத்துள்ளார்கள். அந்த மாடுகளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகவே கருதி அவற்றுக்கு பூஜைகளையும் செய்து வணங்கி வந்துள்ளார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
அன்பர்களே! நமது தாய் நமக்காக பார்த்து பார்த்து நல்ல உள்ளத்துடன் சமைக்கும் உணவுக்கும், வியாபாரத்திற்காக சமைக்கும் உணவுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளதோ, அதைப் போல்தான்! தாயாக நினைத்து வளர்த்த நாட்டு பசுக்களின் பாலை, நான் மற்றும் நீங்களும் குறைகூற இயலாது. அற்புதமான இந்த நாட்டு பசுக்களின் பாலைக் குடிப்பவர்களும், இந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு நமது முன்னோர்களைப்போல் உழைக்கிறார்கள்? உடல் உழைப்பே இல்லாதவர்கள் பால் குடிப்பது அவர்களுக்கு நல்லதுதானா? மனிதனை தவிர மற்ற ஏதேனும் ஜீவன்கள் பிறப்புமுதல் இறப்பு வரை தொடர்ந்து பால் குடிக்கின்றனவா?
ஏ ஒன் பால், ஏ டூ பால்
சீமை பசு மாடுகள் எனும் கலப்பின சிந்து, ஜெர்சி போன்ற அதிக பால் கறக்கும், மரபணு மாற்றப்பட்ட மாடுகளின் பால்களை ஏஒன் பால் என்றும், நமது நாட்டு இனப் பசுக்களின் பாலை ஏடூ பால் என்றும் ஏன் கூறுகிறார்கள்?
இரண்டு தன்மைகளும் வேறு வேறாக உள்ளனவா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எது நல்லது? எது பாதிப்பானது? நாம்தான் சிந்திக்க வேண்டும்!. வியாபாரிகளையும், நோயாளிகளை அதிகம் எதிர் பார்ப்பவர்களையும் நம்பலாமா?
சமீபத்தில் குழந்தை நல மருத்துவர் ஒருவர், தன் குழந்தை மிகவும் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், தன் குழந்தையை அருகில் இருந்து பார்க்கவேண்டி உள்ளதால், தன் மருத்துவப்பணி செய்யாமல் வீட்டில் உள்ளேன் என்றார். நான் அவரிடம், தயவுசெய்து மூன்று நான்கு நாட்களுக்கு மட்டுமாவது நீங்கள் தரும் மாட்டுப்பாலை நிறுத்திப் பாருங்கள், என்றேன். ஒரு வாரம் கழித்துவந்து, அவர், நீங்கள் கூறியதுபோல் பாலை நிறுத்தினேன் என் குழந்தை தற்போது நன்றாக உள்ளார், நானும் என் பணிக்குச் செல்கிறேன் என்றார். சிறு குழந்தைகள்முதல், ஆஸ்துமா, சளித் தொல்லைகள் போன்ற நுரையீரல் கோளாறுகள் உள்ளவர்கள்வரை, மாட்டுப் பால் குடிப்பதை நிறுத்தினால் உடனடியாக உண்மையை உணர்வீர்கள்!