என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
நவீன வாழ்க்கை முறையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எளிதாக உள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரத்தை நாம் கடந்துவிடுகிறோம். ஆனால் நவீன வாழ்க்கை முறை மறைமுகமாக நமது உடலுக்கு ஊறுவிளைவித்து பல நோய்கள் வருவதற்கு அடித்தளமாகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசு, சாயப்பட்டறை கழிவுகள் தண்ணீரில் கலப்பது, வாகனப் புகை அதிகம் காற்றில் கலப்பது போன்றவற்றால் ஆண்களுக்கு உணர்வுகள், உணர்ச்சிகள் குறைந்துள்ளது. சமீப கால ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவர நிலவரப்படி, சில நகரங்களில் ஆண் மலட்டுத்தன்மை அதிகமாகியுள்ளது.
முறையான எளிய உடற்பயிற்சி இன்று இல்லை. அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்கு கூட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். உடல் உழைப்பே இல்லாமல் குளிர் சாதன அறைகளில் வேலை செய்யும் சூழல், பெண்களுக்கு வீட்டு வேலை சுலபமாகிவிட்டது. மொத்தத்தில் யாருக்குமே இன்றைய வாழ்க்கை முறையில் சீரான உடற்பயிற்சி இல்லை.
அப்படி இல்லாமல் தினசரி உடற்பயிற்சி என்பதை முறைபடுத்தினால், இதுபோன்ற பிரச்சினைகள் வராது. பெரும்பாலான குழந்தையின்மை தம்பதியினருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால் பெண்களுக்கு கருத்தரித்தலில் தேக்க நிலை ஏற்படுகிறது. முறையான திட்டமிடல், முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும்.
பெண் 21 வயது முதல் 35 வயது வயதிற்குள் கருத்தரித்தல் என்பது ஏற்ற வயதாகும். திருமணமாகி 2-3 வருடங்களில் குழந்தை பேறு இல்லையெனில் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம். சில தம்பதியினர் குழந்தைபேறு இல்லாத காரணத்தினால், சிலரின் அறிவுரைகளின்படி ஜாதகம் மற்றும் கோவில்களுக்கு சென்று காலம் கடத்துவதினால் அவர் தாய்மை அடைவதை இழக்க நேரிடுகிறது.
அதுபோல ஆண்களுக்கு இருக்கும் புகை, மது மற்றும் போதை பழக்கத்தால் அதிக அளவில் ஆண்மைக்குறைவு மற்றும் விந்தணு உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அதிக கதிர்வீச்சு உள்ள தளங்களில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் லேப்டாப், கணிப்பொறி போன்றவற்றை பயன்படுத்துவர்களுக்கும் விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. தற்போது அதிக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
டாக்டர் டி.செந்தாமரைச்செல்வி

உடம்பிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைப்பதற்கு முள்ளங்கி உதவுகிறது. இன்று முள்ளங்கியை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிகப்பு முள்ளங்கியை விடவும் வெள்ளை முள்ளங்கியில் தான் நிறைய சத்துக்கள் இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் முள்ளங்கியில் உள்ளது. மேலும் முள்ளங்கி கீரையை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடும் போது எண்ணற்ற சத்துக்களை பெற முடியும்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க

செய்முறை :
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.
இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி, இருமல் இருந்தால் முன்பெல்லாம் வீட்டு வைத்தியமும், பாட்டி குறிப்பும் கை கொடுக்கும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறவேண்டும்.
சளி, இருமல் இருந்தால் முன்பெல்லாம் வீட்டு வைத்தியமும், பாட்டி குறிப்பும் கை கொடுக்கும். இன்று டாக்டரிடம் ஓடுகிறோம். வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறவேண்டும்.
இந்திய மருத்துவத்துறையானது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. நம் மருத்துவ முறை 2000 ஆண்டுகள் தொன்மையானது.
தற்போது, ஒரே மருத்துவ வளாகத்தில், பல பிரிவுகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் பலர் பணிபுரிந்தபோதும் ஒருவருக்கொருவர் பெயர் தெரியாத நிலை உள்ளது. அரசு மருத்துவர்களிடம் நோயாளிகள் வரும்போது, தங்களிடம் இல்லாத வைத்திய முறை அருகில் உள்ள வேறு பிரிவில் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்பினால் தயங்காது பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். பாரம்பரியத்தோடு, விஞ்ஞானமும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்.
வெளிநாட்டு குப்பை உணவை தவிர்த்தால், தொப்பையில்லாத வாழ்க்கை வாழலாம். பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சித்த மருத்துவம் பாரம்பரிய முறைப்படி வாழவே பரிந்துரைக்கிறது. வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். அது காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம். சித்த மருத்துவம் நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். நோய்களுக்கு நல்ல பலனும் அளிக்கும்.
இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு குறைப்பு ஆகியவற்றுக்கு ஆயுர்வேத மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். உடல், மனத் தன்மையை, ‘பிரகிர்தி‘ என ஆயுர்வேதம் சொல்லுகிறது. ஆயுர்வேதம் அடிப்படையான அறிவு. இது குறித்த சித்தாந்தம் புரிந்துவிட்டால், நோய் வரும் முன்பே தடுத்து விடலாம்.
தமிழகத்தில் கொசுக்கள் மூலம் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவ முறை கையை விரித்த நேரத்தில், பாரம்பரிய மருத்துவர்கள் வீதியெங்கும் அரசு சார்பில் நிலவேம்பு கசாயம் இலவசமாக வினியோகம் செய்து, டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கால்நடைகளை வாட்டி வதைத்த கோமாரி நோய்க்கும்கூட மூலிகை மருந்துகளே ஆறுதலாய் அமைந்தன.

இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. டாஸ்மாக் பற்றி கருத்து சொல்லும் நாம் அதை ஒழிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற ஒருமித்த கருத்தை சொல்லி விடுவோம். அதைபோல் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’பை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று நம்மால் சொல்ல முடியாது.
அதில் பல நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலான மாணவர்கள் தேடிப் போவது தீமைகளை நோக்கித்தான். அதையும் நம்மால் மறுக்க முடியாது. அதனால் இன்றைய பெற்றோர்கள் நிலை இரு தலைக்கொள்ளி எறும்பு நிலை தான். பத்து, பதினைந்து வயசு பள்ளிச் சிறுவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் கூட தங்களுடைய பெரும்பான்மையான நேரத்தை ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’பில் தான் கழிக்கிறார்கள். அவர்கள் செயல்களை கவனித்துப் பார்த்தால், அவர்கள் படிப்பு தொடர்பாகவோ, எதிர்கால முன்னேற்றத்திற்குரிய செய்திகளையோ அவர்கள் அதில் பார்ப்பதில்லை.
அவர்களின் பள்ளித் தோழிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் படங்களையும் இதர செய்திகளையும் தான் பரிமாறிக்கொள்கிறார்கள். அல்லது அவர்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் புகைப்படங்கள், பார்த்த சினிமா, அதைப் பற்றிய கருத்துகளே அதில் நிறைந்திருக்கும். அவர்கள் தங்கள் பாட சம்பந்தமாகவோ வேறு நல்ல விஷயங்களையோ அவர்கள் பரிமாறிக்கொள்வதாக தெரியவில்லை. கல்லூரி மாணவர்கள், அவர்கள் வயதை ஒத்த இளைஞர்களின் பேஸ் புக், வாட்ஸ் அப் செய்திகள் இன்னும் மோசமாக இருக்கின்றன.
தங்களுக்குப் பிடித்த நடிகைகளின் கவர்ச்சி படங்கள், அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள், தங்களுடைய வீர தீர செயல்களைக் காட்டும் பல போஸ்களில் போட்டோக்கள், அவைகளுக்கு ‘லைக்’குகள், ‘கமெண்ட்ஸ்’கள் என்று அவர்கள் படிக்க வேண்டிய நேரங்களை எல்லாம் இந்த ‘வாட்ஸ் அப்’பும், ‘பேஸ் புக்’கும் விழுங்கியிருக்கும். அதோடு அவர்கள் நிற்பதில்லை. இணையதளங்களில் இருந்து நிறைய ஆபாச வீடியோக்களை எடுத்து, அதை தங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள்.
அல்லது புலி, சிங்கம் மனிதனை அடித்துக் கொல்லும் காட்சி, இயற்கைப் பேரழிவுகள் நாடு நகரங்களை அழிக்கும் காட்சிகள் அதில் நிறைந்திருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு ‘அரியர்ஸ்’ அதிகம் ஏற்படக் காரணம் அவர்களின் படிப்புக்குச் செலவிட வேண்டிய நேரம் முழுவதையும் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ எடுத்துக் கொள்வது தான். இளைஞர்களும், யுவதிகளும் வீட்டில் தங்கள் அறைக் கதவை மூடிவிட்டு, பேஸ் புக்கில் மூழ்கி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ‘சாட்டிங்’கில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அது இன்னும் மோசமாகப் போய் முடிகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பொதுவான விஷயங்களையே பேச ஆரம்பிப்பார்கள். போகப் போக தங்கள் குடும்ப விஷயங்களைப் பரிமாறி, மெதுவாக அந்தரங்கமான விஷயங்களைப் பேசி, தங்களுடைய கவர்ச்சிப் படங்களை பரிமாறும் நிலைக்குப் போய் விடுவார்கள். பின்னர் செல்போனில் பேச்சு தொடரும். பின்னர் நேரில் சந்திக்க விரும்புவார்கள். அதன் பின் இருவரும் சேர்ந்து அவரவர் குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடுவார்கள்.
ஒரு வாலிபனின் தந்தை மேல் நடுரோட்டில் லாரி மோதி விட்டது. அந்தச் செய்தியைச் சொல்ல ஒருவர் அவனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த மாணவன் ‘சாட்டிங்’கில் மும்முரமாக இருந்ததால் அவன் செல்போனை எடுக்கவில்லை. அவன் தந்தை சரியான உதவியின்றி நடு ரோட்டில் உயிர்விட நேர்ந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது அறிவியல் சாதனையால் நமக்கு கிடைத்த சமூக வலைத்தளங்களால் மாணவ, மாணவிகளுக்கு பெரிய அளவில் நன்மை கிடைப்பதாகத் தெரியவில்லை.
பெரியவர்களும் மாணவ, மாணவிகளுக்கு புத்தி சொல்லும் தகுதியை இழந்து வருகிறார்கள். இன்று அவர்களும் நிறைய நேரத்தை அதில் செல விடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பிரபலங்களாக இருக்கும் அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் என்று பல ஆயிரம் ‘பேஸ் புக்’ நண்பர்கள் அவர்களுக்கு இருப்பார்கள். நடிகர் நடிகைகள் அவர்கள் நடித்த படம், அவர்களுக்கு கிடைத்த சிறப்புகள் பற்றியும், எழுத்தாளர்கள் அவர்கள் எழுதி வெளிவந்த கதை, கட்டுரைகள் பற்றிய செய்திகளையும், அரசியல்வாதிகள், அவர்களுக்கு கிடைத்த பதவி, மாலை மரியாதைகளைப் பற்றிய செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.
பேஸ் புக்கில் இருக்கும் நண்பர்கள் விழுந்து விழுந்து ‘லைக்’ போடுவார்கள். பலர் ‘கமெண்ட்ஸ்’ என்ற பெயரில் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து பாராட்டுப் பத்திரங்கள் படிப்பார்கள். அதை அந்தப் பிரபலங்கள் தங்களுக்கு எத்தனை ‘லைக்ஸ்’ கிடைத்தன என்று பத்திரிகைகளில் தம்பட்டம் அடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் பெருமை பேசிக்கொள்ள காரணமாக இருந்த ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் அவர்களுக்கு கிடைத்த ஒரு பாராட்டையோ, அல்லது ஒரு நல்ல கருத்தையோ தங்கள் ‘பேஸ் புக்’கில் போட்டால் எந்தப் பிரபலங்களும் ‘லைக்’ கூட போடாது.
சாதாரண மக்கள் அவர்களைப் பொறுத்தவரை உயிர் இல்லாத பொம்மைகள்தான். அவருக்கு லைக் போடுவதும், பாராட்டுத் தெரிவிப்பதும் அவர்களுக்கு முன் பின் தெரியாத அந்த சாதாரண மக்கள் தான். நிறையப் பேர் பிரபலங்களுக்குத் துதி பாட தங்கள் வாழ்க்கையில் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். பொதுவாகப் பார்க்கும் போது இந்தப் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ மோகத்தால் மனிதனின் நேரமும், ஆற்றலும் வீணடிக்கப்படுகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகளில் இருந்து கூட இன்றைய இளைய தலைமுறை தப்பித்துக்கொள்ள முடியும்.
இந்தப் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ மோகத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை போலிருக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு இந்த மோகம் நல்லதல்ல. அதை எப்படியாவது பிரியமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து, அவர்களை ஸ்மார்ட் போன் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ‘ரோல் மாடல்’ என்று சொல்வார்கள்.
நம்மிடம் இருக்கும் குறைகள் தான் அவர்களிடமும் படியும். நாமே எந்த நேரமும் ஸ்மார்ட் போனும் கைகளுமாக இருந்தால், நம் குழந்தைகளுக்கு எப்படி அதன் தீமையை எடுத்துச் சொல்வது. குழந்தை வளர்ப்பில், ஸ்மார்ட் போன்கள் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை பாதிக்காதபடி பார்த்துக்கொள்வது, பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கடமையாக இன்று மாறிவிட்டது.
துடுப்பதி ரகுநாதன்

கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழிப்பதை முழுமையாக தடைசெய்யும் நடவடிக்கைகளை அரசு இன்னும் மிகத்தீவிரமாக எடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் காலம்காலமாக பெண்மையை போற்றி, வாழ்த்தி வந்திருக்கிறார்கள். குடும்பங்களில்கூட, பெண் குழந்தை என்றால் பெரிய அளவில் செல்லமாக வைத்திருப்பார்கள். பிற்காலத்தில் வரதட்சணை, பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆகும் பொருட்செலவு என்பதுபோன்ற பல சமுதாய பின்னடைவுகளால் பெண் குழந்தைகள் பிறந்தால் பெரியசுமை, ஆண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்ற ஒரு எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கியது.
அதனால்தான் பெண் குழந்தை பிறப்பை சட்டத்துக்கு விரோதமாக தடுக்கும்போக்கு வளர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருக்கெடுவதற்கு பதிலாக, சலிப்பான உணர்வு தோன்றத்தொடங்கியது. இன்னமும் சில இடங்களில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதை கொன்றுவிடும் பெரிய சீர்கேடு நிலவுகிறது.
இந்தநிலையில், அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தும் முழுமையாக இத்தகைய நிலைமைகளை மாற்ற முடியவில்லை. சமீபத்தில் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்பட்டது. ஆனால் அடுத்த சிலதினங்களிலேயே இந்திய தலைமை பதிவாளர் நாடு முழுவதிலும் பிறப்பில் ஆண், பெண் விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார்.
அதில் மிகவும் அதிர்ச்சித்தரத்தக்க வகையில் தென்மாநிலங்களில் கேரளாவைத்தவிர, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. சராசரியாக 1,000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற கணக்கெடுப்பில் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 2007-ல் 935 பெண் குழந்தைகள், 2016-ல் 840 பெண் குழந்தைகள்தான் பிறந்திருக்கிறது. இதுபோல, ஆந்திராவில் 2007-ல் 974 பெண் குழந்தைகள், 2016-ல் 806 பெண் குழந்தைகளும், கர்நாடகாவில் 2007-ல் சராசரியாக 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,004 பெண் குழந்தைகள் பிறந்தநிலையில், 2016-ம் ஆண்டோ 896 ஆக குறைந்துவிட்டது. தெலுங்கானாவில் 2013-ல் 954 ஆக இருந்தது. 2016-ல் 881 ஆக குறைந்திருந்தது.
இவ்வளவுக்கும் கருவிலுள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்ற சோதனையை நடத்தி அதை வெளியே சொல்வது பெரிய குற்றம் என்று நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்த கணக்குகளை பார்த்தால் அதுவும் நடப்பதுபோலத்தான் தெரிகிறது. அதுபோல, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லும் வழக்கம் இன்னும் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லையோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.
இத்தகைய நிலையைப்போன்று செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஆண் குழந்தைகளை உருவாக்கம் செய்வதும், ரத்தம் மூலமான மரபணு ஆய்வின் மூலம் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிவதும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமான ஒன்றாக கருதப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்படி குறைந்து கொண்டேபோனால், வருங்காலத்தில் நிச்சயமாக எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்காக தகுந்த வாழ்க்கைத்துணை கிடைப்பது முடியவே முடியாது.
எனவே, கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழிப்பதை முழுமையாக தடைசெய்யும் நடவடிக்கைகளை அரசு இன்னும் மிகத்தீவிரமாக எடுக்கவேண்டும். ஸ்கேன் சென்டர்களில் இன்னும் கண்காணிப்பு அதிகமாக்கப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்மையை போற்றும் நிலையும், பெண் குழந்தைகள் பிறந்தால் அரசு வழங்கும் சலுகைகள், பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கும் இடஒதுக்கீடுகள் ஆகியவற்றை சாதாரண பாமரமக்களும் தெரிந்து கொள்ளும்வகையில் விழிப்புணர்வை வேகப்படுத்தவேண்டும்.

அவலில் புட்டு, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 1
முந்திரிப்பருப்பு - 5
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை :
வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.
1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.
வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.
சூப்பரான அவல் பாயாசம் ரெடி.
கவனத்திற்கு
கெட்டி அவல் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 1
முந்திரிப்பருப்பு - 5
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :
வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.
பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.
1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.
வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.
சூப்பரான அவல் பாயாசம் ரெடி.
கவனத்திற்கு
அவல் நன்கு வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும். இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில், “மைட்டிரல் வால்வு புரலாப்ஸ்’ ஆகலாம். கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு, “மைட்டிரல் ஸ்டினோசிஸ்’ என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, சமூக ரீதியாக குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் இவை.
25 முதல் 45 வயது வரை: திருமணம் செய்தவுடன் புகுந்த வீட்டில் ஏற்படும் கலாசார குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் மனமாற்றம் பயம், வெறுப்பு, படப்படப்பு ஏற்பட்டு, நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம். வேலை செய்யும் பெண்கள், குழந்தைகள் பெற்றவுடன், உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகம், குடும்பம் இரண்டையும் பராமரிப்பதில் சிக்கல் ஆகியவற்றால், மன உளைச்சல், படப்படப்பு ஏற்படும். குடும்ப பாரம்பரிய வியாதி இருந்தால், அதுவும் வரலாம்.
45 முதல் 65 வயது வரை: குடும்ப சுமை, பிள்ளைகள் படிப்பு, எதிர்கால சுமை, பொருளாதார தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை தாங்க முடியாத பெண்களுக்கு, எளிதில் ரத்த அழுத்தம், சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்படும் உறுப்புகளின் செயலிழப்பு. மார்புவலி, மாரடைப்பு, கார்டியோ காமயோபதி வர வாய்ப்புகள் உண்டு.
65 முதல் 85 வயது வரை: இந்த வயதில் 80 சதவீதத்தினர், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, அதிக எடை, அதிக கொழுப்பு, இடுப்பின் அளவு அதிகரித்து, தொப்பை ஏற்பட்டு மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய் ஏற்படும்.
இவர்களிடம் ஏற்படும் கோளாறுகள்:
தொப்பை போடுதல், இடுப்பின் அளவு 90 செ.மீ.,க்கு மேல் அதிகரித்தல், டிரை கிளிரிரைடு 150ஐ தாண்டுதல், எச்.டி.எல்., என்ற நல்லக்கொழுப்பு 40எம் கீழ் குறைதல், ரத்த அழுத்தம் 130/85க்கு மேல், வெறும் வயிற்று சுகர் 110க்கு மேல் இருத்தல். இந்த அறிகுறிகள் பெரும்பாலான பெண்களுக்கு உண்டு. இதனால், மார்பு வலியும், மாரடைப்பு இதய வீக்க நோய் ஏற்பட்டு, நிரந்தர நோயாளியாகி விடுகின்றனர். அடுத்த வரும் நோய்: தைராய்டு சுரப்பு குறைதல். இது 45 வயது முதல் ஆரம்பமாகி விடுகிறது. இதனால், சுறுசுறுப்பு இல்லாமை, அதிக தூக்கம், அதிக எடை, அலுப்பு, சலிப்பு, அதிக கொலஸ்ட்ரால் உருவாகி, இதய நோய் ஏற்படும்.

பெண்கள் நகைகளை விரும்பி அணியும் ஆர்வம் கொண்டவர்கள். தங்கம், முத்து, கற்கள் பதித்த நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தங்க நகைகள்
தங்க நகைகளை, தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால், நகைகளில் கீறல் ஏற்படும், நிறமும் மங்கி விடும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது.
அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும். தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும். சிறிதளவு பற்பசை அல்லது தரமான பல்பொடியை, பழைய பிரஷில் வைத்து, நகைகளை சுத்தம் செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ அல்லது சோப்பு தூளும், மஞ்சள் தூளும் கலந்த நீரில், நகைகளை போட்டு, ஐந்து நிமிடம் சூடாக்கி விட்டு கழுவினால், நகைகள் அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.
கற்கள் பதித்த நகைகள்
கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீல நிற பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும். இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். கல் பதித்த நகைகளை, சுடுநீரில் போட்டு விடக் கூடாது. இவ்வாறு செய்தால், கற்களுக்கு சேதம் ஏற்பட்டு, அதன் கவர்ச்சி தன்மை நீங்கி விடும்.

வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும். அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும். மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும். வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி விட்டால் வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
முத்து நகைகள்
முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்களில் கீறல் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது. முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும். முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற பருத்தித் துணியினுள் வைக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உணவுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும், உணவுமுறைகள் பற்றியும் சில முக்கிய ஆலோசனைகளை அறிந்து கொள்ளலாம்.
* உடல் அமைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தம் கிடையாது. அதாவது, எடையைக் குறைப்பதற்காகவோ அதிகரிப்பதற்காகவோ உடற்பயிற்சி பயன்படாது. ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இயங்குவதற்கே உடற்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
* காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே அனைத்து வகையிலும் நன்மை பயக்கக்கூடியதாக அமையும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் நமது உடலில் சுரக்கும். இது உடலுக்குப் புத்துணர்வை ஏற்படுத்துவதால் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
* ஒரு நாளைக்கு 60 முதல் 90 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்வதே போதுமானது. குடும்பத்தினருடன் பயிற்சிகள் மேற்கொள்வது உளவியல் ரீதியாகவும் பலன் அளிக்கக்கூடியதாக அமையும்.
* வாக்கிங், ஜாக்கிங் செல்லும் 15 நிமிடங்களுக்கு முன்பு திரவ உணவு எடுத்துக் கொள்வதே சரியானது. பாலோ அல்லது ஏதேனும் ஒருவகை பழச்சாறோ... வாழைப்பழங்களும் சரியானதுதான்.
* ஜிம்மில் உடற்பயிற்சி செய்ப நினைப்பவர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்த உடனேயே அனைத்து கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது. முதல் 10 நாட்களுக்கு எளிய பயிற்சிகளிலேயே தொடங்க வேண்டும்.
* உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தண்ணீர், ஜூஸ் சாப்பிடலாம். பயிற்சிகள் முடித்த பின்னர் முட்டையின் வெள்ளைக்கரு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ஆரஞ்சு, தக்காளி ஜூஸ் மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம். குளித்து முடித்தபிறகு, மிதமான முறையில் இட்லி, நார்ச்சத்து நிரம்பிய காய்கறிகள் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிடலாம்.
* எண்ணெயில் பொரித்த உணவுகளையும் மசாலா உணவு வகைகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.. மேலும், ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
*உணவுக்குப் பிறகு உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது.

வெள்ளிக்காயை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று வெள்ளிக்காயில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த கூட்டு சூடான சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 1
துவரம்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பால் - கால் கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
சி.வெங்காயம் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை வேகவைத்துக்கொள்ளுங்கள்.
சீரகம், ப.மிளகாய், சி.வெங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி பால் சேர்த்து வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.
நன்கு கொதித்து வரும்போது அரைத்த தேங்காய் விழுதை கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் கலந்து பரிமாறலாம்.
வெள்ளரிக்காய் - 1
துவரம்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பால் - கால் கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
சி.வெங்காயம் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை வேகவைத்துக்கொள்ளுங்கள்.
சீரகம், ப.மிளகாய், சி.வெங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி பால் சேர்த்து வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.
நன்கு கொதித்து வரும்போது அரைத்த தேங்காய் விழுதை கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் கலந்து பரிமாறலாம்.
சூப்பரான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நேர்காணலில் தடுமாற்றத்தை வென்று வெற்றிகரமாக நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? இங்கே பார்க்கலாம்...
நேர்காணல் என்றதுமே வேலை தேடுபவர்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு. நேர்காணல் பற்றிய நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம். சிறப்பாக உடை அணிவது, அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பது, கேள்விகளுக்கு தயார் நிலையில் இருப்பது போன்றவை வழக்கமான நடைமுறைகள்தான். இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துகொண்ட பின்பும் நேர்காணலில் தடுமாற்றம் வருவது ஏன்? அந்த தடுமாற்றத்தை வென்று வெற்றிகரமாக நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? இங்கே பார்க்கலாம்...
இலக்கு அறிதல்
பணிக்கான தகுதிகள் மற்றும் திறமைகளுடன் தயார் நிலையில் இருப்பது நேர்காணலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள மனோதைரியத்தை தரும். நிறுவனத்தின் இலக்கு மற்றும் வேலைவழங்குபவர்கள் லாபம் அடையும் படியான திட்டங்களும், அதற்கான கேள்வி பதிலுக்கும் நீங்கள் தயார் நிலையில் இருப்பது வெற்றியை உங்கள் வசமாக்கும்.
வசதிகளை உருவாக்குங்கள்
நேர்காணல் வளாகம் எப்படி இருக்கும், என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமென்றால் அதற்கேற்ப நேர்காணலுக்கு தயாராவது சிறப்பாக இருக்கும். நேர்காணல் தேதி, இடம் பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதுவே நேர்காணலை எதிர்கொள்ளும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
நேர்காணல் விண்ணப்பதாரர்களை பல நிறு வனங்கள் நிதானமாக எதிர்கொள்ளும் வகையில் கனிவாக உபசரிப்பது உண்டு. அது அவர்கள் பதற்றம் தணிய காரணமாக இருக்கும். ஒருவேளை அப்படிப்பட்ட சூழல் இல்லாவிட்டால், தேர்வாளர் உங்களை அழைக்கும் முன்பாக காபி அல்லது தண்ணீர் குடித்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வது பதற்றம் தணிப்பதாக அமையும்.
தகவல்களை சரியாக அளியுங்கள்
நீங்கள் சுயவிவர பட்டியலில் (ரெஸ்யூமில்) கொடுத்த விவரங்களின் அடிப்படையில் உங்களை மதிப்பிட்டு கேள்விகள் கேட்பார்கள். உங்கள் தகுதியை கூடுதலாக அறிந்து கொள்ள விரும்பினால், உங்களின் சமூகவலைத்தள கணக்குகளையும் அலசியிருப்பார்கள். எனவே உங்களைப் பற்றிய எந்தவிதமான கேள்விகளுக்கும் சரியான பதில்களையே அளியுங்கள். சமூகவலைத்தள தகவல், ரெஸ்யூம் தகவல், உங்கள் நேரடி கருத்து ஆகியவற்றில் முரண்பாடுகள் தெரிய வேண்டாம்.
கூச்சமும், தயக்கமும் வேண்டாம்
நேர்காணல் என்பது உரையாடுவதற்குத்தான். இங்கே இயல்பாக பேசுவதே வெற்றிக்கு வழிவகுக்கும். வேலையைப் பெற வேண்டும் என்ற பதற்றத்திலோ, பேசுவதற்கு கூச்சமும், தயக்கமும் கொண்டு பதிலளிப்பதோ தேவையில்லை. திறமையை வெளிப்படுத்தினால்தான் வேலையைப் பெற முடியும். உங்கள் திறமைகள் சான்றிதழ்களில் மட்டுமல்லாது பேச்சிலும் எதிரொலித்தால் நேர்காணல் வெற்றியாக முடியும். இந்த தயக்கத்தை போக்குவதற்காக உங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள், விருப்பங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது உண்டு. அது உங்களின் இயல்புகளை வெளிப்படுத்துவதுடன், மேலாண்மைப் பண்புகளையும் காட்டிக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துங்கள்
தேர்வாளரின் கேள்விகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதன் மூலம் எளிதில் கேள்வியை புரிந்து கொண்டு பதிலளிக்கலாம். மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுவது தவறு இல்லையென்றாலும், அது உங்களின் தடுமாற்ற நிலை என்று தேர்வாளர் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. கேள்வியின் தன்மையை விளங்கிக் கொள்வதற்காக பதில்கேள்வி கேட்கலாமே தவிர, கவனக்குறைவாக செயல்பட்டு ஒவ்வொரு கேள்விக்கும் தடுமாறிக் கொண்டிருக்கக்கூடாது.
இயல்பாக நடந்து கொள்ளுங்கள்
நேர்காணலைப் பற்றிய அச்சம் வேண்டாம். வேலை பெறுவது முக்கியம்தான். அதுபற்றிய கவலையை வளர்த்துக் கொள்வதால் ஒன்றும் நேர்ந்துவிடப்போவதில்லை. நல்ல தயாரிப்புகளுடன் செல்வதுடன், பயம் இன்றி இயல்பாக நடப்பது வெற்றியை சுலபமாக்கும். நீங்கள் தெளிவானவர் என்பதை தேர்வாளருக்கு புரிய வைக்கும்.
அமைதியை முறிக்கலாம், ஆனால் இடை மறிக்கக்கூடாது
குழு நேர்காணலின்போது பொதுவாக கேட்கப்படும் ஒரு கேள்விக்கோ அல்லது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தின்போதோ, அமைதியை கலைத்து நீங்கள் பேசலாம். ஆனால் ஒருவர் பேசும்போது அவர்களை இடைமறித்துக் கொண்டிருக்கக்கூடாது.
முன்கூட்டிய தயாரிப்புகள்...
நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான பொருட்களை முந்தைய தினமே தயார் படுத்தி வையுங்கள்.
பருவ இதழ்களில் இடம்பெறும் வெற்றியாளர்களின் பேட்டிகளில் இருந்து நேர்காணல் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி பெறுங்கள்.
சிறந்த தயாரிப்புகளுடன் அடுத்த நேர்காணலில் வெற்றி பெறுங்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். காதிற்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்போன் அனுப்புவதால் காது கேளாண்மைக்கு காரணமாகிறது.
இசைக்கு மயங்காத உயிரினங்கள் உலகில் இல்லை. இனிமையான இசை கேட்பதால் வாழ்நாள் கூடும் என்பதோடு பல்வேறு நோய் தீர்க்கும் காரணியாகவும் இசை இருந்து வருகிறது. ஆனால் அதுவே அளவை மிஞ்சி விட்டால் நஞ்சாகி விடும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்கிறார்கள். வீட்டில் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்கவும், ஹெட்போன்களை பயன்படுத்துவோர் ஏராளம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். காதிற்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்போன் அனுப்புவதால் காது கேளாண்மைக்கு காரணமாகிறது. 5 நிமிடம் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். பிறர் பயன்படுத்தும் ஹெட்போனை எடுத்து தயங்காமல் மாட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தால், காது சார்ந்த தொற்றுநோய்கள் தாக்கக்கூடும்.
மேலும் ஹெட் போன் காதிற்குள் காற்று புகுதலை தடுத்து இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும். ஹெட்போன் உபயோகித்தவாரே வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவோரும் அதிகம். மாணவ- மாணவிகள் படிக்கும்போது இசை கேட்பது அபாயகரமானது. இது மூளைக்கு வேலை பழுவை அதிகரித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.