என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மூலம் என்பது மலத்துவாரத்தில் உள்ள சதை அதிகமாக உள்ளதும், சதைக்கடியில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிந்து இருப்பதுமாகும். இதற்கான சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.
    மூலம் (Piles) மலம் கழித்த பிறகு வலி இல்லாமல் இரத்தமாக கொட்டுதல் (Fresh Blood) மூலம் என்பது மலத்துவாரத்தில் உள்ள சதை அதிகமாக உள்ளதும், சதைக்கடியில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிந்து இருப்பதுமாகும். மூலமானது (Young adult) குறைந்த வயதுள்ள பெரியவர்களுக்கு வரும். மலம் கட்டியாகவும், இறுகலாகவும் போவது. மலத்தை முக்கி வெளியே தள்ளுவதாலும், மகளிக்கு குழந்தை பிறந்தவுடனும் (Prevous Child) வருகிறது.

    உள்மூலம்: மலக்குழாயின் மேல் பகுதியில் மற்றும் மலர் கழித்த பின்பு மலத்துவாரத்தின் வழியாக இரத்தம் வெளியேறுவது. வெளிமூலம்: மழக்குழாயின் அடிப்பகுதி விரிந்திருப்பது. மலக்குழாய் முற்றுமாக வெளியே நின்று கொள்வது. மலத்துவாரத்தில் ஓர்விதமான தொந்தரவு (அறிப்பு), எரிச்சல்) மலம் கழித்த பின்னர் இரத்தம் மலத்துவாரத்தில் இருந்து மலத்தோடு கலக்காமல் சுத்தமான இரத்தமாக வெளியேறுவது.

    மலத்துவாரத்திலிருந்து சதை மற்றும் இரத்தக் குழாய் வெளியே துருத்திக் கொண்டிருப்பது இது அதுலாகலோ (அல்லது) நம் விரல்களை நின்று கொள்ளும். கண்டறியும் முறை: 1)ஃப்ராக்டோஸ் கோபி 2)சிக்மாய் டோஸ்கோபி 3)55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மூலம் தொந்தரவு வந்தால் COCONOSCOPY சிகிச்சை மூலம் பெருங்குடலிலும் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதையும் கண்டறியலாம்.

    சிகிச்சை முறை: மருந்தின் மூலம் சரிசெய்தல். மாத்திரை கொடுத்து மலத்தை இறுகாமல் பார்த்துக் கொள்வது. ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி மற்றும் புண் வராமல் இருப்பதற்கான களிம்புகள் தடவிக் கொள்வது. அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். 
    கோதுமை ரவையில் கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பால் - 2 கப்
    தண்ணீர் - 2 கப்
    சர்க்கரை - 1 கப்
    ஏலக்காய்த் தூள் 1/2 தேக்கரண்டி
    நெய் - தேவையான அளவு
    முந்திரி பருப்பு - சிறிதளவு
    காய்ந்த திராட்சை - சிறிதளவு
    கேசரி பவுடர் - சிறிதளவு



    செய்முறை :

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வாசனை வந்தவுடன் அதில் பால் ஊற்றவும் அடுத்து தண்ணீர் கலந்து கிளறி குக்கரை மூடி 2 விசில் வைத்து வேகவிடவும்.

    பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறி சில நிமிடங்களுக்கு பிறகு கேசரி பவுடர் கலந்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் சேர்த்து கலந்தால் கோதுமை ரவா கேசரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்தக் கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண்புரை ஏற்படுகிறது.
    கண்புரை (Cataract) என்றால் என்ன?

    மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கண்களால் காண வேண்டும் என்றால் கருவிழிக்குப் பின்னால் உள்ள லென்ஸ் மூலம் தான் பார்க்க முடியும். அந்த லென்சில் ஒரு வெண்மையான தோல் படலம் பரவி பார்வையை மறைத்து நாளடைவில் ஒரு வெண்படலமாக மாறிவிடுகிறது. இதுதான் கண்புரை எனப்படுகிறது. இதை கிராமங்களில் கண்ணில் பூ விழுந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

    முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்தக் கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண்புரை ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் டிவி பார்ப்பது, செல்போன் வீடியோகேம் பார்ப்பது போன்ற காரணங்களாலும், தற்கால உணவு பழக்கங்களாலும் கண்புரை நோய் குழந்தைகளையும் தாக்க தொடங்கி விட்டன.

    சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. கேட்ராக்ட் வந்து விட்டது என்றவுடன் கண்ணாடி அணிந்தால் போதும், சொட்டு மருந்து விட்டால் போதும் என்று நினைத்தால் அது தவறான எண்ணம். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும். அறுவை சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வாகும்.

    கண்களில் அறுவைச் சிகிச்சை என அச்சம் தேவையில்லை. ஊசி இல்லை, தையலில்லை, வலியில்லை. நவீன மருத்துவ முறையில் PHACO EMULSIFICATION முறைப்படி மிக எளிதாக 5 நிமிடத்தில் கண்புரை அகற்றப்பட்டு அன்றே வீட்டுக்குத் திரும்பலாம். “PHACO” முறையில் பாதிக்கப்பட்ட கண் உள்விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையாக உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. இவையனைத்தும் 5 நிமிடத்தில் செய்யப்பட்டு இழந்த பார்வையை மீட்டுத்தருகிறது. வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட தரமான நவீன லென்ஸ்கள் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கேற்றப்படி உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது.

    கண்புரை ஏற்பட்டவுடன் உரிய கண் மருத்துவரை அணுக வேண்டும். அவரின் ஆலோசனைப்படி கண்புரை தொடக்க நிலையில் இருந்தால் ‘பேக்கோ’ முறையில் கண்புரையை அகற்றிவிடலாம். கண்புரையை வளரவிடுவது நல்லதல்ல. கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மறுநாளே அனைத்து வேலைகளையும் செய்யலாம். கண்களை மறைக்கும் பச்சைக்கலர் துணி தேவையில்லை. கறுப்புக்கண்ணாடி மட்டும் 5 நாட்கள் அணிந்தால் போதும். சொட்டு மருந்து 30 நாட்களுக்கு கண்களில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கட்டணமில்லா அறுவை சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    Dr. K. கமல்பாபு MB-BS, DO,
    கண் அறுவை சிகிச்சை நிபுணர்,
    வாஸன் கண் மருத்துவமனை,
    அண்ணாநகர், மதுரை-20.
    தூக்கத்தின் போது தான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.
    தூக்கத்தின் போது தான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.

    சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.

    அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல்.

    பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு  9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை.

    குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண்டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும்.

    பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண்மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீனாகச் செய்யப் பழக்குங்கள்.

    குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்சமின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள்ளுங்கள்.தூங்குவதில் பிரச்சனை செய்கிற குழந்தைகளுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். படுக்கையில் இருந்தபடி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம்.

    மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறைகளின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப்பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

    உங்கள் குழந்தையை காலையில் எழுப்பும்போது அதிக சிரமமின்றி எழுந்துகொள்கிறார்களா என கவனியுங்கள். அப்படி எழுந்துகொண்டால் இரவில் நன்றாகத் தூங்கியிருக்கிறார்கள் என அர்த்தம். குழந்தைகள் போதுமான அளவு தூங்காமலிருக்க வெளிப்புறச் சூழல்கள் மட்டுமின்றி, உடல்ரீதியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம்.

    எனவே, தூக்கத்தில் பிரச்னை இருக்கும் பிள்ளைகளின் தூக்கத்தை கவனியுங்கள். குறட்டை விடுகிறார்களா, இரண்டு மூச்சுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கிறதா, சுவாசப் பிரச்னைகளைப் பார்க்கிறீர்களா? மருத்துவரை சந்திக்க வேண்டியதன் அவசியம் உணர்த்தும் அறிகுறிகள் இவை.

    தூக்கத்தில் நடப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றாலும் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னைகள் இருந்தால் குழந்தைநல மருத்துவரை அணுகுங்கள். ADHD பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். பிற அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.
    பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. பெண்களுக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
    சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் சரியான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். இது பலருக்கும் தெரியும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது.

    ஆனால், தண்ணீர் சரிவர குடிக்காதபோது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது. இதுதவிர சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது. சரியான அளவு இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது ஆகியவையும் ஆகும்.

    பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாத நபர் யாராயிருப்பினும் அவர்களுக்கு கற்கள் உருவாகிறது.

    நம் நாட்டில் இன்னும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது இல்லை. வீட்டை விட்டு வேலை காரணமாகவோ, பயணம் காரணமாகவோ வெளியே சென்றால் அது பெரிய அவஸ்தையையும் உண்டுபண்ணிவிடுகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது, ‘கழிவறை எங்கே இருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட பலர் தயங்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலால் பெண்களுக்கும் அதிகம் சிறுநீரகக்க் கற்கள் பிரச்சனை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?



    அலோபதி மட்டுமல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.சிறுநீரகக் கற்கள் வந்து சிகிச்சை பெற்று கரைந்த பின்னும் திரும்பத்திரும்ப வரும் என்பது பற்றி...

    ஆயுர்வேத மருத்துவத்தில் சிறுநீரகக் கற்கள் உருவானதற்கான காரணம், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சையை அணுகுவதால் கற்கள் திரும்ப உருவாவதற்கான காரணம் மிகக் குறைவு.

    அது தவிர கற்கள் திரும்ப உருவாவது என்பது அந்த நபரின் தண்ணீர் அருந்தும் அளவு மற்றும் உணவு முறையை சார்ந்தது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படும். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

    காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.

    சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு...விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

    ஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள்பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக இன்றைய தலைமுறையினர் பலரும் சிறுநீரகக் கற்களால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு எளிதான முறையில் கற்களை கரைக்க மேற்கண்ட மூலிகைகளை கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலனளிக்கும்.

    சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?


    கற்களின் அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும். 11, 12 மி.மீட்டர் அளவு வரை ஆயுர்வேதத்தில் கற்கள் கரைத்திருக்கிறோம். அதற்கு மேல் செல்லும்போது ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்களின் அளவு குறைய ஆரம்பிக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது. 
    இட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    வையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,
    வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்,
    காய்ந்த மிளகாய் -10,  
    உ .பருப்பு - 1 கைப்பிடி,
    க. பருப்பு - 1 கைப்பிடி,
    கொள்ளு - 20 கிராம்,
    கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய்வற்றல், கொள்ளு, உ.பருப்பு, க.பருப்பு இவைகளை தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் கேரட் வதக்கிய கலவையை உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    பின்பு இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கேரட் - கொள்ளு துவையல் ரெடி.

    தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுவையான சைட்டிஷ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும்.
    மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.  

    ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.

    * வலது கை விரல்களின் துணையோடு, வலதுபுற மூக்குத் துவாரத்தை முழுதாக அடைத்துக் கொள்ளவும்.

    * இடது மூக்குத் துவாரம் பாதியளவு திறந்திருக்கட்டும்.

    * இடது மூக்கு வழியே மூச்சை வெளியேற்றி, அதே மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.

    * மூச்சை உள்ளே எடுத்து முடித்ததும் ஓரிரு வினாடிகளுக்குப் பின் இடதுபக்க மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, வலதுபுற மூக்கைப் பாதியளவு திறந்து அதன் வழியே மூச்சை வெளியே விடவும்.

    * ஓரிரு வினாடிகளுக்குப் பின், வலது மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுக்கவும். மீண்டும் இடது பக்க மூக்குத் துவாரம் வழியே மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று ஆகும்.

    இதுபோல ஆறு சுற்று, பத்து சுற்று அல்லது 12 சுற்று என்று தேவையை அறிந்து செய்த பின்பு வலது கையை மூக்கிலிருந்து எடுத்து விட்டு, சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். எப்போது கை வலித்தாலும் கையைக் கீழிறக்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். பின்பு தொடரலாம்.பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.
    இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை போன்ற பல்வேறு நோய்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.
    இன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி கொண்டே வருவதை காண்கிறோம்.

    இவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது? என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர்.

    தற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.

    திடீர் முடி உதிர்வு:

    அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.

    பரம்பரை வழுக்கை:

    பரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.

    பொடுகுத்தொல்லை:

    பொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.

    புழு வெட்டு:

    வட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

    தேவையற்ற முடிவளர்ச்சி:

    இளம் பெண்களுக்கு பரம்பரையாக வோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க உலகத்தரம் வாய்ந்த Diode Laser , Long Pulse Nd YAG Laser மற்றும் Triple Wavelength Diode Laser ஆகிய மூன்றையும் சேர்த்து பயன்படுத்தும்போது முடி நீக்கம் விரைவானதாகவும், எளிமை யானதாகவும் ஆகின்றது. இதை முறையாகச் செய்யத் தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப் பிரசாதம். எங்கள் மருத்துவ மனையில் ஏராளமான திருநங்கைகள் முகத்தில் முடிநீங்கி மகிழ்வுடன் செல்வதை காண்கிறோம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவ மனையை அணுகினால் நிரந்தரத் தீர்வு பெறலாம். பக்க விளைவு சிறிதும் இல்லை.

    டாக்டர். எம்.எஸ். ஆதித்தன்

    வாழ்க்கை அற்புதமானது. அழகானது. ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
    வாழ்க்கை அற்புதமானது. அழகானது. வாழ்வது எளிதானது அதை மேலும் அழகாக்குவது நம் கையில்தான் உள்ளது. ஒவ்வொருநாளும் வாழ்க்கை சுவாரசியமான சம்பவங்களை வைத்துக்கொண்டு நமக்காகக் காத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் நமது நாள் அமைகிறது. முன்னுரையும், முடிவுரையும் எழுதப்பட்ட புத்தகம். அதன் நடுவில் உள்ள பக்ககங்களை நாம்தான் எழுத வேண்டும். அது நம் வசம்தான் இருக்கிறது. இன்று ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு சோர்வு, எதிர்மறை எண்ணங்கள், வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி என்று பாலையாக இருக்கிறது. இதுவல்லவே நம் வாழ்க்கை.

    ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நமது நட்புகள், மோசமான பழக்கங்கள், தீமை என்று தெரிந்தும் விடமுடியாத சில விஷயங்கள் என்று நம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகளே நம் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. போலியான, மலிவான விஷயங்கள் எவை என்று அறிந்து அவைகளைக் கைவிட்டாலே சிறந்த ஒன்று நமக்குக் கிடைக்கும். இந்த வாழ்க்கையை வசப்படுத்த நம்மால் முடியும். நம் கையில்தான் அனைத்தும் உள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது பெரியோர் மொழி அல்லவா.

    ஒரு ஜென் குரு மரணப்படுக்கையில் இருந்தார். அவரைச் சுற்றி கடைசி நேர அறிவுரை கேட்க சீடர்கள் காத்திருந்தார்கள். குரு சன்னக் குரலில் ஒரு பால் இனிப்பு கேட்கிறார். சீடன் ஒருவன் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வருகிறான். குரு அதை மகிழ்வுடன் வாங்கி வாயில் இட்டுச் சுவைக்கிறார். “ஆஹா என்ன சுவை? வாழ்க்கை” என்கிறார். கண் மூடுகிறார். இதுதான் அறிவுரை. வாழ்க்கை இனிமையானது. அதை நம் வசப்படுத்த வேண்டும். பிறருக்காக வாழ்வதில்லை. நமக்காக வாழ வேண்டும். வலிகளை வெற்றியாக்கும் சூட்சுமங்களை கற்றுக்கொண்டால் போதும். தேடிச் சோறு நிதம் தின்று வாடிப் பல கதைகள் பேசி வெற்று மனிதர்களாய் வீழ்வதற்கு பிறக்கவில்லை நாம்.

    சரி வசப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு நாம் அடுத்தவர் தயவை நாட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் உற்சாகமாக்க நம் மனசால் முடியும். மாறிக்கொண்டே இருப்பது மனம் என்பது மாற்ற முடியாத விஷயம். எந்த இடத்திலும் நம்பிக்கையை விடாமல், உற்சாகமாக இதுவும் கடந்து போகும் என்ற உணர்வுடன் நடந்தால் வெற்றிதான்.

    எல்லா உதவிகளும் நமக்குள் இருந்துதான் வந்துள்ளது என்று புரியும். வாழ்க்கையின் முக்கியமான விஷயமே வாழ்வதுதான். அர்த்தமுள்ள வாழ்வு என்பதை விட, நம் ஒவ்வொரு நொடியையும் அழகான ரசனையுடன் கழித்தோமா என்பது முக்கியம். எப்போதும் முகம் கடுப்புடன், சிரிப்பு என்பதை மறந்து, வெறுப்பும், விரக்தியுமாய் இருந்தால் அந்தக் கசப்பு சுற்றியும் பரவிவிடும். வாழ்க்கை குறித்து எப்போதும் ஒரு சிந்தனை, கவலை. நம்மைச் சுற்றி இறுக்கமான மனிதர்களே நிறைய இருக்கிறார்கள். நம் சூழ்நிலையையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள்.

    எந்த நேரமும் எதோ ஒரு சிந்தனை, எதைப் பற்றியாவது கவலை, வேதனை என்று கழிப்பதற்காக இங்கு வரவில்லை. அழகான இந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து அனுபவித்துப்போகவே வந்திருக்கிறோம். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை மாற்ற முடியாத விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. அதற்குப் பதிலாக சில விஷயங்களைப் பின்பற்றினால் வாழக்கை நம் வசம்.

    முதலில் சிரிக்கப் பழகுவோம். அன்பான சொற்களைப் பேசவும், மனம் திறந்து பேசவும் கற்றுக் கொள்ளலாம். அற்ப விஷயங்களை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? உங்களை நீங்கள் புரிந்துகொண்டால் போதும். மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலை எதற்கு?

    மன்னிக்கப் பழகுங்கள். நேர்மை முக்கியம். மன்னிப்பு கேட்கத் தயங்க வேண்டாம். தாழ்வு மனப்பான்மை வேண்டாமே. கனியிருப்ப ஏன் காய் கவர வேண்டும்? பேசும் முன் யோசியுங்கள். அதனால் பலன் உண்டா என்று அறிந்து நிதானித்துப் பேசலாம். அவரவருக்கு என்று சில நியாயங்கள் இருக்கும் அதைப் புரிந்து கொள்ளலாம். பேசிவிட்டு முடிவு எடுக்கலாம். தப்பு இல்லை. முடிந்த அளவு கொடுங்கள். ஆனால் எதிர்பார்க்க வேண்டாம். வாழ்க்கை என்றால் இனிப்பும் கசப்பும் இருக்கும். ஏற்கப் பழகுங்கள். எதுவும் கடந்து போகும். தேவையில்லாத மிடுக்கு பந்தா வேண்டவே வேண்டாம். பிடிவாதமே பல நிம்மதி இல்லாத சூழ்நிலைக்கு வழி வகுக்கிறது. அதை ஒதுக்குங்கள்.

    நாணலாக வாழப்பழகலாம். கோள் சொல்லுதல், குறை கூறுதல், தவறுகளை சுட்டிக் காட்டுதல் வேண்டாம். மற்றவர்களுக்கும் மரியாதை தேவை. குழந்தை என்றாலும் அதற்கும் மரியாதை கொடுங்கள். இங்கு ஒவ்வொருவரும் தனி மனிதர்கள். நல்ல விஷயங்களில் முதல் வணக்கம் கூறுவது நாமாக இருக்கலாமே. என்ன குறைந்துவிடப் போகிறது. நமக்குத்தான் பெருமை. யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நம் லட்சியமாக இருக்கட்டும். முடிந்தவரை விட்டுக்கொடுக்கலாம். இவைகளை கடைப்பிடித்தாலே வாழ்வு நம் வசம் என்பது உண்மை.

    நம் குடும்பம், குழந்தைகள், நம்மை நம்பி உள்ளவர்கள் என்று நினைப்புடன் சில தவறான பழக்கங்களை கைவிட்டாலே பாதி மகிழ்வு வந்துவிடும். நம் உலகம் அழகானால் நம்மைச் சுற்றியும் எல்லாம் அழகாகி விடும். வாழ்வை மட்டுமல்ல மனிதர்களும் நம் வசம்தான். ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாழ்வை ஆசையுடன் வாழலாமே. மனம் மகிழ்வானால் வாழ்வும் அதுதான் வாழ்வின் அர்த்தமும்.

    ஜி.ஏ.பிரபா, கணித ஆசிரியர், கோபிசெட்டிப்பாளையம்.
    சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி சாறு - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு


     
    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

    பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்.

    அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!

    சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
    முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை ஆகியவை முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

    தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன. ஆனால் எங்கு செல்வது? என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.

    இந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.

    முகப்பரு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.

    பருத் தழும்பு:

    பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

    தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

    டாக்டர். எம்.எஸ். ஆதித்தன்
    ஆகர்ண தனுராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணமாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு, வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை வலது கையால் பிடித்து பாதத்தை வலது காதருகே கொண்டு செல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும். 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

    காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.

    பலன்கள் :

    செவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.
    ×