search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரட் சமையல்"

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,

    கேரட் துருவல் - 1 கப்,

    சர்க்கரை - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    அலங்கரிக்க :

    பிஸ்தா, பாதாம் - சிறிது.

    செய்முறை

    கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.

    குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கோவக்காய் - 500 கிராம்

    கடுகு - 2 தேக்கரண்டி

    சீரகம் - 2 தேக்கரண்டி

    வெந்தயம் - 2 தேக்கரண்டி

    புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு

    காய்ந்த மிளகாய் - 50 கிராம்

    பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

    பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.

    அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).

    10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.

    இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.

    இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
    • வேர்க்கடலையில் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 1/4 கப்

    கேரட் துருவல் - ஒரு கப்

    காய்ந்த மிளகாய் - 6

    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

    எண்ணெய் - 1 ஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    இந்த எண்ணெயில் கேரட்டை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.

    இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி சேர்த்து கலந்து எடுத்து உங்களுக்கு பிடித்த காலை உணவுடன் வைத்து பரிமாறுங்க.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - 250 கிராம்

    வெல்லம் - கால் கப்

    தண்ணீர் - தேவையான அளவு

    தேங்காய் பால் - ஒரு கப்

    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - இரண்டு டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கேரட் பாயாசம் ரெடி.

    • கேரட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 8

    சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    * கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    * இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

    * தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம்.

    * சுவையான கேரட் கீர் தயார்.

    • கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
    • ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - கால் கிலோ

    எலுமிச்சை பழம் - ஐந்து

    பச்சை மிளகாய் - பத்து

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி

    கடுகு - ஒரு தேகரண்டி

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

    சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.

    • கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.
    • கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

    கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது.

    "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்களே அதுபோன்று நல்ல சத்துக்கள் நிரம்பிய கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.

    கேரட், அதிகமான சத்துக்கள் அடங்கியது. உணவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. அதுவே தேவையான அளவை விட அதிகமாக உண்ணும்போது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

    அதாவது ஒரு நாளைக்கு போதுமான அளவு

    கேரட்சாறு- 60 மி.லி (அல்லது)

    கேரட் பொரியல் 1கப் (அல்லது)

    கேரட் சாலட் 1கப் எடுத்து கொள்வது நல்லது.

    சர்க்கரைநோய் உள்ளவர்கள் கேரட் அளவுடன் சாப்பிடுவது நல்லது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கேரட் உண்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

    வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகளவில் இருந்தால் கேரட் உண்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

    • கேரட் பஜ்ஜி தனித்துவமான சுவையுடன் அற்புதமாக இருக்கும்.
    • இந்த பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - கால் கிலோ

    கடலை மாவு - 2 கப்

    அரிசி மாவு - 1/2 கப்

    ஓமம் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.

    • அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
    • பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உதிரியாக வடித்த சாதம் - 1½ கப்,

    கேரட்- 2

    பீட்ரூட் - 1 பெரியது

    பெரிய வெங்காயம் - 1.

    பச்சை மிளகாய் - 2,

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீட்ரூட்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு, கேரட், பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ் ரெடி.

    ×