search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சூப்பரான கோவக்காய் ஊறுகாய்
    X

    சூப்பரான கோவக்காய் ஊறுகாய்

    • வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கோவக்காய் - 500 கிராம்

    கடுகு - 2 தேக்கரண்டி

    சீரகம் - 2 தேக்கரண்டி

    வெந்தயம் - 2 தேக்கரண்டி

    புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு

    காய்ந்த மிளகாய் - 50 கிராம்

    பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

    பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.

    அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).

    10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.

    இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.

    இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×