காரசாரமான கேரட் ஊறுகாய்

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
காரசாரமான கேரட் ஊறுகாய்
Published on

தேவையான பொருட்கள்:

கேரட் - கால் கிலோ

எலுமிச்சை பழம் - ஐந்து

பச்சை மிளகாய் - பத்து

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி

கடுகு - ஒரு தேகரண்டி

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com