என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண்.
    வீட்டுக்குள்ளே பூட்டிக்கிடந்த பெண் சமுதாயம், இன்று விண்ணில் பறந்து சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண். அடுத்தவர்களுக்காகவே அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ பிறந்த அவதாரம் பெண். இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது.

    ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் மகத்துவம் போற்றும் இந்த தினம் எவ்வாறு உருவானது என்பதை காண்போம்.

    18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

    1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

    1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

    இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலகிலேயே மகளிருக்கு அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம். பெண்களை கடவுளுக்கு மேலாக வைத்து வழிபடுவதும் தமிழ் சமுதாயமே. மனித நாகரிகம் வளர காரணமான மகளிரின் முன்னேற்றம் குறித்த அனைத்து இலக்குகளையும் எட்ட மகளிர் உரிமை வென்றெடுக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த நன்னாளில் மகளிர் தின வாழ்த்துக்களை நாமும் தெரிவித்து கொள்வோம்.
    பல்வேறு தரங்களில் பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் சரியான பாலை தேர்ந்தெடுத்து பருகுவதன் மூலம் ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம்.
    முழு கிரீம் மில்க், ஸ்கீம்டு மில்க், டபுள் டோண்ட் மில்க் போன்ற பல்வேறு தரங்களில் பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் சரியான பாலை தேர்ந்தெடுத்து பருகுவதன் மூலம் ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம்.

    ‘புல் கிரீம் மில்க்’ பாலில் கிரீம் முழுவதும் நீக்கப்படாமல் இருக்கும். கொழுப்பும் 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். மூளையின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமானது. வைட்டமின் டி, ஏ, பி1, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோபிளேவின் போன்றவையும் அதிகம் கலந்திருக்கும். ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பொட்டாசியத்தின் பங்களிப்பு முக்கியமானது. ரத்த சிவப்பு அணுக்கள், நரம்பு திசுக்களின் ஆரோக்கியத்திற்கு பி.12 உதவுகிறது. வைட்டமின் ஏ, சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க பயன்படுகிறது. இத்தகைய முழு கிரீம் கலந்த பாலை, சிறுவர்கள், டீன் ஏஜ் பருவத்தினர், கட்டுக்கோப்பாக உடல் எடையை பராமரிப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்கள் பருகலாம்.

    ஸ்கீம்டு மில்க் என்பதில் கிரீம் முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும். கொழுப்பும் 0.1 சதவீதம் அளவிலேயே இருக்கும். முழு கிரீம் பாலுடன் ஒப்பிடுகையில் கலோரியும் பாதி அளவிலேயே இருக்கும். எனினும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் ஒரே அளவிலேயே இருக்கும். வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும். அது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும். எடை இழப்புக்கும் வழிவகுக்கும். சீராக உடல் எடையை பராமரிப்பதற்கும் வழிவகை செய்யும். இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். இதய நோயாளிகள், நீரிழிவு, உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்கள், தீக்காயத்தால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகலாம். அதேவேளையில் சிறுவர்களுக்கு இந்த பால் ஏற்றதல்ல.

    டோண்ட் மில்க் என்பது ஒருமுறை கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகும். ‘டபுள் டோண்ட் மில்க்’ என்பது இரண்டு முறை கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகும். எனினும் கொழுப்பு 1.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இந்த பாலை ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அதனை பருகுவது உடலை பருமனாக்கும்.

    பாலில் இருக்கும் அமினோ அமிலங்கள் திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றன. தசைகளை வலுப்படுத்துவதற்கு பாலில் கலந்திருக்கும் புரதம் அவசியமானது. 200 மி.லி. அளவு கொண்ட ஒரு டம்ளர் பாலில் 6 முதல் 7 கிராம் வரை புரதம், 200-300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எலும்புகள், பற்களின் வலுவுக்கு கால்சியம் இன்றியமையாதது.
    பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
    குடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. விஞ்ஞானம் பல மடங்கு முன்னேறி இருக்கிறது. இன்றைக்கு குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்த குறைக்கு தேவையான சிகிச்சையை செய்கிறார்கள்.

    ஸ்கேனில் 3 D, 4D பாப்லர் (இரத்த ஓட்டம் பார்ப்பது) ஆகியன நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப்பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம். ஹிஸ்ட்ரோ சால்பின் ஜோக்ராம் (Hystero Salphingogram) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர்கோர்த்தல் ஆகியவைகளை கண்டுபிடிக்கலாம். ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறை மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம்.

    நுட்பமான முறையில் விந்தின் குறைகளை கண்டுபிடித்து அதற்கான சிசிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கிறது. மருந்துகள் மூலமும் லேப்ரோஸ் கோப்பிக் அறுவை சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார் கட்டிகள், நீர்கட்டிகள், இரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவைகளை 3-D லேப்ரோஸ்கோபி, ஹிஸ்ட்ரோஸ் கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தலாம்.

    3D லேப்ரோஸ்கோபி மூலம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்வதால் இரத்தக் கசிவு குறைவாக உள்ளது. கட்டிகளை எடுத்த பின் தையல் போட்டு அதை நிலமைக்கு எடுத்து வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3D விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.

    நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவிகித பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும்.

    மீதியுள்ள 10% பெண்களுக்கு IUI - கருப்பையில் விந்து செலுத்துதல் அல்லது டெஸ்ட்டியூப் பேபி (IVF/ICSI) விந்தை முட்டையில் செலுத்தும் முறை தேவைப்படுகிறது. IUI ஆறுமுறை தோல்வி அடைந்தால் ICSI முறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.

    IVF லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் கருவி முட்டையையும், கருவையும் நம் உடம்பில் இருக்கும் வெப்ப நிலையிலேயும், ஆகிசிஜென் போன்ற வாயுக்களையும் நம் உடம்பில் இருக்கும் நிலையிலேயும் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    இதை தவிர லேசர் கணினி முறையை உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5-வது நாள் கருவை (பிளாஸ்போசிஸ்ட்) கர்ப்பப்பையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து, கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.

    பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும், சிகிச்சை ஆரம்பித்து விட்டால் அடுத்தடுத்து இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.
    உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும், பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்து சிறப்பு செய்ய வேண்டும்.
    உடலுறுதி கொண்ட ஆணைவிட மனஉறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்து இருப்பவர்கள் தான் பெண்கள். இதனால் தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இத்தகைய பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே சொல்லலாம். ஒரு புறம் பெண் சிசுக்கொலைகள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில், மறுபுறம் இந்திய பெண்கள் ஏதாவது ஒரு நாட்டில் வெற்றி கனிகளை பறித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்கு பயந்து கொண்டு தங்களுடைய துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து மனஅமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் சபாநாயகர், பெண் முதல்-அமைச்சர்கள், பெண் விளையாட்டு வீராங்கனைகள் என உலகம் பெருமைப்பட்டு சொல்லி கொண்டாலும், பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை. ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரம் பெண்களிடையே தற்போது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாக சொல்வார்கள். பலவித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலையாக இந்த தேசம் உள்ளது. இந்த தேசத்தில் மகளிரும் பலவிதமான மலர்களே. அவைகள் பூத்து காயாகி, கனியாகி பக்குவமடைகிறது. அந்த கதம்ப மாலையை இணைக்கும் நூலாக தியாகம் உள்ளது. பெண்கள் பலவித முறைகளில் ஆடை, ஆபரணங்கள் அணிந்தாலும் பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் தியாகம் ஒன்று தான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறியது அந்தகாலம்.

    தோல்விகளை கொண்டு துவண்டு விடாமல் அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிகண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும், பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்து சிறப்பு செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றில் அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலரும் கற்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மகளிர் தினமும், பெண்கள் தங்களது சமுதாய பங்களிப்பை தயக்கமின்றி செய்வதற்கான படிக்கட்டுகளாக அமைய வேண்டும். இந்நாளில் மகளிரை போற்றுவோம். 
    முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்
    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 4
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
    இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - சிறிதளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் மிளகு - சீரகத்தூள், வேர்க்கடலை போட்டுக் கிளறவும்.

    அடுத்து அதில் ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    அடுத்து துருவிய முட்டைகோஸ், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

    முட்டைகோஸ் நன்றாக வெந்தும் இறக்கி வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காதுவலி உண்டாவதற்கு சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. காதுவலி வந்தால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    காதுவலி உண்டாவதற்கு சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. அதாவது நம்முடைய மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுப் பகுதிக்குச் செல்லுகின்ற குழாயில் அடைப்புகள் ஏற்பட்டு, நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்த் தொற்றுக்களினால் தான் காது வலி ஏற்படுகிறது.

    அதேபோல தொண்டையில் ஏற்படுகின்ற அழற்சி காரணமாகவும் காதுவலி ஏற்படலாம். நோய்க்கிருமிகளின் தாக்கத்தினால் காது வலி உண்டாகிறது. இதற்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது தான் நல்லது.

    சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அவர்களுக்கும் காதுவலி எளிமையாக வந்துவிடும். அதாவது சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சினை வெளியேற்றுவதும் கூட காதுவலி ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம். மூச்சு உறுப்புகளில் ஏற்படுகின்ற தொற்றுநோய் காதுவலிக்குக் காரணியாகவும் அமையும்.

    சைனஸ், டான்சில், தாடைப் பகுதியில் உள்ள எலும்புகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் காதுவலி வரும்.

    பொதுவாக, ஆறு, குளங்களில் அடிக்கடி குதித்துக் குளிப்பவர்களுக்கும் கடல் நீரில் குளிப்பவர்களுக்கும் நடு செவிக்குழலில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனாலும் மிகக் கடுமையான காது வலியால் பாதிக்கப்படுவார்கள்.

    பொதுவாக சளி பிடித்தல், மூக்கடைப்பு இயல்பாக எல்லோருக்கும் ஏற்படுகிற பிரச்சினை தான். ஆனால் இதுவே சளியும் மூக்கடைப்பும் அதிகமாகிற பொழுது அதனால் அதிகமாகக் கஷ்டப்பட்டு நீங்கள் மூக்கு சிந்தினாலும் காதில் உங்களுக்கு வலி உண்டாகும்.

    பற்களில் உண்டாகிற சொத்தைப்பல், கடைவாய்ப்பல் வெளிவராமல் இருப்பது, நாக்கு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படுவது, டான்சில் சதை வளர்ச்சி உண்டாவது, கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மற்ற உறுப்புகளை அவை பாதிப்பதனாலும் கூட காது வலி ஏற்படும்.

    என்ன செய்யக்கூடாது?

    நம்முடைய காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. அப்படி சுரப்பதனால் காதுக்குள் சேருகின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேல் தானாக வெளியே வந்துவிடும். அதனால் காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருள்களையும் உள்ளு விட்டு சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்யக்கூடாது.

    நம்முடைய காதுகள் 80 தல் 85 டெசிபல் வரையிலும் இருக்கின்ற சத்தத்தைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் சத்தம் நம்முடைய செவிப்பறைகளை எட்டுகிற போது, அந்த அதிக சத்ததத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சவ்வு கிழிந்துவிடும்.

    சிலர் காதில் இயர்போளை எப்போதும் மாட்டிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ பாட்டு கேட்டுக் கொண்டே அப்படியே இயர்போனோடு தூங்கிவிடுவார்கள். அதிக சத்தம் வெளிவரும் வீடியோ கேம், படம் பார்ப்பது, செல்போன் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை காதுகளில் பெரும் வலியை ஏற்படுத்தும். அதனால் ஒரே காதில் வைத்துப் பேசக்கூடாது. அவ்வப்போது காதுகளை மாற்றி மாற்றி பேச வேண்டும்.

    சிலர் காதுவலி வந்தால் தேங்காய் எண்ணெய் இல்லையென்றால் நல்லெண்ணெயைக் காய்ச்சி வெதுவெதுப்பான இருக்கும்போது காதுக்குள் விடுவார்கள். இதை செய்யவே கூடாது. முதலில் காதுவலி எதனால் வந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளாமல் எண்ணெயை ஊற்றினால் அது வீண் விபரீதமாகிவிடும்.

    இதுவே காதில் ஏதேனும் பூச்சி நுழைந்துவிட்டால் சில சொட்டு தேங்காய் எண்ணெயையோ அல்லது நல்லெண்ணெயையோ விட்டால் பூச்சி இறந்துவிடும். ஆனால் எண்ணெயை சூடுபடுத்தி ஊற்றக்கூடாது.

    தலையை லேசாக சாய்த்து வைத்திருந்தாலே பூச்சி தானாக வெளியே வந்துவிடும்.

    இந்த விஷயங்களையெல்லாம் முதலில் கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுவது மிக முக்கியம். 
    படித்த பெண்கள் தாம் கற்ற கல்வியை வீணாக்காமல் தம் உள்ளங்களைக் காற்றோட்டமாக வைத்திருந்தால் அவர்கள் நிர்வகிக்கும் வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும் அமைதி நிலவும், முன்னேற்றம் ஏற்படும்.
    நாளை (மார்ச் 8-ந்தேதி) உலக மகளிர் தினம்.

    படைப்பில் முதலில் ஆண் வந்ததாகவும், பின்னர் பெண் வந்ததாகவும் சில நூல்கள் கூறலாம். ஆனால் அது எனக்குச் சரியாகப்படவில்லை. ஆண்மைக்குப் பொருளாகப் பெண்மையும், பெண்மைக்குப் பொருளாக ஆண்மையும் ஒரே நேரத்தில் தான் பிறந்திருக்க முடியும். ஆணும், பெண்ணும் ஒன்றாகவே தோன்றியிருக்க முடியும். பெண்ணாக இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. சுதந்திரம் என் உரிமை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். சிந்திக்கும் விதமும், செயலாற்றும் நுணுக்கமும் பெண்மையைத் தாண்டிய பொதுமையில் அமைய வேண்டிய அவசியத்தைக் கற்றிருக்கிறேன். இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை உதறிவிட்டேன். எப்படியும் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை அறிவுபூர்வமாக உடைத்தெறிந்தேன்.

    இப்போது ஆணுக்கும், பெண்ணுக்குமான வித்தியாசமாக எனக்குத் தெரிவது மிக மிகக் குறைவே. அதில் முக்கியமான ஒன்று அவள் தாயாக இருக்க வேண்டிய கட்டாயம். எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் சொற்களைக் கடன் வாங்கிச் சொல்வதானால் மகளிருக்குத் தாய்மை ஒரு ‘பொன் விலங்கு’. பெண் தாய்மையைப் பேண வேண்டியதன் காரணமாக அவள் வாழ்க்கை முறை ஆண்களில் இருந்து வேறுபடுகிறது. இது இயற்கை நியதி. இந்த நியதியை மையப்படுத்தியே சமூகம் அவளைப் பார்க்கிறது, பாராட்டுகிறது, பத்திரப்படுத்துகிறது. ஆண், பெண் என்ற உடல் ரீதியான வித்தியாசத்தைத் தாண்டி அறிவு செறிந்த மனங்களாக ஒருவரை ஒருவர் அணுகும் பக்குவம் நம்மில் பலரிடையே இன்னும் ஏற்படவில்லை.

    ஒரு காலகட்டம் வரை பெண்ணானவள் கணவனைப் பேணிக் குழந்தைகள் பெறுவதற்கும், அவர்களை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கும், குடும்பத்தினரின் நலனைப் பேணுவதற்குமான ஒரு சேவகியாகவே பெரும்பாலும் கருதப்பட்டாள். (நம் சமூகத்தில் இப்போதும் பெரும்பாலும் அப்படித் தான் கருதப்படுகிறாள்.) அந்தவேலையைச் செவ்வனே செய்வதற்கு ஏதுவாகவே அவளுடைய வளர்ப்பு முறை பெரும்பாலும் அமைந்தது. ஆனாலும், நம் அவ்வையாரைப் போல், உபநிடத மாது மைத்ரேயியைப் போல், புராண காலத்து கார்க்கியைப் போல, நான்காம் நூற்றாண்டில் அலெக்ஸாந்த்ரியாவில் வாழ்ந்த அறிஞர் ஹைபாடியாவைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்கள் சலிப்பான நடைமுறை வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அறிவுப்பாதையில் நடந்தார்கள்.

    கல்வி கற்பதில் பெண்களுக்குப் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. குறைந்த வயதில் திருமணமானால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. அப்படியே முயன்று படிக்க சென்றாலும் கற்ற கல்வியை தனக்கும், சமூகத்துக்கும் பயன்படுத்த முடியாதபடி குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் முழு நேரத்தையும் செலவிட வேண்டுமென்ற ஆசை அல்லது நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்குச் சமமாகக் பெண்கள் கல்வி கற்றிருந்தாலும் அதன் பயனைத் துறந்து விடவேண்டிய கட்டாயநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    குடும்பத்தோடு ஐக்கியமாகும் மனப்பாங்குடைய பெண்களுக்கு நல்ல சுற்றத்தாரும் அமைந்துவிட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் பெண்களுக்கு அறிவு வேட்கை மேலிடும் போது, அவர்களுக்கென்று தனித்துவம் அரும்பும்போது, ஆண்களைப்போல் பெண்களும் தங்களை கட்டுப்படுத்தாத உறவுகள் வேண்டும் என்று விரும்புவார்கள். பெரிய கல்லூரிகளில் படித்துவிட்டு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களுடைய வாழ்க்கையின் பொருள் எனக்கு விளங்கவில்லை. அவர்களுக்குமே விளங்காது என்றே நினைக்கிறேன். அவர்களுடைய பெற்றோரை பற்றிச் சொல்லவே வேண்டாம்.

    ஆக்கபூர்வமாகச் செய்த எதுவுமே வீணாகாதபடி வாழ்க்கையை நடத்துவதில் பெண்கள் தீர்மானமாக இருந்தால், அதற்கு ஆண்களும் உதவியாக நடந்து கொண்டால், குடும்பமும் சமூகமும் நலமாக இருக்கும். வீட்டில் சமைக்கவும், பிற வேலைகளைச் செய்யவும் அவற்றில் தேர்ச்சியடைந்தோரைப் பணிக்கு அமர்த்தலாமே. அப்படியில்லாமல் எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்த மனங்களை முடக்கி வீட்டில் கட்டிப் போடுவது அத்தகைய பெண்களுக்கு மன உளைச்சலைத் தான் தரும்.

    ‘பொன்சாய்’ செடிகளைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் மேலிடும்; வீசி வளர்ந்து வானைத் தொட்டு நிழல் தர வேண்டிய மரங்களின் வேர்களைக் குறுக்கியும் பிணைத்தும் செடிகள் போல் தொட்டியில் வளர்க்கிறார்களே என்று! அதே போல் பெண் அறிஞர்கள் ‘பொன்சாய்’ செடிகளாய் வீட்டில் அடைப்பட்டுக்கிடப்பது மானுடத்துக்குப் பெரிய இழப்பில்லையா?

    “கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற குறளுக்கேற்ப கற்ற கல்விக்குத் தகுந்தாற்போல் நம் நிலைப்பாடு அமையவேண்டும் அல்லவா? பொறியியலோ, மருத்துவமோ படித்தபின் அந்த அறிவைப் புதைத்துவிட்டு வாழ்க்கை நடத்துவது எந்த விதத்தில் அந்தத் தனி மனிதருக்கும், சமூகத்துக்கும் நியாயமாகும்? 2014-ல் நைஜீரியாவில் சிபொக் நகர நடுநிலைப் பள்ளியிலிருந்து 276 பெண் குழந்தைகள் போகோஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்கள். பிஞ்சு வயதில் கீழ்த்தரமாக நடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

    தனி ஒருவனாக இருக்கும்போது ஓரளவு நியாயத்துக்கு கட்டுப்படும் மனிதன் ஒரு கூட்டத்தின் உறுப்பினராகும் போது சீரழிந்து போகிறான். உண்மையின் குரல் சன்னமானது என்பார் என் குருநாதர். கூட்டம் சேரும்போது அந்தக் குரல் அடிபட்டுப் போய் அராஜகம் தலைவிரித்தாடும் போலும்! உலக அளவில் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம்; பெண்ணும் ஆணும் சரிநிகர் சமானம் என்று பாடுகிறோம். ஆனால் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்துவோர் உலக அளவில் கூட அதிகம் இல்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.

    நான் சந்திக்கும் பெண்களில் பலர், பெண்ணும் ஆணும் சமம் என்ற உண்மையை உணராதவர்களே. “அவனுக்கென்ன ஆம்பள!”, என்று சொல்வோர், மனத்தின் செயல்பாட்டையும், விஸ்தீரணத்தையும் சரிவரத் தெரிந்துகொள்ளாதவர்களே! உடம்பென்ற கோவிலில் வீற்றிருக்கும் மனமென்ற அறிவுச்சுடர், தூண்டத் தூண்ட முழுதாக வியாபித்து இயற்கையையும், இறையையும் தரிசனம் செய்யக்கூடிய அளவுக்குப் பேராற்றல் கொண்டது. அந்த மனம் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் மனம் குறுகிக் கிடக்கும் வரை விடுதலை என்ற விடிவு தனி உயிருக்கும் இல்லை, மானுடத்துக்கும் இல்லை.

    முன்னேற்றத்துக்கு சமமான வழி. இதுவே இந்த ஆண்டு மகளிர் தினக்கொண்டாட்டத்துக்கான மையக் கருத்து. அறிவுத்திறத்தை உணர்ந்த பெண்களும், ஆண்களும் மட்டுமே இப்படியொரு சமமான வழியை வகுக்க முடியும். படித்த பெண்கள் தாம் கற்ற கல்வியை வீணாக்காமல் தம் உள்ளங்களைக் காற்றோட்டமாக வைத்திருந்தால் அவர்கள் நிர்வகிக்கும் வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும் அமைதி நிலவும், முன்னேற்றம் ஏற்படும். பெண் தன் நிலையை உணர்ந்து விழிப்புணர்ச்சியுடன் நடந்தால் சமூக வளர்ச்சி முழுமையடையும்.

    ஷோபனா ரவி, தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்.
    பெண்கள் சரியான அளவு பிராவை தேர்வு செய்யாமல் அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!
    பெண்களில் பலருக்கு `பிரா’ பற்றிய சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சரியான அளவை தேர்வு செய்யாமல் பிராவை அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

    அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!

    கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

    பதில் : உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ரா பதிந்த இடங்கள் சிவந்துபோய் காணபட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ரா ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பதுபோல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

    கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

    பதில் : தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

    கேள்வி: குண்டாக 36 சைஸ் உள்ளவர்கள் எலாஸ்டிக் ஸ்ட்ரா வைத்த பிரா அணியலாமா?

    பதில் : அணியக்கூடாது. மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழிவகுக்கும்.

    கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

    பதில் : தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிராசைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

    கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

    பதில் : இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணியலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை கலர் பிராக்களை அணிந்து அழகு பார்க்கலாம்.

    கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

    பதில் : பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தை பொறுத்ததுதான். 34 இஞ்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்துபோய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிபட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை. கர்ப்பிணி பெண்களும் தாய்பால் கொடுபவர்களும் அதற்குரிய பிராக்களை அணிந்து மார்பழகை பாதுகாக்க வேண்டும்.
    உடற்பயிற்சி செய்வதற்கு வயது வரம்பு எதுவும் பிரச்சனையில்லை. சில விஷயங்களைக் கவனித்துத் தொடங்கினால் போதுமானது.
    உடற்பயிற்சி பற்றிய எண்ணம் ஒருவருக்கு வருவது நிச்சயம் வரவேற்க வேண்டியதுதான். அதற்கு வயது வரம்பு எதுவும் பிரச்சனையில்லை. சில விஷயங்களைக் கவனித்துத் தொடங்கினால் போதும். ஒருவருடைய உடல் உழைப்பின் தன்மை, வாழ்வியல் நடைமுறை போன்றவற்றை முதலில் ஆராய வேண்டும். அதன்பிறகு ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மூட்டுப் பிரச்சனைகளுக்கான சோதனைகளை மருத்துவரிடம் செய்துகொள்ள வேண்டும்.

    இதயத்துடிப்பின் விகிதம், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் பரிசோதனை, ஹார்மோன் சமநிலை போன்றவை பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான் இந்த திடீர் உடற்பயிற்சியால் எதிர்காலத்தில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதனால் நாற்பது வயதுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்ய நினைக்கிறவர்களுக்கு மருத்துவ அறிக்கை என்பது மிகவும் அவசியம்.

    அதேபோல சரியான உடற்பயிற்சி நிலையத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். வீட்டிலேயே தனியாக உடற்பயிற்சி செய்யலாமா, ஜிம்முக்கு போகலாமா என்ற குழப்பமும் சிலருக்கு இருக்கும். பலருடன் சேர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது இன்னும் உத்வேகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சியை இதுபோல் முறைப்படி தொடங்கினால் முதல் மூன்று மாதங்களிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை கட்டுப்பட ஆரம்பிக்கும். இதயநோய் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும். ஆரோக்கியமான வாழ்க்கை கிடைப்பதுடன் உங்கள் தோற்றத்திலும் புதுப்பொலிவு ஏற்பட்டு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்!
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை ஏதாவது ஒருவகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இன்று நெல்லிக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 10,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:


    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - சிறிதளவு. 



    செய்முறை:

    பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    மிக்சியில் நறுக்கிய நெல்லிக்காய், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    இப்போது சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தூக்கமின்மை, கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது. கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம்.
    தூக்கமின்மை, அனீனியா, பாரம்பரியம், கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது.

    * இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கரட், பீட்ரூட் ஜீஸ், கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

    * விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

    * கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

    * விளக்கெண்ணைய்யை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.  

    இவ்வாறு செய்து வந்தால் கண்ணின் கருவளையத்தை விரட்டி விடலாம்.
    தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும்.
    பொதுவாக ஊசி என்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி தான். ஆனால், தடுப்பூசி என்பது நம் ஆரோக்கிய வாழ்விற்கு மிக அவசியமாகும். தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி செந்திலாண்டவர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன் கூறும்போது,

    முன்பெல்லாம் அம்மை நோய், கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் இருமல், காலரா, நிம்மோனியா போன்ற நோய்களினால் இறப்பு சதவிகிதம் அதிகம். தடுப்பூசி என்பது கண்டறியப்பட்ட பின்பு இந்த நோய்களில் சிலவற்றை முற்றிலும் அழிக்க முடிந்தது. தடுப்பூசியினால் மற்ற நோய்களும் வராமல் தடுக்க முடியும்.

    உதாரணமாக, மூளைக்காய்ச்சல் நோய், மஞ்சள் காமாலை நோய், ஏ வகை மற்றும் பி வகை, காலரா, நிம்மோனியா, தட்டம்மை, பெரியம்மை, டைபாய்டு மிக முக்கியமாக ஸ்வைன்புளு பெண்களுக்கு பெருங்கொடுமை விளைவிக்கும். கர்ப்பப்பை கேன்சர் நோய் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது. இப்போது உலகளவில் ஆராய்ச்சியில் எச்.ஐ.வி. நோய்க்கும் டெங்கு வைரஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும். சரியான முறையில் தடுப்பூசி எடுக்கவில்லை என்றால் நாம் இந்த மாதிரியான நோய்களுக்கு ஆளாக வேண்டியதிருக்கும்.

    ஆகவே தடுப்பூசி எடுத்து கொள்வோம். நோய்களில் இருந்து விடுபடுவோம். நோயற்ற வாழ்வை குழந்தைகளுக்கு அளிப்பது பெற்றோர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×