என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களால பாதிக்கப்படறவங்க அடுத்தது. சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும்.

    இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது. ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம்.

    இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம். சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க்.

    வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும். அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம்.

    சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம். சிகிச்சை மற்றும் ஆபரேஷன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது. அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.
    உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது. Animal workout-ன் வகைகளையும் அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    Crow push up

    இரண்டு கால்கள் மற்றும் கைகளை தரையில் ஊன்றி, மேலெழும்பிய நிலையில் இருக்க வேண்டும். மெதுவாக வலது முழங்காலை மடக்கியவாறு மேலே தூக்கி வலது கை முட்டிக்கு நேராக கொண்டு வரவும். இப்போது மீண்டும் வலதுகாலை பின்பக்கமாக நீட்டி பழைய நிலைக்கு கொண்டு வரவும். இதேபோல மறுபக்கம் இடது காலை மடக்கி செய்ய வேண்டும். முன்னோக்கி நகர்ந்து கொண்டே செய்ய வேண்டும். வழக்கமாக செய்யும்
    புஷ் அப் பயிற்சியினை காகத்தைப் போல செய்யும் முறை இது.

    பலன்கள்

    அடிவயிறு, வயிறின் பக்கவாட்டு தசைகள், மார்பு மற்றும் முன்தொடை தசைகள் விரிவடைவதால் நல்ல வலிமை கிடைக்கிறது. மணிக்கட்டு எலும்புகள், இடுப்பின் மேல்பகுதி எலும்புகள் மற்றும் கால் எலும்புகள் வலுவடைகின்றன. செரிமான மண்டல உறுப்புகளின் இயக்கம் தூண்டப்படுவதால் நெஞ்செரிச்சல், அல்சர் நோய்கள் நீங்குகின்றன. மேலும் முதுகுத்தண்டுவடத்திற்கு நெகிழ்வு கிடைக்கிறது.



    Crane Excercise

    கொக்கு போல தரையில் ஒருகாலை மட்டும் ஊன்றி, மற்றொரு கால் முட்டியை மடக்கி கைகள் இரண்டையும் கூப்பியவாறு நிற்க வேண்டும். இப்போது பறவை பறப்பதற்கு தயாராவதுபோல் இரண்டு கைகள் மற்றும் இடதுகாலை பின்புறமாக நீட்டி, உடல் முழுவதையும் முன்பக்கமாக கொண்டுவர வேண்டும். வலது காலை மட்டும் தரையில் ஊன்றி நிற்க வேண்டும். இதேபோல் மறுபக்கம் மாற்றி செய்யலாம்.

    பலன்கள்

    பின்புறம், இடுப்பு தசைகள் வலுவடைகின்றன. இந்த பகுதிகளுக்கு அதிகப்படியான இயக்கம் கிடைப்பதில்லை என்பதால் இறுக்க மடைந்து நடு மற்றும் கீழ் முதுகு வலியைக் கொடுக்கும். ஒற்றைக்கால் பறவை பயிற்சியால் அடிவயிறு மற்றும் பின்புறத்தில் உள்ள அதிகப் படியான கொழுப்பு தசைகளை கரைக்க முடியும். மார்பு விரிவடைவதால் மூச்சுப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாகிறது.

    Pigeon Pose

    தரையில் கைகள் மற்றும் கால்களை ஊன்றி, தலையை நிமிர்ந்தவாறு நிற்க வேண்டும். இப்போது வலது முழங்காலை முன்பக்கமாக மடக்கி தரையில் படுக்கபோட்டவாறு வைக்க வேண்டும். இடதுகால் பின் பக்கம் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இரண்டு கைகளும் தோளுக்கு நேராகவும், தலை நேராக நிமிர்ந்தபடியும் வைத்துக் கொள்ள வேண்டும். இதே நிலையில் ஆழ்ந்த மூச்சு விடவேண்டும். இதேபோல் மறுபக்கம் செய்ய வேண்டும். இது புறாவைப் போல் தோற்றமளிக்கும் என்பதால் Pigeon pose என்கிறார்கள்.

    பலன்கள்

    இடுப்பு, பின்முதுகு மற்றும் கால்களில் நெகிழ்வு அதிகரிக்கிறது. குருத்தெலும்பு மற்றும் மூட்டு இணைப்புகளின் முறிவு குறைகிறது. இடுப்பு மூட்டு நரம்புகளில் இருக்கும் இறுக்கம், அழுத்தம் குறைகிறது. குறிப்பாக, முதுகுத் தண்டுவடத்திலிருந்து கீழ் முதுகுவழியாக பின் தொடையை இணைக்கும் நரம்பான சியாட்டிக் நரம்பின் இறுக்கத்தை குறைக்கிறது. இடுப்பு, கெண்டைக்கால் நரம்புகள் நீட்சி அடைகின்றன. நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் கீழ் இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம்.
    வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை வீட்டு கடன் வசதி திட்டத்தில் பழைய வீடு வாங்குவதற்கும் கடன்களை அளிக்கின்றன.
    வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை வீட்டு கடன் வசதி திட்டத்தில் பழைய வீடு வாங்குவதற்கும் கடன்களை அளிக்கின்றன. அவ்வாறு கடன் பெற விரும்புபவர்கள் சில அடிப்படையான விஷயங்களை அறிந்து செயல்படுவதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க இயலும். அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.

    தக்க மதிப்பீடு

    வீட்டு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் சம்பந்தப்பட்ட வீடு அமைந்துள்ள இடம், அதன் சொத்து மதிப்பு, மனை அங்கீகாரம், வில்லங்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கவனிக்கின்றன. மேலும், வங்கியின் மதிப்பீட்டாளர் மூலம் வீட்டை மதிப்பீடு செய்யப்பட்டு கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் கடன் வழங்குவது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும். அந்த அறிக்கையில் வீடு கட்டப்பட்டு முடிந்த ஆண்டுகள், அதற்கேற்ப கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், வீட்டின் தாங்குதிறன், அஸ்திவாரத்தின் நிலை போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    கடன் தொகை குறையலாம்

    கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆன பழைய வீடுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டின் மதிப்பில் 60 முதல் 70 சதவீதம் வரை கடன் தொகையாக அளிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சொந்த பிளாட்டுக்கு கடன் பெறுவதாக இருப்பின், ஒரு வீட்டின் பிரிக்கப்படாத மனையின் பாகம் சுமாராக 300 அல்லது 250 சதுர அடி இருக்கக்கூடும். அந்த நிலையில் பெரிய அளவில் வீட்டு கடன் கிடைக்க வாய்ப்பில்லை. அவ்வாறு கடன் அளிக்கப்பட்டாலும் கடனை திரும்ப செலுத்துவதற்கான இ.எம்.ஐ என்ற மாதாந்திர தவணைக்கான கால அவகாசம் குறைவாக இருக்கும்.

    தனி வீடுகள்

    தனி வீடுகளுக்கு இடத்தின் மதிப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் சற்று எளிதாக கடன் பெற இயலும். அடுக்குமாடி வீடுகளில் மனை உரிமை முற்றிலும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது என்ற காரணத்தால் இடத்தின் மதிப்பு அடிப்படையில் கடன் தொகை குறைவாக கணக்கிடப்படும்.

    விலையை குறைக்க வாய்ப்பு

    வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்காமல் பழைய வீடு வாங்குவது ஒரு வகையில் நல்லது என்ற மாற்று கருத்தையும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் முன் வைக்கின்றனர். அதாவது, கட்டமைப்பின் வயது காரணமாக உருவான பாதிப்புகள், அதன் தாங்குதிறம் குறைந்திருப்பது, வாங்கிய பின்னர் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் ஆகிய காரணங்களை முன் வைத்து பேரம் பேசி வீட்டின் விலையை குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக கேட்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    மட்டனை எப்படி செய்தாலும் அது சுவை நிறைந்ததுதான். அந்த வகையில் சில்லி மட்டனை காரசாரமாக எப்படி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் : அரை கிலோ
    வெங்காயம் - 4
    தக்காளி - 1
    தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்
    கேசரி தூள் - ஒரு சிட்டிகை
    மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மட்டன் வேக வைத்த நீர் - 1 கப்



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சதுர வடிவில் சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்துக் வேக வைத்து கொள்ளவும்.

    மட்டன் வெந்ததும் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு, தக்களி சாஸ், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ் என அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

    அடுத்ததாக வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து எடுத்து வைத்துள்ள மட்டன் தண்ணீர், கேசரி தூள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

    தண்ணீர் எல்லாம் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடுங்கள்.

    சுவையான சில்லி மட்டன் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. நீங்களும் உடற்பயிற்சிகளின்றி உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைத்தால் இதோ உங்களுக்கான டிப்ஸ்.
    உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் நீங்களும் உடற்பயிற்சிகளின்றி உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைத்தால் உங்களுக்கான கட்டுரைதான் இது.

    காலை எழுந்ததும் அரை மணி நேரம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீரை அருந்துங்கள். அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். வெது வெதுப்பான நீரையும் அருந்தலாம். காஃபி அல்லது டீ போன்ற காலை தேநீர் எதையும் அருந்தக் கூடாது. அவற்றை காலையில் மட்டும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆனால் மற்ற வேலைகளில் அருந்தலாம்.

    காலை உணவை அரசனைப் போல் உண்ண வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்படியே உண்ணுங்கள். ஆனால் அதில் புரோட்டீன் சத்துகள் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் கார்போ ஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அது கொழுப்பாக உடலில் தங்கி உடல் எடையைக் கூட்டிவிடும். அதனால் ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் உண்ணலாம். உப்புமா, சிறு பருப்பு தோசை, எண்ணெய் சேர்க்காத ரொட்டி, ஆம்லெட், பன்னீர் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். எண்ணெய் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துடுங்கள்.



    மதியம் நிச்சயம் உங்களுக்கு அளவுகடந்த பசி எடுக்கலாம். அதை ஈடு செய்யும் வகையில் பவுல் நிறைய காய்கறிகள் அல்லது பழங்களின் சாலட் சாப்பிடலாம். அதோடு முட்டை, வேக வைத்த சிக்கன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சமையல் எண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். கார்போ ஹைட்ரேட் குறைந்த சிவப்பு அரிசியை உட்கொள்ளலாம். அதற்கு ப்ரோட்டீன் நிறைந்த குழம்பு சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை ரொட்டி மற்றும் எண்ணெய் சேர்க்காத பருப்புக் குழம்பு போன்றவையும் உண்ணலாம். எண்ணெய் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துடுங்கள்.

    மாலையில் ஒரு கப் காஃபி அல்லது டீ அருந்தினால்தான் ரெஃப்ராஷாக இருக்கும்.இருப்பினும் எண்ணெயில் வறுத்த சமோசா, பஜ்ஜி என உண்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் ஆப்பிள், நட்ஸ் வகைகள், வேக வைத்த கடலைகள் போன்றவற்றை உண்ணுங்கள்.

    இரவு உணவிற்கு என தனியாக சமைக்க வேண்டாம். மதியம் என்ன உணவு எடுத்துக் கொண்டீர்களோ அதையே இரவும் உண்ணுங்கள்.

    தூங்கும் முன் பசி எடுப்பதுபோல் இருந்தால் சூடாக ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். இந்த டயட்டை தினமும் பின்பற்றினால் போதும் உங்கள் கண்களை நீங்களே நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையில் நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.
    குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழந்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம்.
    வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழந்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!

    வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளியேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    காய்ச்சல்: சில குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    ஜலதோஷம்: குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால் கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்றுநோய்களால் மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடித்தால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் போது அடிக்கடி மாற்ற வேண்டும்.

    வயிற்று பிரச்சனை: குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் அதிகமான வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக்கும் கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயிற்று பிரச்சனை இருக்கும் போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    அரிப்புகள்: டயபரை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆகவே எப்போதும் குழந்தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    மேற்கூறிய நோய்கள் எல்லாம் வந்தால், சாதாரணமாக நினைக்க வேண்டாம். மேலும் இத்தகைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.
    மகளிர் தினமான இன்றைய நாளில் பெண்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும், முன்னோடி பெண்மணிகளையும் தெரிந்து கொள்ளலாம்.
    பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். பாசமுள்ள சகோதரியாகவும், நேசம் காட்டும் தோழியாகவும், அன்பைப் பொழியும் அம்மாவாகவும், ஆறுதல் தரும் பாட்டியாகவும் பெண்கள் நம்முடன் வலம் வருகிறார்கள். எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். பெண்களின் பெருமையை போற்றுவதற்காக மார்ச்-8 (இன்று) பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் பெண்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும், முன்னோடி பெண் மணிகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    சுவாரஸ்ய ஆய்வுகள்

    பேசுவதில் கில்லாடிகள் : பெண்கள் பேசுவதில் கில்லாடிகள். ஆண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7 ஆயிரம் வார்த்தைகள் பேசுவார்களாம். ஆனால் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறார்களாம். இது ஆண்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 3 மடங்கு அதிகமாகும்.

    வியர்வை அலங்காரம் : பழமையான ரோம் கலாச்சாரத்தில் பெண்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. போர் வீரர்களின் உடலில் இருந்து வழியும் வியர்வையை சேகரித்து தங்கள் சருமத்தில் பூசி அழகுபடுத்திக் கொள்ளும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. போர்வீரனின் ஆடையையும் உயர்வாக போற்றி பெண்கள் அணிந்து மகிழ்வது உண்டு.

    தாய்மையில் சாதனை : உலகில் ஒரு பெண் 69 குழந்தையை பெற்றெடுத்ததே உலக சாதனையாக உள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த வியோடர் வாஸ்சில்யேவ் என்ற பெண்மணி, 27 முறை கர்ப்பம் தரித்து, 69 குழந்தைகளின் தாயார் என்ற சாதனையை பெற்றார். இதில் 16 இரட்டைக் குழந்தைகள், 7 முறை மூன்று குழந்தைகள், 3 முறை 4 குழந்தைகளை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    சுவையும்- நிறமும் : பெண்களுக்கு ஆண்களைவிட சுவை அறியும் திறன் அதிகம். அதேபோல பெண்களுக்கு நிறம் அறியும் திறனும் அதிகம். இதிலும் குறிப்பிட்ட விதமான மரபணுக்கள் அமைந்தவர்களால் மற்றவர்களைவிட பல லட்சம் நிற வித்தியாசங்களை இனம் காணக்கூடியதாக அமைந்திருக்கிறதாம். உதாரணமாக சாம்பல் பழுப்பில் உள்ள 50 விதமான வண்ண பேதங்களை ஆண்களைவிட பெண்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

    ஆடைகளுக்கு ஒரு ஆண்டு : பெண்கள் ஆடை விஷயங்களில் ரொம்பவே கவனம் செலுத்துவார்கள். அவர்கள் எந்த உடையை தேர்வு செய்து அணிவது என்று முடிவு செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேர அளவை வைத்து ஒரு வினோத ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை இந்த ஆடை அணியும் சிந்தனைக்கு செலவிடுவதாக மதிப்பிட்டு கூறியது அந்த ஆய்வு.

    நோய் தாக்குதல் : குமட்டல், தோள்பட்டை வலி, அஜீரணம் போன்றவை பெண்களை அதிகமாக தாக்கும் பாதிப்புகளாகும். பெண்களை அதிகமாக உயிர்ப்பலி வாங்கும் நோய் மாரடைப்புதான்.

    இந்திய சாதனை பெண்கள்

    பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அரசியல், நிர்வாகம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைக்குரியவர்களாக மிளிர்கிறார்கள். அன்னை தெரசா, இந்திராகாந்தி, கிரண்பேடி, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், பிரதீபா பட்டீல் என்று சாதனைப் பெண்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்கால பெண்களும் இவர்களுக்கு சளைப்பில்லாமல் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். அவர்களில் சிலரையும் பார்க்கலாம்...

    கால்களை விபத்தில் இழந்த பின்பு, தன்னம்பிக்கையுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த இந்திய பெண்மணி அருணிமா சின்கா.

    மேரிகோமின் குத்துச்சண்டை சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 5 முறை உலக சாம்பியன் வென்ற பெருமைக்குரியவர். ஒலிம்பிக்கில் முதன் முதலாக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் சாய்னா நெய்வால். உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனிலும் இவர் சாம்பியனாகி இருக்கிறார். மேலும் பல போட்டிகளிலும் சாதனைகள் படைத்துள்ளார்.

    இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீராங்கனை ஹர்சினி கேன்கேகர்.

    ராஸ்மி பன்சால் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். 5 புகழ் பெற்ற புத்தகங்களை எழுதி உள்ளார். ‘ஸ்டே ஹங்ரி ஸ்டே பூலிஷ்’ என்ற இவரது புத்தகம் உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், பல மொழிகளில் மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.

    உலக அளவில் சிறந்த பெண்மணிகள்

    ஜெர்மனியைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கரோலின் ஹெர்சல். இவர் 1750-ம் ஆண்டு மார்ச் 16-ந்தேதி பிறந்தார். இவர் தனது வால்நட்சத்திர கண்டுபிடிப்புக்காக போற்றப்படுகிறார். முதன் முதலில் பெண்விஞ்ஞானியாக இதை சாதித்த அவருக்கு, புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கழகமான ராயல் சொசைட்டியில் அங்கத்தினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    உலகப் புகழ்மிக்க பெண் விஞ்ஞானியான மேரி கியூரி போலந்து நாட்டுக்காரர் ஆவார். 1867-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி அவர் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை இவரைச் சாரும். அதே நேரத்தில் மீண்டும் நோபல் பரிசு பெற்று இருமுறை நோபல் வென்ற அரிய சாதனையையும் படைத்தார். கதிரியக்கத்தன்மை இவரது சிறந்த கண்டுபிடிப்பாகும். 1910-ல் இவர் தூய ரேடியத்தை உற்பத்தி செய்து காண்பித்தார். இவர் 1934-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி மரணம் அடைந்தார்.

    கியூரியின் மகளான இரேனி ஜூலியட் கியூரி, செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கியதற்காக உலகப்புகழ் பெற்றார். வேதியல் துறையில் நோபல் பரிசும் வென்றார்.

    ரீட்டா லெவி இத்தாலியின் நரம்பியல் நிபுணர். 1909-ல் பிறந்த இவர், 1986-ல் நரம்பு வளர்ச்சி காரணி பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். நூறுவயது வாழ்ந்த நோபல் வெற்றியாளர் என்ற பெருமையுடன் வாழ்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி மரணம் அடைந்தார்.

    இங்கிலாந்தை சேர்ந்தவர் ரோசலிண்ட் பிராங்கிளின். இவர் டி.என்.ஏ.வின். வடிவத்தை கண்டுபிடித்ததுடன், அதை எக்ஸ்ரே படம் பிடிக்கும் முறையையும் உருவாக்கி யவர் என்ற பெருமைக்குரியவர்.

    இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு புகழ்மிக்க ஆய்வாளர் ஜானி கூட்ஆல். சிம்பன்சி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக புகழப்படும் பெண் ஆய்வாளர். தான்சானியா தேசிய பூங்கா ஒன்றில் ஆராய்ச்சி செய்த அவர் சிம்பன்சிகளின் பழக்கவழக்கங்கள் மனிதர்களோடு எவ்வளவு ஒத்துப்போகின்றன என்பதை தனது ஆய்வின் மூலம் உலகறியச் செய்தார்.

    உலகின் முதல் கணினி நிரல் எழுதுனர் (புரோகிராமர்) பெண்தான். அடா லாவ்லேஸ் என்ற பெண்மணிதான் கணினியின் முதல் நிரலை எழுதினார்.

    இவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தில் இருக்கும் நம் சகோதரிகளும், தாய்மார்களும் அன்பாலும், பண்பாலும் நமக்கு முன்னோடிகளே. நாம் அவர்களை போற்றுவோம்! 
    பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான்.  கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

    அதாவது பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது. கோடையினால் நம் உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். கிட்டத்தட்ட ஆட்டோமேட்டிக் டவலைப் போல் செயல்படுகிறது. இதனால் உடலின் களைப்பும் தெரிவதில்லை.

    அடுத்ததாக சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்றும் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமலும் செய்கிறது. இதனால் வெப்பத்தை வெளியேற்ற காற்றை உள்ளே இழுக்கச் செய்கிறது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் குறைகிறது.



    இது இலகுவான தன்மையைப் பெற்றதால் அனைத்து விதமான உடல் அமைப்பு பெற்றவற்களுக்கும் இவ்வாடைகள் பொருந்தி விடுகின்றன.

    சிந்தடிக், பாலிஸ்டோர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்துவிதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.

    மேலும் உடலில் காயம் பட்டால் பயன்படுத்தப்படும் பஞ்சு, பேண்டேஜ் எல்லாமே பருத்தியால் செய்யப்படுகிறது. எடைக் குறைவான இந்த பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது.

    காட்டன் புடவைகளை நாம் பராமரிக்கும் விதத்தைப் பொருத்து அதன் ஆயுட்காலமும் அதிகரிக்கும். பருத்திப் புடவைகளை நாம் சுடுநீரில் மட்டுமே அலச வேண்டும்.

    இவ்வகை பருத்திப் புடவைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அதிகமாக விரும்பி அணிகின்றனர். இதனால் காட்டன் புடவையிலேயே எபிராய்டரிங், பிரிண்டட் காட்டன், உப்படாஸ், மால்குடி காட்டன், பைத்தானி போன்றவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    உலகமெங்கும் இனம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகளிர் தின வரலாறு குறித்து காண்போம்.
    உலகமெங்கும் இனம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகளிர் தின வரலாறு குறித்து காண்போம்.

    பழங்காலத்தில் கிரேக்க நாட்டில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போதும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராடினார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட உற்சாகம் களைகட்டி அரசரின் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றது. அந்த ஊர்வலம் அரச மாளிகையை அடைந்தது.

    அங்கிருந்த மெய்க்காவலர்கள், நீங்கள் கலைந்து செல்லவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றனர். இதில் கோபம் கொண்ட போராட்டக்காரர்கள், மெய்க்காவலர்கள் இருவரை கொன்றனர். இதை அறிந்த அரசன் லூயிஸ் பிலிப் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினார். இறுதியில் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார்.

    பெண்கள் ஒன்று கூடி போராடியதை அறிந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலியிலும் போராட்டங்கள் வெடித்தன. அதைத்தொடர்ந்து பிரான்சில் 2-வது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்ற மன்னர் பெண்களை அரசவையின் ஆலோசனை குழுக்களில் இடம் பெறச்செய்து, பெண்களுக்கு ஓட்டளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8-ந்தேதி ஆகும்.

    இதுவே மகளிர் தினம் சர்வதேச அளவில் கொண்டாட காரணமாக அமைந்தது. அதன்பிறகு 1910-ல் 17 நாடுகளில் இருந்து வந்திருந்த பெண்கள் டென்மார்க் நாட்டின் கோபன்கேஹனில் ஒன்று கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படியே உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
    நாள் முழுக்க உடலும் மனமும் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்க உதவுவது உடற்பயிற்சி. `உடற்பயிற்சி செய்யவேண்டுமா..’ என்கிற சலிப்போடு செய்யாமல், ஆர்வத்தோடு சில பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகள் இங்கே…

    ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)


    தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும். பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    சீரான இதயத் துடிப்புக்கு உதவும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும். காலின் வடிவமைப்பை மேம்படுத்தும்.

    சுமோ ஸ்டெபிலிட்டி ஹோல்டு (Sumo Stability Hold)


    கால்களை நன்றாக விரித்து நேராக நிற்க வேண்டும். கைகளில், இரண்டு டம்பிள்ஸை ஏந்தியபடி, தாடைக்கு அருகே வைக்க வேண்டும். இப்போது, நாற்காலியில் உட்காருவதுபோல, உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது, சுமோ வீரரைப் போன்ற தோற்றம் கிடைக்கும். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    உடலை உறுதியாக்கும். இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைத்து, ஃபிட் ஆக்கும். கால்களில் ஏற்படும் நடுக்கம் குறையும்.

    ஏரோ பாக்ஸிங் (Aero Boxing)

    இடது காலை முன்புறம் வைத்து நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸை எடுத்து, கழுத்துப் பகுதியின் அருகே பிடிக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரர் போட்டிக்குத் தயாராக நிற்பது போன்ற நிலை இது. இப்போது, இடது கையை தோள்பட்டையோடு சேர்த்து வைத்துக்கொண்டு வலது கையை எதிரே ஒருவர் நிற்பதுபோல கற்பனை செய்துகொண்டு, அவரை நோக்கி நீட்ட வேண்டும். பிறகு, வலது கையை தோள்பட்டைக்கு அருகே கொண்டு வந்து, இடது கையை வலதுபுறம் முன்னே நீட்ட வேண்டும். இது ஒரு செட். பிறகு, வலது காலை முன்புறமாக விரித்துவைத்துக்கொண்டு செய்ய வேண்டும். இப்படி, தலா 15 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    கைகளில் உள்ள தசைகள் உறுதியாகும். தோள்பட்டை உறுதியாகும். முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலில் நிலைத்தன்மை மேம்படும்.
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1 கப்
    கோதுமை ரவை - 1/2 கப்
    தயிர் - 1/2 கப்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    கேரட் - 1
    பேக்கிங் சோடா - 1 1/2 டீஸ்பூன்

    தாளிக்க :


    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஓட்ஸ், கோதுமை ரவையை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை ஆற வைக்கவும்.

    சூடு ஆறியதும் ஓட்ஸை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கொரகொரப்பாக பொடித்த ஓட்ஸ், கோதுமை ரவை, துருவிய கேரட், கொத்தமல்லி, உப்பு, பேக்கிங் சோடா, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு நன்குக் கலக்கவும். அதில் மாவு பதத்திற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். இட்லி மாவு தயார்.

    இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

    சுவையான இட்லி தயார்.

    இதற்கு எல்லாவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக குதிகால் வெடிப்பு பிரச்சனை வரக்கூடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்.
    நீங்கள் என்னதான் மிடுக்கான உடையணிந்து தோற்றமளித்தாலும் பின்னங்கால்களின் குதிகால் வெடிப்புகள் அதை பாழாக்கிவிடும். வறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக இந்தப் பிரச்சனை வரக் கூடும். வெடிப்புகள் தாங்க முடியாத வலி, எரிச்சலை உண்டாக்கும். இவற்றையெல்லாம் சரிசெய்ய அதிகம் மெனக்கெடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நீக்கலாம்.

    கால்களை நன்கு சுத்தம் செய்தபின் காட்டன் துணியால் ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பின் பாதிக்கப்பட்ட இடத்தில் வெஜிடபிள் எண்ணெயைத் தடவுங்கள். பின் சாக்ஸ் அணிந்து கொண்டு இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.

    எலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

    ஒரு மேசைக் கரண்டி பெட்ரோலியம் ஜெல்லில் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கிக் கொள்ளுங்கள். பின் கால்களை சுத்தம் செய்தபின் கலவையை கால்களில் தடவி நன்கு தேயுங்கள். அந்த கலவையை கால்கள் உள்ளிழுக்கும்வரை தேய்க்கவும். பின் கழுவாமல் அப்படியே சாக்ஸ் அணிந்து இரவு தூங்கிவிடுங்கள். தினமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும்.
    ×