search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்எடை"

    உடல் எடையை குறைக்க, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்…’என்று, சில "டீன் ஏஜ்’ பெண்கள், வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
    உடல் மெலிய வேண்டுமென்பதற்காக, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, தற்போது ஒரு பேஷன் போல் பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றவர்கள் கூட, "நான் டயட்டில் இருக்கிறேன்…’ என சொல்வதும், உடல் எடை, சற்று அதிகமாகி விட்டாலே, "அய்யய்யோ என் அழகே கெட்டு விட்டது…’ என்று அழும் பெண்களும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் உண்டு.

    அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது. மேலும், மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம். உயரத்துக்கு பொருத்தம் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்தால் மட்டுமே, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு முன், டாக்டரை சந்தித்து, உடல் குண்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். நிபுணத்துவம் பெற்ற ஒருவரது ஆலோசனையின் பேரில், உணவுக் கட்டுப்பாட்டை துவக்க வேண்டும்.

    ஒருவரது உடல் குண்டாக இருக்கிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். இதனை, உணவுக் கட்டுபாடு மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால், பரம்பரை ரீதியாக உடல் குண்டாக இருப்பவர்கள், மெலிவது எளிதான காரியம் அல்ல. தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பிகளில், நோய் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான உடல்வாகு பெற வேண்டும் என்று, உணவின் பெரும் பகுதியை வெட்டி, குறைத்து விடக் கூடாது.



    அதுபோல, திடீரென்று உடலை அதிகமாக வருத்தும் உடற்பயிற்சியை துவங்கி விடக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதாலும், கலோரி குறைந்த உணவை சாப்பிடுவதாலும், உடல் எடையை குறைய வைக்கலாம். மூன்று வேளை ஆகாரத்தை என்ன காரணம் கொண்டும் குறைத்து விடக் கூடாது. சத்து நிறைந்த உணவு, காலை நேரத்துக்கு மிகவும் தேவை.

    உணவுக் கட்டுப்பாடு என்றாலே, முழுமையாக உணவை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். அதே நேரம் பால், மீன், முட்டை போன்றவைகளை உணவில் சேர்க்காதவர்கள், விட்டமின், தாது சத்துகள் நிறைந்த காய்கறி, பழ வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாப்பிடும் உணவு, சமச்சீர் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், விட்டமின், மினரல் சத்துகள், போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாலட், பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் ஆக்காமல், அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

    மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவ தற்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும். இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர்பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.
    உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

    உடல் எடையைக் குறைக்க விரும்பும், அதற்காக முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக்கொள்ளும்போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதேநேரம் காலை உணவைத் தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது. அதாவது, உடல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

    லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் விரிவுரையாளர் கெர்டா ஒரு பழமொழியை மேற்கோள் காட்டுகிறார், ‘‘காலை உணவை அரசனைப் போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்’’ என்கிறார் அவர்.

    நாம் என்ன உண்கிறோம் என்பதைவிட, எப்போது உண்கிறோம் என்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



    சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தைத் தள்ளிப் போடுவது உடல் இயக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.

    பத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜோனாதன் கண்டறிந்தார்.

    உணவு உண்பது குறித்து மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகளில் முதன்மையானது, எப்போது உண்ண வேண்டும்? எப்போது உண்ணக் கூடாது? என்பதுதன்.

    இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் என்பது போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்று சொல்கிறார்.
    சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
    சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.

    ‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.



    தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர்.

    அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம். உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும்.

    பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். 
    ×