என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வைகுண்ட சாமியின் அவதார தினமான 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து அவதார தின விழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது.
    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்றாகும். அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினமான மாசி 20-ந் தேதியை அவதார தின விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் 190-வது அவதார தின ஊர்வலம் வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி 3-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இதற்கு ஜனா. வைகுந்த் தலைமை தாங்குகிறார். இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதே போல் திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து காலை 9 மணிக்கு மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இதை பால.லோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பேரணிக்கு பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார். இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை அடைகிறது.

    இதைப்போல பல ஊர்களில் உள்ள அய்யாவழி நிழல் தாங்கலில் இருந்து அய்யா வழி மக்களும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து அங்கு இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். இதில் அய்யாவழியை சேர்ந்தவர்கள் பலர் பேசுகின்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    முன்னதாக மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டுசென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார்.

    வைகுண்ட சாமியின் அவதார தினமான 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து அவதார தின விழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது. இதற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். ஜனா.யுகேந்த் முன்னிலை வகிக்கிறார். ஊர்வலம் நாகர்கோவில் கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது.

    ஊர்வலம் வரும் வழியில் பல மதத்தை சேர்ந்தவர்களும் மற்றும் அய்யாவழி பக்தர்களும் வரவேற்பு கொடுக்கின்றனர். அன்று இரவு சாமிதோப்பு தலைமைப்பதியில் வாகன பவனியும், அன்னதானமும், அய்யாவழி மாநாடும் நடைபெறுகிறது. அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினமான மார்ச் 4-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சுட்டெரிக்கும் வெயிலால், தஞ்சை பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கோவில் வளாகத்தில் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் இந்த கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகன், கருவூரார், நடராஜர், மகா நந்தியெம்பெருமான் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

    கோடை காலத்தில் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் ராஜராஜன் கோபுரத்தின் அருகே இருந்து பெருவுடையார் சன்னதிவரை தரைவிரிப்புகள் விரிக்கப்படும். அந்த தரை விரிப்புகள் சூடாகாமல் இருப்பதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அதன்மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும்.

    தஞ்சையில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் பெரியகோவிலுக்கு உள்ளே தரையில் வெறுங்காலில் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்குள் இன்னும் தரைவிரிப்புகள் விரிக்கப்படாததால் சூடு தாங்க முடியாமல் பக்தர்கள் நடந்து செல்வதற்கு பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகி்ன்றனர். இதனால் பக்தர்கள் சூடு தாங்காமல் கோவில் வளாகத்திற்குள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர். சிலர் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்துச்செல்லும்போது மிகவும் சிரமப்பட்டவாறே அழைத்து செல்கிறார்கள்.

    எனவே பக்தர்களின் சிரமத்தை போக்க கோவில் நிர்வாகம் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும். அந்த விரிப்புகளின் மீது காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

    பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
    வாரணாசியில் கட்டப்படும் தமிழக கலாசார கோவிலில் பிரதிஷ்டை செய்ய 9 அடி உயர சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டது.
    காசி வாரணாசியில் தமிழக கலாசாரத்தை மையப்படுத்தி, புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 9 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை நாமக்கல் பகுதியில் தயார் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரியில் ஏற்றி, நேற்று ராமேசுவரத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ராமேசுவரம் கோவில் வாசல் பகுதியில் வைத்து பெரிய சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இந்த பூஜைகளை பாபா மகா மண்டல சுரேஷ்சந்திரா உபார்த்தயா, தமிழக விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் லீகல் ரைட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா செயலாளர் சுரேஷ்குமார், டாக்டர் கிரிதரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட நிர்வாகி ஆத்ம கார்த்திக், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, விசுவ இந்து பரிஷத் நிர்வாகி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த சிலையை காசிக்கு கொண்டும் செல்லும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    காசி வாரணாசியில், தமிழக கலாசாரத்தை மையமாக வைத்து புதிதாக கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்காக இ்ந்த பெரிய சிவலிங்கம் செய்யப்பட்டுள்ளது

    இதுதவிர 4 அடிஉயரத்தில் நந்தி சிலை மற்றும் 4 அடி உயரத்தில் 12 சிறிய சிவலிங்க சிலைகளும் செய்யப்பட்டு லாரியில் ஏற்றி ராமேசுவரம் கொண்டு வந்தோம். சிவலிங்க சிலைகள் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களுக்கும் கொண்டு சென்று பூஜை செய்யப்படுகின்றது. அதன்பின்னர் வாரணாசியில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்கான ஆன்மிக யாத்திரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியாக செல்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ள லாரியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஜலட்சுமி மந்தா என்ற ஆசிரியை ஓட்டிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சீரடி சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை சமீப காலமாக நிறைய பேர் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். இதோ அந்த காயத்ரி மந்திரம்....
    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்
    ஓம் ஷிரடி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய தீமஹி
    தந்தோ சாய் ப்ரசோதயாத்

    இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒரே தரிசன கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வரவும் அனுமதி அளிக்கப்பட்டது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்த பின்னர், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணமாக (வலம் வருதல்) வந்து வணங்குவர்.

    2-ம் பிரகாரத்தில் வலம் வர பக்தர்களிடம் இருந்து ரூ.250, ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இலவச தரிசனத்திற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மூலவரை தரிசனம் செய்தபின்னர் பக்தர்கள் 3-ம் பிரகாரம் வழியாக வெளியே வந்தனர். இதனால், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    இந்தநிலையில் 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வருவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இதற்கிடையே கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெங்கநாதர் சன்னதியில் நடைமுறையில் இருந்த விரைவு வழி கட்டணம் ரூ. 250 மற்றும் சிறப்பு வழி கட்டணம் ரூ.50 ஆகியவை ரத்து செய்யப்பட்டு ஒரே கட்டண தரிசனமாக ரூ.100 என மாற்றப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இதன்காரணமாக 2-ம் பிரகாரத்தில் விரைவு வழி தரிசனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து நேற்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    இந்த தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆடம்பரங்களை வெறுத்து அதற்காக செலவிடும் தொகையினை காணிக்கையாக ஆலயத்தில் படைப்பார்கள்.

    சென்னை, மார்ச். 2-

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கி உள்ளது. ஏசு கிறிஸ்து வனாந் திரத்தில் தனியாக இருந்து ஜெபித்து, பாடுகளை அனுபவித்து, மரணத்தை தழுவி, உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்த நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.

    இது கிறிஸ்தவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வில் வசந்த காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிறிஸ் தவர்கள் தினமும் வேதா கமத்தை படிப்பதும், விரதம் இருத்தல் போன்ற தங்களது விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்வார்கள்.

    அதன்படி இன்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் குருத் தோலை ஞாயிறு அன்று எடுத்து செல்லப்பட்ட குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி அதை நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி கத்தோலிக்க திருச்சபைகளில் நடைபெறுவது வழக்கம்.

    இதற்கான சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிலுவையின் அடையாளத்தை பாதிரி யார்கள், ஒவ்வொருவரின் நெற்றியிலும் இடுவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து தேவாலயங் களிலும் நடைபெற்றது.

    கத்தோலிக்க திருச்சபை களில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட் டனர். சி.எஸ்.ஐ. மற்றும் இதர கிறிஸ்தவ அமைப்புகளின் ஆலயங்களில் இன்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல எழும்பூர், அண்ணா நகர், அடையார், பெரம்பூர், பரங்கி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதைதொடர்ந்து ஒவ்வொரு வாரமும் 6 வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறும். அதை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படும். அன்றைய தினம் குருத்தோலைகளை பிடித்து கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக செல்வது வழக்கம்.

    தொடர்ந்து பரிசுத்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வாரம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பயபக்தியுடன் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். பெரிய வியாழன் மற்றும் புனிதவெள்ளி சிறப்பு தினங்களாக அனுசரிக்கப் படுகிறது.

    புனித வெள்ளி அன்று ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதை நினைவு கூர்ந்து மும்மணி தியான ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) பண்டிகை கொண்டாடப்படும்.

    இந்த தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆடம் பரங்களை வெறுத்து அதற்காக செலவிடும் தொகையினை காணிக்கை யாக ஆலயத்தில் படைப் பார்கள். அல்லது ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வார்கள்.

    முன்னோர்களின் இறந்த தினம் தெரியாதவர்கள் கூட அமாவாசை நாளில் ராமேசுவரம் வந்து தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
    புண்ணிய தலமான ராமேசுவரத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இங்குள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

    முன்னோர்களின் இறந்த தினம் தெரியாதவர்கள் கூட அமாவாசை நாளில் ராமேசுவரம் வந்து தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நமக்கு நன்மை தருவார்கள் என பலரும் நம்புகின்றனர். இதனால் மற்ற நாட்களை விட அமாவாசை நாட்களில் ராமசுவரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இன்று மாசி அமாவாசை நாள் என்பதால் ராமேசுவரத்தில் காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மீண்டும் அக்னிதீர்த்தக் கடலில் குளித்த மக்கள், அதன்பிறகு ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றனர்.

    அங்குள்ள தீர்த்தக் கிணறுகளில் நீராடிய பின்னர் பக்தர்கள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டுச் சென்றனர். இதன் காரணமாக இன்று ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பி்ன்னர் காலை 7 மணிக்கு கோபால விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இரவு 8 மணிக்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து 10 மணிக்கு பூசாரிகள் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தர்ப்பை வைத்து கட்டி சிம்ம வாகன கொடி ஏற்றினர். இதையடுத்து சிறப்பு யாகம் செய்து காப்புக்கட்டினர். இரவு 10.30 மணிக்கு பம்பை, மேளதாளம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக அக்னிக்குளத்திற்கு சென்றனர். அங்கு பலவிதமான மலர்களை கொண்டு சக்தி கரகம் செய்து 9 நாட்கள் விரதமிருந்த துரை பூசாரி தலையில் வைத்துக்கட்டினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ஆடியபடி கோவிலை சென்றடைந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழுத்தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மாசிப்பெருவிழாவின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி தீமிதி திருவிழாவும், 7-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இது தவிர தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 3-வது நாளில் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 3-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கீழ்கரைபிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து மதியம் 2 மணிக்கு யானை மீது களப ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் உண்ணிகிருஷ்ணன் கோவில் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் சன்னதியை அடைந்தது. அங்கு அம்மனுக்கு களபம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு கதகளி, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனியும் நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் கம்பராமாயணம் தொடர் விளக்கவுரை, பக்தி பஜனை, பக்தி கான இசை, ஆன்மிக உரை, பரத நாட்டியம் மற்றும் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றது.
    இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், தோஷங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.
    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

    அமாவாசையில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி வேண்டியது நிறைவேறும்.

    கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும்.

    ஆன்ம பிணிகளாக பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

    ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.

    பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், தோஷங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.
    கொரோனா பரவல் குறைந்து விட்டதால் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று திருப்பதியில் டைம்ஸ்லாட் டோக்கன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஏழுமலையானுக்கு தனிமையில் பூஜைகள் நடந்தன. பிறகு கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் காரணமாக பின்னர் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று திருப்பதியில் டைம்ஸ்லாட் டோக்கன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களால் திருமலையில்கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கடந்த 24-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 630 பேர் தரிசித்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.20.56 கோடி கிடைத்துள்ளது.
    ×