என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. கோவிலில் இரவு முழுவதும் நடந்த கலை நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு முதல் கோவில் திறக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் இன்று காலை வரை நடந்தது.
இதற்காக பக்தர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள் பொடி, நெய், எண்ணெய் என அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை நேற்று மாலை வரை கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கினர். தொடர்ந்து இரவு 10 மணி முதல் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி 4 கால அபிஷேக பூஜைகள் நடந்தது.
விழாவில் சுந்தரேசுவரர் சுவாமி 1008 சங்காபிஷேகமும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை பொருட்களுடன் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு நேற்று சாமிக்கு அர்ச்சனை செய்ய பொருட்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு புதுமையாக கோவிலில் அரசு உத்தரவுப்படி இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் மாலை 6 மணிக்கு ஆன்மிக சொல்லரங்கமும், இரவு 7 மணிக்கு சலங்கை நடனம், 8 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு நடனம், 10 மணிக்கு வீணை கச்சேரி, 11 மணிக்கு மேல் நடனம், பரதநாட்டியம், நள்ளிரவு 1 மணிக்கு தேவாரம், 2 மணியில் இருந்து 4 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இதேபோன்று மதுரையை சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இரவு முழுதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில், மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் சுவாமிக்கு 4 கால பூஜைகள் நடந்தன. 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதுதவிர நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் குலதெய்வ வழிபாடும் நடந்தது. வடக்குகோபுரம் முனியாண்டி, கிழக்கு பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் இரவு பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து பூஜை செய்தனர்.
நகரில் இரவு முழுவதும் பொதுமக்கள், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்ததால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள்.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.
இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் ‘சாம்பல் புதன்’ என அழைக்கப்படுகிறது. இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வருகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும்.
இதுபோல் சி.எஸ்.ஐ., ரட்சணிய சேனை, லுத்தரன் மிஷன் உள்ளிட்ட ஆலயங்களிலும் இன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற தவக்கால நாட்களில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு போன்றவை நடத்தப்படும்.
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.

தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சை பெரியகோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரி விழா சிவன் கோவில்களில் நேற்று கொண்டாடப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலிலும் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று இரவு 10 மணிக்கு முதல் காலபூஜை நடைபெற்றது. அப்போது பெருவுடையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவராத்திரியை யொட்டி நேற்று மாலை முதலே பெரிய கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கினர். நேரம் ஆக, ஆக கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் ஆங்காங்கே உள்ள புல்தரைகளிலும், திருச்சுற்று மண்டபங்களிலும் அமர்ந்தனர். மேலும் அம்மையப்பர் சித்தர் பீடம், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் தஞ்சையில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. இதனை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன் தொடங்கி வைத்தார். செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற நடன கலைஞர்களான சென்னை மீனாட்சி சித்தரஞ்சன், சித்ரா முரளிதரன், விஜயம் கார்த்திக், கோவை ஜெயந்தி ராமச்சந்திரன், பெங்களூரு அணில் ஐயர், காயத்ரி சந்திரசேகர், சுபர்ணா வெங்கடேஷ், அஞ்சனா குப்தா, ஐதராபாத் சுரேந்திரநாத், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், ரேவதி சீனிவாசராகவன், தஞ்சை. சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தென்னக பண்பாட்டு மையம், அரண்மனை தேவஸ்தானம், பிரகன்நாட்டியாஞ்சலி பவுண்டேசன் செய்திருந்தது.
மேலும் தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் பெரியகோவிலை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த விளக்குகள் நேற்று விடிய, விடிய எரியவிடப்பட்டன. இந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டு பக்தர்கள் தங்களை புகைப்படமும் எடுத்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்திப் பெற்ற வாயுலிங்கமாகத் திகழும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி முதன்மையான விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருகிறது. இதனால் மகாசிவராத்திரியின்போது ஸ்ரீகாளஹஸ்தி நகரம் விழாக்கோலத்துடன் காணப்படும்.
அதன்படி தற்போது ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகாசிவராத்திரி தினமான நேற்று அதிகாலை 2 மணிக்கு மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பவித்ர மந்திரங்களுடன் அர்ச்சகர்கள் கோவில் நடையை திறந்து வைத்தனர்.
பின்னர் கோபூஜை நடத்தப்பட்டு பவித்ர ஸ்நானம் செய்த பசு, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தது.
அதன் பின்னர் பக்தர்களை சர்வ தரிசனத்திற்கு அதிகாரிகள் அனுமதித்தனர். காலை 5 மணியில் இருந்து சுவாமி, அம்பாளுக்கு கோவில் அர்ச்சகர்கள் சாஸ்திர பூர்வமாக அபிஷேகங்களை நடத்தினர்.
ருத்ராபிஷேகம் உட்பட இளநீர், பச்சைக்கற்பூரம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சுவாமிக்கு வரிசையாக அபிஷேகம் செய்தனர். இந்த அபிஷேகங்களுடன் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானபிரசுனாம்பிகை தாயார் தன்னுடைய பக்தர்களுக்கு நித்திய அபிஷேகர் மூர்த்தியாக தரிசன பாக்கியத்தை ஏற்படுத்தினார்.
மகா சிவராத்திரி தினத்தையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் முழுவதும் சிவ நாம மந்திரங்கள் முழங்கியவாறு இருந்தது. நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
பக்தர்கள் வசதியைக் கருத்தில் கொண்டு கோவில் அதிகாரிகள் கூடுதல் சிறப்பு வரிசைகளை ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன டிக்கட் வாங்கியவர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக சாமி தரிசனத்துக்கு அனுமதித்தனர்.
வி.ஐ.பி.க்களுக்கு தனி நேரத்தை ஒதுக்கினர். இலவச தரிசன வரிசைகள், சிறப்பு தரிசன வரிசைகள் இரண்டும் ஒன்று சேராமல் வெவ்வேறு வழிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு ஏற்படுத்தினர்.
இந்த ஆண்டும் மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திராமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
தரிசனத்திற்கு பின்னர் பக்தர்கள் வெளியே வருவதற்காக ஸ்படிக லிங்கம் அருகில் சிறப்பு வழியை தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விடிய விடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே காலை பதினோரு மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தார். மூஷிக வாகனத்தில் விநாயகரும், வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கண்ணப்பர் தனித்தனி சப்பரங்களில் காட்சியளித்தனர்.
பக்தர்கள் வழிநெடுகிலும் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்துசாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் இரவு, நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி விமர்சையாக ஊர்வலம் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு தங்க ஆபரணங்களோடு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
வீதி உலாவின்போது மேளதாளங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்கியதோடு பஜனைகள், கோலாட்டங்களுடன் பொய்க்கால் குதிரை பல்வேறு பக்தர்கள் வேடமணிந்து நடனமாடியவாறு வந்தனர்.

ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ‘செஜார்த்தி ஆர்த்தி' பூஜையை இரவு 10 மணிக்கும், அதிகாலை ‘காகட் ஆர்த்தி' பூஜையை 4.30 மணியில் இருந்து 5.15 மணிக்கும் மாற்றி உள்ளது.
மும்பை :
மராட்டியத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது.
எனவே ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் பக்தர்கள் அதிகாலை, இரவு பூஜையில் கலந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.
இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ பானாயத் கூறுகையில், "இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டு இருந்த இரவு நேர ஊரடங்கு காரணமாக அந்த நேரத்தில் நடந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது இரவு, அதிகாலை பூஜைகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.
இதேபோல கோவில் நிர்வாகம் இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ‘செஜார்த்தி ஆர்த்தி' பூஜையை இரவு 10 மணிக்கும், அதிகாலை ‘காகட் ஆர்த்தி' பூஜையை 4.30 மணியில் இருந்து 5.15 மணிக்கும் மாற்றி உள்ளது.

வாழ்வில் சகல செல்வங்களும், சந்தோஷங்களும் பெறுவதற்கு இந்த திதி வழிபாட்டை மறக்காதீங்க. அந்த வகையில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
வாழ்வில் சகல செல்வங்களும், சந்தோஷங்களும் பெறுவதற்கு இந்த திதி வழிபாட்டை மறக்காதீங்க. நாம் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். திதிகளில் வணங்க வேண்டிய கணபதிகள் இவர்கள் தான்.
உங்க ராசிக்கு, இந்த திதி பார்த்து கணபதியை வணங்கினால் அப்புறம் வாழ்வில் எப்பவும் ஏற்றம் தான்!
அமாவாசை : நிருத கணபதி
பிரதமை : பால கணபதி
த்விதியை : தருண கணபதி
திருதியை : பக்தி கணபதி
சதுர்த்தி: வீர கணபதி
பஞ்சமி: சக்தி கணபதி
சஷ்டி : த்விஜ கணபதி
சப்தமி : சித்தி கணபதி
அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி
நவமி : விக்ன கணபதி
தசமி : க்ஷிப்ர கணபதி
ஏகாதசி : ஹேரம்ப கணபதி
துவாதசி : லசுட்மி கணபதி
திரையோதசி : மகா கணபதி
சதுர்த்தசி : விஜய கணபதி
பௌர்ணமி : நிருத்ய கணபதி

சிவராத்திரிக்கு சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். விழிக்கிறோம் என்ற பெயரால் சினிமா, டிவி பார்க்கக்கூடாது.
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்த மாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க் கும் போது உணர்வுகளைக் கட்டுப் படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும்.
மாலை 6.30, இரவு 9.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரம் சொல்லலாம்.
சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். விழிக்கிறோம் என்ற பெயரால் சினிமா, டிவி பார்க்கக்கூடாது.

மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். நான்கு ஜாமப் பூஜைக்கும் செய்யப்படும் நைவேத்தியங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயாசம் நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
1.சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பலவகைப் பொருளை தருகிறது.
2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன்,சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.
4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ....என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர்நன்மை பெறுவார்.
7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் சய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
10.சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
11.திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.
12.பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் சங்கர - நாராயண வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் பாண லிங்கம் இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் சய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.
13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.
15.சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.
16.திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.
17.கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
19.ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.
20.சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

மகாசிவராத்தியையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று இரவு அனைத்து சிவன் கோவில்களும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சாமி தரிசனத்துக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் சிவராத்திரி கொண்டாட்டங்களும் தடைபட்டு இருந்தன.
இந்தநிலையில் கொரோனா பரவல் முழுமையாக குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழக அரசே ஏற்பாடு செய்துள்ளது.
மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் இன்று களைகட்டி இருந்தன. சிவராத்திரியையொட்டி இன்று பகலிலும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று இரவு சிறப்பு பூஜைகள் மற்றும் சாமிதரிசனத்துக்கு விடிய, விடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல கோவில்களில் இன்று இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதில் சிறுவர், சிறுமிகள் வேடமிட்டு பங்கேற்கிறார்கள். மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் இன்று சிவராத்திரி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. 1-ம் கால அபிஷேகம் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. அதன் பிறகு 2-ம் கால அபிஷேகம் 12 மணிக்கும், 3-ம் கால அபிஷேகம் நள்ளிரவு 1 மணிக்கும், 4-ம் கால அபிஷேகம் நாளை அதிகாலை 4 மணிக்கும் நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், சென்னை மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
இதனால் இன்று இரவு அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு முதலில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன் பிறகு சகஸ்ர லிங்கம், நட்சத்திர லிங்கம், ஜம்பு லிங்கம், ஆகாசலிங்கம், அருணாசலேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நந்தவ னேஸ்வரர் சுவாமிகளுக்கு இரவு 7.30 மணியளவில் அபிஷேகம் நடைபெற உள்ளது.
இரவு 8.30 மணிக்கு திருவொற்றீஸ்வரர் சுவாமிக்கு 1-ம் கால அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு 2-ம் கால அபிஷேகமும், நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால அபிஷேகமும், நாளை அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால அபிஷேகமும் நடைபெறுகிறது.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
சிவராத்திரியை முன்னிட்டு மங்கள வாத்தியம் இசைக்கப்படுகிறது. பள்ளி மாணவ- மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, பக்தி பாடல்கள், திருமுறை பாராயணம் ஆகியவையும் பாடப்படுகிறது. இன்னிசை பக்தி பாடல்களும் திருவொற்றியூர் கோவிலில் இசைக்கப்பட உள்ளன.
புழல் விளாங்காடுபாக்கம் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் -திரிபுர சுந்தரி உடனுறை ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சமபந்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 3-ம் கால பூஜை மற்றும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்துள்ளனர்.
சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் இன்று இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை நடைபெறுகிறது. பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு 2-ம் கால பூஜையும், 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், நாளை அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் என்பதால் இன்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கும் 4 கால பூஜைகள் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது.
கோயம்பேடு குருங்காலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதிகாலை 5 மணிவரை பூஜைகள் நடைபெறுகின்றன.
வளசரவாக்கம் சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி பூஜைகளுடன் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
பாடி சிவன் கோவிலில் சிவராத்திரி பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. இந்த கோவிலிலும் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த கோவிலில் வழக்கமான நாட்களிலேயே கூட்டம் அதிகமாகக் காணப்படும். இன்று இரவு மகா சிவராத்திரியையொட்டி அளவுக்கதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், பாரி முனையில் உள்ள மல்லீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரி பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாதவரம் சிவன் கோவிலில் இன்று இரவு 10 மணிக்கு முதல் கால பூஜை நடைபெறுகிறது. இதன் பிறகு இரவு 12 மணிக்கும், நள்ளிரவு 2 மணிக்கும் அடுத்தடுத்து பூஜைகள் நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4 கால பூஜையும், அபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் இன்று இரவு அதற்கேற்ற வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று வேளச்சேரி தண்டீஸ்வரர் மற்றும் பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் ஆலயங்களிலும் மகாசிவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகாசிவராத்தியையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று இரவு அனைத்து சிவன் கோவில்களும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து சிவன் கோவில்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?

இன்று காலை காளஹஸ்தீஸ்வரர் இந்திர வாகனத்திலும், ஞான பிரசன்னாம்பிகை சப்பரத்திலும் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐம்பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்கும் காளஹஸ்தி கோவிலில் சிவன் சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
மகாசிவராத்திரி விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் இரவு நேரங்களில் வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
சிவராத்திரி விழாவின் 5-வது நாளான நேற்று அரசு சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. ஆந்திர மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி பட்டு வஸ்திரங்கள் உட்பட சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு வழங்கினார்.
இதையடுத்து காளஹஸ்தீஸ்வரர் அன்ன வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை கிளி வாகனத்திலும், விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத முருகர், சண்டிகேஸ்வரர், கண்ணப்பர் ஆகியோர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனர்.
இதையடுத்து இன்று காலை மகாசிவராத்திரியையொட்டி சாமிக்கு 8 கால அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை காளஹஸ்தீஸ்வரர் இந்திர வாகனத்திலும், ஞான பிரசன்னாம்பிகை சப்பரத்திலும் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கப்படுகிறது.
மேலும் ரெயில் மூலமாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் விரைவு தரிசனத்திலும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.