என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
பெருவுடையாருக்கு அபிஷேகம் நடந்ததையும், தீபாராதனை காண்பிக்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.
மகா சிவராத்திரி: பெரியகோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்
By
மாலை மலர்2 March 2022 2:58 AM GMT (Updated: 2 March 2022 2:58 AM GMT)

தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சை பெரியகோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரி விழா சிவன் கோவில்களில் நேற்று கொண்டாடப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலிலும் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று இரவு 10 மணிக்கு முதல் காலபூஜை நடைபெற்றது. அப்போது பெருவுடையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவராத்திரியை யொட்டி நேற்று மாலை முதலே பெரிய கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கினர். நேரம் ஆக, ஆக கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் ஆங்காங்கே உள்ள புல்தரைகளிலும், திருச்சுற்று மண்டபங்களிலும் அமர்ந்தனர். மேலும் அம்மையப்பர் சித்தர் பீடம், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் தஞ்சையில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. இதனை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன் தொடங்கி வைத்தார். செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற நடன கலைஞர்களான சென்னை மீனாட்சி சித்தரஞ்சன், சித்ரா முரளிதரன், விஜயம் கார்த்திக், கோவை ஜெயந்தி ராமச்சந்திரன், பெங்களூரு அணில் ஐயர், காயத்ரி சந்திரசேகர், சுபர்ணா வெங்கடேஷ், அஞ்சனா குப்தா, ஐதராபாத் சுரேந்திரநாத், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், ரேவதி சீனிவாசராகவன், தஞ்சை. சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தென்னக பண்பாட்டு மையம், அரண்மனை தேவஸ்தானம், பிரகன்நாட்டியாஞ்சலி பவுண்டேசன் செய்திருந்தது.
மேலும் தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. ரம்மியமான விளக்கு வெளிச்சத்தில் பெரியகோவிலை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த விளக்குகள் நேற்று விடிய, விடிய எரியவிடப்பட்டன. இந்த விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டு பக்தர்கள் தங்களை புகைப்படமும் எடுத்தனர்.

Next Story
×