என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;
காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8. சிவதண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9. அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.
இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

10 நாள் திருவிழாவில் (நாளை) மாசி அமாவாசையை முன்னிட்டு (மாசி திங்கள் மறைநிலா) காலை 9.10 மணிக்கு சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் காசிக்கு நிகராக கருதப்படுகிறது. வருகை தருகிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி வழிபடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக நாள்தோறும நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டப்படுவது வழக்கம்
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் காலை, மாலையில் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நிகழ்ச்சியின் 9-வது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்படிக பூஜையும், கால பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து ராமநாத சுவாமி பிரியா விடையுடனும் -பர்வதவர்த்தினி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கீழ ரத வீதியில் உள்ள அமைக்கப்பட்டிருந்த மரத்தேருக்கு வருகை தந்தனர்.
அங்கு கோயில் மூத்த குருக்களால் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி பிரியா விடையுடன் பெரிய தேரிலும், பர்வத வர்த்தினி அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவகோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு ரத வீதிகளல் உலா வந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் தேர் நிலையை வந்தடைந்தது. இன்று இரவு 9 மணிக்கு மேல் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
10 நாள் திருவிழாவில் (நாளை) மாசி அமாவாசையை முன்னிட்டு (மாசி திங்கள் மறைநிலா) காலை 9.10 மணிக்கு சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். பிற்பகல் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளுகிறார்கள். நாளை மறுநாள் (3-ந் தேதி விழாவில் இரவு 7 மணிக்கு பிச்சாடனர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

சம்பல் ஆற்றின் பள்ளத்தாக்கில், அடர்ந்த காடுகள் நிறைந்த இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த படேஷ்வர் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனாவில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும், குவாலியருக்கு வடக்கே 35 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, ‘படேஷ்வரா் கோவில்கள்.’ இந்த ஆலயம் அமைந்த பகுதி ஒரு பழமையான, ஆச்சரியம் மிகுந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். சம்பல் ஆற்றின் பள்ளத்தாக்கில், அடர்ந்த காடுகள் நிறைந்த இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த படேஷ்வர் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு சிவன், மகாவிஷ்ணு மற்றும் அம்பாள் ஆகியோருக்காக ஏற்படுத்தப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்தின் ஆரம்ப கால கட்டுமானப் பணிகள் கி.பி. 750-800-ம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கால சூழ்நிலைகளின் மாற்றத்தால் இவற்றில் பெரும் பகுதி இடிபாடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு முன்வரை இந்த இடத்தைப் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. 1882-ம் ஆண்டு, அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர், படேஷ்வருக்கு சென்ற பிறகுதான் இதுபற்றிய விவரம் பலருக்கும் தெரியவந்திருக்கிறது.
1924-ம் ஆண்டில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இந்த இடத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அதன்பிறகு இடிபாடுகள் சரிசெய்யப்பட்டு, 2005-ம் ஆண்டில்தான், படேஷ்வரர் திருத்தலம் மீண்டும் புத்துயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.
சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள்.
அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா?
சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு.
ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது. நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள் வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்).
அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும்.

மகாவிஷ்ணு சிவராத்திரியன்று விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.
‘சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.
திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சிவராத்திரியன்று விரதமிருந்தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
சிவராத்திரியன்று விரதமிருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.

சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
சிவபெருமானை வழிபடும் சிறப்பு மிக்க தினத்தில் ஒன்று, மகாசிவராத்திரி. இது மாசி மாத தேய்பிறை சதுர்த்தி அன்று கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். சிவராத்திரி தோன்றியதற்கான காரணமாக புராணங்கள் பல தகவல்களைச் சொல்கின்றன. அதைப் பார்ப்போம்.
* காக்கும் கடவுளான திருமாலுக்கும், படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு, தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உதித்தது. அப்போது ஈசன், நெருப்பு வடிவமாக ஓங்கி உயர்ந்து நின்று, தன்னுடைய அடியையும், முடியையும் முதலில் கண்டு வருபவர்களே பெரியவர் என்று கூறினார். திருமால் அடியையும், பிரம்மன் முடியையும் தேடிச் சென்றனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. முடிவில் அவர்களுக்கு, ஈசன் சிவலிங்க மேனியாக காட்சியளித்த நாளே, ‘சிவராத்திரி’ என்கிறார்கள்.
* தேவர்களும், அசுரர்களும் இணைந்து, அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அது உலக உயிர்களை அழிக்கும் முன்பாக, ஈசன் அந்த விஷத்தை அருந்தினார். தங்களைக் காத்து நின்ற ஈசனை சதுர்த்தி தினத்தன்று, இரவு முழுவதும் தேவர்கள் பூஜித்து வழிபட்டதே ‘சிவராத்திரி’ ஆகும்.
* ஒரு முறை பார்வதிதேவி, ஈசனின் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. இதையடுத்து பார்வதி, ஓர் இரவில் நான்கு காலங்களிலும் ஈசனை வழிபட்டாள். இதையடுத்து உலகம் ஒளிபெற்றது. பார்வதி பூஜித்ததை நினைவுகூரும் விதமாகவே, நான்கு கால பூஜையோடு, சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மார்ச் மாதம் 22-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
1-ம் தேதி செவ்வாய் கிழமை :
* மகா சிவராத்திரி
* கரிநாள்
* சிவ தலங்களில் சிவபெருமான் விருஷப சேவை
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
2-ம் தேதி புதன் கிழமை :
* அமாவாசை
* அமிர்தயோகம்
* துவாபரயுகாதி
* திருவைக்காவூர் திருத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - பூசம்
3-ம் தேதி வியாழக்கிழமை :
* சித்தயோகம்
* காளஹஸ்தி, திருவைக்காவூர், ஸ்ரீசைலம் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்
* இஷ்டி காலம்
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்- ஆயில்யம்
4-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சந்திர தரிசனம்
* சுபமுகூர்த்தம்
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - மகம்
5-ம் தேதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
* ஸ்ரீரெங்கம் நம்பெருமாள், தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - பூசம்
6-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சதுர்த்தி விரதம்
* வாஸ்து நாள் (பகல் 10.32 மணிக்கு மேல் 11.08 மணிக்குள்)
* திருவைக்காவூர் சிவபெருமான் பவனி
* சந்திராஷ்டமம் - உத்திரம்
7-ம் தேதி திங்கள் கிழமை :
* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவாரம்பம்
* திருப்போரூர் முருகபெருமான் அபிஷேகம்
* ஸ்ரீசைலம் சிவபெருமான் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்

சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
தற்காலத்தில், சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் அவ்வப்பொழுது, தொடர் ஓட்டங்கள் நடைபெறுகின்றன. விளையாட்டு வீரர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ளும் இத்தகைய ஓட்டங்களால் முக்கிய வரலாற்று உண்மைகள் மக்களுக்குத் தெரிய வருகின்றன. அத்துடன், உடல்நலம், நல்லிணக்கம் ஆகியவை வளர்கின்றன.
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது. சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
அத்தலங்கள் விவரம் வருமாறு:-
1. திருமலை
2. திருக்குறிச்சி
3. திற்பரப்பு
4. திருநந்திக்கரை
5. பொன்மலை
6. பன்னிப்பாக்கம்
7. கல்குளம்
8. மேலங்கோடு
9. திருவிடைக்கோடு
10. திருவிதாங்கோடு
11. திருப்பன்றிக்கோடு
12. திருநட்டாலம்

அய்யா வைகுண்டர் அவதார தினமான வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தின விழா வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்படும்.
அய்யா வைகுண்டர் அவதார தினமான வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது. காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை நடைபெறுகிறது. பின்னர் அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ திருவிழாவின் 9-வது நாள் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 6.30 மணிக்கு ஆளும் பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 11 மணி அளவில் கோவில் தெப்பக்குளத்தின் எதிரில் உள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபத்தில் மண்டப திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு சக்கரத்தாழ்வாருக்கு கைரவிணி புஷ்கரணி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை கமிஷனர் பெ.க.கவெனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். குச்சியை ஊன்றியபடி பக்தர்கள் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர்.
கோவை பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைத்தட்டி சுனை, சித்தர் சமாதி, பீமன் களி உருண்டை மலை, பீமன் பள்ளத்தாக்கு, ஆண்டி சுனை ஆகியவை இந்த மலையில் உள்ளன. ஆறு மலைகளை கடந்து 7-வது மலையின் உச்சியில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சி அளிக்கிறார்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து நேற்று காலை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். குச்சியை ஊன்றியபடி பக்தர்கள் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலையேறிச் சென்றனர். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற கோஷமிட்டபடி நடந்து சென்றனர். இந்த பக்தி கோஷம் மலையின் நாலாபுறமும் எதிரொலித்தது.
மலையேறும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மலையேறுவதற்கு முன்னர் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை வனத்துறையினர் கண்காணித்தபடி இருந்தனர்.
தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு மலையடிவாரத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மகா சிவராத்திரி விழா வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்சார வசதிகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 108 ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்றார்.