search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அய்யா வைகுண்டர்
    X
    அய்யா வைகுண்டர்

    திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது

    அய்யா வைகுண்டர் அவதார தினமான வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது.
    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தின விழா வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்படும்.

    அய்யா வைகுண்டர் அவதார தினமான வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது. காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை நடைபெறுகிறது. பின்னர் அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×