என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறை கொடியுடன் யானை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி ஆண்டு பெருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நடந்தது.

    நேற்று மதியம் பிறை கொடி தாங்கிய யானை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் சிங்காரி மேளத்துடன் பள்ளிவாசல் முன்பு இருந்து தொடங்கி திட்டுவிளை சுற்றுவட்டார வீதிகள் வழியாக வந்தது. இறுதியில் பள்ளிவாசல் முன்பு ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேருரை நடந்தது. இதில் திட்டுவிளை முஸ்லிம் ஜமாத் முக்தவல்லி மைதீன் பிள்ளை தலைமை தாங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை திட்டுவிளை ஜமாத் முக்தவல்லி மைதீன் பிள்ளை மற்றும் தலைவர் முகமது அசன், பீர்முகமது, பக்கீர் பாவா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள், ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகம் இணைந்து செய்திருந்தனர்.
    மகாசிவராத்திரியை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் ரெயில்வே சாலையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று மயான சூறை நிகழ்ச்சி நடந்தது.

    இதை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி காவிரி குளக்கரையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கரகம் புறப்பாடு நடந்தது. அப்போது பால் காவடி, அலகு காவடி சுமந்த பக்தர்கள், பரமசிவன், பார்வதி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆலமூடு இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் மண்டைக்காடு பால்குளம் கண்ட சாஸ்தான் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வந்தனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 8 மணிக்கு பக்தி பஜனை, 10 மணிக்கு கம்பராமாயண விளக்கவுரை, 11.30 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் மண்டைக்காடு பால்குளம் கண்ட சாஸ்தான் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வந்தனர். மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு ஹைந்தவ (இந்து) சேவா சங்க பொருளாளர் சசிதரன் தலைமையில் சமய மாநாடு, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.

    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல். பகல் 11 மணிக்கு சமய மாநாடு, மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.
    12 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக மகாசிவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர், வீடுபேறு அடைவதோடு, அவர்களின் சந்ததியினர் 21 தலைமுறைக்கு பலன் பெறுவர்.
    மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டுகளிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம்.

    அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான காலகட்டம் ‘லிங்கோத்பவ காலம்’ எனப்படுகிறது. இந்த நேரத்தில் மும்மூர்த்திகளும், சிவலிங்கத்தில் அருள்வதாக ஐதீகம். எனவே அந்த வேளையில் சிவலிங்க வழிபாடு செய்தால், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

    மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியைப் பெறுவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். அது இயலாதவர்கள், 12 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக மகாசிவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர், வீடுபேறு அடைவதோடு, அவர்களின் சந்ததியினர் 21 தலைமுறைக்கு பலன் பெறுவர்.

    மகா சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.
    ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக மேலத்தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவு 8 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தனர்.

    விழாவின் 9-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி, அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8.40 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. மாசி மகாசிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவிலானது பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். மகா சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.
    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஹம்ச, கிளி, சேஷ, யாழி வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்ன (ஹம்ச) வாகனத்தில் எழுந்தருளினார். பறவைகளில் ெமன்மையானது. வெண்மையானது அன்னப்பறவை என்னும் ஹம்சம். அன்னப்பறவை வாகனத்தில் பவனி வரும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் அறிவில் தெளிவும், புத்தி கூர்மையும் மனதில் மகிழ்ச்சியும் உண்டாகும், மக்களின் தீய எண்ணங்கள், செயல்களை ஒழித்து நல்வழிபடுத்தவே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள் பாலித்தார்.

    ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார். கிளி சுகத்தின் அடையாளம். பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். மனிதர்களோடு பழகி தோழமை கொள்ளும். நாம் வணங்கும் தெய்வங்களை நமக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் அடையாளமாக கிளி வாகனத்தில் அம்பாளை அமர்த்தி உலா வரச் செய்கிறார்கள். கிளியின் மீது அமர்ந்து பவனி வரும் தாயாரை வணங்குவதால் மனதில் இன்பம் பொங்கும். இல்லற வாழ்வில் சுகம் கூடும். எனவே மக்களுக்கும், பக்தர்களுக்கும் சுகமான வாழ்வு அமைய ஞானப்பிரசுனாம்பிைக தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளினார். சிவன் கோவில்களில் லிங்க திருமேனியை வால், உடல் பகுதியால் சுற்றியவாறும், படமெடுத்து குடை பிடித்தவாறும் அலங்கரித்து ஆராதனை செய்பவன் சேஷன். சிவனின் கழுத்தில் சுற்றியபடி படமெடுத்து ஆடும் சேஷனை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    யாழி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளினார். யாளி கொடிய விலங்கு. உடல் சிங்கத்தைப்போன்றது. யாளி முன்காலை தூக்கி தாவி பாயும் நிலையிலேயே காணப்படும். கால்களில் கூரிய நகங்கள் உண்டு. சிங்கத்தின் முகமும், யானை முகமும் சேர்ந்த ஒரு கலவையாக இருக்கும். துதிக்கை நீண்டு காணப்படும்.

    யாழி அடர்ந்த காட்டில் வாழ்பவை. எனவே அசுரர்களை அடக்கி அரசனைபோல் நாடாளும் வல்லமையை மக்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கவே ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.
    மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
    (திருமந்திரம் பாடல் : 2716)

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தன் இணையடி நீழலே!
    த்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால்
    வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
    அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!

    உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

    கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
    நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
    சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
    எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!

    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

    அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
    அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே!

    உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
    உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

    அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
    அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு

    அணுவில் அணுவை அணுகலும் ஆமே

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
    மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
    கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
    தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே
    மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேசுவரத்தில் நாளை(1-ந்தேதி) விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி - அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 8-வது நாளான இன்று(திங்கட்கிழமை) காலை சாமி-அம்பாள் தங்க கேடயத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்தில் மேலத்தெரு மண்டக படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (1-ந்தேதி) காலை 8.40 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. அதுபோல் மாசி மகா சிவராத்திரி அன்று நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் ஒரு மணி மற்றும் இரவு 8 மணிக்கும் மூடப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் மகா சிவராத்திரி அபிஷேகம் மற்றும் தரிசனத்தையும் காண அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜைக்கும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான பூஜைகள், தொடர்ந்து மகா சிவராத்திரியையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை, 12.30 மணிக்கு 2-ம் கால பூஜை, அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜை, 1.30 மணிக்கு 4-ம் கால பூஜை நடக்கிறது.

    பூஜையின் போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைப்பு, தொடர்ந்து 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். சிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜைக்கும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளில் தேரோட்டத்துக்கு பதிலாக சர்வபூபால வாகனச் சேவை நடந்தது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.35 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை தேரோட்டத்துக்கு பதிலாக சர்வபூபால வாகனச் சேவை நடந்தது.

    அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குதிரை வாகனச் சேவை நடந்தது.

    வாகனச் சேவையில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் வியாக்ராபாதர் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் வியாக்ராபாதர் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகனச் சேவை நடந்தது. அதில் சோமஸ்கந்தமூர்த்தி, எழுந்தருளி அருள் பாலித்தார். விழாவில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சிவனுக்கு, ஆந்திர மாநிலம் விஜயவாடா துர்கையம்மன் கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்வதற்காக அக்கோவிலின் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமையில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் வைத்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×