என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shivalaya ottam"

    • 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
    • கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். காவி உடை அணிந்து கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர். பெரியவர்கள் மட்டு மின்றி குழந்தைகளும் ஏராளமானோர் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். இதை யடுத்து 12 சிவாலயங்களிலும் கூட்டம் அலைமோதியது.


    குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு வழிநெடு கிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 12 சிவாலயங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.

    அனைத்து சிவாலயங்க ளிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடைபெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பக்தர்கள் இரவில் பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைப்பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஓட்டி அனுப்பினார்கள்.

    சிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித் தது.

    இன்று காலையில் நிர்மால்ய தரிசனமும், 10 மணிக்கு நறுமண பொருட் களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்பா ளும் திருத்தேரில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதேபோல் வடசேரி தழுவிய மகாதேவர் கோவில், சோழராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. 

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி அளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள். 12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முஞ்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.

    முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்' ஆகியவை அந்த 12 ஆலயங்கள் ஆகும்.

    பாண்டவர்களின் மூத்தவரான தருமர், ராஜ குரு யாகம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்தார், மகாவிஷ்ணு. அதன்படி பீமனிடம், புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்ராட்சங்களை பீமனின் கையில் கொடுத்தார். “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு” என்று சொல்லியும் அனுப்பினார்.

    பீமன் புருஷா மிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகாசிவராத்திரி நன்னாள். அங்கே புருஷா மிருகம் சிவ தவத்தில் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அங்கு பீமன் சென்று, “கோபாலா.. கோவிந்தா...'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றி வந்தான். திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும், புருஷா மிருகம் மிகவும் கோபம் அடைந்து, பீமனை விரட்ட ஆரம்பித்தது. உடனே பீமன் அந்த இடத்தில் ஒரு ருத்ராட்சத்தைப் போட்டான். கீழே விழுந்த ருத்ராட்சம், ஒரு சிவலிங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் புருஷா மிருகம் சிவலிங்க பூஜை செய்யத் தொடங்கி விட்டது.

    சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி, பால் பெற முயன்றான். புருஷா மிருகம் மீண்டும் பீமனைப் பிடிக்க துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டான். அதுவும் சிவலிங்கமாக மாறியது. அதைப் பார்த்து மீண்டும் புருஷா மிருகம் சிவ பூஜை செய்யத் தொடங்கியது.

    இப்படியே 12 ருத்ராட்சங்களும் 12 சிவ தலங்களாக உருவாகி நின்றன. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடத்தில் ஈசனுடன் மகாவிஷ்ணு இணைந்து, சங்கர நாராயணனாக காட்சி தந்தனர். அதைக் கண்ட புருஷா மிருகம் அரியும், அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டது. கடைசி தலமான திருநட்டாலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும் ஈசன் காட்சி தந்தார்.

    அந்த மகிழ்ச்சியில் தருமரின் யாகத்திற்கு பால் கொடுக்க புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருநட்டாலத்தில் இன்னும் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்றில் ஈசன், அர்த்தநாரீஸ்வரராகவும், மற்றொரு ஆலயத்தில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கிறார். சிவாலய ஓட்டம் தொடர்பான திருக்கோவில்களின் தூண்கள், புருஷா மிருகம் மற்றும் பீமனின் சிற்பங்களை நாம் பார்க்க முடியும்.

    மேற்கண்ட புராண நிகழ்வின் அடிப்படையில்தான் ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய ஓட்டம் சென்று, வேண்டியதை பெறுகிறார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அடியவர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள்.

    பீமன் ஒரே சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஓடியதால், இந்த ஆலயங்கள் ‘சிவாலய ஓட்டத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரி மட்டுமின்றி, மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் சிவராத்திரி ஓட்டம் நடக்கிறது.
    சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள்.
    குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் காவி உடை அணிந்து “கோபாலா... கோவிந்தா...” என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

    பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

    அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான சிவாலய ஓட்டம் மார்ச் 3-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவடைகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள். விரதத்தின் போது, முதல் 5 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, காலை, மாலை நேரங்களில் குளித்து, சாமி கும்பிடுவார்கள். சிவாலய ஓட்டம் தொடங்கும் 3-ந் தேதி தீயில் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். 
    குமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்று மையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் காவி உடை அணிந்து “கோபாலா... கோவிந்தா...” என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

    பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

    அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

    இந்த ஆண்டு சிவாலய ஓட்டம் மார்ச் 3-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவடைகிறது.

    இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள். விரதத்தின் போது, முதல் 5 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, காலை, மாலை நேரங்களில் குளித்து, சாமி கும்பிடுவார்கள். சிவாலய ஓட்டம் தொடங்கும் 3-ந் தேதி தீயில் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 2 விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாண்டவர்களில் முதல்வரான தர்மபுத்திரனின் ராஜகுரு வியாச மகரிசி யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாச மகரிசிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்த மகா விஷ்ணு, பீமனிடம் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.

    அத்துடன் 12 உத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.

    அப்போது பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தார். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷமிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை அது கோபத்துடன் துரத்தி சென்று பிடித்துக்கொண்டது. உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்கபூஜையை தொடங்கி விடுகிறது.

    சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பீமனை பற்றிக்கொள்ள அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு விட்டு ஓடி விட்டார். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவதலங்களை உருவாக்கி விடுகிறது. 12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒரு கால் வியாச மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது.

    உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷமிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புருஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறைவேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷமிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு பீமன் ஓடியதை நினைவு கூறும் வகையில், இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார் கள் என்று கூறப்படுகிறது.
    ×