என் மலர்
வழிபாடு

வெள்ளியங்கிரி மலையேறி தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.
இன்று மகா சிவராத்திரி விழா: வெள்ளியங்கிரி மலையேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். குச்சியை ஊன்றியபடி பக்தர்கள் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர்.
கோவை பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைத்தட்டி சுனை, சித்தர் சமாதி, பீமன் களி உருண்டை மலை, பீமன் பள்ளத்தாக்கு, ஆண்டி சுனை ஆகியவை இந்த மலையில் உள்ளன. ஆறு மலைகளை கடந்து 7-வது மலையின் உச்சியில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சி அளிக்கிறார்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து நேற்று காலை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். குச்சியை ஊன்றியபடி பக்தர்கள் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலையேறிச் சென்றனர். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற கோஷமிட்டபடி நடந்து சென்றனர். இந்த பக்தி கோஷம் மலையின் நாலாபுறமும் எதிரொலித்தது.
மலையேறும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மலையேறுவதற்கு முன்னர் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை வனத்துறையினர் கண்காணித்தபடி இருந்தனர்.
தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு மலையடிவாரத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மகா சிவராத்திரி விழா வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்சார வசதிகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 108 ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்றார்.

Next Story