
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது. சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
அத்தலங்கள் விவரம் வருமாறு:-
1. திருமலை
2. திருக்குறிச்சி
3. திற்பரப்பு
4. திருநந்திக்கரை
5. பொன்மலை
6. பன்னிப்பாக்கம்
7. கல்குளம்
8. மேலங்கோடு
9. திருவிடைக்கோடு
10. திருவிதாங்கோடு
11. திருப்பன்றிக்கோடு
12. திருநட்டாலம்