
கீழ்கரைபிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து மதியம் 2 மணிக்கு யானை மீது களப ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் உண்ணிகிருஷ்ணன் கோவில் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் சன்னதியை அடைந்தது. அங்கு அம்மனுக்கு களபம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு கதகளி, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனியும் நடந்தது.
ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் கம்பராமாயணம் தொடர் விளக்கவுரை, பக்தி பஜனை, பக்தி கான இசை, ஆன்மிக உரை, பரத நாட்டியம் மற்றும் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றது.