search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்றியில் சாம்பல் பூசி சிறப்பு திருப்பலி
    X
    நெற்றியில் சாம்பல் பூசி சிறப்பு திருப்பலி

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது: நெற்றியில் சாம்பல் பூசி சிறப்பு திருப்பலி

    இந்த தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆடம்பரங்களை வெறுத்து அதற்காக செலவிடும் தொகையினை காணிக்கையாக ஆலயத்தில் படைப்பார்கள்.

    சென்னை, மார்ச். 2-

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கி உள்ளது. ஏசு கிறிஸ்து வனாந் திரத்தில் தனியாக இருந்து ஜெபித்து, பாடுகளை அனுபவித்து, மரணத்தை தழுவி, உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்த நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.

    இது கிறிஸ்தவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வில் வசந்த காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிறிஸ் தவர்கள் தினமும் வேதா கமத்தை படிப்பதும், விரதம் இருத்தல் போன்ற தங்களது விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்வார்கள்.

    அதன்படி இன்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் குருத் தோலை ஞாயிறு அன்று எடுத்து செல்லப்பட்ட குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி அதை நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி கத்தோலிக்க திருச்சபைகளில் நடைபெறுவது வழக்கம்.

    இதற்கான சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிலுவையின் அடையாளத்தை பாதிரி யார்கள், ஒவ்வொருவரின் நெற்றியிலும் இடுவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து தேவாலயங் களிலும் நடைபெற்றது.

    கத்தோலிக்க திருச்சபை களில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட் டனர். சி.எஸ்.ஐ. மற்றும் இதர கிறிஸ்தவ அமைப்புகளின் ஆலயங்களில் இன்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல எழும்பூர், அண்ணா நகர், அடையார், பெரம்பூர், பரங்கி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதைதொடர்ந்து ஒவ்வொரு வாரமும் 6 வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறும். அதை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படும். அன்றைய தினம் குருத்தோலைகளை பிடித்து கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக செல்வது வழக்கம்.

    தொடர்ந்து பரிசுத்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வாரம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பயபக்தியுடன் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். பெரிய வியாழன் மற்றும் புனிதவெள்ளி சிறப்பு தினங்களாக அனுசரிக்கப் படுகிறது.

    புனித வெள்ளி அன்று ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதை நினைவு கூர்ந்து மும்மணி தியான ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) பண்டிகை கொண்டாடப்படும்.

    இந்த தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆடம் பரங்களை வெறுத்து அதற்காக செலவிடும் தொகையினை காணிக்கை யாக ஆலயத்தில் படைப் பார்கள். அல்லது ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வார்கள்.

    Next Story
    ×