என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு 3-ம் பிரகாரத்தில் தங்க தேரோட்டம் நடந்தது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனாபரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் கூடும் வகையில் எந்த ஒரு திருவிழாக்களையும் நடத்தக்கூடாது என அரசால் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வருகிற 12-ந் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 9-வது நாளான நேற்று அம்பாள் தேரோட்டம் கோவில் ரதவீதியை சுற்றி நடத்த வேண்டும். ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக நேற்று ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    அதற்கு பதிலாக கோவிலின் 3-ம் பிரகாரத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பர்வதவர்த்தினி அம்பாள் மின்விளக்கு களுடன் கூடிய தங்க தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் இணை ஆணையர் பழனி குமார் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் 2 சிறிய தேர்களையும் முதலாவதாக தொடங்கிவைத்து பின்னர் தங்க தேரையும் தொடங்கிவைத்தார்.

    தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான், அம்பாள் 3 தேர்களும் 3-ம் பிரகாரத்தில் ஒரு முறை சுற்றி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் சீர்பாத பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் கோவிலின் சூப்பிரண்டு சுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக ராமதீர்த்த பகுதியில் உள்ள தபசு மண்டக படியில் வைத்து சாமி அம்பாள் மாலை மாற்றுதல் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்புகட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு தபசு மண்டகப்படியில் நடைபெற இருந்த சாமி- அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    அதற்கு பதிலாக கோவில் உள்ளேயே வைத்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-வது நாளான 12-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என திருக் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக சாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் இந்த முறை ரத்து செய்யப்படுவதாகவும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு' நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கடந்த 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நெல்லையப்பர் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் கோவில் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்திருந்தார்.

    இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த மேலும் 1 நாள், அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) தடை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு' நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பக்தர்கள் இன்றி விழா நிகழ்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
    சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் திருக்கோவில். இந்த அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும்.

    அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும்  நம்பிக்கையாக உள்ளது. 

    மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது.

    பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்.

    இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
    ஆடிப்பூர விழாவான நாளை பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும்.
    ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் திருமணங்கள் கைகூடும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

    இதனால் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    தாழக்குடிஅருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனை தரிசிக்க பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவில் முன்புள்ள தென்னந்தோப்புகளில் பெண்கள் கொழுக்கட்டை அவித்து வழிபட்டனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அவ்வையார் அம்மனை தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டனர்.

    அம்மன் பிறந்த ஆடி பூர விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடிப்பூர விழா நாளை (11-ந்தேதி) வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது.

    ஆடிப்பூர விழாவான நாளையும் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும். பக்தர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். நாளை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால் ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் பொங்கல் வழிபாடு, கூழ் படைத்து வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. கோவில்களில் கூட்டமும் இன்று அதிகமாக காணப்பட்டது.
    இன்றும், நாளையும் கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெறும்
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் அதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகமாக செல்வதால் கொரோனா பரவும் அபாயம் இருந்ததால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

    இதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து 4-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு 8-ந்தேதி வரை அதாவது நேற்று முன்தினம் வரை தரிசனத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இந்த தடை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இதனிடையே தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் தமிழில் அர்ச்சனை நடைபெறவில்லை. நேற்று கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று தமிழில் அர்ச்சனை தொடங்கியது. இதற்காக 6 சிவாச்சாரியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழில் அர்ச்சனை செய்தனர்.

    இந்தநிலையில் ஆடிப்பூரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. தீமிதி விழா நடைபெறாது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
    செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிமாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாட்களாகும்.

    திருமண தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க, ஆடி கடைசி செவ்வாய் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கல கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைக்கூடும்.

    ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மறக்காமல் அம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

    ராகு கால வேளையில் அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். மேலும் துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.

    ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில் அம்மனை தரிசனம் செய்வதால் தடைப்பட்ட மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.

    பெண்கள் ஆடி கடைசி செவ்வாய்கிழமையில் விரதம் இருநது அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகிறார்கள்.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால் பிற நாட்களில் செய்வதை விட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.

    ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பது நல்லது.
    நாளை (புதன்கிழமை) ஆடிப்பூரம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை அன்று கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது.

    இதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாளன்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை‌. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று கோவிலுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் கூட்டம் வந்திருந்தனர். நாளை (புதன்கிழமை) ஆடிப்பூரம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நாளை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    இந்த நிலையில் கோவில்களில் நாளை (புதன்கிழமை) ஆடி பூரத்தை முன்னிட்டு அதிகம் மக்கள் கூடுவார்கள் என்ற காரணத்தால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கலெக்டர் அனிஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழாவினை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் 11-ந் தேதி (நாளை) பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அன்றைய தினம் வழக்கமான பூஜைகள் மட்டும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

    இதர நாட்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல் அரசின் விதிகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால், நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
    மனிதர்களில் சிலர் சுயநலம் மிக்கவர்களாகவே உள்ளனர். தங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்தும் நல்லவைகளாக இருக்க வேண்டும், தனக்கு மட்டும் எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் பலர் பரந்த மனதுடன், ஓடோடிச்சென்று பிறருக்கு உதவி செய்பவர்களாகவும் உள்ளனர். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

    இவ்வாறு நற்கருமங்கள் செய்பவர்களுக்கு அந்த ஏக இறைவனிடம் நற்கூலி உண்டு. அதை மீறி பிறருக்கு தீங்கு செய்பவர்களுக்கு அதற்குரிய தண்டனையும் காத்திருக்கிறது. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    “எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்” (திருக்குர்ஆன் 4:173).

    இதற்கு உதாரணமாக ஒரு வரலாற்று நிகழ்வை காண்போம்:

    நோன்பு காலத்தில் ஒரு நாள் ஹசரத் அலி (ரலி), அவரது மனைவி பாத்திமா (ரலி), அவர்களது மகன்கள் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா (ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.

    அலி (ரலி) யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்கம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்கம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்.

    பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஒட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி (ரலி) யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, ‘பிறகு பணம் தாருங்கள்’ என்றார்.

    அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்திற்கு 100 திர்கம் பணம் தருவதாக கூறி வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது, வேறு ஒருவர் அலி (ரலி)யிடம் ‘இந்த ஒட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா’ என்றார். ஒட்டகத்திற்கு 160 திர்கம் விலை தருவதாகவும் கூறினார்.

    அலி (ரலி) யும் அந்த ஒட்டகத்தை 160 திர்கமிற்கு விற்றார். அதில் 100 திர்கமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்கம் பணத்துடன் வீடு திரும்பினார்.

    நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர்.

    அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள், “அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்கமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்” என்றார்கள்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனமும் மெய்ப்பிக்கின்றது:

    “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளர்களின் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக” (திருக்குர்ஆன் 2:286).

    எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால், நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும். இறையருள் பெற வேண்டுமானால் பிறருக்கு உதவிடுங்கள். இறைவனின் உதவி உங்களை தேடிவரும்.

    பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தில் கூட பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
    கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், அழகர்கோவில், சோலைமலை கோவில் உள்ளிட்ட 22 கோவில்களில் கடந்த 2-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

    குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தில் கூட பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதலே மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
    சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
    திருமூலர் இயற்றிய ‘திருமந்திரம்’ நூல், ஒரு ஒப்பற்ற மெய்யியல் நூலாகும். சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்புமிக்க நூலில் இருந்து ஒரு பாடலையும், அதன் பொருளையும் இங்கே பார்ப்போம்...

    பாடல்:-

    ஈதென்று அறிந்திலன் இத்தனைக் காலமும்

    ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

    ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்

    ஈதென்று அறியும் இயல்புடையோனே.

    பொருள்:-

    இந்த உடம்பு என்பது நாம் அல்ல, அது வேறானது என்ற உண்மை இத்தனைக் காலமும் விளங்காதிருந்து விளங்கியது. உயிரை இயக்குவன் யாரென்று அறியவும் பல யுகங்கள் ஆகின. அதனை அறிந்தபின் வேறு எதையும் அறியவில்லை. எல்லாம் சிவன் என்பதை அறிந்தேன்.
    ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    10-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சந்திர தரிசனம்
    * சித்தயோகம்
    * குரங்கனி முத்துமாலையம்மன் பவனி
    * சந்திராஷ்டமம் - அவிட்டம்

    11-ம் தேதி புதன் கிழமை :
     
    * ஆடிப்பூரம்
    * ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்
    * அமிர்தயோகம்
    * சந்திராஷ்டமம் - சதயம்
     
    12-ம் தேதி வியாழக்கிழமை :


    * சதுர்த்தி விரதம்
    * நாக சதுர்த்தி
    * குறுக்குத்துறை முருக பெருமான் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்- பூரட்டாதி

    13-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * கருட பஞ்சமி
    * இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி

    14-ம் தேதி சனிக்கிழமை :

    * சஷ்டி விரதம்
    * மதுரை சொக்க நாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி
    * சந்திராஷ்டமம் -ரேவதி

    15-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா
    * சந்திராஷ்டமம் - அசுபதி

    16-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சித்தயோகம்
    * குறுக்குத்துறை முருக பெருமான் பவனி
    * வளர்பிறை அஷ்டமி
    * சந்திராஷ்டமம் -  பரணி
    ×