என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிப்பூர திருவிழாவில் 7-ம் நாளான நேற்று ஆண்டாள் மடியில் வியூக சுந்தரராஜப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மூடப்பட்டு திருவிழாக்கள் உள்விழாவாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
     
    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிப்பூரம் திருவிழாவின் 3-ம் நாளான 4-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    ஆடிப்பூரத் திருவிழாவின் 6-ம் நாளான 7-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார்.

    ஆடிப்பூர திருவிழாவில் 7-ம் நாளான நேற்று ஆண்டாள் மடியில் வியூக சுந்தரராஜப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார். இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இதில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
    கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந்தேதி (புதன்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதனால் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந்தேதி (புதன்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
    வேறு எங்கும் காண முடியாத வகையில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது திருவிசநல்லூர் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

    வேறு எங்கும் காண முடியாத வகையில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அமைந்துள்ள சுவாமி பெயர் சிதம்பரேஸ்வரர். அம்மன் பெயர் சிவகாம சுந்தரி. இந்த ஆலயம் மேற்கு திசையை பார்த்து அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி கடைமுகம் அன்று பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை போன்ற விசேஷமான நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    மிளகாய் யாகம்

    மாதந்தோறும் அமாவாசை அன்று காலை 10 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மிளகாய் வற்றல் ஆகியவை போடப்பட்டு இந்த யாகம் நடைபெறும். இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

    திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற பிரத்யங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர் களுக்கு திருமணத்தடை நீங்குகிறது என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீபாவளி அமாவாசை அன்று இனிப்பு பலகாரம், 1008 லட்டு யாகமும் இங்கு நடைபெறுகிறது.

    இந்த கோவிலின் பல்வேறு சிறப்புகள் குறித்து பிரத்யங்கிரா தேவி கோவில் பரம்பரை அறங்காவலர் டி.கணேஷ் குமார் சிவாச்சாரியார் கூறியதாவது:-

    சிங்க முகங்கள் பூட்டிய ரதத்தில்...

    சக்தியின் உக்கிரமான வடிவம்தான் பிரத்யங்கிராதேவி. இந்த பிரத்யங்கிராதேவி 5 சிங்க முகங்கள் பூட்டிய ரதத்தில் மிக கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருகிறார். இங்கு ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஹோமம் நடக்கிறது. அந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

    பணம் படைத்தவர்களால், அதிக உடல் பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும், வதைபடுதலும், அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதிகாரத்தை, உடல் பலத்தை, பண பலத்தை எதிர்க்க சக்தி இல்லை.

    அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோவில்களில் மிக முக்கியமானது திருவிசநல்லூரில் வீற்றியிருக்கும் மகாமங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

    கைமேல் பலன் கிடைக்கும்


    வந்தாரை வாழவைக்கும் இந்த மகாமங்கல பிரத்யங்கிரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனமுருகி தேவியின் பெயரை சொல்லி அழைத்து, எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. அதை தயவு செய்து நீக்கிவிடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாக அவள் துவம்சம் செய்வாள். அதே நேரத்தில் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

    ஒவ்வொரு அமாவாசையன்றும், பவுர்ணமியன்றும் நடக்கும் யாகத்தின் உச்ச கட்டமாக வட மிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். மூட்டை, மூட்டையாய் மிளகாயை கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறு கமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக்கொண்டு விடுகிறாள். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். தீயசக்திகள் விலகி, செல்வ வளம் பெருகும். வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும். எதிரிகள் தொல்லை நீங்கி சகல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருமணத்தடை நீக்கும் ராகு கால பூஜை

    இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகாலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் ராகு கால பூஜையில் பங்கேற்பதால் திருமணத்தடை நீங்கும். புது வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உடன் கை கூடும், வேலையில் நிரந்தரம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் ஈடேறும், வெளிநாட்டு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் 11 வாரத்தில் ஈடேறும். அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களுக்கு அதிவிரைவில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும்.

    மங்கள பிரத்யங்கிராவாகிய இவ்வாலயத்தில் 11 செவ்வாய்க்கிழமை உங்கள் வேண்டுதல்கள் எதுவாயினும் அதனை நினைத்து 9 எலுமிச்சம்பழம் மாலை சாற்றி ஒரு எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றி 11 வாரம் பூஜையில் பங்கு பெற்று 12-வது வாரம் ஸ்ரீ எந்திரம் ஆலயத்தில் இருந்து பெற்று வீட்டில் வைத்து வழிபட நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு மிளகாய் யாகம்

    உலக நலன் வேண்டியும், கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு செல்ல வேண்டியும் அடுத்த மாதம்(ஆவணி)பவுர்ணமி அன்று ஆகஸ்டு 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடைபெறுகிறது நேரில் வந்து தரிசனம் செய்தால் ஒரே நேரத்தில் 108 சுமங்கலி பெண்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நலம் பெறலாம்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி நண்பகல் 12 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இவ்வாலய யாகத்தில் பங்கு பெற்றால் ஸ்ரீ பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிராதேவி தங்கள் வேண்டுதல்கள் எதுவாகினும் அதனை நிறைவேற்றி தாங்கள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உள்ளது.

    மிளகாய் அரைத்து சாற்றி வழிபாடு

    தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக இவ்வாலயத்தில் உள்ள அனுமன் நேரெதிர் சனி பகவானை பார்க்கிறார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபட கிரக தோஷங்கள் அறவே விலகும்.

    இவ்வாலயத்தில் உள்ள திரிசூலத்தில் பில்லி, சூனியம், உடல் வியாதி, தீராத மன நோய், குடும்ப கஷ்டம், போட்டிகள், பெரும்பகை இவற்றினை களைய பக்தர்கள் மிளகாய் அரைத்து தாங்களே சாற்றி பலன் பெறலாம்.
    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி தினமும் இரவில் சப்பரத்தில் பல்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளல் காட்சி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சீவக்காய், பஞ்சாமிர்தம் போன்ற பலவகை பொருட்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடல், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டிய நாடார் செய்துள்ளார்.

    பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி, வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் இன்றி அரசு வழிகாட்டுதல்படி இந்த நிகழ்வுகள் நடந்தது.
    ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு வைகை ஆற்றின் கரையில் தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் கல்பாலம், பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பதற்காக திரண்டனர். கல்பாலம் பகுதியில் பொதுமக்கள் ஓரளவுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஆனால் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இருந்த போதிலும் சிலர் போலீசாரின் அறிவுரையை கேட்காமல் தர்ப்பணம் கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி அமாவாசை விழா உள் பிரகரத்தில் நடந்தது. இதையொட்டி உள் பிரகாரத்திலேயே கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி, வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சாத்தப்பட்டது. பக்தர்கள் இன்றி அரசு வழிகாட்டுதல்படி இந்த நிகழ்வுகள் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர்.
    பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.
    தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகை அழிக்க வல்ல அந்த விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அது அவரது கழுத்திலேயே நின்றுபோனது. விஷத்தின் தாக்கத்தால் மயங்கி, பின்னர் விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்த நடனம் ஆடி, அருளினார். அதுவே ‘பிரதோஷம்’ எனப்படுகிறது. இதற்கு ‘தோஷம் இல்லாத நேரம்’ என்று பொருள் கொள்ளலாம். பிரதோஷ நாள்

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷம் வரும்.

    பிரதோஷ நேரம்

    சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும், சூரியன் மறைவுக்குப் பின் மூன்றே முக்கால் நாழிகையும் கொண்டது, பிரதோஷ நேரம். சுமார் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.

    சிவனை வணங்கும் முறை

    வழக்கமாக இடமிருந்து வலமாகச் சுற்றி வந்துதான் இறைவனை வணங்குவோம். ஆனால் பிரதோஷ வேளையில், வலமும், இடமும் மாறி மாறி வந்து ஈசனை வணங்க வேண்டும். இதற்கு ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ என்று பெயர். வில்வ இலையால் தொடுக்கப்பட்ட மாலையை ஈசனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    பிரதோஷ பூஜை

    இந்த கால வேளையில், நந்திக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படும். பின்னர் நந்தி வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதே பிரதோஷ பூஜையாகும். அப்படி வலம் வரும் நேரத்தில் வேதங்களை பாராயணம் செய்தும், நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை வணங்குவார்கள்.

    சனிப் பிரதோஷம்

    விஷம் அருந்தி தெளிந்த பின் ஈசன் ஆடிய நடனம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமை. எனவே சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு பெறுகிறது.

    நந்தியை வணங்கும் முறை

    சிவப்பு அரிசி, நெய் விளக்கு, அருகம்புல் மாலை ஆகியவற்றை நந்திக்கு படைக்க வேண்டும். பின்னர் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, ஒரு பிடி அருகம்புல்லை வைத்து வணங்க வேண்டும். இதனால் சனியால் ஏற்படும் இன்னல் விலகும்.

    மகா பிரதோஷம்

    சித்திரை மாதம் வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷ நாள், ‘மகா பிரதோஷம்’ எனப்படுகிறது.

    பிரதோஷ வகை

    சனிப்பிரதோஷம், சோமவார பிரதோஷம் தவிர்த்து, 20 வகையான பிரதோஷங்கள் உள்ளன.

    பிரதோஷ விரதம்

    இந்த விரதம் மேற்கொள்பவர்கள், பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, பிரதோஷ வேளையில் சிவாலய தரிசனத்தை முடித்த பிறகு உணவருந்த வேண்டும். தொடர்ந்து பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.
    கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாள் நிகழ்ச்சி யாக நேற்று ஆடி அமாவாசையையொட்டி காலை 9 மணி அளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பகல் 11 மணி அளவில் ராமபிரான், சீதை லட்சுமணர், சுக்ரீவர், ஆஞ்சநேயர் ஆகியோர் சிவதீர்த்தம் எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு ராமர் சிலையுடன் குருக்கள் ஒருவர் தீர்த்தத்தில் இறங்கி நீராடி தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ராமபிரானுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து ராமபிரான் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தங்க கருட வாகனத்தில் வைக்கப்பட்டு 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜையில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், பேஷ்கார் கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ஆடி அமாவாசையான நேற்று தீர்த்தவாரி பூஜை மற்றும் ராமர் புறப்பாடு நிகழ்ச்சியும் கோவிலின் 3-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் 9-வது நாளான இன்று நடைபெற இருந்த அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து விளம்பரபலகை வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இதனை செய்ய உள்ளார் என்பது குறித்த பெயர் மற்றும் செல்போன் எண் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    பழனி :

    தமிழகம் முழுவதும் இந்துசமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கியது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இதனை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது.

    ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து விளம்பரபலகை வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இதனை செய்ய உள்ளார் என்பது குறித்த பெயர் மற்றும் செல்போன் எண் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுத்தப்பட உள்ளது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தினசரி ஆயிரக்கணக்கான அளவில் வந்து செல்கின்றனர். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சற்று குறைந்துள்ளது.

    பழனியில் இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கம் போல் பழனி மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்கியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். நீண்ட நாட்களாக தமிழ்கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அது நடைமுறைக்கு வந்துள்ளது.

    இதே போல் பழனிகோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார், மாரியம்மன், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்களிலும்  தமிழில் அர்ச்சனை செய்யும் முறை இன்று முதல் தொடங்கியது.

    ஒவ்வொரு கோவிலிலும் இது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது.
    குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தார்.

    இந்நிலையில் வயது முதிர்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி வருடந்தோறும் ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து மடிப்பிச்சையாக பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி ஜீவசமாதி அடைந்தார்.

    அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பொது மக்கள் கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.

    ஆடி அமாவாசை தினமான நேற்று குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.

    தொடர்ந்து அவர்கள் கோவில் அருகில் உள்ள குளக்கரை படியில் சென்று பிரசாதத்தினை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.

    மேலும் வேண்டுதலை நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கையாக செலுத்தினர்.
    தஞ்சை மாவட்டம் திருவிசநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவிலில் நடக்கும் மிளகாய் யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

    மாதந்தோறும் அமாவாசை அன்று காலை 10 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மிளகாய் வற்றல் ஆகியவை போடப்பட்டு இந்த யாகம் நடைபெறும். இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

    திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற பிரத்யங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகாலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் ராகு கால பூஜையில் பங்கேற்பதால் திருமணத்தடை நீங்கும். புது வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உடன் கை கூடும், வேலையில் நிரந்தரம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் ஈடேறும், வெளிநாட்டு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் 11 வாரத்தில் ஈடேறும். அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களுக்கு அதிவிரைவில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும்.

    தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக இவ்வாலயத்தில் உள்ள அனுமன் நேரெதிர் சனி பகவானை பார்க்கிறார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபட கிரக தோஷங்கள் அறவே விலகும்.

    இவ்வாலயத்தில் உள்ள திரிசூலத்தில் பில்லி, சூனியம், உடல் வியாதி, தீராத மன நோய், குடும்ப கஷ்டம், போட்டிகள், பெரும்பகை இவற்றினை களைய பக்தர்கள் மிளகாய் அரைத்து தாங்களே சாற்றி பலன் பெறலாம்.
    கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
    கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு முக்கிய கோவில்களில் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தது.

    இந்நிலையில் 8 நாட்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின்படி கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மேலும் வருகின்ற 11-ந் தேதி ஆடி பூரம் தினத்தன்றும், வருகிற வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    வருகிற 12-ந் தேதி வரையிலும் தேவிபட்டினம் நவபாஷாண கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், கடலில் நீராடி பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம் கோவிலில் வருகிற 12-ந் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வருகிற 12-ந் தேதி வரையிலும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, சேதுக்கரை, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கூடும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், கடலில் நீராடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து தேவிபட்டினம் நவபாஷாண கோவிலுக்குள் பக்தர்கள் செல்லாமல் இருக்க தற்காலிகமாக அந்த கோவில் மூடப்பட்டு உள்ளது.

    வருகிற 12-ந் தேதி வரையிலும் தேவிபட்டினம் நவபாஷாண கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், கடலில் நீராடி பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேவிபட்டினம் நவபாஷாண கோவில் மூடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதிக்கும் வருகிற 12-ந் தேதி வரையிலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தனுஷ்கோடி வரும் சுற்றுலா வாகனங்களை புதுரோடு சாலை பகுதியிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    ×