என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தேவிபட்டினம் நவபாஷாண கோவில் பகுதி வெறிச்சோடிய காட்சி.
    X
    பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தேவிபட்டினம் நவபாஷாண கோவில் பகுதி வெறிச்சோடிய காட்சி.

    தேவிபட்டினம் நவபாஷாண கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

    வருகிற 12-ந் தேதி வரையிலும் தேவிபட்டினம் நவபாஷாண கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், கடலில் நீராடி பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம் கோவிலில் வருகிற 12-ந் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வருகிற 12-ந் தேதி வரையிலும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, சேதுக்கரை, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கூடும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், கடலில் நீராடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து தேவிபட்டினம் நவபாஷாண கோவிலுக்குள் பக்தர்கள் செல்லாமல் இருக்க தற்காலிகமாக அந்த கோவில் மூடப்பட்டு உள்ளது.

    வருகிற 12-ந் தேதி வரையிலும் தேவிபட்டினம் நவபாஷாண கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், கடலில் நீராடி பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேவிபட்டினம் நவபாஷாண கோவில் மூடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதிக்கும் வருகிற 12-ந் தேதி வரையிலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தனுஷ்கோடி வரும் சுற்றுலா வாகனங்களை புதுரோடு சாலை பகுதியிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    Next Story
    ×