என் மலர்

  நீங்கள் தேடியது "Marudhamalai murugan temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
  • பிப்ரவரி 4-ந்தேதி திருக்கல்யாணம், தேரோட்டம் நடக்கிறது.

  கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 29-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கோவில் முன்புறமுள்ள கொடி மரத்தில் கிருத்திகை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

  மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை தீபாரா தனை, மாலை 5 மணிக்கு அனந்த சயனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியவை நடை பெறுகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

  பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

  தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

  பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். தம்பதி சமேதராக சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வரு கிறார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

  5-ந் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12மணிக்கு ஆடுமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். இரவு 7.30 மணிக்கு தெப்பத் திருவிழா, 6-ந் தேதி 12 மணிக்கு மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா, மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7- ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 30-ந்தேதி சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

  கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

  பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேடர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சிஅளித்தார்.

  இதை அடுத்து காலை 7 மணி அளவில் விநாயகர் பூஜை, புண்யாகம், விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் முளைப்பாளிகை இடுதல் ஆகியவை நடைபெற்றது.

  இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் சுப்பிமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். இதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதைத் தொடர்ந்து அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் நடைபெறுகிறது.

  30-ந் தேதி காலை 6மணி முதல் 7.30 மணி வரை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவர் சண்முகார்ச்சனை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெறுகிறது. 31-ந் தேதிகாலை 9.30.மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பபல்லக்கில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  இதுபோல் கோவை கோவில்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று (புதன்கிழமை) காலை கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
  கோவையை அடுத்த மேற்கு மலை தொடர்ச்சி மலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இது முருகனின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 5- ந் தேதி தொடங்கியது.

  இதையொட்டி தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை, சத்ரு சம்ஹார வேள்வி, விநாயகர் பூஜை, சண்முக அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.

  இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் சுவாமி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னை பராசக்தியிடம் வேலை பெற்றுக் கொண்ட சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் கோவிலின் முன்புறம் எழுந்தருளினார். வீரபாகுதேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி னார். பின்னர் அவர்கள் கோவிலை சுற்றி வீதி உலா வந்தனர்.

  இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை வதம் செய்தார். இரண்டாவதாக பானுகோபனை வதம்செய்தார். 3-வதாக சிங்க முகாசுரனை வதம் செய்தார். 4-வதாக சூரபத்மனின் தலையை வேலால் துண்டித்து முருகப்பெருமான் வதம் செய்தார்.

  அப்போது அங்கு கூடியிருந்த சிவாச்சாரியார்களும், கோவில் ஊழியர்களும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் மகாதீபாராதனை நடந்தது. சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர்.

  இன்று (புதன்கிழமை) காலை கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் யானை வாகனத்தில் கோவிலை சுற்றி வீதிஉலா வருகிறார். இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  நேற்று மருதமலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை புகைப்படம் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் மலையடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர், மலைக்கு மேலே கோவிலுக்கு செல்ல நிருபர்களுக்கு அனுமதி அளித்தனர். இதே போல் கோவை காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக் கப்படவில்லை
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
  தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வார்கள். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெரு மானை தரிசனம் செய்து பக்தர்கள் விரதத்தை முடிப்பார்கள்.

  கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்களால் 7-வது படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் வேள்வி பூஜை நடைபெற்றது.

  சூரசம்ஹார விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள் ஜவ்வாது போன்ற 16 வகை யான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதைத்தொடர்ந்து சண்முகார்ச்சனை நடக்கிறது.

  மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மதியம் 3 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

  நாளை (புதன்கிழமை) காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறு கிறது.

  இதிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  இது போல் கோவையில் உள்ள முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார விழா இன்று நடைபெற உள்ளது. காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் அசுரர்களின் உருவபொம்மைக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானவர்கள் காப்பு கட்டினர்.
  கோவையை அடுத்த வடவள்ளியில் மருதமலை முருகன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும், கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோ-பூஜையும், அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

  பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

  இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.

  தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

  மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வருகிற 9-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.

  9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 3 மணிக்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. பின்னர் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

  மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், சக்தி வேலுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் முருகனை வணங்கி, தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 9-ந்தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.
  கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் 7-வது படைவீடு என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

  கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்ரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

  இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. இதையடுத்து 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

  பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு உச்சி கால பூஜை, 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  இதை தொடர்ந்து கருவறையை அடுத்து உள்ள மகாமண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு சுப்ரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங் களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

  கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொள்கின்றனர். மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

  மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடக்கிறது. 9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.

  மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை திருக்கோவில் உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  ×