என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    பண்ணாராயல் இயக்கத்தில் அபினவ் - பூர்ணா நடிப்பில் பேய் படமாக உருவாகி இருக்கும் ‘குந்தி’ படத்தின் முன்னோட்டம்.
    அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார் தயாரிக்க எஸ்எப்எப் டி.வி இணைந்து வழங்கும் படம் ‘குந்தி’.

    இதில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக அபினவ் வருகிறார். இவர்களுடன் ஆடுகளம் கிஷோர், அபிமன்யூ சிங், பேபி தன்வி, பேபி கிருத்திகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    கர்ணா ஒளிப்பதிவு செய்கிறார். யஜமன்யா இசை அமைக்கிறார். எஸ்.எப்.எப்.டி டி.வி. காளிராஜ், சந்திரபிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்கள். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதுகிறார். தயாரிப்பு - மே.கோ.உலகேசுகுமார். இயக்கம் - பண்ணாராயல்.

    தெலுங்கில் ‘ராட்சஷி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘குந்தி’ என்ற பெயரில் தயாராகிறது.



    தனது கணவர், இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. ஒரு பேய் அவரது குழந்தைகளை கொல்ல துடித்துக்கொண்டிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை பூர்ணா எப்படி காப்பாற்றினார் என்பது திரைக்கதை.

    முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். இது அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல். விரைவில் ‘குந்தி’ திரைக்கு வருகிறது” என்றார்.

    ஏ.ஆர்.கே இயக்கத்தில் சீனு - சுவிதா நடிப்பில் உருவாகி வரும் ‘தேவகோட்டை காதல்’ படத்தின் முன்னோட்டம்.
    ஹப்பாஸ் மூவிலைன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘தேவகோட்டை காதல்’.

    இந்த படத்தில் புதுமுகம் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பாவா லட்சுமணன் தீப்பெட்டி கணேசன், அனு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    சீனு கதை எழுதுகிறார். ஏ.ஆர்.கே., பி.பி.ஏ, ரஹ்மான் ஆகியோர் திரைக்கதை எழுதுகிறார்கள். ரஞ்சித்ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ஜோனபக்தகுமார் இசை அமைக்கிறார். இப்ரு எடிட்டிங் செய்கிறார். ஜீரோஸ் சண்டைபயிற்சி அளிக்கிறார். ராஜேஷ் நடனம் அமைக்கிறார்.



    எழுத்து இயக்கம் - ஏ.ஆர்.கே. இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

    “படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், கலவரங்களும் தான் கதை முடிச்சு.

    மதுரை ஆலப்புழை, பாலக்காடு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது” என்றார். 
    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் படத்தின் முன்னோட்டம். #Party
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    இசை - பிரேம்ஜி அமரன், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், கலை - என்.மகேந்திரன், வசனம் - எழிலரசு குணசேகரன், பாடலாசிரியர்கள் - கங்கை அமரன், கருணாகரன்.பி, மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - கீதா குரப்பா, நடனம் - கல்யாண், சண்டை - ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு - அம்மா கிரியேஷன்ஸ், எழுத்து, 52க்கம் - வெங்கட் பிரபு. 



    முழுக்க முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்டிரைக் முடிந்த பிறகு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Party
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `மெர்குரி' படத்தின் முன்னோட்டம். #Mercury
    ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'.

    பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரபுதேவா வில்லனாக நடித்திருக்கிறார். வசனங்களே இல்லாமல் பின்னணி இசையின் மூலம் உருவாகி இருக்கும் இந்த படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது.  

    இசை - சந்தோஷ் நாராயணன், ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன், ஒளிப்பதிவு - திரு, கலை - சத்தீஷ் குமார், ஆடை வடிவமைப்பாளர் - ப்ரவீன் ராஜா, எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், தயாரிப்பு - ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், பென் ஸ்டூடியோஸ், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், கதை, இயக்கம் - கார்த்திக் சுப்புராஜ்.



    சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படஅதிபர்கள் போராட்டம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. எனினும் வெளிநாடுகளில் குறித்த தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Mercury #PrabhuDeva
    ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி நாயகனாக நடித்துள்ள இதில் மகிமா நம்பியார், அஜ்மல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
    ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி நாயகனாக நடித்துள்ள இதில் மகிமா நம்பியார், அஜ்மல் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    இந்த படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். படம் பற்றி தயாரிப்பாளர் டில்லி பாபு கூறும் போது, “இந்த படத்தின் கதை, திரைக்கதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இது ஒரு திரில்லர் படம். இந்த படத்தில் அருள்நிதி நடிப்பு நிச்சயம் பேசப்படும்” என்றார்.

    இயக்குனர் மாறனிடம் படம் பற்றி கேட்ட போது, “பகலை விட இரவுக்குத்தான் ஆயிரம் கண்கள் இருக்கிறது. நடைபெறும் பல மர்மங்களுக்கும் இரவுக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இந்த படத்துக்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்த கதை நகர்கிறது. ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் சராசரி மனிதன் அதில் இருந்து எப்படி வெளியே வருகிறான் என்பது தான் ஒருவரி கதை. இதில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது” என்று கூறினார்.
    ஜே ஸ்டுடியோஸ் இண்டர்நே‌ஷனல் சார்பாக இசை அமைப்பாளர் எம்.ஜான்பீட்டர் கிரியேடிவ் கிளிக் சினிமாஸ் சார்பில் என்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘8’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    ஜே ஸ்டுடியோஸ் இண்டர்நே‌ஷனல் சார்பாக இசை அமைப்பாளர் எம்.ஜான்பீட்டர் கிரியேடிவ் கிளிக் சினிமாஸ் சார்பில் என்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘8’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    பரத் கதாநாயகனாக நடிக்கும் இதில் அவருடைய ஜோடியாக பூஜாஜவேரி நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ரோபோ சங்கர், நாக நீடு, தேவதர்ஷினி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    சேவியலோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். சந்திரகுமார் படத்தை தொகுக்கிறார். ஸ்ரீதர், நோபல் நடன பயிற்சி அளிக்க, பயர் கார்த்திக், பில்லா ராஜன் சண்டை பயிற்சி அளிக்கிறார்கள்.

    ஜான் பீட்டர் இசை அமைக்கும் இந்த படத்துக்கு விவேகா, யுகபாரதி பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய் கவிராஜ். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

    “மனிதர்கள் வாழும்போது 8 நிலைகள் உண்டு. அதேபோல் இறந்த பிறகும் 8 நிலைகள் இருக்கிறது. இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இந்த கருவை கதைக்களமாக கொண்டு ‘8’ உருவாகிறது. காதல், காமெடி கலந்து திகில் படமாக தயாராகும் இது, ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்” என்றார்.
    சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படத்தின் முன்னோட்டம்.
    ஹர்ஷினி மூவிஸ் சார்பில் எம்.ஹர்ஷினி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்'. 

    அரவிந்த் சாமி, அமலா பால் நாயகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

    இசை - அம்ரேஷ் கணேஷ், ஒளிப்பதிவு - விஜய் உலகநாதன், படத்தொகுப்பு - கே.ஆர்.கவுரிசங்கர், தயாரிப்பு - எம்.ஹர்ஷினி, தயாரிப்பு நிறுவனம் - ஹர்ஷினி மூவிஸ், எழுத்து, இயக்கம் - சித்திக்.



    இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் நடிகர் அரவிந்த்சாமி பேசும் போது, 
    " இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் சித்திக்கிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500-ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்." என்று கூறினார். 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீசாக இருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    உதயாவின் ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை போட்டு நடித்தார்.
    உதயாவின் ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை போட்டு நடித்தார். இது இந்த படத்தில் உதயாவின் 5-வது கெட்-அப். இதில் பிரபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ், எடிட்டர் டான்பாஸ்கோ உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்து குமாரின் பாடல் வரிகளுக்கு நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர் சத்யநாராயணன் எடிட்டிங் செய்கிறார். அறிமுக இயக்குனர் ஆஸிப்குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

    இந்த படத்தின் இறுதிகட்ட கிராபிக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு பிரமாண்டமாக நடந்தது. இதில் ராஜாவுடன் குதிரைகள், படை வீரர்கள், ஏராளமான துணை நடிகர்கள் நடித்தார்கள்.

    “படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்ஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். “இந்த படத்தில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள், நவீன ஒலி அமைப்பு ஆகியவை மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலட்சுமி சரத்குமார், ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நடிப்பில் உருவாகி வரும் ‘நீயா-2’ படத்தின் முன்னோட்டம்.
    ஜம்போ சினிமாஸ் சார் பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கும் படம் ‘நீயா-2’.

    கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா-2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. படத்தின் நாயகனாக ஜெய். இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - ஷபிர், ஒளிப்பதிவு - இராஜவேல் மோகன், படத்தொகுப்பு - சௌமி கிருஷ்ணன், கலை - ஐயப்பன், ஸ்டண்ட் - ஸ்டண்ட் ஜிஎன், 
    நடனம் - கலா, விஜி, பாடல்கள் - கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - ஆக்சல் மீடியா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.சுரேஷ். இவர் “எத்தன்” படத்தை இயக்கியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்....



    இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமையும். அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர்படமாக ரூ.10 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது” என்றார்.

    வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
    வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கார்த்திக் ராம் படத்தொகுப்பு செய்கிறார். மிராக்கிள் மைக்கேல்ராஜ் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

    வி.பி.விஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    படம் பற்றி கூறிய வி.பி.விஜி...

    “தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதனின் மகன் அர்ஜுனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் அகாடமியில் கராத்தே, குங்பூ, பாக்ஸிங், சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத அவர்களுக்கு விவேக்கும் தேவயானியும் உதவுகிறார்கள். இந்த சிறுவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி எப்படி சாதிக்கிறார்கள் என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த சிறுவர்கள் கடுமையான சண்டை காட்சிகளிலும் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள்” என்றார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் முன்னோட்டம்.
    நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

    இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

    இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ஸ்ரீதர், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, தயாரிப்பு - பா.ரஞ்சித், இயக்கம் - மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.

    ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம்.
    சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து ‘சார்லி சாப்ளின்-2’ படத்தை தயாரித்து வருகிறது.

    இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.



    “முழுக்க முழுக்க கமர்ஷியல்,காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபுதேவா - சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக்காட்சியும் படமானது. பிரமாண்டான அரங்குகள் அமைக்கப்பட்டு இரண்டு சண்டைக்காட்சிகளும் பட மாக்கப்பட்டன”.

    இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
    ×