என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா, சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
    காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா, சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

    சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சித்திரம் கொல்லுதடி’ கதையை இவர் இயக்கி இருக்கிறார். வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ள இவரது 2-வது படம் இது.

    இதில், சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு-மனோராஜா, இசை-ஜோஸ் பிராங்கிளின், படத்தொகுப்பு-விஜய் ஆண்ட்ரூஸ். இந்தப்படம் ஐந்து பேரின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. இதில் ஸ்ரீதர் வெங்கடேசனும் ஒருவர்.

    ‘என் பெயர் ஆனந்தன்’ படம் முழுநீள திரில்லராக உருவாகி உள்ளது. சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு தயாராகி இருக்கிறது. இந்தபடம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்.

    ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளனர்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் மைக்கேல் - நைனிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பதுங்கி பாயனும் தல’ படத்தின் முன்னோட்டம்.
    மீடியாபே‌ஷன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ஆமீனா ஹூசைன் தயாரிக்கும் படம் ‘பதுங்கி பாயனும் தல’.

    இதில், பர்மா மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக நைனிகா நடிக்கிறார். இவர்களுடன் வேலராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - கே.ஏ.ரோவின் பாஸ்கர், இசை - வல்லவன் சந்திரசேகர், படத்தொகுப்பு - டி.மனோஜ், ஸ்டண்ட் - ஸ்டன்னர்சாம், கலை - ரவீஷ், நடனம் - நோபல், பாபா பாஸ்கர், பேபி ஆன்டனி, கேசவ்.

    தயாரிப்பு - ஆமீனா ஹூசைன், இயக்கம் - எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி, இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணை இயக்குனராகவும், சீமானிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.



    “இது முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். இதில், வேலராமமூர்த்திக்கு முக்கிய வேடம். மனோகர், எம்.எஸ்.பாஸ்கர், காமெடி வில்லன்களாக நடிக்கிறார்கள். சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, மனோகர் காமெடியில் கலக்குகிறார்கள். குழந்தைகள் குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்க சிரிக்கும்படி இந்த படம் உருவாகி இருக்கிறது. தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது” என்றார்.

    “ இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பாடல்களை எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட டி.ராஜேந்தர், கயல் சந்திரன், ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    நடிகர் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் நாயகனாகவும், தனுஷா நாயகியாகவும் நடிக்கும் ‘கோ கோ மாக்கோ’ படத்தின் முன்னோட்டம்.
    ரூப் நிறுவனம் சார்பில் கிரி - அருண்காந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘கோகோ மாக்கோ’.

    இதில் ராம்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், சரத்குமாரின் அண்ணன் மகன். இவருடைய ஜோடியாக புதுமுகம் தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் சாம்ஸ், ஓய்.ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ், பாண்டு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சுகுமாரன் சுந்தர், எடிட்டிங்,விஎப் எக்ஸ் - வினோத் ஸ்ரீதர், தயாரிப்பு - கிரி, அருண்காந்த், இசை, ஒலி அமைப்பு, கலர் கலவை, இயக்கம் - அருண்காந்த்.



    “நான் ஏற்கனவே ‘இந்த நிலைமாறும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறேன். அது விரைவில் வெளியாகிறது. இது 2-வது படம். அந்த படத்தில் நாயகனாக நடித்த ராம்குமார் இதிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    ஜீப் பயணத்தின் போது ஏற்படும் காதலை திரில்லருடன், விளையாட்டுத் தனம் கலந்து வித்தியாசமான கோணத்தில் கொடுக்க இருக்கிறோம். இது தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத கதையம்சம் கொண்ட படம். முழுவதும் கடற்கரை பகுதியில் படமாகிறது.

    குறைந்த பட்ஜெட்டில் ஸ்டைலிஷ் ஆக எடுக்கப்பட்ட பிரமாண்ட படமாக தெரியும். இதற்கான புதிய விதிமுறையை பயன்படுத்துவோம். ‘கோ கோ மாக் கோ’ என்பது ஒரு இசை ஆல்பத்தின் பெயர். இந்த படத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் கோவை இளைஞர்கள். காதலர் தினத்தில் பட பூஜை நடந்தது. மார்ச்சில் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது”.

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    முருகலிங்கம் இயக்கத்தில் டி.வி. புகழ் ஜெகன் போலீசாக நடிக்கும் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.
    முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜாமணி தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’.

    இந்த படத்தில் கதாநாயகனாக நகைச்சுவை நடிகர் ஜெகன் நடிக்கிறார். அவருடைய ஜோடியாக மோனிகா நடிக் கிறார். இவர்களுடன் கவிஞர் பிறைசூடன், சேரன்ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். லட்சுமி என்ற பசுமாடு கதைக்கு முக்கியத் துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறது. 

    ஒளிப்பதிவு - ஆர்.சிவராஜ், இசை - கே.ஆர்.கவின் சிவா, எடிட்டிங் - துரைராஜ், நடனம் - ராதிகா, கலை - ராகவாகுமார், பாடல்கள் - பிறைசூடன், காரைக்குடி நாராயணன், கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன், தயாரிப்பு - ராஜா மணி தியாகராஜன், இயக்கம் - முருகலிங்கம்.



    “ கதைப்படி கந்து வட்டி கொடுப்பவர் மகளை ஒரு பத்திரிகையாளர் காதலிக் கிறார். இதையறிந்த கந்து வட்டிக்காரர் தனது அடியாட்களை அனுப்பி மகளின் காதலனை கொலை செய்ய முயற்சிக்கிறார். காதல் ஜோடி தப்பி ஓடி போலீஸ் ஸ்டே‌ஷனில் தஞ்சமடைகிறது. பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் ஜெகன், ஏட்டு ரவி ஆகியோர் காதல் ஜோடிக்கு பதிவு திருமணம் செய்து போலீஸ் ஸ்டே‌ஷன் லாக்கப்பிலேயே முதலிரவை கொண்டாட வைக்கிறார்கள். போலீஸ் நிலையத்துக்கே விடுமுறை விடுகிறார்கள். இது போல் பலவிதமான நகைச்சுவை காட்சிகள் கொண்ட படம் இது” என்றார்.

    யுரேகா இயக்கத்தில் ஜெய்வந்த் - ஐரா நடிப்பில் தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை கேட்கும் ‘காட்டுபய சார் இந்த காளி’ படத்தின் முன்னோட்டம்.
    ஒயிட் ஹவுஸ் சினிமாஸ் யுரேகா சினிமா ஸ்கூலுடன் இணைந்து வழங்கும் படம் ‘காட்டுபய சார் இந்த காளி’.

    இதில், ஜெய்வந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐரா நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், முத்தையா கண்ணதாசன், எமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - விஜய் சங்கர், ஒளிப்பதிவு - மணி பெருமாள், படத்தொகுப்பு - வில்சி, கலை - மோகன மகேந்திரன், சண்டைப்பயிற்சி - பிரபு சந்திரசேகர், நடனம் - பூபதி, பாடல்கள் - பிறை சூடன், யுகபாரதி, யுரேகா, தயாரிப்பு - வி.ஜி. ஜெய்வந்த், இயக்கம் - யுரேகா.



    படம் பற்றி அவரிடம் கேட்ட போது....

    “ எனது 4-வது படமான இது ஒரு சோஷியல் திரில்லர் கதை. வடமாநில பொருளாதார கொள்கையால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமுதாய ரீதியாக கந்து வட்டி, கார்ப்பரேட் வட்டி என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தமிழர்களுக்கு தன்மானம் பாதிக்கப்படுகிறது. அது எப்படி என்பது பற்றி இந்த படம் பேசுகிறது. இதில், நாயகன் போலீஸ் அதிகாரி. ரவுடி போலீஸ் போன்ற பாத்திரம். முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்பட்ட படம். 

    தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை கேட்கும் இந்த படத்தின் மூலம் சர்ச்சைகள் வரலாம். என்றாலும், இது மக்களுக்கு சமூக ரீதியில் நல்ல செய்தி சொல்லும் படம். நாயகன் ஜெய்வந்த், நாயகி ஐரா சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சீமான் சிறப்பு வேடத்தில் வருகிறார். ‘காட்டு பய சார் இந்த காளி’ மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம்” என்றார்.

    கேபிள் சங்கர் - அஜயன் பாலா உள்ளிட்ட 6 பேர் இயக்கத்தில் அமானுஷ்ய கதைகளின் அதிரடி தொகுப்பாக உருவாகி இருக்கும் ‘6 அத்தியாயம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆறு அமானுஷ்ய கதைகளை கொண்டு உருவான படம் ‘6 அத்தியாயம்’.

    “இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் தமன், விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், சஞ்சய், வினோத், பேபிசாதன்யா, இன்னும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சி.ஜே.ராஜ்குமார் (2 அத்தியாயங்கள்), பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா (தலா ஒரு அத்தியாயம்).

    இசை - தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் பிராங்க்ளின், சதீஷ் குமார்.



    எழுத்தாளரும், இயக்குனருமான கேபிள் சங்கர் ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். இன்னொரு அத்தியாயத்தை எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.

    தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட பிரபலம் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் 4 அத்தியாயங்களை இயக்கியுள்ளனர். “சினிமா வரலாற்றில் முதல் முறையாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘6 அத்தியாயம்’. ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் படத்தில் இறுதியாக வரும் கிளைமாக்சில் தனித்தனியாக சொல்லப்படுகிறது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார்.
    கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’.

    இதில், விமல் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராகிறது.

    ஒளிப்பதிவு-எஸ்.செல்வகுமார், இசை- விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு- ராஜா முகமது, பாடல்கள்- யுகபாரதி, நடனம்-கலா, விஜி. தயாரிப்பு- பி.‌ஷமீம் இப்ராகிம், இயக்கம்-எஸ்.முத்துக்குமரன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது....

    “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.

    இதில், விமலும், வரலட்சுமியும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதும் விமலும், வரலட்சுமியும் இடம் பெறும் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்றார்.
    ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    லேப்பிங் ஹார்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘காளிதாஸ்’.

    இதில், நாயகன் பரத் போலீஸ் அதிகாரியாக மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை அன்ஷீத்தல் அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரத்தில் சுரேஷ் மேனன், கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். 

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - சுரேஷ் பாலா, எடிட்டிங் - புவன் ஸ்ரீனிவாசன், பாடல்கள் - தாமரை, தயாரிப்பு - தினகரன்.எம்., சிவநேசன் எம்.எஸ்., இயக்கம் - ஸ்ரீ செந்தில். குறும்பட இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பல குறும்பட இயக்குனர்கள் திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். அதற்கு காரணமான அந்த நிகழ்ச்சியின் தலைமை நிர்வாகி சிவநேசன் சார் இந்த படத்தை தயாரிப்பது சிறப்பு. இது போலீஸ் திரில்லர் கதை. பரத் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக ‘காளிதாஸ்’ உருவாகி இருக்கிறது” என்றார்.

    இந்த படத்தின் தலைப்பு, முதல் போஸ்டர் ஆகியவற்றை நடிகர் கார்த்தியுடன் இயக்குனர் பாண்டிராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
    கிங்ரட்ணம் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க முழுக்க இலங்கை வாழ் தமிழ் கலைஞர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘கோமாளி கிங்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    40 ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க முழுக்க இலங்கை வாழ் தமிழ் கலைஞர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘கோமாளி கிங்ஸ்’.

    இந்த படம் பிக்சர்ஸ் திஸ் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இலங்கை வானொலியின் புகழ் பெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

    இதில் கிங்ரட்ணம், சத்யபிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜகணேசன், கமலஸ்ரீமோகன், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஜோஸுவா ரட்ணம் உள்பட பல இலங்கை தமிழ் கலைஞர்கள் நடித்துள்ளனர்.



    ஒளிப்பதிவு - மகிந்த அபேசிங்கா, இசை - ஸ்ரீராம்சச்சி, படத்தொகுப்பு - அஞ்சலோ ஜோன்ஸ், கலை - தஷுன் ரசிநாத் அஸ்லா, தயாரிப்பு - கணேஷ் தெய்வநாயகம், செல்வஸ் கந்தன், தாரணி ராஜசிங்கம். இயக்கம் - கிங்ரட்ணம், படம் பற்றி கூறிய அவர்,

    “ 40 வருடங்களுக்கு பிறகு முற்றிலும் இலங்கையில் வாழும் தமிழ் கலைஞர்களை கொண்டு உருவாகி இருக்கும் முழு தமிழ் படம். லண்டனில் இருந்து உறவினர் திருமணத்துக்காக தாய்நாடு திரும்பும் பத்மநாதன் குடும்பத்தினருக்கு இலங்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில வி‌ஷயங்கள் தான் திரைக்கதை. காதல், அதிரடி, திரில், சஸ்பென்ஸ் என்று ரசிக்கும் வகையில் இலங்கை தமிழ் உச்சரிப்புடன் இந்த படம் உருவாகி இருக்கிறது. இது இலங்கையில் திரையிடப்படுகிறது. தமிழ் நாட்டிலும் திரையிடப்பட உள்ளது.

    இசாக் இயக்கத்தில் ஆரி - ஆஷ்னா ஷவேரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் முன்னோட்டம்.
    டிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் மூலம், ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. 

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இதை இயக்கியுள்ளார். இதில், ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக ஆஸ்னா சவேரி நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் லதாவும், சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - நெளஷாத், இசை - ஸ்ரீ, படத்தொகுப்பு - தேவராஜ், கலை - ராமலிங்கம், ஸ்டண்ட் - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராபர்ட், பாம்பே பாஸ்கர், இயக்கம் - இசாக்.



    படம் பற்றி கூறிய அவர்,

    “ தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்துள்ளன. என்றாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும், திரைக்கதையும் கொண்ட படமாக இது இருக்கும். தியேட்டருக்குள் பேய் புகுந்து அட்டகாசம் செய்தால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம். புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் கவரும். இதற்கு தணிக்கை குழு 19 வெட்டுகளை கொடுத்து யு.ஏ. சான்றிதழ் வழங்கி உள்ளது” என்றார்.

    ‘நாகேஷ் திரையரங்கம்’ நாளை திரைக்கு வருகிறது.
    சாரதி இயக்கத்தில் ஷாம் - ஆத்மியா - ஸ்ரீதேவி குமார் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் `காவியன்' படத்தின் முன்னோட்டம்.
    `2எம் சினிமாஸ்' சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் படம் `காவியன்'.

    நடிகர் ஷாம் நாயகனாகவும், ஆத்மியா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் வில்லனாக நடித்துள்ளார்.

    ரோட் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாரதி இயக்கியிருக்கிறார். 

    ஒளிப்பதிவு - என்.எஸ்.ராஜேஷ் குமார், இசை - ஷ்யாம் மோகன், பாடல்கள் - மோகன்ராஜ், ஸ்டன்ட் - ஸ்டன்ட் சிவா, கலை - டி.என்.கபிலன், நடனம் - விஷ்ணுதேவா, படத்தொகுப்பு - அருண்தாமஸ், தயாரிப்பு - 2எம் சினிமாஸ், எழுத்து, இயக்கம் - சாரதி.



    படம் குறித்து தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ் பேசும் போது, 

    முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமையை காவியன் நிச்சயம் பெரும். சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. என்றார்.

    தெலுங்கில் இந்த படம் `வாடு ஒஸ்தாடு' என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
    ×