என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    காந்தி மணிவாசகம் இயக்கத்தில் தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் முன்னோட்டம்.
    நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்ட பொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களை தயாரித்துள்ள பட நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்.

    இதன் தயாரிப்பாளர் மணிவாசகம் இந்த படங்கள் அனைத்தையும் இயக்கினார். அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

    இதன் சார்பில், மணிவாசகத்தின் மகன் காந்திமணி வாசகம் தயாரித்து, இயக்கும் படம். ‘களவாணி மாப்பிள்ளை’.

    இதில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு - சரவணன் அபிமன்யு, இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - மாயாபாண்டி, எடிட்டிங் - பி.கே, நடனம் - தினேஷ், ஸ்டண்ட் - திலீப் சுப்ப ராயன், தயாரிப்பு - ராஜேஸ்வரி மணி வாசகம். கதை, திரைக்கதை, இயக்கம் காந்தி மணிவாசகம். படம் பற்றி அவரிடம் கேட்ட போது.... “ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக ‘களவாணி மாப்பிள்ளை’ தயாராகிறது” என்றார்.

    இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. படப்பிடிப்பு 15-ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்குகிறது.

    ராஜ நாக ஜோதி இயக்கத்தில் போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் ‘துலாம்’ படத்தின் முன்னோட்டம்.
    வி மூவிஸ் சார்பில் விஜய் விகாஷ் தயாரித்துள்ள படம் ‘துலாம்’.

    இதில் கதாநாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்கிறார். நாயகியாக டெபிலினா சாக்கி நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்ரே, சிவா நடிக்கிறார்கள். முக்கிய வில்லன் பாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் விகாஷ் நடிக்கிறார். 2 பாடல்களை எழுதியுள்ள இவர் ஒரு பாடலை பாடி, பாடகராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு - கொளஞ்சி குமார், எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், நடனம் - ‌ஷங்கர், ஸ்டண்ட் - ரமேஷ், கலை - ஜெயவர்மா, தயாரிப்பு - விஜய் விகாஷ், இயக்கம் - ராஜ நாக ஜோதி. படம் பற்றி கூறிய அவர்....



    “இது போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும் விவரிக்கும் படம்.

    இதில் கானா பாலா ஒரு பாடலை பாடி நடித்திருக்கிறார். நா.முத்துக்குமார் கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கிறது. படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘துலாம்’ ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.
    சக்திஸ் காட் இயக்கி, நடித்து கார் பந்தய காமெடி கலாட்டாவை மையமாக வைத்து கின்னஸ் சாதனைக்காக உருவாக்கியிருக்கும் ‘ஜெயிக்கப்போவது யாரு’ படத்தின் முன்னோட்டம்.
    டிட்டு புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பானு சித்ரா தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கபோவது யாரு’.

    இந்த படத்தில் சக்திஸ் காட் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக வந்தனா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.பாண்டியராஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். 

    இசை - சக்திஸ்காட், ஆண்டன் ஜெப்ரின் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்தி ஸ்காட். இயக்குனர் சக்தி ஸ்காட் படம் பற்றி கூறும் போது....



    “இது கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் பல கெட்-அப்களில் வந்து காமெடியில் அசத்தி இருக்கிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ் என சினிமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

    இதுவரை 15 துறைகளை ஒரே ஒரு மனிதனாக ஜாக்கிசான் ‘ஜோடியாக்’ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012-ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

    அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம் பெறும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

    ‘ஜெயிக்கப்போவது யாரு’ படத்தின் இசையை இசை அமைப்பாளர் டி.இமான் வெளியிட்டார். படம் விரை வில் திரைக்கு வருகிறது.  
    ரஜ்னி இயக்கத்தில் புதுமுகங்கள் விஜய் ஷங்கர், ஸ்வாதிஷ்தா நடிப்பில் முழுக்க முழுக்க தூத்துக்குடியில் படமான மதம் படத்தின் முன்னோட்டம்.
    காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் எம்.ஹரிஷ் குமார் தயாரித்துள்ள படம் மதம். 

    விஜய் ஷங்கர், ஸ்வாதிஷ்தா நாயகன், நாயகியாக அறிமுகமாகும் இந்த படத்தில் ஜான் செல்வாசிங், உதய் குமார், எல்ஷடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, எஸ்.எம்.பிபி. தினகரன், ஜி.எம்.பாட்ஷா, ஜோதி குமார், வித்யா, விபிதா, இசைசெல்வி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - நிரோ, படத்தொகுப்பு - சி.சாந்தகுமார், ஒளிப்பதிவு - செந்தில்குமார்.கே, கலை இயக்குநர் - பாலாஜி, இணை இயக்குநர் - கருப்பையா ராதா கிருஷ்ணன், துணை இயக்குநர்கள் - விஷ்ணு குமார்.ஆர், உதய் குமார், வெங்கடேஷ்.பி.கே, கதை, திரைக்கதை, இயக்கம் - ரஜ்னி.



    படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 

    மதம் என்பது யானையின் வெறியை குறிப்பது. பணத்திற்காக எதையும் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு குடும்பமும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இது முழுமுழுக்க தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிக்க விருப்பமுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த பலரில், குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம். இதில் 20 பேர் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக 80 வயதுமிக்க மூதாட்டி ஒருவர் படம் முழுக்க வரும்படியான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    தெரிந்த முகங்கள் என்றால் திரையில் பார்க்கும் போது அவர்களது கதாபாத்திரம் எந்தமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தும், அவர்களின் ரோல் என்ன என்பது தெரிந்துவிடும். புதுமுகங்கள் நடிப்பதால் அவர்களது கதாபாத்திரத்தை கணிக்க முடியாது என்பதால் அது எனக்கு பலமாகும். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. குறிப்பாக படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சி என எதுவும் இல்லாமல் யதார்த்தமாக உருவாக்கியிருக்கும் இந்த படத்தை மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.

    படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்றார். 



    மு.களஞ்சியம் இயக்கத்தில் கம்யூ.தலைவர் மகன் நாயகனாக அசத்தும் ‘முந்திரிகாடு’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிகாடு’.

    இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நாயகனாக புகழ் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவ சுந்தர், இசை - ஏ.கே.பிரியன். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளியின் 17 வயது மாணவர். எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.



    படம் பற்றி இயக் குனரிடம் கேட்டபோது, “ ‘முந்திரிக் காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிறோம்.

    இந்த படத்தின் முதல் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் மு.களஞ் சியம், நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் பிரியன் உள்ளிட்ட படக்குழு வினர் கலந்து கொண்டனர்.

    வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘எங்க காட்டுல மழை’. இதில் கதாநாயகனாக புதுமுகம் மித்துன் நடிக்கிறார். நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.
    வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘எங்க காட்டுல மழை’. இதில் கதாநாயகனாக புதுமுகம் மித்துன் நடிக்கிறார். நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, சாம்ஸ், அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மைலோ என்ற நாய் நடிக்கிறது.

    ஒளிப்பதிவு-சூர்யா ஏ.ஆர்,இசை-ஸ்ரீவிஜய், எடிட்டிங்- எல்.ஜஸ்டின் ராய், ஸ்டண்ட்-அன்பறிவ், நடனம்-பாபி ஆண்டனி, ராதிகா, பாடல்கள்- சினேகன், நா.முத்துக்குமார், தயாரிப்பு- சி.ராஜ், இயக்கம்-ஸ்ரீபாலாஜி.

    “தொடர்ந்து நல்ல வி‌ஷயங்கள் நடக்கும் போது ‘எங்க காட்டுல மழை’ என்று சொல்வது உண்டு. இது உற்சாகம் அளிக்கும் வார்த்தை. இந்த படத்தில் குடும்பக் கதையை நகைச்சுவை கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம்.

    ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்’ என்று சொல்வது உண்டு. அது போன்று விரும்பிய ஒன்று யார் கையில் கிடைத்தது என்பதே கதை. பணம் இல்லாமல் ஆடம்பரமாக வாழும் சென்னை வாசியாக நாயகன் மித்துன் நடித்திருக்கிறார். அது எப்படி? என்பது சுவையான அம்சம். அருள்தாஸ் அமைதியான வில்லனாக மாறுபட்ட வேடத்தில் வருகிறார். நாயகி சுருதிக்கு வித்தியாசமான பாத்திரம். இதில் வரும் மைலோ என்ற நாய் குழந்தைகளை குதூகலப்படுத்தும். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது” என்றார்.

    ‘எங்க காட்டுல மழை’ விரைவில் திரைக்கு வருகிறது.
    வி.இசட்.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி நடிப்பில் இன்றைய காதலை சொல்லும் ‘ஏமாலி’ படத்தின் முன்னோட்டம்.
    லதா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘ஏமாலி’.

    ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

    சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    வசனம் - ஜெயமோகன், ஒளிப்பதிவு - எம்.ரத்திஷ் கண்ணா, ஐ.பிரகாஷ், இசை - சாம் டி.ராஜ், பாடல்கள் - மோகன்ராஜ், வி.இசட் துரை, படத்தொகுப்பு - ஆர்.சுதர்சன், கலை - கே.ஆறுசாமி, தயாரிப்பு - எம்.லதா, இயக்கம் - வி.இசெட்.துரை.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக்அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன்.

    ‘ஏமாலி’ பட டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நாயகி அதுல்யா தொடர்பான காட்சிகள் பற்றி விமர்சனங்கள் வந்தன. கதைக்கு தேவையான காட்சிகள் தான் இதில் இடம் பெற்றிருக்கின்றன” என்றார்.

    ‘டீசர் வெளியான பிறகு ‘ஏமாலி’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் முன்னோட்டம்.
    '7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'

    விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நாயகர்களாகவும், காயத்ரி, நிகாரிகா கொனிதலா நாயகிகளாகவும் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், டேனியல் அனி போப், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஸ்ரீ சரவணன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், ஸ்டண்ட் - டான் அசோக், நடனம் - கல்யாண், தயாரிப்பு - ஆறுமுககுமார், கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து. இயக்கம் - ஆறுமுககுமார்.



    படம் பற்றி அவர் கூறிய இயக்குநர், 

    “இது விஜய்சேதுபதிக்கு பெயர் சொல்லும் வித்தியாசமான படம். அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில், விஜய்சேதுபதி ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இனத்தலைவராக நடித்திருக்கிறார். 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கி இருக்கிறார்.

    இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை நான் ரசித்தேன். இதில் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இன்னொரு நாயகனாக கவுதம் கார்த்திக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அனைவரும் ரசித்து மகிழும் படமாக உருவாகி இருக்கிறது”. என்றார். 

    படம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீசாகிறது. 

    தனா இயக்கத்தில் பாரதிராஜா - விஜய் யேசுதாஸ் கூட்டணியில் வெளியாக இருக்கும் ‘படைவீரன்’ படத்தின் முன்னோட்டம்.
    யவோன் நிறுவனம் வழங்க காவியா சினிமாஸ் வெளியிடும் படம் ‘படைவீரன்’.

    இதில், இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் யேசுதாஸ் நாயகனாகவும், அம்ரிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி அகில், ஜான் விஜய், கலையரசன், இயக்குனர்கள் மனோஜ்குமார், விஜய்பாலாஜி, கவிதா பாரதி உள்படபலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு - ராஜ வேல்மோகன், படத்தொகுப்பு - யுவன் ஸ்ரீனிவாசன், ஸ்டண்ட் - தளபதிராஜா, நடனம் - விஜயராணி, தயாரிப்பு - மதிவாணன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தனா. மணிரத்னம் உதவியாளரான இவர் இதில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது மதுரை மண் சார்ந்த இளைஞன் கதை. இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படத்தில் முதன்முதலாக நகைச்சுவையில் அவர் கலக்கி இருக்கிறார். தெரிந்த முகம் என்பதால் விஜய்யேசுதாசை நாயகன் ஆக்கினோம். கல்லூரி அகில், இயக்குனர் மனோஜ்குமார் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நாயகி அம்ரிதா பெங்களூரை சேர்ந்தவர். என்றாலும், நன்றாக தமிழ் பேசினார். தனுஷ் இந்த படத்தை பார்த்து விட்டு தான் நடித்திருக்க வேண்டிய படம் என்றார். அவரே விருப்பப்பட்டு ஒரு பாடலை பாடிக்கொடுத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும் தேனி பக்கம் உள்ள எங்கள் சொந்த கிராமத்தில் நடந்தது. ஊர்மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஊர் திருவிழா காட்சியை பிரமாண்டமாக படம் ஆக்கினோம். ‘படைவீரன்’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.

    ‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ் டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.
    ‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ் டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.

    இதில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் ஜி.சிவகுமார் நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு- எஸ்.சரவணன், இசை-சி.சத்யா, பாடல்கள்- யுகபாரதி, கபிலன், கலை-கதிர், நடனம்-கல்யாண், தினேஷ், ஸ்டண்ட்- மிராக்கிள்மைக்கேல், எடிட்டிங்-சசிகுமார். தயாரிப்பு-டி.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.எஸ்.சூர்யா.

    “‘பக்கா’ முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திரு விழாவை பார்த்திருப்போம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

    முழுவதும் வெளிப்புறங்களிலேயே படமாக்கப்பட்ட முதல் படம் இந்த பக்கா. கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படா குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை பார்க்க வைத்து, ஒரு கரகாட்ட பாடலை கம்போஸ் செய்தோம். அது பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக இருக்கும்.

    குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஒரு வித்தியாசமான ஆற்று திருவிழா காட்சியை தத்ரூபமாக படமாக்கினோம். ‘பக்கா’ விரைவில் வெளியாகிறது”.
    பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரி - உபாஷ்ணா ராய் நடிப்பில் உருவாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.பி.எம்.சினிமாஸ் நிறுவனம் ‘ஜித்தன் 2’ , ‘1 ஏஎம்’ படங்களை தயாரித்து வெளியிட்டது. அடுத்ததாக இந்த நிறுவனம் ஒரு குறுகிய கால தயாரிப்பாக ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

    இந்த படத்தில் லட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறுகிறது.

    ஒளிப்பதிவு - மனோகர், இசை - கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் - சொற்கோ, கலை - மனோ, நடனம் - எஸ்.எல்.பாலாஜி, ஸ்டண்ட் - ஆக்‌‌ஷன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம் - ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான ‘யா யா’ படத்தை இயக்கியவர். விரைவில் வெளிவர உள்ள ‘பாடம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பு, இயக்கம் - ராகுல்.



    படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது.

    “ இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சமூக வலைதளங்களினால் தவறான பாதைக்கு போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஒரே கட்டத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

    இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக ‘கருத்துக்களை பதிவு செய்’ இருக்கும்” என்றார்.
    ஜி.அசோக் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் பாகமதி படத்தின் முன்னோட்டம்.
    யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் தயாரித்துள்ள படம் பாகமதி. 

    நடிகை அனுஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் உன்னி முகுந்தன், ஆதி பினிஷெட்டி, ஜெயராம், ஆஷா சரத், தன்ராஜ் சுக்ராம், ஆதி, ஜெயராம், முரளி ஷர்மா. பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய், வித்யுலேகா ராமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - ஆர்.மதி, சுராஜ் நல்லுசாமி, இசை - தமன், கலை இயக்குநர் - ஆர்.ரவீந்தர், எடிட்டிங் - கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்,தயாரிப்பு - வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத். இணை இயக்குநர் - வேணு பள்ளி, பாடலாசிரியல் - சுசித்ரா கார்த்திக், விவேக், எழுத்து, திரைக்கதை, இயக்கம் - ஜி.அசோக்.



    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    ×