search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditi Menon"

    என் மீது நடிகை அதிதி மேனன் கூறும் புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகர் அபி சரவணன் கூறியிருக்கிறார். #AbiSaravanan #AditiMenon
    நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:-

    “நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். நான் வெளியூர் சென்றபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதிதி மேனனை என்னுடன் சேர்த்து வைக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

    திருமணம் நடக்கவில்லை என்றும், போலி பதிவு திருமண சான்றிதழ் வைத்து நான் மிரட்டுவதாகவும் அவர் கூறுவதில் உண்மை இல்லை. திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சமூக சேவைக்காக திரட்டிய பணத்தை வைத்து வீடு, கார்கள் வாங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.



    கடன் வாங்கித்தான் வீடு, கார்களை வாங்கி உள்ளேன். அதிதி மேனன் ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் கூறியுள்ளார். ஒரு டைரக்டர் மீதும் குற்றச்சாட்டு சொன்னார். அதிதி மேனனுடன் சமரசம் செய்து வைப்பதாக சிலர் காரில் அழைத்து சென்று வழக்கை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டினார்கள். அவரை எனது மனைவியாக ஏற்க இப்போதும் தயாராக இருக்கிறேன். புகாரை சட்டப்படி சந்திப்பேன்”

    இவ்வாறு அபிசரவணன் கூறினார்.
    திருமணம் செய்ததாக மிரட்டும் நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். #Aditimenon #AbiSaravanan
    கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

    இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இருவருக்கும் காதல் உண்டானது, அபி சரவணனின் செயல்பாடுகள் சரி இல்லாததால் அவரை விட்டு சில மாதங்களில் பிரிந்தேன்.



    தற்போது தன்னை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தன் மீது பொய் புகார்களை அபிசரவணன் பரப்பி வருகிறார். நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்து மிரட்டி வருகிறார்.

    அபி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்’ என்றார். 
    என் ரோல்மாடல் நயன்தாரா தான். அவரை போல உயர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று அதிதிமேனன் கூறினார்.
    பட்டதாரி படம் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் அதிதி மேனன். அடுத்து அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் சந்தனதேவன் படத்தில் நடிக்கிறார். அவர் அட்டகத்தி தினேசுடன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் வெளியாகி உள்ளது. அவர் அளித்த பேட்டி...

    உங்கள் சினிமா வருகை பற்றி?

    எதிர்பாராதவிதமாக தான் சினிமாவுக்குள் வந்தேன். பட்டதாரி படம் பண்ணும்போது எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அதிர்ஷ்டவசமாக எனது இரண்டாவது படமான சந்தனதேவன் அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் அமைந்தது. அதன் பிறகு ஒரு பெரிய படத்தில் கமிட் ஆனேன். ஆனால் அதன் படப்பிடிப்பு சரியான நேரத்தில் தொடங்காததால், அதில் இருந்து விலகி மலையாள படம் ஒன்றில் நடித்தேன்.

    களவாணி மாப்பிள்ளை எனக்கு நான்காவது படம். ஆனால் இரண்டாவதாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. எனக்கு எல்லா மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க பிடிக்கும். சந்தனதேவன் ரிலீஸ் ஆவதற்கு தாமதமாவதால், என்னுடைய முகத்தை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதற்கு ஒரு கமர்சியல் படம் தேவைப்பட்டது. அதனால் தான் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்தேன். அதற்காக கமர்சியல் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றில்லை. எல்லா படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் பரிசோதனை செய்ய தான் நான் விரும்புகிறேன்.

    குடும்பப்பாங்கான வேடம் மட்டும்தானா?

    களவாணி மாப்பிள்ளை படத்தில் நான் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதேசமயம் கவர்ச்சி வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. அர்ஜூன் ரெட்டி போன்ற படங்களில் குடும்பப்பாங்காக தான் நடிப்பேன் என சொல்ல முடியுமா. அது போன்ற படங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.



    உங்கள் ரோல் மாடல் யார்?

    நயன்தாரா தான். அவரை போல உயர வேண்டும் என்பது தான் எனது ஆசை. அந்த இடத்துக்கு வந்துவிட்டால் நமக்கு தேவையான கதாபாத்திரத்தை நாமே தேர்வு செய்யலாம். ஆனால் இப்போதைக்கு நான் வளரும் நடிகை. எனவே அவர்கள் தான் நம்மை தேர்வு செய்ய வேண்டும்.

    சமூக வலைதளங்களில் பார்க்க முடியவில்லையே?

    சந்தனதேவன் படத்தில் தான் எனது கவனம் முழுக்க இருந்தது. எனது கதாபாத்திரத்திற்காக நான் எந்தளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து போக தயாராக இருப்பேன். சந்தனதேவன் படத்தில் நடித்த போது சுமார் ஒன்றரை ஆண்டுகள், சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல், பேட்டி கொடுக்காமல், விளம்பரப் படங்கள் செய்யாமல் இருந்தேன். முகநூலில் கூட ஒரு பதிவு போட்டது இல்லை. வெற்றி கிடைக்கும் வரை உழைத்துக்கொண்டே, முயற்சித்துக்கொண்டே தான் இருப்பேன். ஓடிப்போக மாட்டேன்.

    மீடூ?

    மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு இயக்கம். ஆனால் பிரச்சினையோ நெருக்கடியோ ஏற்படும்போது அதனை உடனே வெளிப்படுத்திவிட வேண்டும். காத்திருக்க கூடாது. மீடூவில் சமூக வலைதளங்களில் பகிரும் வரை காத்திருக்காமல் உடனே வெளிப்படுத்தி தண்டனை வாங்கி தரவேண்டும்.

    அடுத்து?

    தற்போது ஒரு பெரிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    தினேஷ், அதிதி மேனன், தேவயானி, ஆனந்த் ராஜ் நடிப்பில் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் விமர்சனம். #KalavaniMappillai
    மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.

    தேவயானியின் ஒரே மகள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.

    தினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா? நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் நடனம் சிறப்பாக ஆடியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

    முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.



    காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம். ஆனால் ஓரளவிற்கே காமெடி கைகொடுத்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    ரகுநந்தன் இசையில் முதல் பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘களவாணி மாப்பிள்ளை’ காமெடிகாரன்.
    ×