என் மலர்
முன்னோட்டம்


பிராகிரண்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பி.கே, ஆன்சஜீவ் தயாரித்துள்ள படம் ‘கேணி’. இந்த படத்தில் ஜெயப்ரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் பார்த்திபன், நாசர். இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- நெளஷாத் ஷெரிப், இசை- எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை-சாம் சி.எஸ்., எடிட்டிங்- ராஜாமுகமது, பாடல்கள்- பழனிபாரதி, கதை, திரைக்கதை, இயக்கம்- எம்.ஏ.நிஷாத். இவர் 7 மலையாள படங்களை இயக்கியவர்.
இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறுகையில்....
“தமிழ்நாடு- கேரளா எல்லையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு ‘கேணி’ உருவாகி இருக்கிறது. இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். முழுக்க முழுக்க சமூகத்திற்கான படம். எதிர் காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சினையாக மாறப் போகிற தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ‘கேணி’ ஏற்படுத்தும். எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் பொதுவானது. அதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என்பதை இந்த படத்தின் மூலம் ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். 25 ஆண்டுகளுக்கு பிறகு இதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடி இருக்கிறார்கள்” என்றார்.
‘கேணி’ தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகிறது.





7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. இதில் விஜய்சேதுபதியுடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஸ்ரீசர வணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத் தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
இயக்கம்- ஆறுமுககுமார். படம் பற்றி அவர் கூறுகிறார்...
“இது விஜய்சேதுபதிக்கு பெயர் சொல்லும் வித்தியாசமான படம். அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில், விஜய்சேதுபதி ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இனத்தலைவராக நடித்திருக்கிறார். 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை நான் ரசித்தேன். இதில் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இன்னொரு நாயகனாக கவுதம் கார்த்திக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அனைவரும் ரசித்து மகிழும் படமாக உருவாகி இருக்கிறது”.






