என் மலர்tooltip icon

    சினிமா

    லக்கா மாட்டிக்கிச்சு
    X

    லக்கா மாட்டிக்கிச்சு

    விஜய்சரண் இயக்கத்தில் குழந்தை கடத்தலை கருவாக கொண்டு காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் ‘லக்கா மாட்டிக்கிச்சு’ படத்தின் முன்னோட்டம்.
    சூப்பர் பிரண்ட்ஸ் மூவீஸ் தயாரிக்கும் படம் ‘லக்கா மாட்டிக்கிச்சு’.

    ‘நான் அப்படியே ஷாக்காகிட்டேன்’ படத்தின் இயக்குனர் விஜய் சரண் இயக்கும் அடுத்த படம் இது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் விஜய் சரண் களம் இறங்கி உள்ளார்.

    ‘வாண்டு’ படத்தில் அறிமுகமான ஆனந்த் இந்த படத்தில் முழுநேர காமெடியனாகி இருக்கிறார். இவரோடு லொல்லு சபா மனோகர், கொட்டாச்சி ஆகியோரும் காமெடியில் கலக்குகிறார்கள். தப்பாட்ட நாயகன் சுதாகர் வில்லனாக நடிக்கிறார்.

    இவர்களுடன் ஆரீஸ், சுரேஷ், பார்வதி, அஞ்சு, மஞ்சு, சுப்ரஜா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ராம்குமார், இசை - மோகன், நடனம் - சுரேஷ். 

    படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய்சரண், “நாயகன் பணத்திற்காக குழந்தையை கடத்துகிறான். அவனை துரத்திக் கொண்டு 4 பேர் செல்கிறார்கள். அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பி ஓடும் போது குழந்தையின் மீது நாயகனுக்கு பாசம் வருகிறது. அந்த நால்வரும் அவனை சுற்றி வளைக்கின்றனர்.

    அப்போது அவர்களும் அந்த குழந்தையை கடத்த வந்தவர்கள் என்பது தெரிகிறது. நாயகன் குழந்தையை எப்படி காப்பாற்றினார்? கடத்திய அவரே குழந்தையை பெற்றோரிடம் எப்படி ஒப்படைத்தார்? என்று நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ‘லக்கா மாட்டிக்கிச்சு’.

    நகைச்சுவை கலாட்டாவாக இந்த படம் உருவாகி வருகிறது என்றார்.

    Next Story
    ×