என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஆர்.சுப்பிரமணியன் இயக்கத்தில் மதுரை இளைஞனின் திடீர் திருப்பத்தை கொண்டு உருவாகும் ‘சாவி’ படத்தின் முன்னோட்டம்.
    தி ஸ்பார்க் லேண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் ‘சாவி’. இதில், நாயகனாக பிரகாஷ் சந்திரா நடித்திருக்கிறார். சுனு லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ லிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - சதீஷ்தாயன்பன், ஒளிப்பதிவு - சேகர்ராம், எடிட்டிங் - சுரேஷ்அர்ஸ், கலை - வீராசமர்,ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், நடனம் - விஜி சதீஷ், அபிநயஸ்ரீ. இயக்கம் - ஆர்.சுப்பிரமணியன். படம் பற்றி கூறிய அவர்...

    மதுரையில் வாழும் இளை ஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும். “திடீர் திருப்பங்களே ‘சாவி’ படத்தின் கதை. யதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் இந்த படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளை திறக்கும்.



    ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிபாளையம்’ படங்களில் நடித்த பிரகாஷ் சந்திரா இதில் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். ‘அறம்’ படத் தில் நடிப்பாற்றலால் அனை வரையும் கவர்ந்த சுனுலட்சுமி துரு துரு விழிகளுடன் இதில் அழகான நாயகியாக வரு கிறார். ‘சாவி’ படம் நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை திறக்கும்” என்றார்.

    இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.
    பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டு வீரராக அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.
    விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தாக ‘மதுர வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

    வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா. 



    இசை - சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் - யுகபாரதி, எடிட்டிங் - கே.எல். பிரவீன், கலை - விதேஷ், சண்டை பயிற்சி - ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு - கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன். 

    ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம். இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


    அருண்.சி இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன் பேயை காதலிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘ஆறாம் திணை’ படத்தின் முன்னோட்டம்.
    எம்ஆர்கேவிஎஸ் சினி மீடியா சார்பாக ஆர்.முத்துக் கிருஷ்ணன், எம்.வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’.

    இதில், கதையின் நாயகியாக வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரவி மரியா, லாவண்யா, குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - ராஜா, இசை - ராஜ் கே.சோழன், படத்தொகுப்பு - திருமலை, இயக்கம் - அருண்.சி. படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இலக்கியங்களில் 5 வகை நிலங்கள் குறித்து ஐந்திணைகள் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய் சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பேய்ப் படங்களின் மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் ரசிகர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 



    பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் ‘நான்கடவுள்’ ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்பாகவும் இருக்கும். ரவிமரியாவுக்கும் இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். ‘கலக்கப்போவது யாரு’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்” என்றார்.

    வேலன் இயக்கத்தில் கிராமத்து உண்மை காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சென்னை பக்கத்துல’ படத்தின் முன்னோட்டம்.
    டி.சி.பி. பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் ‘சென்னை பக்கத்துல’.

    இதில் புதுமுகம் எஸ்.சீனு கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். இவர்களுடன் மாணிக்க விநாயகம், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே. சுந்தர், வின் சென்ட்ராஜ், வாசு விக்ரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

    ஒளிப்பதிவு - மகி பாலன், இசை - ஜித்தன் கே.ரோ‌ஷன், கலை - ஸ்ரீ, எடிட்டிங் - சி.மணி, நடனம் - தீனா, தயாரிப்பு - தெய்வானை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - வேலன். படம் பற்றி கூறிய அவர்...



    “இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் காதல் மிகவும் கேவலமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் கிராமபுறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம். தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான விவசாயத்தையும் சொல்லி இருக்கிறோம். விவசாயியாக மாணிக்க விநாயகம் வாழ்ந்து இருக்கிறார்” என்றார்.
    வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

    வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய், இசை- வித்யாசாகர், எடிட்டிங்- ஷான் லோகேஷ், கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.


    படம் பற்றி அவரிடம் கேட்ட போது....


    ‘‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து எனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆருத்ரா’. நான், தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவன ஊழியராக இதில் நடித்திருக்கிறேன். எனது தந்தையாக எஸ்.ஏ. சந்திர சேகரன் நடிக்கிறார். கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள்.


    இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்ற முக்கிய செய்தியை சொல்லி இருக்கிறோம்.


    ‘ஆருத்ரா’ பட டீசரை புத்தாண்டு தினத்தில் துபாயில் வெளியிடுகிறோம். பொங்கலுக்கு பிறகு ‘ஆருத்ரா’ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறார்கள்’’ என்றார்.

    மாரிசன் இயக்கத்தில் மூடநம்பிக்கையை முறியடிக்கும் குழந்தைகள் படமாக உருவாகி இருக்கும் ‘சங்கு சக்கரம்’ படத்தின் முன்னோட்டம்.
    லியோ வி‌ஷன், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘சங்கு சக்கரம்’.

    இந்த படத்தில் கீதா, திலீப் சுப்புராயன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மோனிகா, தீபா, ஜெனிபர், நிவேஷ், பாலா, தேஜா, கிருத்திக் உள்பட பல குழந்தைகள் நடித்து இருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ரவி கண்ணன், இசை - ‌ஷபிர், ஸ்டண்ட் - திலீப் சுப்புராயன், எடிட்டிங் - விஜய் வேலுகுட்டி, கலை - எஸ்.ஜெயச்சந்திரன், தயாரிப்பு - வி.எஸ்.ராஜ்குமார், கே.சதிஷ்.

    இயக்கம் - மாரிசன். இவர் இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படம் பற்றி அவரிடம் கேட்ட போது...

    “இது குழந்தைகள் நடித்துள்ள பேய் படமாக உருவாகி இருக்கிறது. பேய் பற்றிய மூடநம்பிக்கை பலரிடம் இருக்கிறது. அதை முறியடிக்கும் படம் ‘சங்கு சக்கரம்’. கடவுள் எங்கும் இருப்பார் என்று கூறுகிறார்கள். எனவே பேய் வீட்டில் அவர் இருக்க மாட்டாரா? என்ற கேள்வி இந்த படத்தில் இருக்கும்.

    குழந்தைகள் பயப்படாத நகைச்சுவை கலந்த பேய் படமாக இது உருவாகி இருக்கிறது. ‘சங்கு சக்கரம்’ அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
    யுவன் முத்தையா இயக்கத்தில் திறமைசாலிகளின் சாதனையாக உருவாகும் ‘ஈடிலி’ படத்தின் முன்னோட்டம்.
    சாகர் புரொடக்சன்ஸ், சித்தர் மூவிஸ் இணைந்து தயாரிக் கும் படம் ‘ஈடிலி’.

    இதில், லிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சரவணராஜ், இசை - இஷான்தேவ், படத்தொகுப்பு - சுதர்‌ஷன், ஸ்டண்ட் - ஸ்டண்ட்சாம், தயாரிப்பு - கே.பி. தயாசாகர், இணை தயாரிப்பு - யுவன் முத்தையா, எழுத்து, இயக்கம் - யுவன் முத்தையா.

    அவரிடம் படம் பற்றி கேட்ட போது...

    “‘ஈ.டிலி’ என்பதற்கு ஈடு இல்லாதவன் என்பது அர்த்தம். சில திறமை சாலிகளை ஈடிலி என்பார்கள். இந்த படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுமே ‘ஈடிலி’ தான்.



    நாளை யாரை சந்திக்கப் போகிறோம்? நாளை மறுநாள் யாருடன் பேசப்போகிறோம்? என்பது யாருக்கும் தெரியாது. அந்த சந்திப்புகளால் நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். அது போன்ற சில சம்பவங்களை சந்திக்கும் பாத்திரங்கள் எப்படி மாறுகிறார்கள் என்பது தான் கதை.

    சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. உளவியல் சார்ந்த, கடத்தல் பிளாக் மார்க்கெட் சார்ந்த வி‌ஷயங்களை புதிதாக சொல்லி இருக்கிறோம்“ என்றார்.

    இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியே ஷன் டி.சிவா, சுரேஷ் காமாட்சி, ‘ஸ்கெட்ச்’ பட இயக்குனர் விஜய்சுந்தர், ஒளிப்பதிவாளர் சிவகுமார், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜும் இன்எஸ்.பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இதில் நாயகனாக தூயவன், நாயகியாக சவுந்தர்யாராய் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பூவிதா, யுவராணி, நெல்லை சிவா, அலெக்ஸ், வீட்டு ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஜும் இன்எஸ்.பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இதில் நாயகனாக தூயவன், நாயகியாக சவுந்தர்யாராய் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பூவிதா, யுவராணி, நெல்லை சிவா, அலெக்ஸ், வீட்டு ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.


    ஒளிப்பதிவு- நேமம் வி.சிவானந்தம், டி.மகிபாலன், இசை-சரண் பிரகாஷ், எடிட்டிங்- ஆர்.டி. அண்ணாதுரை, ஸ்டண்ட்- தவசிராஜ், நடனம்-பவர்சிவா, பாடல்கள்- புலவர் அன்பழகன், தயாரிப்பு -டி.ஏ. ஜவகர் தாசன், இயக்கம்- திரைப்பட கல்லூரி மாணவர் டி.ஏ.வினோபா. படம் பற்றி கூறிய இயக்குனர்....


    “மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவனால் குடும்ப வாழ்க்கையே திசைமாறி செல்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சமுதாய புரட்சியை தோற்றுவிக்கிறாள். இதன் விளைவுகளை பின்னணியாகக் கொண்டு ஜனரஞ்சகமாக உருவாக்கப்படும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இது உண்மை சம்பவத்தை மையக்கருவாக கொண்டு உருவாகிறது” என்றார்.


    புலவர் ச.அன்பழகன் எழுத்தில் கானாபாலா பாடிய ‘அக்கக்கா...அக்கக்கா, உன் அப்பாட்மண்டு எங்கக்கா’ என தொடங்கும் கிளு கிளுப்பான பாடல் ‘கருவேலம் பூக்கள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. ஏலகிரி, பகுதியில் சமீபத்தில் இந்த பாடல் காட்சி படமானது. 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று ஆடிப் பாடுவதாக இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    கார்த்திக்ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா நடிப்பில் வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கும் மீனவர்கள் கதையாக உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ படத்தின் முன்னோட்டம்.
    கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ள 3-வது படம் ‘உள்குத்து’.

    இதில் தினேஷ் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பால சரவணன், ஸ்ரீமன், ‌ஷரத் லோகிதாஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - பி.கே.வர்மா, படத்தொகுப்பு - கே.எஸ்.பிரவீன், ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன், கலை - விதேஷ், தயாரிப்பு - ஜெ.செல்வகுமார், எழுத்து, இயக்கம் - கார்த்திக்ராஜு.

    மீன் சந்தையில் சிறுவர்கள் மீனை கிலோவுக்கு 20 ரூபாய் என வெட்டி சுத்தம் செய்து கொடுப்பார்கள். அவர்களுக்கு புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்களில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது தோன்றியது தான் இந்த கதை.



    மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காது. அவர்களுக்கு காலையில் ரூ.1 லட்சம் கடன் கொடுப்பவர்கள் அதில் ரூ.10 ஆயிரம் எடுத்துவிட்டு மீதி 90 ஆயிரத்தை மட்டுமே தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் திருப்பி கொடுக்கவேண்டும்.

    அந்த பணத்தை அடியாள் வைத்து வசூல் செய்வார்கள். கந்து வட்டி கும்பல் தலைவனிடம் வேலை செய்யும் நண்பர்கள் 5 பேர். அதில் ஒருவனை தலைவன் கொலை செய்தால், மற்ற 4 பேரும் அதை எப்படி கையாளுவார்கள் என்பது கதை. உள்குத்து என்றால், உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது.

    ‘உள்குத்து’ அனைவரும் ரசிக்கும் படமாக தயாராகி உள்ளது” என்றார்.
    முருகலிங்கம் இயக்கத்தில் டி.வி. புகழ் ஜெகன் போலீசாக நடிக்கும் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.
    முத்து வினாயகா மூவிஸ் நிறுவனம் சார்பில் ராஜாமணிமுத்து கணேசன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’.

    இதில் டி.வி. புகழ் ஜெகன் கதை நாயகனாக காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஹானா நடிக்கிறார். வில்லனாக பாடலாசிரியர் பிறைசூடன் நடிக்கிறார். இவர்களுடன் விவேக்ராஜ், சேரன் ராஜ், டிசோசா ரவிக்குமார், கொட்டாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சிவராஜ், பாடல்கள் - பிறைசூடன், கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் எழுதியுள்ளார். தயாரிப்பு - ராஜாமணி முத்து கணேசன், இயக்கம் - முருகலிங்கம். இவர் இயக்குனர் கார்த்திக் ரகுநாத்திடம் உதவியாளராக பணியாற்றியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...



    “ இது முழு நீள நகைச் சுவை படமாக உருவாகிறது. ஒரு பசு மாட்டினால் ஏற்படும் பிரச்சினை, அதனால் ஒரு காவல் நிலையத்தில் ஏற்படும் கலாட்டாக்கள், இதில் சிக்கிக்கொள்ளும் ஒரு போலீஸ்காரரின் காதலும், கல்யாணமும் வில்லங்கமாகி விபரீதமாகிறது. அவர் இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கிறார்? தப்பிக்கிறார். கல் யாணம் நடந்ததா? இதன் விளக்கம் தான் இந்த படம்” என்றார். பாகனேரியில் முதல் கட்டப்படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் 24 வரை நடைபெறுகிறது.

    அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் ஜனவரி 18 முதல் 30 வரை நடக்கிறது.

    ஜி.ஜே.சத்யா இயக்கத்தில் அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தும் ‘களிறு’ படத்தின் முன்னோட்டம்.
    சி.பி.எஸ். பிலிம்ஸ், அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘களிறு’. 

    இதில் புதுமுகம் விஷ்வக் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகிகளாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் துரை சுதாகர், நீரஜா, ஜான், உமாரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - டி.ஜே.பாலா, இசை - என்.எல்.ஜி.சிபி, கலை - மார்டின் டைட்டஸ், ஸ்டண்ட் - எஸ்.ஆர்.முருகன், எடிட்டிங் - நிர்மல், நடனம் - ராதிகா, தயாரிப்பு - விஷ்வக், இனியவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜி.ஜே.சத்யா.

    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “காதலித்தாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டும். இல்லையேல் கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மாற்றப்படுகின்றன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் ‘களிறு’. ஆணவக்கொலை கள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன.



    இது எதார்த்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை கண்முன் நிறுத்தும் படம்.

    அதிகாரமும், பணபலமும் இருப்பதால் தான் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது மாற்றப்பட வேண்டும். அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அடையாளப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யவே இந்த படம்” என்றார்.

    விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் ‘செயல்’ படத்தின் முன்னோட்டம்.
    சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘செயல்’.

    இதில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் தருஷி நடிக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக்சந்திரா அறிமுகமாகிறார்.

    ஒளிப்பதிவு - வி.இளைய ராஜா, இசை - சித்தார்த் விபின், எடிட்டிங் - ஆர்.நிர்மல், ஸ்டண்ட் - கனல் கண்ணன், நடனம் - பாபா பாஸ்கர், ஜானி, கலை - ஜான் பிரிட்டோ, தயாரிப்பு - சி ஆர்.ராஜன்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...



    “ வட சென்னையில் தங்க சாலை மார்கெட்டை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் ரவுடியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக அடித்து விடுகிறான். எனவே, ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் தனது கை ஓங்கும் என்று ரவுடி நினைக்கிறான்.

    இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

    ×