என் மலர்tooltip icon

    சினிமா

    சங்கு சக்கரம்
    X

    சங்கு சக்கரம்

    மாரிசன் இயக்கத்தில் மூடநம்பிக்கையை முறியடிக்கும் குழந்தைகள் படமாக உருவாகி இருக்கும் ‘சங்கு சக்கரம்’ படத்தின் முன்னோட்டம்.
    லியோ வி‌ஷன், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘சங்கு சக்கரம்’.

    இந்த படத்தில் கீதா, திலீப் சுப்புராயன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மோனிகா, தீபா, ஜெனிபர், நிவேஷ், பாலா, தேஜா, கிருத்திக் உள்பட பல குழந்தைகள் நடித்து இருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ரவி கண்ணன், இசை - ‌ஷபிர், ஸ்டண்ட் - திலீப் சுப்புராயன், எடிட்டிங் - விஜய் வேலுகுட்டி, கலை - எஸ்.ஜெயச்சந்திரன், தயாரிப்பு - வி.எஸ்.ராஜ்குமார், கே.சதிஷ்.

    இயக்கம் - மாரிசன். இவர் இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படம் பற்றி அவரிடம் கேட்ட போது...

    “இது குழந்தைகள் நடித்துள்ள பேய் படமாக உருவாகி இருக்கிறது. பேய் பற்றிய மூடநம்பிக்கை பலரிடம் இருக்கிறது. அதை முறியடிக்கும் படம் ‘சங்கு சக்கரம்’. கடவுள் எங்கும் இருப்பார் என்று கூறுகிறார்கள். எனவே பேய் வீட்டில் அவர் இருக்க மாட்டாரா? என்ற கேள்வி இந்த படத்தில் இருக்கும்.

    குழந்தைகள் பயப்படாத நகைச்சுவை கலந்த பேய் படமாக இது உருவாகி இருக்கிறது. ‘சங்கு சக்கரம்’ அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
    Next Story
    ×