என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் ‘மேயாதமான்’ இந்துஜா, சாந்தினி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பில்லா பாண்டி’ படத்தின் முன்னோட்டம்.

    ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். ‘மேயாதமான்’ இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.


    வசனம் -எம்.எம்.எஸ். மூர்த்தி,ஒளிப்பதிவு- ஜீவன், இசை-இளையவன், படத்தொகுப்பு-ராஜா முகம்மது, கலை- மேட்டூர் சௌந்தர், நடனம் - கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப் பயிற்சி-சக்தி சரவணன், தயாரிப்பு-கே.சி.பிரபாத், இயக்கம்- சரவணசக்தி.


    “‘பில்லா பாண்டி’ திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் ஆர்.கே.சுரேஷ் சாதிய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து இருக்கிறார். சூரி கவுரவ வேடத்திலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்” என்றார்.


    படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இசை வெளியீடு நடைபெறுகிறது.

    ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் - அம்ரிதா நடிப்பில் ஒரே இடத்தில் படமான திகில் கதையான ‘பேய்பசி’ படத்தின் முன்னோட்டம்.
    ரெட் ஈஸ்ட் கிரியே‌ஷன் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கும் படம் ‘பேய்பசி’. இதில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகன் ஆக நடிக்கிறார். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின், புதுமுகம் நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - டோனி சான், படத்தொகுப்பு - மோகன் முருகதாஸ், கலை - மதன், இயக்கம் - ஸ்ரீநிவாஸ் கவி நயம்.

    “இது ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள்ளே நடக்கும் திகில் கதை. ஒரே இடத்தில் நடந்தாலும், சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , ‘பேய் பசி’ அமைந்தது.



    போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கி உள்ளோம் என உறுதியாக நம்புகிறேன்.

    யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை இந்த படத்தின் ஒரு முக்கிய ஹீரோவாகும். அவரது இசை இந்த கதையையும், காட்சிகளையும் மெரு கேற்றி, திகிலின் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது. இந்த படத்திற்காக மிக சுவாரஸ்யமான ஒரு டிரோமோ பாடலையும் அவர் இசைஅமைத்து பாடியுள்ளார்” என்றார்.

    தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா - பூமிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘களவாடிய பொழுதுகள்’. நீண்ட கால காத்திருப்புக்கு பின் இந்த படம் வெளியாகிறது.

    படம் பற்றி கூறிய பிரபுதேவா...

    “என் வாழ்நாளில் இது வரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார்.

    மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் நடித்திருக்கிறார்கள்.



    இசை - பரத்வாஜ், பாடல்கள் - வைரமுத்து, அறிவுமதி, கலை - கதிர், படத்தொகுப்பு - பி.லெனின், பிரேம், தயாரிப்பு - கருணாகரன், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் - தங்கர் பச்சான்.

    படம் பற்றி கூறிய அவர்..

    “ இது காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இந்த படத்தை படைத்திருக்கிறேன்” என்றார்.

    தயாரிப்பாளர் கருணாகரன், “ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படம் இது” என்று கூறினார்.

    சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கி‌ஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாயவன்’ படத்தின் முன்னோட்டம்.
    திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘மாயவன்’.

    இதில் நாயகனாக சந்தீப் கி‌ஷன், நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்கள். இவர்களுடன் டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப், பகவதி பெருமாள், மைம்கோபி, ஜே.பி,சிறப்பு தோற்றத்தில் அக்ஷாரா கவுடா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், இசை - ஜிப்ரான், எடிட்டிங் - லியோஜான்பால், கலை - கோபி ஆனந்த், ஸ்டண்ட் - ஹரிதினேஷ், தயாரிப்பு - சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, திரைக்கதை, வசனம், நலன் குமாரசாமி, கதை, இயக்கம் - சி.வி.குமார்.



    இது ஒரு சீரியல் கில்லர் தொடர்பான கதை. நாயகன் சந்தீப் ஒரு சைகோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும், நாயகி லாவண்யா கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் உளவியல் நிபுணராகவும் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

    படம் பற்றி கூறிய சி.வி.குமார், “பல வெற்றிப்படங்களை தயாரித்துக் கொண்டு இருந்தேன். இந்த கதை என்னை கவர்ந்ததால் இயக்குனர் ஆகிவிட்டேன். இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.

    செப்டம்பர் ரிலீஸாக வேண்டிய படம், பைனான்சியர் - தயாரிப்பாளர் பிரச்சனையால் ரிலீஸ் தாமதமான நிலையில், படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

    ஸ்ரீ சிவகுடும்பம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ஆறடி’. இதில் விஜய்ராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, சாப்ளின் பாலு, பெஞ்சமின், சேலம் டி.சண்முகம், டாம் பிராங்க், சிபி பத்ரிநாத், தினேஷ், சுமதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
    ஸ்ரீ சிவகுடும்பம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ஆறடி’. இதில் விஜய்ராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, சாப்ளின் பாலு, பெஞ்சமின், சேலம் டி.சண்முகம், டாம் பிராங்க், சிபி பத்ரிநாத், தினேஷ், சுமதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-ஆர்.கே. விஜயன், இசை- அபி ஜோஜோ, கலை-எஸ்.நவீன் குமார், கதை, திரைக் கதை, வசனம், இணை இயக்கம்- சக்திவேல், தயாரிப்பு-எஸ். நவீன்குமார், எஸ். சுமதி, எஸ்.மோகன வேல், படத்தொகுப்பு, இயக்கம்- சந்தோஷ் குமார்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “எட்டு கால் பயணத்தில் மனித இனம் கடைசியாக செல்வது மயானம் தான். அந்த சூழ்நிலையும் இடமும் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு காதல் உதயமாகிறது.

    இது வரை ஆண்கள் மட்டுமே மயானத்தில் ‘வெட்டியான்’ வேலை பார்த்து வருகிறார்கள். அதை மாற்றி மயானத்தில் ஒரு பெண் வெட்டியான் வேலை செய்தால் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை திரைக்கதையாக்கி ‘ஆறடி’ படத்தை உருவாக்கி உள்ளோம்” என்றார்.
    ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ்பாபு - காஜல் அகர்வால், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனிருத்’ படத்தின் முன்னோட்டம்.
    சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.

    தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரம்மோற்சவம்’ படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் தயாராகிறது.

    இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா நடிக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ரத்னவேலு, இசை - மிக்கி ஜே.மேயர், தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத், இயக்கம் - ஸ்ரீகாந்த், வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு ஏ.ஆர்.கே. ராஜராஜா.



    படம் பற்றி அவரிடம் கேட்ட போது....

    “உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும் பின்னப்பட்டவை தான். தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறு எதுவும் இல்லை .

    நம்மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப் படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் திரைக்கதை. குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடு பார்க்க கூடிய படம் இது” என்றார்.


    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் - ரம்யா நம்பீசன், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்யா' படத்தின் முன்னோட்டம்.
    நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ள படம் `சத்யா'.

    சிபிராஜ், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி, ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, ஆத்மா பேட்ரிக், சித்தார்த் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 



    இசை - சிமோன் கே.கிங், படத்தொகுப்பு - கவுதம் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவு - அருண்மணி பழனி, தயாரிப்பு - நாதாம்பாள் பிலிம் பேக்டரி, கதை - அத்வி சேஷ், இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. 

    படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் சிபிராஜ் கூறும்போது, 

    “எனது 4 வயது மகன், நான் நடித்த எல்லா படங்களையும் பார்க்கிறான். இதனால் நான் கதாநாயகிகளுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடிப்பதை தவிர்க்கிறேன்” என்றார்.

    `சத்யா' வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி ரிலீசாகிறது. 

    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் காமெடி படமாக உருவாக இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’.

    இதில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இவருடைய ஜோடியாக ‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகர் - நடிகைகள் நடிக்கிறார்கள்.

    பாலமுரளிபாலு இசை அமைக்கும் இந்த படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு - பிரசன்னா ஜி.கே, கலை - கோபி ஆனந்த்.

    இயக்கம் - சந்தோஷ் பி.ஜெயக்குமார். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து இந்த படத்தை இவர் இயக்குகிறார்.

    சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கஜினி’ படத்தின் பெயரையும் ரஜினியின் பெயரில் இடம் பெற்றுள்ள காந்த்தையும் இணைத்து இந்த படத்துக்கு ‘கஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டி உள்ளனர்.



    “இது குடும்ப சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகிறது. ஆர்யா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஆர்யாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதற்கு ஏற்ப புதிய கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் ‘கஜினிகாந்த்’ ரசிகர்களை கவரும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

    ஆஸிப் குரைஷி இயக்கத்தில் உதயா - பிரபுவுடன் நடிகர் சங்க பிரபலங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் முன்னோட்டம்.
    ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘உத்தரவு மகாராஜா’.

    இதில் உதயாவுடன் பிரபு இணைகிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகளுடன் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர்.



    இசை - நரேன் பாலகுமாரன், படத்தொகுப்பு - சத்ய நாராயணன், நடனம் - சாண்டி, இயக்கம் - ஆஸிப் குரைஷி.

    `உத்தரவு மகாராஜா’ படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்‌ஷன் கலந்த சைக்கோ திரில்லர் கதை. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

    இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    மைண்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. இதில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாளத்தில் இருந்து வரும் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

    மைண்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. இதில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாளத்தில் இருந்து வரும் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்செயன், சுமேஷ், வினித் ஆகியோர் நடிக்கிறார்கள்.


    இசை- ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு- ரவியாதவ், படத்தொகுப்பு- ஆண்டனி, கலை-ஜி.சி.ஆனந்தன், பாடல்கள்-மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், அருண் ராஜா, தயாரிப்பு- லதா. எழுத்து, இயக்கம்- ராஜீவ் மேனன்.


    “ இது தாள இசை கலைஞர் பற்றிய கதை. இந்த படத்தில் மிருதங்க வித்வானாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்துக்காக ஜி.வி. பிரகாஷ் பிரபல மிருதங்க வித்வான் ஒருவரிடம் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார். இந்த படத்தில் 9 பாடல்கள் இடம் பெறுகின்றன” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் முன்னோட்டம்.
    தீபம் சினிமா வழங்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’.

    இதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.

    இயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்தயுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.



    2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    டி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணி புரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார்.

    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாக இருக்கும் `பொட்டு' படத்தின் முன்னோட்டம்.
    ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'.

    இந்த படத்தில் நாயகனாக பரத் நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். மருத்துவக் கல்லூரி பின்னணியில் பேய் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    வசனம் - செந்தில், ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன், எடிட்டிங் - எலீசா, கலை - நித்யானந், நடனம் - ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை -  ஜி.சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்.

    கதை, திரைக்கதை இயக்கம் - வடிவுடையான். 



    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் `பொட்டு' படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

    ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது அனைத்து படங்களுக்கு அமைவதில்லை. அந்த வகையில் `பொட்டு' படத்திற்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட, பேய்கள் செய்யும் சாகசங்களுக்கு மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. தெலுங்கில் பொட்டு படத்தை என்.கே.ஆர். பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. தெலுங்கில் தணிக்கைக்காக காத்திருக்கும் இந்த படம், தணிக்கை கிடைத்த உடன் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.
    ×