என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர்.
    ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- விஜய் கிரண், இசை-தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ‌ஷங்கர், எடிட்டிங்- வடிவேல், விமல்ராஜ், வசனம்-பித்தாக் புகழேந்தி, கதை, திரைக்கதை, இயக்கம்- வெற்றி மகாலிங்கம்.

    படம் குறித்து கூறிய இயக்குநர்...

    “தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தின் கதையை இயக்கி இருக்கிறேன்.

    ‘தல’ விசிறியாக அழகி படத்தில் குட்டி பார்த்திபனாக நடித்த ‘ராம்சரவணா’ , ‘தளபதி’ விசிறியாக விஸ்காம் மாணவர் ‘ராஜ் சூர்யா’ இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இத்தாலி நாட்டில் வசிக்கும் தமிழ் பெண் ‘ரெமோனா ஸ்டெபனி’ கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘தல-தளபதி’ ரசிகர்கள் இடையே ஏற்படும் மோதலையும், இதற்குள் காதலையும் முன்னிறுத்தி ரசிகர்களின் பிரதி பலிப்பாக ‘விசிறி’ உருவாகி இருக்கிறது” என்றார்.
    எம்.எஸ்.எஸ். இயக்கத்தில் ராஜ்கமல் - ஆண்ட்ரீயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மேல்நாட்டு மருமகன்’ படத்தின் முன்னோட்டம்.
    உதயா கிரியே‌ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன்’.

    இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார்.

    கே.கெளதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு வே.கிஷோர்குமார் இசை அமைத்துள்ளார்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.எஸ். படம் பற்றி கூறிய அவர்....

     

    நம் நாட்டு கலாச்சாரத்தின் மீது ஈர்க்கப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டு பெண் நம் நாட்டு இளைஞனை காதலித்து கரம் பிடிப்பதே கதை. படத்தை வெளியிடுவதற்கு பல முறை முயன்றோம். பல தடைகள். அதை தாண்டி டிசம்பர் இறுதியில் வெளியிட உள்ளோம்.

    இங்கு மட்டுமல்ல பிரான்சிலும் 30 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது” என்றார்.

    விஜய் விக்ரம் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆண்டனி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம்.
    டிராபிக் ராமசாமி நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க சமூக ஆர்வலர்.

    அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகி வரும் படம் ‘டிராபிக் ராமசாமி’. இதில் கதையின் நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரன் நடிக்கிறார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

    கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ், கதாநாயகியாக உபா‌ஷனா நடிக்கிறார்கள். இவர்களுடன் அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சேத்தன், பேபி ஷெரின், மோகன் ராம், மதன்பாப் ஆகியோரும் நடிக்கின்றனர்.



    இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி அநியாயங்களைக் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராக சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.

    இயக்குனராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு எஸ்.ஏ.சந்திர சேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

    ஒளிப்பதிவு - குகன் எஸ்.பழனி, இசை - பாலமுரளி பாலு, சண்டைக்காட்சி - அன்பறிவ்.

    ‘டிராபிக் ராம சாமி’ படத்தை புதிய தயாரிப்பாளர் ஈரோடு மோகன் தயாரிக்கிறார்.


    எஸ்.பரீத் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் - ஷைனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரையன்’ படத்தின் முன்னோட்டம்.
    90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படம் `வீரையன்'.

    இனிகோ பிரபாகர், ஷைனி நாயகன், நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பரீத் இயக்கியிருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

    இசை - அருணகிரி, ஒளிப்பதிவு - பி.வி.முருகேஷ், பாடல் வரிகள் - பரீத், காதல் மதி, யுகபாரதி, கலை இயக்குநர் - எஸ்.ஐயப்பன், நடன இயக்குநர் - சரவண ராஜன், படத்தொகுப்பு - ராஜா முகமது, கதை, தயாரிப்பு - ஃபாரா சரா பிலிம்ஸ், திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.பரீத்

    இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளது.



    சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் இப்படம் உருவாகி இருக்கிறது.

    பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதியவகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், `சரசம்மா' என்கிற ஆவி கதாபாத்திரமும் படத்திற்கு பலத்தை கூட்டும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    நவம்பர் 24-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.  

    கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் `இந்திரஜித்' படத்தின் முன்னோட்டம்.
    வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `இந்திரஜித்'.

    கவுதம் கார்த்திக் நாயகனாகவும், அஷ்ரிதா ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜுவர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    சென்சாரில் `யு' சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது.

    ஒளிப்பதிவு - ராசாமதி, படத்தொகுப்பு - வி.டி.விஜயன், எஸ்.ஆர்.கணேஷ் பாபு, இசை - கே.பி, தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ், திரைக்கதை, இயக்கம் -  கலாபிரபு.



    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தாணு...

    “என் இளைய மகனும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்த போது, அது தேவையா என யோசித்தேன். அண்ணனுக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என்று என் மகள் சொன்னார்.

    முதலில் ‘சக்கரகட்டி’ என்ற அருமையான படத்தை கலாபிரபு கொடுத்தார். நான் பல ஆண்டுகளாக கார்த்திக்கிடம் கால்ஷீட் கேட்டு வந்தேன். அவர் தரவில்லை. அவரை வைத்து படம் தயாரித்தது இல்லை. ‘இந்திரஜித்’ படத்தில் அவருடைய மகன் கவுதம் ஹீரோவாக நடிப்பது சிறப்பு.

    தேவிஸ்ரீ பிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே.பி. இசையமைக்கிறார். கவுதம் கார்த்திக் இதில் வேறு லெவலில் நடித்துள்ளார்” என்றார்.

    இந்திரஜித் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. வி.சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் ஹரிஜா, ஆர்.ஜே.விக்கி, கோபிசுதாகர், ‘டெம்பில் மங்கிஸ் ‘ புகழ் ஷாரா அகஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. வி.சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் ஹரிஜா, ஆர்.ஜே.விக்கி, கோபிசுதாகர், ‘டெம்பில் மங்கிஸ் ‘ புகழ் ஷாரா அகஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் முதல் தொழில் நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    ஒளிப்பதிவு- ஜோஷ்வா ஜெ.பெரேஸ், இசை- கெளஷிக் ரவி, படத்தொகுப்பு- ரமேஷ் வெங்கட். இவர்கள் அனைவரும் அறிமுகம்.

    யுடியூப்பில் கலக்கும் ‘எருமசாணி’ குழுவினரின் காணொலி இயக்குனர் ரமேஷ் வெங்கட், இந்த படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராகிறார்.

    படம் பற்றி கூறிய தயாரிப்பாளர் சத்திய மூர்த்தி....

    “ஒரு எதார்த்தமான சந்திப்பில் பேசி முடி வெடுக்கப்பட்ட படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ . இந்த திரைப்படத்தில் பணியாற்றும் எல்லா கலைஞர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. நிச்சயமாக இது எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும். வருகிற டிசம்பர் மாதம் எங்கள் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பம். 2018 ஆம் ஆண்டின் கோடை விருந்தாக இந்த படம் வெளியாகும்” என்றார்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தமிழ் வசனத்தில் உருவாகும் ‘யாழ்’ படத்தின் முன்னோட்டம்.
    மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’.

    இந்த படத்தில் டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக நீலிமா, லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக ரக்‌ஷனா மற்றும் ஈழத்து கலைஞர்கள் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு - ஆதி கருப்பையா, நசீர், இசை - எஸ்.என்.அருணகிரி, படத்தொகுப்பு - ட.எ.ம.தாஸ், கலை - ரெம்போன் பால்ராஜ்.

    கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - எம்.எஸ்.ஆனந்த், படம் பற்றி கூறிய அவர்...

    “‘யாழ்’ திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்தும் ஈழத்தமிழர்களே.



    படத்தின் பாடல்கள் ஈழத் தமிழில் இருக்கும். பாட லாசிரியர்களும் இலங்கை தமிழர்களே. வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே இருக்கும்.

    ‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்கள் பயன்படுத்திய ஒரு இசைக்கருவி. பாணர்கள் தமிழர் களின் கலை, கலாசாரத்தை, பண்பாட்டை ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப் பாணம் என்ற பெயர் வந்தது.

    யாழ்ப்பாண கலாசார கதாபாத்திரங்களுக்கு இடையில் இறுதிப்போரின் போது அவர்களுக்குள் நடந்த நட்பு, காதல் போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம்” என்றார்.

    பாலய்யா டி.ராஜசேகர் இயக்கத்தில் சச்சின் மணி - நந்திதா நடிப்பில் கலகலப்பான ரெயில் பயண கதையாக உருவாகி இருக்கும் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தின் முன்னோட்டம்.
    லேடி டிரீம் சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘காத்திருப்போர் பட்டியல்’.

    சச்சின் மணி நாயகனாக நடிக்கும் இதில், நந்திதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஷியான் ரோல்டன் இசை அமைக்கிறார். எடிட்டிங் - ரூபன், நடனம் - ஷோபி, நோபிள், ஸ்டண்ட் - எம்.கணேஷ், தயாரிப்பு - பைஜாடாம், இயக்கம் - பாலய்யா டி.ராஜசேகர்.



    “தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்பவர்கள் வாழ்க்கையை காமெடி கலந்து சொல்லும் படமாக ‘காத்திருப்போர் பட்டியல்’ உருவாகி இருக்கிறது. இது ரெயில் பயணத்தில் நடக்கும் காதல், ரெயில்வே போலீசார் அதிரடி, பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் கலந்த கதை. இதை இயக்குனர் காமெடி கலாட்டாவாக சொல்லி இருக்கிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    நாயகி நந்திதா கூறும் போது... “ படத்தின் பாடல் காட்சியை பார்த்த போது நானா அது என்று ஆச்சர்யப்பட்டேன். என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி” என்றார்.

    நந்தகுமார் இயக்கத்தில் பேயை கண்டுபிடிக்க போனவன் பேயான மாறும் கதையாக உருகாகி இருக்கும் ‘சூறக்காத்து’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீவின் மூவீஸ் சார்பில் உருவாகியிருக்கும் படம் ‘சூறக்காத்து’.

    இந்த படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருப்பவர் நந்தகுமார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர் சரவண சக்தி வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார். டி.வி. பிரபலங்கள் பலர் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - கேசவன், இசை - பரிமளவாசன், பாடல்கள் - முத்து விஜயன், திருநாவுக்கரசு, படத்தொகுப்பு - யோகி,நடனம் - சீனுப்பிரியா, தினேஷ், ஸ்டண்ட் - அசோக்ராஜ்.



    படம் பற்றி கூறிய இயக்குனர் நந்தகுமார், “இது வித்தியாசமான கதை களம் கொண்டது. கதை நிகழும் அந்த ஊரில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கின்றன. அதைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஊர் மக்கள் அவை பேயால் நடைபெறுவதாக நம்புகிறார்கள். பேயெல்லாம் பொய், நான் இதை நிரூபிக்கிறேன் என்று அந்த ஊருக்குச் செல்கிற நாயகன், ஒரு கட்டத்தில் பேயாக மாறுகிறான். அது எப்படி நடந்தது? முடிவு என்ன? என்பதே ‘சூறக்காத்து’ படம்.

    பேய்களைவிட சமூக விரோதிகள் மோசமானவர்கள் என்கிற கருத்தும் படத்தில் உணர்த்தப்பட்டுள்ளது” என்றார். இந்த படம் நாளை வெளியாகிறது.

    வி.இசட்.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி நடிப்பில் இன்றைய காதலை அப்படியே சொல்லும் படம் ‘ஏமாலி’ படத்தின் முன்னோட்டம்.
    லதா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாராகும் படம் ‘ஏமாலி’.

    ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

    சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    வசனம் - ஜெயமோகன், ஒளிப்பதிவு - எம்.ரத்திஷ் கண்ணா, ஐ.பிரகாஷ், இசை - சாம் டி.ராஜ், பாடல்கள் - மோகன்ராஜ், வி.இசட் துரை, படத்தொகுப்பு - ஆர்.சுதர்சன், கலை - கே.ஆறுசாமி, தயாரிப்பு - எம்.லதா, இயக்கம் - வி.இசெட்.துரை.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக்அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன்.

    ‘ஏமாலி’ பட டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நாயகி அதுல்யா தொடர்பான காட்சிகள் பற்றி விமர்சனங்கள் வந்தன. கதைக்கு தேவையான காட்சிகள் தான் இதில் இடம் பெற்றிருக்கின்றன” என்றார்.

    ‘டீசர் வெளியான பிறகு ‘ஏமாலி’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    ஸ்ரீஹரி இயக்கத்தில் கராத்தே கவுசிக் - குஷ்பு சிங் நடிப்பில் பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் வகையில் உருவாகி இருக்கும் ‘ஆறில் இருந்து 6 வரை’ படத்தின் முன்னோட்டம்.
    ரோ‌ஷன் பிலிம் இன்டர்நே‌ஷனல் நிறுவனம் சார்பில் வி.ரிஷிராஜ் தயாரிக்கும் படம் ‘ஆறில் இருந்து 6 வரை’.

    இதில் கராத்தே கவுசிக் கதாநாயகனாக நடிக்கிறார். குஷ்பு சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜார்ஜ், மிப்பு சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - தேவ், இசை - பெண் இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி, நடனம் - சுரேஷ், படத்தொகுப்பு - சி.எஸ். பிரேம், இணை தயாரிப்பு - டி.எஸ்.எஸ். புரொடக்‌ஷன்ஸ் ரோகன், ஷாலியன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஸ்ரீஹரி.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் சம்பவங்களை கதையாக கொண்ட படம். பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் கதைக்களம் கொண்டது.



    ஒரு இளம் பெண் அதை எப்படி கையாள்கிறாள் என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கிறோம். நாயகன், நாயகியை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தலாம் என்ற தப்பான எண்ணத்துடன் பழகுகிறான்.

    ஆனால் அவள் வீட்டுக்கு சென்ற அவன் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதன் பிறகு நடந்தது என்ன? நாயகியை நெருங்கினானா? என்பது கதையின் திடீர் திருப்பம். இந்த படத்துக்காக நாயகி உண்மையாகவே ரத்தம் சிந்தி நடித்து இருக்கிறார். படப்பிடிப்பின் போது காட்டு எருமைகளிடம் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினார்”

    என்றார்.
    ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி நாயகனாக களம் இறங்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் முன்னோட்டம்.
    ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. தற்போது இவர் கதாநாயகனாக அவதாரம் எடுத் திருக்கிறார் இவர் நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

    பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக் குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை பார்ம் ஸ்டோன் மல்டிமீடியா ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார்.



    இயக்குனர் பிரசாத் பிரபாகரன் இதுபற்றி கூறும் போது...

    “ ஹாலிவுட், பாலிவுட்டை சேர்ந்த 80-க்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை பதிவு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கேமராக்களை கொண்டு அந்த விழாவில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம்.

    ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இந்த படம் வெளிவருகிறது” என்றார். இந்த படத்தின் பாடல்கள் - டிரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.


    ×