என் மலர்
முன்னோட்டம்
கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, நாயகனாக ஆனந்த்பாண்டி, நாயகிகளாக ஜெனி பல்லவி, அனுலாவண்யா நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜனகராஜ், மனோஜ்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ராஜபாண்டி, இசை-லியாண்டர் லீ மார்ட்டி, படத்தொகுப்பு-சுதா, கலை-நந்தா, ஸ்டண்ட்- விஜய் ஜாக்குவார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம்- விஜய் ஸ்ரீஜி.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“சாருஹாசன் இதில் வடசென்னை தாதாவாக நடித்து இருக்கிறார். அவருக்கு இப்போது வயது 87. எனவே இந்த படத்துக்கு ‘தாதா 87’ என்று பெயர் வைத்து இருக்கிறோம். குழந்தைகள் பாலியல் கொடுமை செய்யப்படுவதற்கு எதிராக களம் இறங்கும் தாதாவாக சாருஹாசன் வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் பாட்டி சரோஜா நடிக்கிறார்.
உடல் நலகுறைவு, வயது எதையும் பார்க்காமல் அர்ப்பண உணர்வுடன் சாருஹாசன் நடித்தார். இளம் நாயகனாக ஆனந்த்பாண்டி நடித்து இருக்கிறார். இவருடன் 2 நாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவருடைய காதல் கதையும், சாருஹாசனின் தாதா கதையும் இணைந்து பயணிக்கும்.
‘தாதா 87’ படத்தில் இடம் பெற்ற ‘ஆறடி ஆண்டவன்...’ பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட வேண்டியது உள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது இருக்கும். ஜனவரியில் ‘தாதா 87’ திரைக்கு வரும்” என்றார்.

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் முன்னோட்டம்.
கார்த்தி நடிப்பில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறு கிறார்....
“இது போலீஸ் கதை. என்றாலும் வழக்கமான போலீஸ் கதை அல்ல. யதார்த்தமாக ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். இந்த போலீஸ் 10 பேரை அடித்து பறக்கவிட மாட்டார்.
கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.

கார்த்தி ஒரு விசாரணைக்காக வட மாநிலங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். இந்த படத்தில் 4 வட மாநிலத்தைச் சேர்ந்த வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். மும்பையில் ஜாமீன்கா, மராட்டியத்தில் கிஷோர்கதம், போஜ்புரியைச் சேர்ந்த ஜோகித் பதக், குஜராத்தைச் சேர்ந்த அபிமான் சிங் ஆகியோர் கார்த்தியுடன் மோதும் வில்லன்கள்.
1995 முதல் 2005 வரை 10 வருடங்களில் நடக்கும் கதை. செய்திதாள்களில் படிக்கும் குற்ற செய்திகளில் ஒன்றை படமாக்கி இருக்கிறோம்” என்றார்.

ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’. காதலர்களின் ‘ஐ லவ் யூ’ என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143.

இயக்குனர் ரிஷி கதா நாயகனாகவும் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா அறிமுகமாகிறார்கள். இவர்ளுடன் விஜயகுமார், கே.ஆர்.விஜயா,நெல்லைசிவா, மோனா,பசுபதி, தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ராஜேஷ் ஜே.கே, இசை -விஜய் பாஸ்கர், கலை - மணி மொழியன், ஸ்டண்ட் -தீப் பொறி நித்யா, எடிட்டிங் -சுரேஷ் அர்ஸ்.
படம் பற்றி இயக்குனர், கதாநாயகன் ரிஷி கூறும் போது....
“காதல், காமெடி, பேமிலி சென்டிமெண்ட் கலந்த ஒரு கலவைதான் 143. ரசிக்கும் படியான காதல் கதை. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும்.
அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி, இவர்கள் காதலுக்கு வில்லனாக ஒருவன். இந்த 3 கதாபாத்திரங்களின் ஓட்டமே திரைக்கதை” என்றார்.
ஆர்.பி.எம். சினிமாஸ் ராகுல் ‘143’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வளர்ந்துள்ள படம் `எக்ஸ் வீடியோஸ்'. இந்த படத்தில் நாயகர்களாக அபிநவ், நிஜய் நாயகியாக ஆஹிருதிசிங், இவர்களுடன் அஜய்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இயக்கம்-சஜோ சுந்தர் படம் பற்றி கூறிய அவர்... "நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில் நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண் காணிக்க முடியும்.
என் நண்பர் ஒருவர் எனக்கு, தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ. அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல அது பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவும் வைத்தது. அது தான் இந்த படத்துக்கு காரணம் இது ஆபாசமான படமல்ல. ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம். இதைத்தமிழிலும், இந்தியிலும் எடுத்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் எனக்கு லாபம் வந்தால் அதில் பெரும் பகுதியை அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன்'' என்றார்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக கலக்கியிருக்கும் `அறம்' படத்தின் முன்னோட்டம்.
கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `அறம்'.
சமூகத்தின் முக்கிய பிரச்சனை பற்றி அலசி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பு - ரூபன், ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ், இசை - ஜிப்ரான், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ்தயாரிப்பு - கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், கதை, திரைக்கதை, இயக்கம் - கோபி நயினார்.

படம் குறித்து `டிரைடண்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் பேசுகையில்,
''இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக 'அறம்' இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். 'அறம்' படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை''
என்று கூறினார்.

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தூத்துக்குடி ரவுடியாக நிவின்பாலி கலக்கும் ‘ரிச்சி’ படத்தின் முன்னோட்டம்.
காஸ்ட் என் க்ரூ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ரிச்சி’.
இதில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் நட்ராஜ் சுப்பிரமணியன், ஷரதா, ராஜ்பரத், லட்சுமி பிரியா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாண்டி குமார், இசை - அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு - ஆனந்த் குமார், வினோத் ஷொனூர். இயக்கம் - கவுதம் ராமச்சந்திரன்.
இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்.
படம் குறித்து இயக்குனர் கவுதம், ராமச்சந்திரன் கூறும் போது...
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். படகுகளை சரி செய்யும் மெக்கானிக் வேடத்தில் நட்டி நடித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். நிவின்பாலி தமிழில் முதல்முறையாக இந்த படத்தில் தான் அவருடைய சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறார்.
இந்த படம் நிவின் பாலிக்கு தமிழ்ப்பட உலகில் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். ‘ரிச்சி’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் இந்த படம் தணிக்கைக்கு அனுப்பப்பட இருக்கிறது.
டிசம்பர் 1-ந்தேதி ‘ரிச்சி’ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்' படத்தின் முன்னோட்டம்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9-வது படம் `இப்படை வெல்லும்'.
இந்த படத்தை ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும், அவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இசை - டி.இமான், ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன், கலை - விதேஷ், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், சண்டைப்பயிற்சி - திலிப் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் - வெங்கட்.கே, நிர்வாகத் தயாரிப்பு - எஸ்.பிரேம், இயக்கம் - கவுரவ் நாராயணன்.
சென்னை, அலஹாபாத், ஐதராபாத், பெங்களூர், திருவண்ணாமலை, ஓமன் என பல இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி பேசும் போது...
“இந்த படத்தில் ராதிகா எனக்கு அம்மாவாக நடிக்கிறார். பஸ் டிரைவராக வருகிறார். இதற்காக பஸ் ஓட்ட பயிற்சி பெற்று திருவண்ணாமலையில் பஸ் ஓட்டினார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். சண்டைக்காட்சியின் போது நிஜமாகவே என்னை அடித்துவிட்டார். பாலாவின் ‘தாரைதப்பட்டை’ படத்தில் நடித்ததால் அப்படி இயல்பாக நடித்தார். மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். ஓமன் நாட்டில் பாடல் காட்சி படமானது. அதில் சிறப்பாக நடித்தார்.
நானும் சூரியும் இந்த படத்தின் மூலம் 3-வது முறையாக சேர்ந்து நடித்திருக்கிறோம். இயக்குனர் கவ்ரவ் ஆக்ரோஷமாக கதை சொல்வார். இந்த படத்தில் முதல் முறையாக 7 கேமரா வைத்து படமாக்கி இருக்கிறார். சூரி இதில் காமெடியில் மட்டுமல்ல குணசித்திர வேடத்திலும் கலக்கி இருக்கிறார்” என்றார்.
படம் வருகிற நவம்பர் 9-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மீரா கதிரவன் இயக்கத்தில் கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு நடிப்பில் வெளியாக இருக்கும் 'விழித்திரு' படத்தின் முன்னோட்டம்.
'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி, தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'.
கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இசை - சத்யன் மகாலிங்கம், ஒளிப்பதிவு - விஜய் மில்டன், ஆர்.வி.சரண், படத்தொகுப்பு - பிரவீண்.கே.எல், என்.பி.ஸ்ரீகாந்த், கதை, திரைக்கதை, இயக்கம் - மீரா கதிரவன்.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும் போது,
இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள 'சவுந்தர்யன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான சுவாரஸ்யமாக, தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.
'விழித்திரு' வருகிற நவம்பர் 3-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது.

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்ணி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அவள்' படத்தின் முன்னோட்டம்.
'வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்' மற்றும் 'எடாகி என்டர்டெயின்மெண்ட்' இணைந்து தயாரித்திருக்கும் படம் 'அவள்'.
உறைய வைக்கும் திகில் படங்கள் சினிமா ரசிகர்களை எப்போதுமே கவரும். அந்த வகையில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இசை - கிரிஷ், ஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், கதை - மிலண்ட் ராவ், சித்தார்த், இயக்கம் - மிலண்ட் ராவ்.

இது குறித்து 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பேசுகையில்,
''உண்மையாகவே பயமுறுத்தி நடுங்கவைக்கும் படம் தான் 'அவள்'. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக 'அவள்' உள்ளது என உறுதியாக கூறலாம். பல விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து ஜொலிப்பவர் நடிகர் சித்தார்த். நவம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'அவள்' தமிழ் சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்.''
இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளார். நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையில், ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் 'அவள்' உருவாகியுள்ளது.
'அவள்' வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இதில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர்.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இதில் அஜய், ராஞ்சனா,ஜெயஸ்ரீ மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- நட்சத்திர பிரகாஷ், இசை- ஜெய் பிரகாஷ்,எடிட்டிங்-சாபு ஜோசப்,கலை- மார்ட்டின் டைட்டஸ், நடனம்-சாய் மதி,ஸ்டண்ட்-மைக்கேல், இயக்கம்-மங்களேஷ்வரன்.
“காடுகள் அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. இது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.
படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் செல்கிறது. காதல் அவனை லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது.
காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை” என்றார்.

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் ‘கர்ஜனை’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த படத்தில் மேற்கத்திய நடன அழகியாக திரிஷா நடித்துள்ளார்.
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் ‘கர்ஜனை’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த படத்தில் மேற்கத்திய நடன அழகியாக திரிஷா நடித்துள்ளார். இவருடன் வடிவுக்கரசி, தவசி, ஆர்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார்.
ஒளிப்பதிவு-சிட்டிபாபு, இசை-அம்ரீஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-சுந்தர்பாலு.
தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்று விடுகிறான். அதன் விளைவு என்ன என்பதே திரைக்கதை.
திரிஷா சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்லும்போது ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பது நாயகியின் பாத்திரம். இதில் அதிரடியான சண்டை காட்சிகளிலும் திரிஷா துணிச்சலாக நடித்திருக்கிறார். ஒரு கரடி சண்டையும் இடம் பெறுகிறது.
ஒரே நாள் இரவில் சம்பவங்கள் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. 5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து மிரட்டும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘கர்ஜனை’ தயாராகி இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரிக்கும் படம் ‘தடம்’.
இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை இயக்கியவர். “வித்தியாசமான கதை களத்தில் ‘தடம்’ பிரமாண்டமாக தயார் ஆகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல் தடம் படமும் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தடம்’ வேகமாக வளர்ந்து வருகிறது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.