என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் உத்தரவு மகாராஜா படத்தின் முன்னோட்டம்.
    ஜேசன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகும் படம் ‘உத்தரவு மகாராஜா’.

    ‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு - உதயா மீண்டும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக சேரா, ஸ்ரீபிரியங்கா, மிஷாகோல் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி உள்பட பலர் நடிக்கிறார்கள்.உதயா 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா, இசை - நரேன் பாலகுமார், எடிட்டிங் - டான் போஸ்கோ, ஸ்டண்ட் - தளபதி தினேஷ், நடனம் - சின்னிபிரகாஷ், இயக்கம் - ஆஸிப் குரைஷி. ஏராளமான விளம்பர படங்களை இயக்கிய இவர் தமிழ், இந்தி, பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

    “இது மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லர் கதை. பிரபு இது வரை நடிக்காத புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். உதயா இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்தும், மொட்டை அடித்தும், தாடி வைத்தும் 2 விதமான கெட்-அப்களில் நடிக்கிறார். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் 2 பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு இது வித்தியாசமான கதையாக இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்”என்றார்.

    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரகனி - கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘கோலிசோடா-2’ படத்தின் முன்னோட்டம்.
    ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கோலிசோடா-2’.

    இதில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன்சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இசை - அச்சு, எடிட்டிங் - தீபக், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், கலை - ஜனார்த்தனன், பாடல்கள் - மதன்கார்க்கி, மணி அமுதவன், தயாரிப்பு - பரத்சீனி. ஒளிப்பதிவு, இயக்கம் - எஸ்.டி.விஜய் மில்டன்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்....

    “ இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கவுதம்வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கதையை நான் எழுதும் போதே அவரை மனதில் வைத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன். இது ஒரு கவுரவ பாத்திரமாக இருந்தாலும் கதையை முன்நோக்கி கொண்டு செல்லும் பாத்திரம். அவர் நடிக்க ஒப்புக் கொண்டது பெரும் மகிழ்ச்சி. நான் நினைத்ததைவிட ‘கோலி சோடா-2’ சிறப்பாக உருவாகி வருகிறது” என்றார்.

    ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி - டயனா சாம்பிகா நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணாதுரை’.

    விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை, படத்தொகுப்பு - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - தில்ரா, கலை - ஆனந்த்மணி, ஸ்டண்ட் - ராஜசேகர், நடனம் - கல்யாண்.

    தயாரிப்பு - சரத்குமார், ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி, இயக்கம் - ஸ்ரீனிவாசன். இவர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்தவர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “நட்சத்திர கதாநாயகன் விஜய் ஆண்டனி சாருடனும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடனும் எனது முதல் படத்தில் இணைந்து பணியாற்றுவது பெருமை. மிகப்பெரிய தலைவரான அண்ணாவின் பெயரைக்கொண்ட படம் இது. என்றாலும், அவருடைய வாழ்க்கையை சார்ந்த படமல்ல. விஜய் ஆண்டனி ரசிகர்களையும் மற்ற ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வேறு கதைக்களத்தை கொண்டது.

    இதில் விஜய் ஆண்டனி இரண்டு பாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குடும்பபாங்கான ஜனரஞ்சகமான இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.

    தெலுங்கில் இந்த படம் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியாகிறது.

    முருகேஷ் பாரதி இயக்கத்தில் ரோ‌ஷன் - ஹர்ஷிதா நடிப்பில் பொய் சொல்வதை தடுக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘வெங்கட் சுப்பிரமணி மைக்டெஸ்டிங் 1...2...3’ படத்தின் முன்னோட்டம்.
    சுதேசி பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3’.

    ரோ‌ஷன் இந்த படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஹர்ஷிதா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகிசத்வா, வம்சி கிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து, ஆர்.என்.ஆர். மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஜெ.ஸ்ரீதர், இசை - ஷ்யாம் நம்பூதிரி, முருகேஷ் பாரதி, படத்தொகுப்பு - டி.எஸ்.ஜெய், வசனம் - பி. வெங்கட சுந்தரம், கலை - எம்.ஜி. முருகன், நடனம் - ராதிகா, சண்டைபயிற்சி - ஆர். சக்தி சரவணன், தயாரிப்பாளர்கள் - ரோ‌ஷன், ஜி.ஸ்ரீநிவாசன், கதை, திரைக்கதை, இயக்கம் - முருகேஷ் பாரதி. இவர் இயக்குனர் ஹரியிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர்.



    படம் பற்றி நாயகன் ரோ‌ஷன் கூறுகிறார்...

    “பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள் ளேன். ஒரு கிராமத்தில் பிறந்து அரசியல் கூட் டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங் களுக்கு மைக் செட் போடும் போது சந்திக்கும் சில பிரச் சினைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கிறது. பிரதமர் மோடி முதல் , சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படம்பிடித்துள்ளோம்” என்றார்.

    வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘ஜானி’.

    பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இதில், பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ், டி.வி.புகழ் சந்தியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - எம்.வி. பன்னீர் செல்வம், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், எடிட்டிங் - சிவசரவணன், கலை - மிலன் பர்னாண்டஸ், இயக்கம் - வெற்றி செல்வன்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது ரஜினி பட தலைப்பு. ஆனால், ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதை. சுவையான திருப்பங்களுடன் செல்லும் பிரபு வேடம் பேசப்படும். கலகலப்பான பாத்திரத்தில் ஆனந்தராஜ் நடித்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார்.



    ‘ஜானி’ விறுவிறுப்பான அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவரும் இந்த படம் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் கொண்டதாக இருக்கும்” என்றார். இதன் 3 கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், பெங்களூரில் நடந்து முடிந்துள்ளது.

    வேகமாக வளர்ந்து வரும் ‘ஜானி’யை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் முன்னோட்டம்.
    கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

    இந்த படத்தில் முதல் முறையாக கார்த்திக் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்கிறார். நாயகியாக ரெஜினா, முக்கிய வேடத்தில் வரலெட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த கூட்டணியில் தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சதீஷ் ‘காமெடி’ வேடத்தில் நடிக்கிறார்.

    இயக்கம்-திரு. படம் பற்றி கூறிய அவர்...

    “இதில் இணைந்துள்ள நடிகர்கள் கூட்டணி படத்துக்கு தூணாக அமைந்துள்ளது. படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் இருக்கிறது. கார்த்திக் சாருடனும் மூத்த இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோருடனும் பணி புரிய வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.



    இந்த படத்தின் தலைப்பு எங்களுக்கு பெரும் பலம். பிரபலங்களுடன் நான் பணி புரிவதால் எனது பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எல்லா வி‌ஷயங்களும் பொருத்தமாக அமைந்து. இதை பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி இருக் கிறது. எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித் துள்ளது.

    அதை நிறைவேற்றும் வகையில் பணிபுரிவோம். அனைவரும் விரும்பும் படமாக இது உருவாகும்” என்றார்.

    பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உதயநிதி - நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நிமிர்’ படத்தின் முன்னோட்டம்.
    மூன்சாட் எண்டர்டெயின் மென்ட் தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.

    இதில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இவர்களுடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    போட்டோகிராபராக நடிக்கும் உதயநிதிக்கு, இந்த படத்தில் தன் சுயபலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழி வாங்கும் கதாபாத்திரம்.

    ஒளிப்பதிவு - என்.கே.ஏகாம்பரம், கதை - சுயாம் புஸ்கரன், வசனம் - சமுத்திரக்கனி, இசை - தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத், படத்தொகுப்பு - நாயர் எம்.எஸ்., கலை - மோகன்தாஸ், தயாரிப்பு - சந்தோஷ் டி குரு வில்லா, இயக்கம் - பிரியதர்‌ஷன்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இது எனக்கு ஒரு ஸ்பெ‌ஷல் படம். இவ்வளவு ஆண்டு காலம் திரைதுறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக அவர் நடித்துள்ளார்.

    சமுத்திரகனியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் அருமையாக நடித்துள்ளார். சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். ‘நிமிர்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

    ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் முன்னோட்டம்.
    புளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

    இதில் கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    சந்தோஷ் பி ஜெயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். பாலமுரளி பாலா இசை அமைக்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - சுப்ரமணிய சுரேஷ்.



    படம் பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கூறும் போது...

    “ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும்” என்றார்.

    “ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹரஹரமஹா தேவகி’ கூட்டணி மீண்டும் இணைவதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    வாசன் ஷாஜி இயக்கத்தில் குத்துச்சண்டை வீரர்களின் மோதலை சொல்லும் படமாக உருவாகி இருக்கும் ‘வாண்டு’ படத்தின் முன்னோட்டம்.
    எம்.எம்.பவர் சினி கிரியே‌ஷன்ஸ் வழங்க வாசன் ‌ஷஜி தயாரிக்கும் படம்‘வாண்டு’.

    இதில் புதிய நாயகன் சீனு, மற்றொரு நாயகனாக எஸ்.ஆர்.குணா, நாயகியாக ஷிகா நடிக்கிறார்கள். இவர்களுடன் மஹகாந்தி, ரமா, சாய்தீனா, புவனேஸ்வரி, ரவிசங்கர், ‘வின்னர்’ பட தயாரிப்பாளர் ராமசந்திரன், முருகன், ஆல்விக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை - அறிமுகம் ஏ.ஆர்.நேசன், பாடல்கள் - மோகன் ராஜா, ஒளிப்பதிவு - ரமேஷ், வி.மஹேந்திரன், படத்தொகுப்பு - பிரியன், கலை - ஜே.பி.கே.பிரேம், நடனம் - பாபி ஆண்டனி, ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ்.

    கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - வாசன் ஷாஜி.

    இவர் இயக்குனர் செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தவர்.



    ‘வாண்டு’ வட சென்னையில் 1970 - 1971-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

    நாயகனின் அப்பாவும், வில்லன் அப்பாவும் மோதும் குத்துச்சண்டை போட்டியில் ஹீரோவின் அப்பா வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். 5 வருடங்களுக்கு பின் வில்லனின் மகன் பயிற்சிப் பெறும் குத்து சண்டை பயிற்சி பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார். இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது.

    இந்த வி‌ஷயம் இரண்டாவது ஹீரோவான குத்துசண்டை மாஸ்டருக்கு தெரிய வருகிறது. மாஸ்டர் ஹீரோவிற்கு சிறப்பு பயிற்சி கொடுக்க ஹீரோ, வில்லன் மகனுடன் வடசென்னையில் நடக்கும் பெரிய போட்டியில் சந்திக்கிறார். இவர்களுக்குள் என்ன நடக்கிறது? என்பது மீதிக் கதை.

    கிரியேட்டிவ் சினிமாஸ் என்.ஒய் சுகுமார், என்.ஜே.என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் `100 சதவீத காதல்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு அவரே இசை அமைக்கிறார்.
    கிரியேட்டிவ் சினிமாஸ் என்.ஒய் சுகுமார், என்.ஜே.என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் `100 சதவீத காதல்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு அவரே இசை அமைக்கிறார். இவருடன் நடிக்கும் நடிகர்- நடிகைகள் பெயர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    ஒளிப்பதிவு -கணேஷ்.ஆர், கலை- தோட்டா தரணி,நடனம்- பிரேம்ரஷித், நிக்ஷன். இயக்கம்- எம்.எம்.சந்திர மௌலி. முன்னணி ஒளிப்பதிவாளரான இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

    ஆந்திர பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்பை முடித்தார். பின்னர் சென்னை திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட தயாரிப்பு பிரிவுகளில் தேர்வு பெற்றார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரிடம் உதவியாளராக சேர்ந்தார். 7வருடங்களில் 12-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பல்வேறு மொழிகளில் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிïயார்க்கில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்களுடன் பணி புரிந்துள்ளார்.

    "இந்த படம்100 சதவீதம் முழுவதும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகிறது. இன்றைய சூழலில் இந்த படம் தமிழ் திரை உலகில், புத்துணர்ச்சியையும், புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தும்'' என்று இயக்குனர் சந்திரமௌலி நம்பிக்கை தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறுகிறது. வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    கோடை விடுமுறையில் `100 சதவீதம் காதல்' படத்தை திரைக்கு கொண்டு வரமுடிவு செய்திருக்கிறார்கள்.
    சுந்தர் சி.இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் `கலகலப்பு'. சிவா, சந்தானம், அஞ்சலி,ஓவியா நடித்த இந்த படம் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு தயாரானது.
    சுந்தர் சி.இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் `கலகலப்பு'. சிவா, சந்தானம், அஞ்சலி,ஓவியா நடித்த இந்த படம் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு தயாரானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற `கலகலப்பு' படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகிறது.

    `கலகலப்பு-2' என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், சிவா இணைகிறார்கள். கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, ரோபோசங்கர், மனோபாலா, சிங்கம்புலி, சந்தானபாரதி, வையாபுரி, அனுமோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    இசை-ஹிப்ஹாப் தமிழா ஆதி. வசனம்-பத்ரி, தயாரிப்பு-குஷ்பு சுந்தர், கதை, திரைக்கதை, இயக்கம்- சுந்தர்.சி. குஷ்பு சுந்தர் ஏற்கனவே `கிரி', `ரெண்டு', `தலைநகரம்', `கலகலப்பு', `தீயாவேலை செய்யணும் குமாரு', `அரண்மனை', `ஐந்தாம்படை', `மீசையை முறுக்கு' படங்களை தயாரித்துள்ளார். இப்போது `கலகலப்பு-2' படத்தை தயாரிக்கிறார்.

    `கலகலப்பு-2' நகைச்சுவை படமாக உருவாகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி 15- நாள் நடைபெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு காசி, இந்தூர், புனே, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 2-வது வாரத்திற்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.
    அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
    அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை-டி.இமான், ஒளிப் பதிவு- ஜே.லக்ஷ்மன், எடிட்டிங்-மு.காசிவிஸ்வ நாதன், பாடல்கள்-வைரமுத்து, மதன்கார்க்கி, யுகபாரதி, கலை-பி.சேகர், ஸ்டண்ட்-அன்பறிவ், நடனம்-ஷோபி பால்ராஜ், தயாரிப்பு-ஆண்டனி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-சுசீந்திரன்.

    “துணிவுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்ற கருவை மையமாக வைத்து இந்த கதை பின்னப்பட்டுள்ளது. காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கதையாக இது உருவாகி இருக்கிறது. விக்ராந்த் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நிச்சயம் ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    ×