என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஷக்தி என்.சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் - டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிக்கிற குதிர’ படத்தின் முன்னோட்டம்.
    சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம்‘ஜெயிக்கிற குதிர’.

    இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப் பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, பவர்ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஆஞ்சி, இசை - கே.ஆர்.கவின்சிவா, எடிட்டிங் - ரஞ்சித்குமார், கலை - மணிகார்த்திக் ஸ்டண்ட் - தளபதி தினேஷ், நடனம் - கூல் ஜெயந்த், தயாரிப்பு - டி.ஆர்.திரேஜா

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ‌ஷக்தி என்.சிதம்பரம்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

    “இதில் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கிளாமர் போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. எனவே, அவர்களிடம் இது நல்ல வரவேற்பை பெறும்.

    படம் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கும். விரைவில் வெளியாக உள்ளது” என்றார்

    இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் ‘பக்கா’ படத்தின் முன்னோட்டம்.
    ‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.

    இதில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு - எஸ்.சரவணன், இசை - சி.சத்யா , பாடல்கள் - யுக பாரதி, கபிலன், கலை - கதிர், நடனம் - கல்யாண், தினேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், எடிட்டிங் - டி.சசி குமார், தயாரிப்பு - டி.சிவகுமார்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.எஸ்.சூர்யா



    படம் பற்றி விக்ரம் பிரபு கூறியதாவது...

    “திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் கிரிக்கெட் வெறியன்.

    ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் வைத்திருப்பவர் நிக்கி கல்ராணி. கிராமத்து பெரிய மனிதர் மகள் பிந்து மாதவி. இந்த 3 பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான ‘பக்கா’ படம். இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு. கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்” என்றார்.

    தயாரிப்பாளர் டி.சிவகுமார், “‘பக்கா’ நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக இருக்கும். படத்தில் நான் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.

    மோகன்பாபு மகன் விஷ்ணுமஞ்சு தமிழில் அறிமுகமாகும் ‘குறள் 388’ படத்தின் முன்னோட்டம்.
    தெலுங்கு பட நாயகனாக இருப்பவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனான இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ‘குறள் 388’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.

    தமிழில் ‘குறள் 388’ என்றும், தெலுங்கில் ‘வோட்டர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

    விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார். இவர்களுடன் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இதை ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, ‘காட்சி நேரம்’ ஆகிய படங்களை தயாரிக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.

    இசை - எஸ்.எஸ்.தமன், வசனம் - ரவிசங்கர், ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், கலை - கிரன்மன்னி, திரைக்கதை - கே.எல்.பிரவீன், எழுத்து, இயக்கம் - ஜி.எஸ்.கார்த்தி.



    ‘‘உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருக்குறள் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை.

    முறை செய்து காப்பாற்றும் மன்னன் மக்களுக்கு இறையென்று வைக்கப்படும் என்ற 388வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதைக்கரு. பரபரப்பான இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக இது உருவாகிறது’’ என்றார்.

    விஷ்ணு மஞ்சு கூறும்போது... ‘‘இந்த படம் எனது தமிழ் திரையுலக பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும். இதில் காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கிறது. விஜயதசமி அன்று எனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
    ஆகாஷ் சுதாகர் இயக்கத்தில் பாலியல் வன்கொடுமையை எதிர்க்கும் ‘நரிவேட்டை’ படத்தின் முன்னோட்டம்.
    சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘நரிவேட்டை’.

    இந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய ஆகாஷ் சுதாகர் புதுமுக நாயகனாகவும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், கிளிமூக்கு ராமசந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சரவணன், இசை - சார்லஸ் தனா, பாடல்கள் - ஆகாஷ் சுதாகர், படத்தொகுப்பு - சி.கணேஷ்குமார், கதை, திரைக்கதை, இயக்கம் - ஆகாஷ் சுதாகர். படம் பற்றிய இயக்குனர் கூறுகிறார்...



    “பாலியல் வன் கொடுமைக்கு எதிராக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரில் முக்கிய நான்கு பேரால் ஒரு பெண் கெடுக்கப்படுகிறாள். அந்த பெண்ணின் நிலைமை என்ன? அந்த நான்கு பேர் என்ன ஆனார்கள்? என்பதுதான் இந்த படத்தின் கதை.”

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டிராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘நரி வேட்டை’ விரைவில் திரைக்கு வருகிறது.
    குமரேஷ்குமார் இயக்கத்தில் வடசென்னை தாதாவாக ராம்கி மிரட்டும் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.ஜே.மீடியா கிரியே‌ஷன்ஸ் சார்பில் ஆர்.ஜே.எம்.வாசுகி தயாரித்துள்ள படம் ‘இங்கிலிஷ் படம்’. இதில் ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சாய்சதிஷ், படத்தொகுப்பு - மகேந்திரன், கலை - பழனிவேல், பின்னணி இசை - நவுசாத், இயக்கம் - குமரேஷ்குமார்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “இந்த படத்திற்கு ‘இங்கிலிஷ் படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இதில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். இவர் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அங்கு பேய் இல்லை என்று நிரூபித்தால் வீட்டை வாங்குவதாக ஒருவர் சொல்கிறார்.



    எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க, அதில் ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது. அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளை. படம் முழுவதும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாகி இருக்கிறது.

    இது ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும். இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்கிறார்.
    அப்பு மூவிஸ் சார்பில் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள படம் ‘இட்லி’. இதில் சரண்யா, கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    அப்பு மூவிஸ் சார்பில் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள படம் ‘இட்லி’. இதில் சரண்யா, கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி , வெண்ணிறஆடை மூர்த்தி இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ‘இட்லி’ படத்தை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாதரன்.

    “நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தகாலத்துக்கு தேவையான மெசேஜ் உள்ளது. திட்டமிட்டப்படி 29 நாட்களில் படபிடிப்பை முடித்தோம். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை என் மனதில் தோன்றியது.

    வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தில் பாடல்கள், ஆக்‌ஷன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது இட்லி படத்தின் ஸ்பெ‌ஷல். அனைவரையும் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் கதையை சரண்யாவிடம் முதலில் கூறிய போது சந்தேகத்தோடு கேட்டார். நடித்து முடித்து காட்சியை பார்த்த போது அனைவருக்கும் மனநிறைவாக இருந்தது.” என்றார்.

    இந்த படத்தின் டீசரை கார்த்தி வெளியிட்டார். ‘இட்லி’ விரைவில் திரைக்கு வருகிறது.
    எம்.ஏ.பாலா இயக்கத்தில் கியாவோஸ் விதியை பயன்படுத்தி உருவாகி வரும் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ படத்தின் முன்னோட்டம்.
    டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.

    கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை - எப்.ராஜ் பரத், ஒளிப்பதிவு - டேவிட் ஜான், படத்தொகுப்பு - ஆனந்த் ஜெரால்டின், பாடல்கள் - வடிவரசு, தயாரிப்பு - மாரியப்பன் ராஜகோபால், எழுத்து, இயக்கம் - எம்.ஏ.பாலா. இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் பணிபுரிந்தவர். படதயாரிப்பு பற்றி படித்தவர். பல குறும்படங்களை இயக்கி உள்ளார். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...



    “இந்த உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை சொல்லும் கியாவோஸ் விதியை பயன்படுத்தி உருவாக்கிய கதை இது. தமிழ் சினிமா அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்த படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா..... இல்லையா..... என்பதை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
    டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த் இயக்கி அவரே நடிக்கும் ‘கோழி ராஜா’ படத்தின் முன்னோட்டம்.
    ஜே.எஸ்.பிலிம்ஸ் தயாரிப்பில் நடன இயக்குனர் கூல் ஜெயந்த் இயக்கி நடிக்கும் படம் ‘கோழிராஜா’.

    இந்த படத்தில் தம்பி ராமய்யா, கூல் ஜெயந்த், பாரதிராஜா மகன் மனோஜ், சினிமா செய்தி தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் மகன் விஜய்நாயக், சோனா நாயர், நவநீதா, கீதாஞ்சலி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    சமுதாயத்தை ஏமாற்றி பிழைக்கும் 5 பேர் போலீசில் சிக்குகிறார்கள். இவர் களுடைய பிளாஷ் பேக் தான் கதை. ஏமாற்றி வாழ்ந்தால் நல்லதா? நியாயமாக வாழ்வது நல்லதா? என்பதை சுவையாக இந்த கதை சொல்கிறது.

    எஸ்.கணேஷ்ராம் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் - கூல் ஜெயந்த்.

    படம் இயக்குவது குறித்து கூறிய அவர்....

    நான் 10-ம் வகுப்பு படிக்கும் போதே நடன இயக்குனர் புலியூர் சரோஜா மூலம் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் டான்சர் ஆனேன். பிரபுதேவா, ராஜூசுந்தரம் இருவரிடமும் உதவியாளராக பணிபுரிந்தேன். 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளேன்.

    பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தற்போது 3 படங்களில் நடன இயக்குனராக பணிபுரிகிறேன். இப்போது ‘சாக்லட்பேபி’ என்ற இசை ஆல்பத்தை இயக்கி உருவாக்கியுள்ளேன்.

    இதில் பங்கேற்றவர்கள் நான் இயக்கும் ‘கோழி ராஜா’ படத்திலும் நடிக்கிறார்கள்” என்றார்.

    ஜி.கே.சத்யா இயக்கத்தில் ஆணவ கொலையில் புகுந்த அரசியலை தோலுரிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘களிறு’ படத்தின் முன்னோட்டம்.
    சி.பி.எஸ்.பிலிம்ஸ், அப்பு ஸ்டுடியோ ஆகியவை சார்பில் ப.விஷ்வக், ஏ.இனியவன் தயாரித்துள்ள படம் ‘களிறு’.

    ஆணவ கொலைகளை மையமாக கொண்ட இந்த படம் நாட்டில் நடைபெற்ற பல்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாகி உள்ளது.

    இந்த படத்தில் விஷ்வக், அனுகிருஷ்ணா, நீரஜா, தீபா ஜெயன், சிவநேசன், துரை, சுதாகர், ஜீவா, உமா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - டி.ஜே.பாலா, இசை - புதுமுகம் என்.எல்.ஜி.சிபி, கலை - மார்ட்டின் டைட்டஸ், எடிட்டிங் - நிர்மல், நடனம் - ராதிகா, ஸ்டண்ட் - திரில்லர் முகேஷ், இயக்கம் - புதிய இயக்குனர் ஜி.கே.சத்யா.



    படம் பற்றி இயக்குனர் சத்யா பேசும் போது...

    “இது இன்று நாட்டில் நிலவுகிற சமுதாயச் சூழலை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் படம். ‘களிறு’ என்பது ஆண் யானையைக் குறிக்கும். அரசியல்வாதிகள் தங்கள் அதிகார வெறிக்கும் பண வெறிக்கும் எதையும் செய்யத் துணிவார்கள். அவர்களின் சுயநல இரக்கமற்ற குணத்தை இது குறிப்பிடுகிறது.

    வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை அரசியல் வாதிகள் ஊதிப்பெரிதாக்கி நாட்டுப்பிரச்சினையாக்கி குளிர் காய்கிறார்கள். ஆணவக்கொலையில் புகுந்துள்ள அரசியலை இந்த படம் தோலுரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் கொதித்து எழுந்தால் என்ன ஆகும் என்று சொல்கிறது. இது சினிமா மணம் இல்லாமல் விறுவிறுப்புடன் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் நாகர்கோவிலில் நடந்துள்ளது” என்றார்.

    ரமணி இயக்கத்தில் மருந்து விற்பனை மோசடியை தோல் உரிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘ஒளடதம்’ படத்தின் முன்னோட்டம்.
    ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒளடதம்’.

    நாயகியாக டெல்லி மாடல் அழகி சமீரா நாயகியாக நடித்துள்ளார். 2-வது நாயகனாக சந்தோஷ் நடித்திருக்கிறார்.

    மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல், அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக சந்தைப்படுத்துதல் என்று விரியும் காமெடி திரில்லர்படமாக இது உருவாகி இருக்கிறது.

    தன்ஷி இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் - ரமணி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.



    இது பற்றி கூறிய இயக்குனர் ரமணி....

    “சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

    இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.

    ‘ஒளடதம்’ படத்தை கீழக்கரை அஜ்மல் வெளியிடுகிறார்.
    மொழி திணிப்பு விவகாரத்தில் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் நடக்கும் போராட்டமாக உருவாகி இருக்கும் ‘பாடம்’ படத்தின் முன்னோட்டம்.
    ரோலன் மூவிஸ் சார்பில் ஜிபின் பி.எஸ். தயாரித்துள்ள படம் ‘பாடம்’.

    இதில் புதுமுகங்கள் கார்த்திக், மோனா ஆகியோர் நாயகன்- நாயகியாக நடித்துள்ளனர். விஜித் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    இசை - கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு - மனோ, படத்தொகுப்பு - ஜிபினின், ஸ்டண்ட் - ஆக்‌ஷன் பிரகாஷ், கலை - பழனிவேல். இயக்கம் - ராஜசேகர். இவர் இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக பணி புரிந்தவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும், மொழியையும் திணிப்பதால் நடக்கும் சீர்கேடுகள் பற்றிய படம் இது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். வாழ்க்கை முறையல்ல. இது பலருக்கு புரிவதில்லை. இதை மையமாக வைத்து ஒரு மாணவனுக்கும், ஆசிரியருக்கும் நடக்கும் போராட்டமே இந்த படம்.



    இந்த போரில் மாணவன் தனது சவால்களை எப்படியெல்லாம் சந்தித்து வெற்றி பெற்றான் என்பதுதான் இந்த படத்தின் கதை. நமது கல்வி விதிமுறையையும், பெற்றோரின் மனநிலையை யும்,மாணவர்கள் மீது சுமத்தப்படும் சமுதாய அழுத்தங்களையும் இந்த படம் அலசும்.

    சமீபத்தில் ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய பிரச்சினை பற்றி இந்த படம் பேசும். எனவே எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் ‘பாடம்’ கதையுடன் இணைந்து ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

    இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டும் படமாக உருவாகி இருக்கும் ‘குத்தூசி’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் ‘குத்தூசி’.

    இதில் ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் வெளிநாட்டு நடிகர் அந்தோணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - என்.கண்ணன், ஒளிப்பதிவு - பாஹி, பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை, எடிட்டிங் - கே.வி. மணிகண்ட பாலாஜி, கலை - ஸ்ரீஜெய் கல்யாண், வசனம் - வீருசரண், ஸ்டண்ட் - ராஜசேகர், நடனம் - ராதிகா, சங்கர், இயக்கம் - சிவசக்தி.

    “ இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.



    நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

    காதல், ஆக்‌ஷன், எமோ‌ஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.
    ×