என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ் - வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

    இதில் சத்யராஜும், வரலட்சுமியும் எடையை குறைத்து வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு - சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், எழுத்து, இயக்கம் - கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “ஆள் கடத்தலை மையமாக கொண்ட இக்கதை ஒரே நாளில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, தன் தாத்தாவுக்கு கதை சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ள கதைக்களம், நம் கண்முன்னே காட்சிகளாய் விரியும் போது, ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும்” என்றார்.

    சென்னை, புதுச்சேரியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் முன்னோட்டம்.
    ‘ரோமியோ ஜூலியட்’ , ‘கத்திசண்டை’ படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

    இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், எடிட்டிங் - கோவிந்த ராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா, எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார்.

    இந்த படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி ஆகிய இடங்களில் விஜய்சேதுபதி தொடர்பான பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

    2-ம்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடக்கிறது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.

    படம் பற்றி கூறிய இயக்குனர் பிரேம்குமார்...

    “ இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களுக்காக இவ்வளவு வேறுபட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவு லொக்கே‌ஷன்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு டிராவலிங் சம்பந்தப்பட்ட கதை என்பதால் 30 லொகே‌ஷன்கள் தேவைப்படுகிறது” என்றார்.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஹர ஹர மஹாதேவகி' படத்தின் முன்னோட்டம்.
    தங்கம் சினிமாஸ் சார்பில் தங்கராஜ் தயாரித்துள்ள படம் `ஹர ஹர மஹாதேவகி'.

    கவுதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரவிமரியா, சதீஷ், பால சரவணன், நமோ நாராயணனன், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் மயில்சாமி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    வெளியீடு - ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ், நிர்வாக தயாரிப்பு - நிர்மல் கண்ணன், இசை - பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு - செல்வகுமார்.எஸ்.கே., கலை - சுப்ரமணிய சுரேஷ், நடனம் - பாபா பாஸ்கர், ஷெரிப், சதீஷ், பாடல்கள் - கு.கார்த்தி, கானா கடல், சந்தோஷ் பி.ஜெயக்குமார்

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  - சந்தோஷ் பி.ஜெயக்குமார்



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும்போது,

    “இது 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். ‘ஏ’ சான்று பெற்ற படம். ஆனால் எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. முதல் பாதி காதல். இரண்டாம் பாதி அதில் பிரிவு என்று பரபரப்பாக கதை நகரும்” என்றார்.

    விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் முன்னோட்டம்.
    கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’.

    இதில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

    இசை - எஸ்.எஸ்.தமன்,ஒளிப்பதிவு - சுகுமார், பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர், கலை-மாயா பாண்டியன், எடிட்டிங் - ரூபன், நடனம் - பிருந்தா, தஸ்தாகீர், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன், தயாரிப்பு - மூவிங் பிரேம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்சந்தர்.



    இந்த படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு ‘அச்சி புச்சி ஸ்கெட்சு’ என்ற பாடல் காட்சி பிர மாண்டமாக பட மாக்கப் பட்டது.

    விக்ரம் இதில் நடனமாட அவருடன் 150 நடன அழகிகள் 1500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்றனர். தஸ்தாகீர் நடன அமைப்பில் இது படமாக்கப்பட்டது. வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் இது.

    படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    சுடுகாட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் அதிர்ச்சி கதையான உருவாகியிருக்கும் ‘ஆறடி’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீசிவ குடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார், எஸ்.சுமதி, எஸ்.மோகனவேல் கூட்டாக தயாரிக்கும் படம் ‘ஆறடி’.

    இதில் நாயகனாக விஜய்ராஜ், நாயகியாக தீபிகா நடிக்கிறார்கள். இவர்களுடன் டாம் பிரான்கோ, ஜீவிதா, சாப்ளின்பாலு, பெஞ்சமின், சுப்புராஜ், ஜெயமணி, சுமதி, சிபி, தினேஷ் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு - விஜயன், இசை - அபி ஜோஜோ, படத்தொகுப்பு - காளிதாஸ், கலை - எஸ்.நவீன்குமார், கதை, திரைக்கதை, வசனம் - எம்.சக்திவேல், இயக்கம் - ஜே.சந்தோஷ்குமார். இவர் பல்வேறு குறும்படங்களை இயக்கி விருது பெற்றவர். ‘ஆறடி’ படத்தின் மூலம் திரை உலகில் இயக்குனராகிறார்.



    “இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சுடுகாட்டில் ஒரு பெண் வெட்டியான் வேலை பார்க்கிறார். அவராகவே விரும்பி அந்த வேலைக்கு சென்றாரா? இல்லை சமூகம் அங்கு தள்ளியதா? இதை அறிய பத்திரிகையாளரான நாயகன் பேட்டி எடுக்க செல்கிறான். அங்கு அவனுக்கு கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதை கதைக்களமாக கொண்டு உருவாகும் படம் ‘ஆறடி’.

    சேலம், காமநாயக்கன்பட்டி பகுதிகளில் இந்த படம் வளர்ந்துள்ளது” என்றார்.
    என்.டி.நந்தா இயக்கத்தில் அனுஹாசன் அசத்தும் ‘வல்ல தேசம்’ படத்தின் முன்னோட்டம்.
    லக்‌ஷனா பிக்சர்ஸ், பவர்டூல்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வல்ல தேசம்’.

    இதில் அனுஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நாசர், அமித், ஆடுகளம் ஜெயபாலன், டேவிட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - எல்.வி. முத்துக் குமாரசாமி, எடிட்டிங் - தீபக் எஸ். துவாரக் நாத். ஸ்டண்ட் - ஜிம் தார்க், கிரிஷ்ட் ஹாவ், நைப் நரேன், எடிட்டிங் - தீபக் எஸ்.துவாரக்நாத், தயாரிப்பு - கே.ரவீந்திரன், எஸ். இமானுவேல், ஒளிப்பதிவு, இயக்கம் - என்.டி.நந்தா.

    ‘வல்லதேசம்’ படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

    இது பெண்களை பெருமைப்படுத்தும் படம். உடன் இருப்பவர்கள் ஊக் கம் அளித்தால் பெண் களால் பெரிய சாதனை களை செய்ய முடியும் என்பதை சொல்லும் கதை. இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணமாக அனுஹாசன் குடும்பத்துடன் லண்டன் செல்கிறார். அங்கு அவருடைய குழந்தை கடத்தப்படுகிறது. இதனால் ஆவேசம் அடையும் அவர் குழந்தையை மீட்க எப்படி போராடுகிறார் என்பதே கதை.



    இதில் அனுஹாசன் ஆக்‌ஷன் நாயகியாக அவதாரம் எடுத்து இருக் கிறார். சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். ஏற்கனவே சிலம்பம், களரி கற்று இருந்த அவர் லண்டனில் சிறப்பு பயிற்சி பெற்றார். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.

    70 சதவீத படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்தது. அனு ஹாசனுக்கு பெயர்சொல்லும் படமாகவும், பெண்களின் மதிப்பை அதிகரிக்கும் படமாகவும் இது இருக்கும்.

    பல்வேறு விழாக்களில் இந்த படம் பாராட்டு பெற்றது. படமாக்கிய விதமும் வித்தியாசமானது. நிச்சயம் இது ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.

    படம் நாளை முதல் திரைக்டகு வர இருக்கிறது.
    சரண் இயக்கத்தில் வினய் - சமுத்ரிகா - ஸ்வஸ்திகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் முன்னோட்டம்.
    சங்கர் கே.பிரவீன் பிலிம்ஸ் மற்றும் சரண் மூவி பேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சரண் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக வினய்யும், நாயகியாக சமுத்ரிகா, ஸ்வஸ்திகாவும் நடிக்கின்றனர்.

    இவர்களுடன் கேஷா கம்பத்தி, அருள்தாஸ், மயில்சாமி, இளவரசு, டேனியல் அனி போப், காஜல் பசுபதி, பிரதீப் ராவத், ரேதிகா ஸ்ரீனிவாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    இசை - பரத்வாஜ், ஒளிப்பதிவு - கிருஷ்ணா ரமணன், பாடல்கள் - கபிலன் வைரமுத்து, சரண், வைரமுத்து, கலை இயக்குநர் - எம்.பிரபாகர், நடன இயக்குநர் - ராஜு சுந்தரம், விஜி சதீஷ், படத்தொகுப்பு - ஏ கெவின், சண்டை இயக்குநர் - சுப்ரீம் சுந்தர்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சரண். 



    2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளுக்கு நடுவே நடந்து முடிந்தது. இதையடுத்து நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இப்படத்திற்கு தற்போது விடிவு காலம் வந்துள்ளது.

    வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
    எம். பிரதாப் முரளி இயக்கத்தில் சிறை பின்னணியில் உருவாகியிருக்கும் 'திட்டி வாசல்' படத்தின் முன்னோட்டம்.
    கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் 'திட்டி வாசல்'.

    இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது.

    திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும்.

    படத்தை இயக்கியுள்ளவர் எம். பிரதாப் முரளி படம் பற்றி அவர் பேசும்போது,

    "போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் திட்டிவாசல் படம்.



    இது முழுக்க முழுக்க சிறை பின்னணியில் நடக்கும் கதை. இது மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் யதார்த்தமாகப் பேசுகிறது'' என்கிறார்.

    படத்தில் நாசர் முக்கியபாத்திரம் ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னிவினோத் வருகிறார்கள். தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், ஸ்ரீதர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

    இது தனி ஒருவரின் கதையல்ல. ஒரு விளிம்புநிலை சமூகம் சார்ந்த பதிவு.

    ஒளிப்பதிவு - ஜி.ஸ்ரீனிவாசன். ஹரீஷ், சத்தீஷ் ஜெர்மன் விஜய் என மூவர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் - நா.முத்துக்குமார், சதீஷ், சிவமுருகன்.

    நடனம் - 'தில்' சத்யா, ராஜு. ஸ்டண்ட், 'வயலன்ட் 'வேலு, த்ரில்லர் மஞ்சு.



    படம் பற்றி இயக்குநர் மேலும் பேசும் போது "இன்று மக்களிடம் உள்ள பிரச்சினைகளும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. ஆனால் என்றுமே வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் .அது எப்படி சாத்தியம்? சிறு சிறு குழுக்களாக இயங்கும் மக்கள் ஒரே சக்தியாக இணைய வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம் என்று  படத்தில் சொல்லியிருக்கிறோம்'' என்கிறார்.

    சென்னை, கோத்தகிரி, கேரளா, வயநாடு ,கோவா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

    முப்பத்தைந்து நாட்களில் காடு, மலை சார்ந்த பகுதிகளிலேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி தங்கள் தொழில் வேகத்தைக் காட்டியுள்ளது படக்குழு.

    இப்படத்தை  'கே 3 'சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசராவ் தயாரித்திருக்கிறார்.

    'திட்டிவாசல்' படம் செப்டம்பர் 22-ல் திரையரங்கு வாசல் வருகிறது.
    ஜோ.தாம்சன் இயக்கத்தில் மாணவியின் ஆவி நியாயம் கேட்கும் படமாக உருவாகி இருக்கும் ‘பிறவி-2’ படத்தின் முன்னோட்டம்.
    எடிசன் பாரடைஸ் நிறுவனம் சார்பாக ஜோ.தாம்ஸன் தயாரிக்கும் திகில் படம் ‘பிறவி 2’.

    ஜோ.தாம்சன் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஆண்டனி, ஸ்வேதா நாயகன் - நாயகியாக அறிமுகமாகிறார்கள். மதுமிதா விக்கி, மாஸ்டர் அபய், பேபி தீப்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    “பகலில் அழகாகவும், இரவில் அமானுஷ்யமாகவும் காட்சியளிக்கும் கொடைக்கானலுக்கு பேய்க்கதை எழுதச் செல்கிறான் கதாநாயகன். அவனிடம் ஒரு இளம் கல்லூரி மாணவியின் ஆவி தன் ரத்தத்தையே உறையவைத்த தன்னுடைய காதல் கதையை திகிலோடும், ஆக்ரோ‌ஷத்தோடும் வெளிப்படுத்துகிறது.

    “உறைந்துபோன என் ரத்தம் உருகி வழியும் காலம் ஒன்று வரும்.. அதற்காக காத்திருக்கிறேன்.. கதற கதற பழிவாங்குவேன்” என்று ஆவேசமாக கூறிவிட்டு மறைகிறது.

    அந்த இளம் மாணவியின் ஆவி, தன் கதையை கதாநாயகனிடம் வெளிப்படுத்தியது ஏன்..? யாரை, எதற்காக பழிவாங்க காத்திருக்கிறது..? என்பது மீதி கதை.

    நியாயம் கேட்கும் ஓர் ஆவியின் மரணவாக்கு மூலமே ‘பிறவி-2’.

    திகில், அமானுஷ்யம் கலந்து உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம் இது. இதன் பெரும்பாலான காட்சிகள் கொடைக் கானல், சென்னை, காரைக்கால் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

    இசை - ஜெபக்குமார் பெஞ்சமின், ஒளிப்பதிவு - ராம்யோகா, எடிட்டிங் - லட்சுமணன், ‘பிறவி-2’ திரைக்கு வர தயாராகிறது.

    இந்தப்படத்தின் முதல் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது.

    ஸ்ரீசாய்ராம் கிரியே ‌ஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் வழங்கும் படம் ‘கருப்பன்’. இதில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, தான்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-டி.இமான், ஒளிப்பதிவு-சக்திவேல், எடிட்டிங்- டி.வி.விஜயன், ஸ்டண்ட்-மாஸ்டர் ராஜசேகர், தயாரிப்பு- எஸ்.ஐஸ்வர்யா, இயக்கம்-பன்னீர்செல்வம்.
    ஸ்ரீசாய்ராம் கிரியே ‌ஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் வழங்கும் படம் ‘கருப்பன்’. இதில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, தான்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-டி.இமான், ஒளிப்பதிவு-சக்திவேல், எடிட்டிங்- டி.வி.விஜயன், ஸ்டண்ட்-மாஸ்டர் ராஜசேகர், தயாரிப்பு- எஸ்.ஐஸ்வர்யா, இயக்கம்-பன்னீர்செல்வம்.

    இந்த படம் மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதில் விஜய்சேதுபதி மதுரை பகுதி இளைஞனாக நடித்திருக்கிறார். மாடு பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    படம் பற்றி கூறிய விஜய் சேதுபதி...

    “இது ஒரு கமர்சியல் படம். எனக்காக பாபி சிம்ஹாவும் இதில் நடித்திருக்கிறார். பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறேன். மாடு பிடி காட்சிகளுடன் என்னையும் இணைத்து அழகாக படமாக்கி இருக்கிறார்கள்” என்றார்.

    தான்யா கூறும்போது, “மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மதுரை பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறேன். எனது நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார்.

    ஏ.எம்.ரத்னம், “இது பன்னீர்செல்வம் இயக்கத்தில் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்று கூறினார்.

    ‘கருப்பன்’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது.
    கோகுலம் கோபாலன் வழங்கும் ஸ்ரீகோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. இதை ‘36 வயதினிலே’, ‘மும்பை போலீஸ்’ புகழ் ரோ‌ஷன் ஆன்ட் ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
    கோகுலம் கோபாலன் வழங்கும் ஸ்ரீகோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.

    இதை ‘36 வயதினிலே’, ‘மும்பை போலீஸ்’ புகழ் ரோ‌ஷன் ஆன்ட் ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி, சஞ்சய் ஆகியோர் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு -பினோத் பிரதான், படத் தொகுப்பு- ஸ்ரீகர்பிரசாத், கலை-சுனில் பாபு, இசை- கோபிசுந்தர்.

    ‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம் குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

    1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார்.

    இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களே இந்த படம்.
    வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆசிரியராக நடிக்கும் படமாக உருவாகியிருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தின் முன்னோட்டம்.
    வி.கே.பி.டி கிரியே‌ஷன்ஸ் சார்பாக தயாராகி இருக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’.

    இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சாகருப்பு, பொன் வண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப் பதிவு - வினோத் குமார், இசை - விஜய் நாராயணன், பாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி.சாரதா, தயாரிப்பு - டி.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வாசுதேவ் பாஸ்கர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்....

    “இது பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட, காமெடி கலந்த காதல்கதை. இதில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நாயகனின் அப்பாவாகவும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் நடிக்கிறார். ஊர்வசி குடும்பத் தலைவியாக சிறப்பாக நடித்து இருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உருவாகி இருக்கிறது.

    இதில் நடித்த ரவிகுமார் தனக்கு சிறப்பான பாத்திரம் என்பதால், பேசியதை விட குறைவான சம்பளமே வாங்கினார். கமல்ஹாசன் இந்த படத்தை மனம் திறந்து பாராட்டினார். ஏ.ஆர். ரகுமான், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பாராட்டினார்கள். பாரதிராஜா, இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினார். இந்த பாராட்டுகள் ‘பள்ளிப்பருவத்திலே படத்துக்கு பெருமை சேர்த்து இருக்கிறது” என்றார்.
    ×