என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    `36 வயதினிலே' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் `மகளிர் மட்டும்'. சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம்
    `36 வயதினிலே' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் `மகளிர் மட்டும்'. சூர்யாவின் 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    தேசிய விருது பெற்ற `குற்றம் கடிதல்' படத்தை அடுத்து இதை இயக்குனர் பிரம்மா இயக்குகிறார். ஒளிப்பதிவு- எஸ்.மணிகண்டன், இசை-ஜிப்ரான், படத்தொகுப்பு-சி.எஸ்.பிரேம், பாடல்கள்-தாமரை, விவேக், உமாதேவி, சவுண்ட்டிசைன்- அந்தோணி பி.ஜெயரூபன், இணைதயாரிப்பு- ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், கிறிஸ்டி சிலுவப்பன், தயாரிப்பு-சூர்யா. எழுத்து, இயக்கம்-பிரம்மா.

    ஜோதிகா இந்த படத்தில் ஆவணபட இயக்குனராக நடிக்கிறார். முழுக்க முழுக்க குடும்ப பொழுது போக்கு படமாக இது உருவாகிறது. யு சான்றிதழ் கிடைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்யராஜ், வினய், அனு இமானுவேல், சிம்ரன், ஜான் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் முன்னோட்டம்.
    விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்யராஜ், வினய், அனு இமானுவேல், சிம்ரன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை-அரோல் காரோலி, ஒளிப்பதிவு-கார்த்திக் வெங்கட்ராமன், ஸ்டண்ட் -தினேஷ், தயாரிப்பு-விஷால், எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம்-மிஷ்கின்.

    “என் சினிமா வரலாற்றில் முழு நீள ஸ்டைலிஷ் ஆன படம் ‘துப்பறிவாளன்’. நல்ல கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். ஆக்‌ஷன் காட்சிகள் தான் ‘துப்பறிவாளன்’ திரைப் படத்தின் முக்கிய அம்சம்.

    இந்த படத்துக்காக மிஷ்கின் ஸ்டைலில் கண்ணாடி அணிந்து நடித்துள்ளேன். துப்பறிவாளனில் வரும் சைனீஸ் ஓட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இதில் வியட்நாம் சண்டை கலைஞர்கள் பங்கேற்றனர்.

    சண்டை காட்சியை இயக்குனர் மிஷ்கின் வடிவமைத்தார். படத்தில் ஒரே ஒரு தீம் பாடல் மட்டும் தான் உள்ளது. இதில் அனு இமானுவேல் பிக்- பாக்கெட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாக்யராஜ் சார் இது வரை பண்ணாத புதுமையான ஒரு நெகட்டிவ் ரோலை செய்துள்ளார். வினய்தான் படத்தில் முக்கிய வில்லன், இந்த படத்தில் கடைசி 20 நிமிடங்கள் மிகப்பெரிய விஷுவல் டிரீட்டாக இருக்கும். கடைசி 20 நிமிடங்கள் அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் போல் இருக்கும்” என்றார்.

    ‘துப்பறிவாளன்’ 14-ந் தேதி திரைக்கு வருகிறது.
    வைகிங் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம்‘ யார் இவன்’. இதில், சச்சின் நாயகனாகவும், இஷாகுப்தா நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம்...
    வைகிங் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம்‘ யார் இவன்’. இதில், சச்சின் நாயகனாகவும், இஷாகுப்தா நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், கிஷோர், டெல்லி கணேஷ், சுப்ரீத், ஹர்‌ஷவர்தன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை-எஸ்.எஸ்.தமன், பாடல்கள்- நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு- பீனேந்திரமேனன், படத்தொகுப்பு- பிரவீன்பூடி, கலை- ரகு குல்கர்ணி, ஸ்டண்ட்- கனல்கண்ணன், நடனம்- பாஸ்கோ சீசர்- ஜானி, தயாரிப்பு- ரைனா ஜோஷி, கதை, திரைக்கதை, இயக்கம்- டி.சத்யா, இவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘பட கோட்டி’, சிவாஜி கணேசன் நடித்த ‘உத்தம புத்திரன்’ உள்பட பல படங்களை இயக்கிய பழம் பெரும் இயக்குனர் டி.பிரகாஷ்ராவ் பேரன். தெலுங்கில் வெற்றிப் படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக இயக்கும் தமிழ் படம் ‘யார் இவன்’.

    படம் பற்றி இயக்குனர் டி.சத்யா கூறுகிறார்...

    “இந்த படத்தின் நாயகன் கபடி வீரர். அவர் பங்கேற்கும் கபடி போட்டிகளின் போது, தொடர்ச்சியாக கொலைகள் நடக்கின்றன. இதை கபடி விளையாட்டின் போதே நாயகன் தந்திரமாக செய்கிறார்.

    இந்த கொலைகளுக்கு காரணம் என்ன? பழி தீர்க்கும் நடவடிக்கைகளில் நாயகன் இறங்குவது ஏன்? என்பது மீதிகதை. இதில் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சதீஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

    இது, காதல் கலந்த ஆக்‌ஷன் திரில்லர் கதை. அனைவரும் ரசிக்கும் படமாக ‘யார்இவன்’ உருவாகி இருக்கிறது” என்றார்.
    ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், கிருஷ்ணா கதாநாயகனாவும், ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘வீரா’ படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘வீரா’. இதில் நாயகனாக கிருஷ்ணா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பிராமையா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு -ஏ.குமரன், விக்னேஷ் வாசு, பாடல்களுக்கு இசை- லியோன் ஜேம்ஸ், பின்னணி இசை- எஸ்.என்.பிரசாத், எழுத்து -பாக்கியம் ‌ஷங்கர், இயக்கம்- ராஜாராமன், ஆக்‌ஷன், காமெடி கலந்த படமாக இது உருவாகி உள்ளது. ‘ஆரஞ்சு கிரியே‌ஷன்ஸ்’ நிறுவனம் ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனத்தோடு இணைந்து வீரா படத்தை வெளியிடுகிறது.

    இதுபற்றி ஆரஞ்சு கிரியே‌ஷன்ஸ் தலைவர் கூறும்போது...

    “ஒரு படத்தின் கதையையும் அது படமாக்கப்பட்டுள்ள விதத்தையும் தரத்தையும் வைத்து தான் நாங்கள் அதை வாங்குவோம். அந்த வகையில் ‘வீரா’, கதையம் சத்திலும், படமாக்கப்பட்டுள்ள விதத்திலும் எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் வெற்றிப்பட பட்டியலில் சேர்வதற்கான அனைத்து அம்சங்களும் ‘வீரா’வில் உள்ளதாக நம்புகிறோம்” என்றார்.
    அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் முன்னோட்டம்.
    பர்ஸ்ட் ஆர்டிஸ்ட், சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெருப்புடா’.

    நாயகன் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், நாயகி நிக்கி கல்ராணி மருத்துவராகவும் நடித்துள்ளனர். வருண், ராஜேந்திரன், நாகினேடு, ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - தியாகு, கதை, திரைக்கதை, இயக்கம் - அசோக்குமார்.



    இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து விக்ரம் பிரபு கூறுயதாவது,

    இது தீயணைப்புதுறை பின்னணியில் மனித உணர்வுகளை பேசும் கமர்ஷியல் படம். தீ சம்பந்தப்பட்ட காட்சியை ஈ.வி.பி.கார்டனில் 150 குடிசை செட்போட்டு, நூற்றுக்கணக்கான துணை நடிகர்களைக் கொண்டு எடுத்தோம். தகுந்த முன்னேற்பாடு, பாதுகாப்புடன் படப்பிடிப்பை தொடங்கினோம். என்றாலும், சில காட்சிகளில் தீயில் சிக்கும் அபாயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, லாவகமாக தப்பினேன். ஆண்டவன் புண்ணியத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் படத்தை முடித்தது மகிழ்ச்சி.

    தீயணைப்பு வீரனாக சில காட்சிகளில் நடிக்கவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உண்மையான தீயணைப்பு வீரர்களின் சேவை, தியாகம் மகத்தானது. இந்த படம் வெளியானதும் தீயணைப்பு படை வீரர்களைப் பார்த்தால் மக்கள் சல்யூட் அடிப்பார்கள். இவ்வாறு கூறினார்.

    படம் நாளை முதல் உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.
    பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் டோவினோ தாமஸ் - பியா பாஜ்பாய் நடிப்பில் புதுமையான காதல் படமாக உருவாகியிருக்கும் 'அபியும் அனுவும்' படத்தின் முன்னோட்டம்.
    'ச ரி க ம இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் சினிமா பேனரான யொட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 'அபியும் அனுவும்'.

    இப்படத்தில் மலையாளத்தில் வளர்ந்து நாயகர்களுள் ஒருவரான டோவினோ தாமஸ் நாயகனாகவும், பியா பாஜ்பாய் நாயகியாகவும், நடித்துள்ளனர். சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியிருக்கிறார். தரன் இசையமைத்திருக்கிறார்.



    சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும், காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததே இல்லை. அந்த வகையில் ஒரு முழு காதல் படமாக உருவாகியிருக்கும் படம் 'அபியும் அனுவும்', இது ஒரு புதுமையான, சொல்லப்படாத காதல் கதையாக அமையும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ்-ம், டீசரை ஜெயம் ரவியும் வெளியிட்டனர்.

    சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ‌ஷரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹு’ படத்தின் முன்னோட்டம்.
    பாகுபலியின் வெற்றி யைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப் படம் ‘சாஹு’. இதில் கதாநாயகியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

    ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரு அதிரடி படமாக தயாராகிறது.

    ஒளிப்பதிவு - மதி, கலை - சாபு சிரில், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், பாடல்கள் - அமிதாப் பட்டாச்சார்யா, இசை - சங்கர்-எஹ்ஸான் -லாய்.

    இந்த படத்தை யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்கம் - சுஜீத்.



    ‘சாஹு’ படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது. படம் பற்றி கூறிய தயாரிப்பாளர்கள்...

    “‌ஷரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு. இது பிரபாஸ் நடிக்கும் முதல் இந்திப் படம் என்பதால் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. பரபரப்பான விறு விறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காது.

    பிரபாஸ், ‌ஷரத்தா ஜோடி ஏற்படுத்த விருக்கும் சுவாரஸ்யத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

    பாகுபலி-2 படத்துடன் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர், ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என்றனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சினேகன் என அனைவரும் ஒரே படத்தில் இணைந்த படமான ‘ஓவியாவ விட்டா யாரு’ படத்தின் முன்னோட்டம்.
    வேலம்மாள் சினி கிரியே‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இது தற்போது ‘ஓவியாவ விட்டா யாரு’ என்ற பெயரில் திரைக்கு வருகிறது.

    புதுமுகம் சஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். ஓவியா நாயகியாக நடித்துள்ள இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பவர்ஸ்டார், ராதாரவி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - சினேகன், ஒளிப்பதிவு - நாகராஜ், தயாரிப்பு - மதுரை செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜதுரை.



    படம் பற்றி தயாரிப்பாளர் மதுரை செல்வம் கூறுகிறார்...

    “ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு மதுரை வரும் புதுமுக ஹீரோ சஞ்சீவி, மோசடி பேர்வழி பவர் ஸ்டாரிடம் ஏமாந்து போகிறார். தனது புத்திசாலி தனத்தை பயன்படுத்தி இழந்ததை எப்படி மீட்கிறார் என்பது கதை.

    ஓவியா 28 நாட்கள் நடித்துக் கொடுத்தார். முதலில் புதுமுக ஹீரோ என யோசித்தவர், கதையை கேட்டு ‘ஓகே’ சொல்லி விட்டார். எம்.ஜி.ஆரால். பெயர் சூட்டப்பட்ட சீதா என்ற யானை முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. யானைப்பாகனாக செந்தில் வருகிறார்.

    ஒரு பிரபல ரிப்போட்டராக ஓவியா நடிக்கிறார். கூத்து ஆடுபவராக கஞ்சா கருப்பும், ராதாரவியின் உதவியாளராக வையாபுரியும் வருகிறார்கள். சினேகன் பாடல் எழுதியிருக்கிறார். பிக்பாசில் பங்கேற்ற நான்கு பேரும் எங்கள் படத்தில் முன்னமே நடித்தது சிறப்பு” என்றார்.
    டிரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.
    டிரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.

    அனைவருக்கும் பொருந்தும் சமூக- அரசியல் படமாக இது உருவாகி இருக்கிறது. நாயகி அதீதி பாலன். ‘அருவி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் முகமது அலி பாய்க் என்ற ஐதராபாத் தியேட்டர் ஆர்டிஸ்ட், திரு நங்கை அஞ்சலி வரதன், கன்னட நடிகை லட்சுமி கோபால் சாமி, மதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு-ஷெல்லி கலிஸ்ட், இசை-பிந்து மேனன், வேதாந்த பரத்வாஜ், தயாரிப்பு -எஸ்.ஆர். பிரபு, எஸ். ஆர்.பிரகாஷ் பாபு, எழுத்து, இயக்கம்-அருண் பிரபு புருசோத்தமன்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது....

    “அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக் கூடிய சுவாரஸ்யமான வி‌ஷயங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதைக்களம். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இந்த படம் அருவி என்ற பெண்ணின் பயோகிராபி போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் அருவி சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சினை, அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்து பேசும் ஒரு கதையாக இருக்கும். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.
    ஆதம் பாவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.பாண்டியன்’ படத்தின் முன்னோட்டம்.
    மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரித்து, இயக்கும் படம் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’.

    இதில், இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். ‘555’ சாந்தினி நாயகியாக நடிக்கிறார். நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர், ராஜ் கபூர், கசாலி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - தேவராஜ், பாடல்கள் - வைரமுத்து, பா.விஜய், இசை - வித்யாசாகர்.

    படம் குறித்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாவா கூறும்போது...

    “எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் என்ற சூப்பர் ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர்சூட்டி இருக்கிறோம்.



    இந்த படம் அமைதிப் படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம்.ஜி. ஆர். நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இந்த வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகனை இந்த படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.

    ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் ‘வட சென்னை’, ‘சந்தனத்தேவன்’ படங்களிலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அடுத்து தேனி, மதுரை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.
    சிவானி செந்தில் இயக்கத்தில் காதலுக்கும் ஏற்படும் விரிசல் கார்கில் போராக மாறுபடியான கதைக்களம் கொண்ட ‘கார்கில்’ படத்தின் முன்னோட்டம்.
    சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் படம் ‘கார்கில்’.

    இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் சிவானி செந்தில் கூறுகிறார்....

    சென்னை - பெங்களூர் காரில் செல்லும் ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல். அது கார்கில் போராக மாற, ராஜா போராடி முடிவில் வெல்லும் காதல் கதை.

    தமிழ் திரை வரலாற்றில் முதல்முறையாக இதில் ஒற்றை நடிகன் மட்டும் திரையில் தோன்றுவது புது முயற்சி.



    புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன். கதை நாயகனாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறார். அவரது அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவருக்கு பெற்று தரும். மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் புதிய அறிமுகங்களே.

    ஒளிப்பதிவு - கணேஷ் பரமஹம்ஸா, இசை - விக்னேஷ் பாய், எடிட் டிங் - அபிநாத், தயாரிப்பு - சுபா செந்தில்.

    இந்த படத்தின் 2 பாடல்களும், மொத்த படப்பிடிப்பும் மிக குறைந்த நாட்களில் முடிவடைந்தது.

    தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டார். ‘கார்கில்’ விரைவில் திரைக்கு வருகிறது”. என்றார்.
    நித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் `குரங்கு பொம்மை' படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP வழங்கும் இயக்குநர் இயம் பாரதிர ராஜா மற்றும் விதார்த் நடிக்கும் படம்
    `குரங்கு பொம்மை'.

    படத்தில் நாயகனாக விதார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதி ராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இசை - பி. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு - என்.எஸ்.உதயகுமார், படத்தொகுப்பு - அபினவ் சுந்தர் நாயக், கலை - வீரமணி, வசனம் - மடோன் அஸ்வின், பாடல்கள் - நா.முத்துக்குமார், நடனம் - ராதிகா, சண்டை - மிராக்கல் மைக்கேல், கதை, திரைக்கதை, இயக்கம் - நித்திலன் சுவாமிநாதன்.



    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்க வேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன் என்று கூறி குரங்கு என்று பாராட்டி இருந்தார். கு - நல்ல குணவான், ர - சிறந்த ரசனையாளர், ங் - இங்கிதம் தெரிந்தவர், கு - குவாலிட்டியானவர் என்று பாராட்டினார்.

    படம் நாளை ரிலீசாக இருக்கிறது.

    ×