search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியா பாஜ்பாய்"

    பியா நடிப்பில் அபியும் அனுவும் படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திரும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #PiaBajpai
    விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

    ஜீவாவுடன் கோ படத்திலும், சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.



    சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை உடையில் தியானம் செய்வது போன்று இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

    இப்போது ஜிம்மில் அணியும் டூ பீஸ் ஆடையில் தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை காண்பித்துள்ளார். படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது இதுபோன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். #PiaBajpai

    'அபியும் அனுவும்' படத்தில் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் புதுமையான காதல் கதையில் நடித்தது பேரின்பம் என்று நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். #AbhiyumAnuvum #TovinoThomas
    'சரிகம இந்தியா லிமிடெட்' சார்பில் யொட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 'அபியும் அனுவும்'. பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நாயகனாகவும், பியா பாஜ்பாய் நாயகியாகவும், நடித்துள்ளனர். சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    படம் குறித்து நாயகன் டோவினோ தாமஸ் கூறும்போது,

    தமிழ் ரசிகர்கள் அபியும் அனுவும் படம் என்னுடைய முதல் படம் என தெரிந்ததும், என்னை சிறப்பாக உணர வைத்துள்ளார்கள். அவர்களின் அன்பும், நல்ல மனதும், பெருந்தன்மையும் என்னை மேலும் பொறுப்புடையவனாக உணர வைப்பதோடு, அவர்கள் விரும்பும் விஷயங்களை கொடுக்க வேண்டும் என்று என்னை உந்துகிறது.



    இந்த படத்தில் ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமியோடு வேலை செய்தது ஒரு உண்மையான பேரின்பம். அவர் கதை நடக்கும் பின்புலத்தை அமைத்த விதமும், ஒளிப்பதிவாளர் அகிலன் அவருடைய ஐடியாவை திரையில் மாற்றிய விதமும் எல்லோராலும் பாராட்டக்கூடியது.

    நடிகை பியா பாஜ்பாய் படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாகவும், வேடிக்கையாகவும் இருப்பார், ஆனால் கேமராவுக்கு முன்னால் அவருடைய மாற்றம் நம்ப முடியாதது என்றார். #AbhiyumAnuvum #TovinoThomas

    ×