என் மலர்

  நீங்கள் தேடியது "Aishwarya Menon"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீரா, தமிழ்ப்படம் 2 படங்களில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன், தன்னைப் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #AishwaryaMenon
  வீரா, தமிழ்ப்படம் 2 படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். விமலுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது.

  இதுபற்றி கூறும்போது ‘அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். ஆனால் இது தமிழ்ப்படம் படத்தில் நான் நடித்த வேடத்துக்கு நேர் எதிராக சீரியஸ் வேடமாக இருக்கும். கொலையை துப்பறியும் திரில்லர் வகை கதை அது.  அடுத்து விமலுடன் நடிப்பதாக வரும் செய்தி உண்மை இல்லை. அப்படி யாரும் என்னை அணுகவில்லை. தெலுங்கிலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பொறுமையாக பரிசீலித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. #TamizhPadam2 #TP2
  தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவா நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். 

  ரசிகர்களை கவர இப்படக்குழுவினர் புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். 

  இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் அறிவித்திருக்கிறார். அதன்படி ‘நான் யாருமில்ல...’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

  சிவாவின் அறிமுகப்பாடலாக கூறப்படும் இதில், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட பலரை கலாய்க்கும் படி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

  இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2 #TP2


  ×