search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்தூசி"

    சிவசக்தி இயக்கத்தில் திலீபன் - அமலா ரோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `குத்தூசி' படத்தின் விமர்சனம். #Kuthoosi #KuthoosiReview #Dhileban #AmalaRose #YogiBabu
    படித்துமுடித்து வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் திலீபன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், நிலத்தையெல்லாம் விற்றுவிட்டு தனது பெற்றோரையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். திலீபனும், நாயகி அமலா ரோசும் காதலித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே திலீபனின் அப்பா இறந்துவிட, இரண்டு முக்கிய நிகழ்வுகள் அவரது வாழ்க்கையையே மாற்றுகின்றன. தனத சொந்த ஊரில் உள்ளவற்றையே தன்னால் சரிசெய்ய முடியவில்லையே என்று யோசிக்கும் திலீபன், நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான் என்பதை உணர்ந்து, தனது வெளிநாட்டு ஆசையை விட்டுவிட்டு, விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குகிறார். 



    கடைசியில், விவசாயத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? அவரது முயற்சிக்கு எதுவெல்லாம் தடையாக வந்தது? திலீபன் - அமலா ரோஸ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக திலீபன் கதைக்கு சரியாக பொருந்தியிருக்கிறார். அமலா ரோசுக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். யோகி பாபு, ஜெய பாலன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஒட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.



    வெளிநாடு செல்ல துடிக்கும் இளைஞன் ஒருவன், தனது ஊர் பிரச்சனைக்காக தனது ஆசையை விட்டுவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவதை படமாக்கியிருக்கிறார் சிவசக்தி. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த, படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்த்தும்படியாக இயக்கியிருக்கிறார்.

    என்.கண்ணனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பாகீயின் ஒளிப்பதிவில் விவசாய கிராமத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள். 

    மொத்தத்தில் `குத்தூசி' பாதுகாக்க வேண்டியது. #Kuthoosi #KuthoosiReview #Dhileban #AmalaRose #YogiBabu

    குத்தூசி படத்தில் நாயகனாக நடித்துள்ள திலீபன், யோகி பாபு பற்றி பேசும் போது, அடுத்தவங்க மேல அக்கறையோடு இருப்பது தான் யோகி பாபுவிடம் தனக்கு ரொம்பப் பிடித்தது என்று கூறினார். #Kuthoosi #Dhileepan #YogiBabu
    வத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக நடித்த திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயம் பற்றிய இந்த படத்தில் யோகி பாபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம். யோகி பாபு தொடக்க காலத்தில் நடித்த இந்த படம் இப்போது தான் ரிலீசாகி இருக்கிறது.

    யோகி பாபு பற்றி திலீபன் கூறும்போது, “அவர் ஒரு தீவிர முருக பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார்.



    எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிசியாக இருக்கிற ஒருத்தருக்கு தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்று கூறியுள்ளார். #Kuthoosi #Dhileepan #YogiBabu

    சிவசக்தி இயக்கத்தில் வத்திக்குச்சி திலீபன் - அமலா ரோஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `குத்தூசி' படத்தின் முன்னோட்டம். #Kuthuoosi #Dhileban #AmalaRose
    ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டூடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் `குத்தூசி'.

    வத்திக்குச்சி திலீபன் - அமலா ரோஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெயபாலன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - என்.கண்ணன், ஒளிப்பதிவு - பாகீ, படத்தொகுப்பு - ஜே.வி.மணிகண்டபாலாஜி, கலை இயக்குநர் - ஸ்ரீ ஜெய்கல்யாண், பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை, வசனம் - வீருசரண், சண்டைப்பயிற்சி - ராஜசேகர், நடனம் - சங்கர், ராதிகா, ஒவிக்கலவை - ஏ.எஸ்.லஷ்மி நாராயணன், சிறப்பு சப்தம் - சேது, ஆடை வடிவமைப்பு - ஏ.கதிரவன், தயாரிப்பு நிர்வாகம் - ஞா.ஏழுமலை, தயாரிப்பாளர் - எம்.தியாகராஜன், இணை தயாரிப்பு - கணேஷ் ராஜா.த, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - சிவசக்தி.

    “ இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.



    படம் பற்றி இயக்குநர் பேசும்  போது,

    நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

    காதல், ஆக்‌ஷன், எமோ‌ஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.

    இந்த படம் நாளை (25.1.19) திரைக்கு வருகிறது. #Kuthuoosi #Dhileban #AmalaRose

    குத்தூசி டிரைலர்:

    வத்திக்குச்சி திலீபன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் குத்தூசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சீனு ராமசாமி தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார். #Kuthoosi #SeenuRamasamy
    காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுகளை பெற்ற திலீபன் கதாநாயகனாக நடிக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயத்தின் மேன்மையை பற்றி பேசும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சீனுராமசாமி கலந்து கொண்டார். 



    விழாவில் சீனு ராமசாமி பேசும்போது,

    ‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ‘ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன். ஒழுங்காக டாடி என்று கூப்பிடு என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார். #Kuthoosi #SeenuRamasamy #Dileepan

    ×