search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Mahima"

  கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
  கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

  சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி. 

  கொல்லிமலை பகுதி

  இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம்.எஸ்.மூவிஸ் கே.முருகன் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது. ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார் உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
  ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ், மகிமா, மயில்சாமி, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ விமர்சனம். #AnnanukkuJey #AnnanukkuJeyReview
  பனைமரத்தில் இருந்து கள் இறக்கும் வேலையை குடும்பத் தொழிலாக செய்து வருகிறார் மயில்சாமி. மகன் தினேஷ் வேலைக்கு வைத்து அவருக்கான கூலியையும் அதிகம் வழங்குகிறார். டுடோரியல் காலேஜில் படித்து வரும் மகிமாவை தினேஷ் காதலிக்கிறார். மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் உள்ளூர் அரசியல் பிரமுகரும், பார் உரிமையாளருமான தினா குறுக்கிடுகிறார். 

  அரசியல் பலம் இல்லாததால் கண்முன்னேயே அப்பாவை அடித்துவிட்டார்கள் என்ற விரக்தியில் அவரை அரசியலில் ஆளாக்க நினைக்கிறார் தினேஷ். அதற்காக ராதாரவியின் ஆலோசனைப்படி லட்சக்கணக்கில் செலவு செய்கிறார். இந்த சூழலில் கள் இறக்கும் உபகரணங்கள், இடம் என எல்லாவற்றையும் தீயிட்டு எரித்து சின்னாபின்னமாக்குகிறார் தினா. 

  இதனால் கோபமடையும் தினேஷ், தினாவை பழிவாங்கினாரா? அப்பாவுக்கு அரசியலில் பதவி வாங்கிக் கொடுத்தாரா? காதலியைக் கரம் பிடித்தாரா? அரசியல் வாய்ப்பு அவருக்கு எப்படி வருகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.   இந்த படத்துக்கு அட்டகத்தி பார்ட் 2 என்று பெயர் வைத்திருக்கலாம். அட்டகத்தி கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. தினேஷும் சிறப்பாக நடித்து இருக்கிறார். மகிமாவுக்கு வழக்கமான கதாநாயகிகளைவிட அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்.

  ராதாரவி சிரிப்பாலேயே வில்லத்தனம் காட்டுவது அனுபவ நடிப்பு. மயில்சாமி, ஜானி ஹரி, தீனா, தங்கதுரை ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக வழங்கி இருக்கிறார்கள்.

  படத்தின் பெரிய பலம் அரோல் கரோலியின் இசை. பாடல்களும் பின்னணியும் ரசிக்க வைக்கிறது.  அட்டகத்தியாகவே கடைசி வரை இருந்து வெல்லும் கதாநாயகனின் கதை. உள்ளூர் அரசியலை களமாக எடுத்து ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக கணிக்க முடிவது பலவீனம். தாராளமாக செலவழித்து இன்னும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இருந்தால் அண்ணனுக்கு ஜே முக்கியமான அரசியல் படங்களில் ஒன்றாகி இருக்கும்.

  மொத்தத்தில் ‘அண்ணனுக்கு ஜே’ காமெடிக்கு ஜே.
  அண்ணனுக்கு ஜே, ஐங்கரன் ஆகிய படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியா, எனக்கு இப்போது காதலர் இல்லை என்று கூறியுள்ளார். #Mahima
  சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். இப்படத்திற்குப் பிறகு ‘குற்றம் 23’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விக்ரம் பிரபுவுடன் ‘அசுரகுரு’, தினேசுடன் ‘அண்ணனுக்கு ஜே’, ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படங்களில் நடிக்கிறார். 

  இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காத ரகசியத்தை கேட்டபோது ‘நல்ல வி‌ஷயம் தானே... நான் ரொம்ப நல்ல பொண்ணு. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போய்விட்டால் நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருப்பேன். அது போல நான் காதல் எதுவும் பண்ணலை. காதல் பண்றது தப்பு கிடையாது. ஆனால் இப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை. அதனால் தான் என்னைப்பற்றி கிசுகிசு ஏதும் வரவில்லை.   எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அடுத்து எம்.பில்., பி.எச்டி, நெட் தேர்வுன்னு பிளான் பண்ணிருக்கேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பு தான் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம்’ என்று கூறினார்.
  ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #AnnanukkuJai #Dinesh
  `அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது. 

  ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை ஜூலை 26ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

  அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.   கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar
  சாட்டை, குற்றம் 23, கொடி வீரன் ஆகிய படங்களில் நடித்த மகிமா, தற்போது எந்த படப்பிடிப்பிலும் நடிக்காமல் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். #Mahima
  சாட்டை மூலம் அறிமுகமான மகிமாவுக்கு இப்போது தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. விக்ரம் பிரபு, ஜிவி.பிரகாஷ் இருவருக்கும் ஜோடியாக ஒவ்வொரு படத்திலும் நடித்துவருகிறார்.

  மகிமா நாளை தொடங்கும் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கில இலக்கியத் தேர்வை எழுத உள்ளார். இதற்காக ஒரு மாத காலத்துக்கு எந்தப் படப்பிடிப்பும் இல்லாதவாறு கால்ஷீட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்.  இரண்டாம் ஆண்டு தேர்வு என்பதால் முழு கவனத்துடன் எழுதி ‘எம்.ஏ’ பட்டம் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தேர்வு முடிந்ததும் மம்மூட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார்.
  ×