என் மலர்
சினிமா

அண்ணனுக்கு ஜே படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு
ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #AnnanukkuJai #Dinesh
`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது.
ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை ஜூலை 26ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
எங்கள் கொள்கை கீதங்கள் ஜூலை 26 முதல் ஒலிக்கும் 📢#அண்ணனுக்குஜே#AnnanukkuJaiAudioFrom26thJulypic.twitter.com/MEVgxbrdl7
— Dinesh (@Dineshvcravi) July 24, 2018
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar
Next Story






