என் மலர்

  நீங்கள் தேடியது "Regina"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் "ரெஜினா".
  • இப்படத்தினை மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

  மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

  தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து, படம் குறித்து சுனைனா கூறுகையில், "ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்கதை. டைரக்டர் டோமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார். கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்தைய ஹிட் படங்களான "பைபிள் சுவத்திலே பிராணயம்", "ஸ்டார்" போன்ற படங்களை விட "ரெஜினா" படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் "ரெஜினா" முக்கியமான படமாக இருக்கும்" என்றார்.

  இயக்குனர் டோமின் டி சில்வா "ரெஜினா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த ரெஜினா, தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். #Regina
  தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரெஜினா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா ஜோடியாக நடித்தார். அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இதுபற்றி ரெஜினா அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒரு வருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி.  என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி’.

  இவ்வாறு ரெஜினா கூறி உள்ளார்.

  ரெஜினாவும், சாய் தரம் தேஜும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று முன்பு கூறி வந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு அவர்களின் காதல் பற்றி அடிக்கடி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருமே மறுத்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, தன்னுடன் நடித்த நடிகர் பற்றி கூறியிருக்கிறார். #Regina #ReginaCassandra
  சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.

  இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

  தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா, தற்போது இந்தி படத்தில் பெண் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். #Regina #SonamKapoor
  தமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் ஏறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் ரெஜினாவின் மார்க்கெட்டை தக்கவைத்திருக்கிறது.

  அவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. புதிய படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்து வருகிறார்.

  இந்நிலையில் இந்தியில் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா நடித்து உள்ளார்.

  இந்த படத்தின் கதைப்படி சோனம் கபூர் ஒரு லெஸ்பியன். அவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி அந்த சஸ்பென்சை உடைத்துள்ளது. அதில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியை நிறுத்தி பார்க்கும் போது, சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா என்பது தெரியவந்துள்ளது. கலாச்சார மாற்றத்தின் சாட்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ள செய்தி பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. #Regina #SonamKapoor
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஸ்டர் சந்திரமௌலி படத்தை அடுத்து ரெஜினா நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளம் எனபதால், வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருக்கிறார். #Regina
  தமிழில் ‘கண்டநாள் முதல்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா. தெலுங்கில் பல பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு முன்னணி கதாநாயகி ஆனார். பின்னர் மாநகரம், மிஸ்டர் சந்திரமவுலி என்று தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

  இதுவரை இல்லாத அளவுக்கு மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் கவர்ச்சி அவதாரம் எடுத்தார். அடுத்து அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ராஜபாண்டி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ரெஜினாவுக்கு ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம். இருந்தாலும் நடிக்க அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் சம்மதித்து இருக்கிறார்.   ஆனால் அதிக சம்பளம் என்பதால் தான் ரெஜினா சம்மதித்தார் என்று தகவல் பரவி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஸ்டர் சந்திரமௌலி படத்தை அடுத்து ராஜபாண்டி இயக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் ரெஜினா. #Regina
  என்னமோ நடக்குது அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  அடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது.
  ×