என் மலர்

  நீங்கள் தேடியது "Rajapandi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Kallapart #ArvindSwamy
  மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ராஜபாண்டி இயக்கி வருகிறார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது,   அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.

  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Kallapart #ArvindSwamy
  விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

  `என்னமோ நடக்குது', `அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

  நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஸ்டர் சந்திரமௌலி படத்தை அடுத்து ராஜபாண்டி இயக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் ரெஜினா. #Regina
  என்னமோ நடக்குது அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  அடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரவிந்த்சாமி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாரகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ArvindSwami
  `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கு பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் அடுத்ததாக `சதுரங்க வேட்டை-2', `நரகாசூரன்' மற்றும் `செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கிறது. 

  அரவிந்த் சாமி தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அவரது அடுத்த படத்தை `என்னமோ நடக்குது', `அச்சமின்றி' போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கவிருக்கிறார். செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

  படத்தில் பங்குபெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #ArvindSwami
  ×