என் மலர்

  சினிமா

  ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
  X

  ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Kallapart #ArvindSwamy
  மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ராஜபாண்டி இயக்கி வருகிறார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது,   அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.

  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

  Next Story
  ×